Wednesday, May 24, 2006

வெள்ளை மாளிகையில் தலக் கைப்புள்ள..

செர்மனி செல்லும் வழியில் புதரகத்தில் வெள்ளை மாளிகையில் புதரக வரு.வா.ச அபிமானி ஜார்ஜ் புதர் கொடுத்த விருந்தில் கலந்துக் கொண்ட தல நியூயார்க் டைம்ஸ்க்காக அளித்த பிரத்தேயக போஸ்...

இந்தப் படம் அடுத்த நியூயார்க் டைம்ஸ் இதழ் அட்டையில் வரவிருக்கிறது... ஊர் பார்க்கும் முன் சங்கத்து மக்களுக்காக தலயின் சூப்பர் ஸ்டில் இதோ....புதரகத்தின் புதிய பாட்ஷா என்ற தலைப்பு இந்தப் படத்திற்கு கொடுக்கப் படலாம் என்றும் தெரிகிறது...

72 comments:

நன்மனம் said...

சங்கத்துல இல்லாத ஆளுங்களுக்கு "தல" முக்கியத்துவம் கொடுக்கறது சரி இல்ல சொல்லிப்புட்டேன். அதாங்க "தல" கூட இருக்காரே அவருதான்.:-))

ஜொள்ளுப்பாண்டி said...

என்ன ஒரு கம்பீரம் ! என்ன ஒரு தேஜஸ்! தல ஒக்கார்ந்திருக்கர ஸ்டைலே தனிதான். நீ கலக்கு தல !!

Anonymous said...

"புதரகத்தின் புதிய பாட்ஷா" எங்க 'தலயின்' பிரமாண்டத்தை கண்டு எல்லா பெரிய நாயும்
ஓடிவிட்டதால் சிக்கிய சிறிய நாயை
வைத்து இப்படம் எடுக்கப்பட்டது என
'நரி நியூஸ்'(நன்றி:பொன்ஸ்)வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அன்புடன்,
துபாய் ராஜா.

கைப்புள்ள said...

//செர்மனி செல்லும் வழியில் புதரகத்தில் வெள்ளை மாளிகையில் புதரக வரு.வா.ச அபிமானி ஜார்ஜ் புதர் கொடுத்த விருந்தில்...//

"கை" தேவு! வரு.வா.சங்கத்துத் தலைமை கழகத்துல இருந்துக்கிட்டு இப்படியொரு தவறானதொரு அறிக்கையை வெளியிட்டுட்டியேய்யா?நம்ம "புதரை" யாரோ ஒரு மூணாம் மனுஷனைப் போலத் தவறாச் சித்தரிச்சிருக்கியே... அதை தான் சொல்ல வரேன்.

புஷ் வெறும் வ.வா.ச அபிமானியில்லய்யா...வ.வா.ச வாஷிங்டன் பகுதி கொ.ப.செ யா....கொ.ப.செ யா. அதை மறந்துட்டு நீ இப்பிடி அறிக்கை விட்டுருக்கேனு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாப்புல.

தங்கச்சி பிகிலு கொண்டு போன அண்டா,குண்டா,தேக்சா,அடுப்பு,சட்டி,குவளை எல்லாம் ஏர்போர்ட்ல காணாமப் போச்சே...அது திரும்ப கெடச்சது எப்படினு நெனக்கிறே? ...எல்லாம் நான் பொதருக்குப் போட்டுவுட்ட ஒரு எஸெமெஸ் தான். குண்டு வேணும் அண்ணேனு ஒரு வார்த்தை தங்கச்சி சொல்லிருந்துச்சுன்னா அணு குண்டு,ஹைட்ரஜன் குண்டுன்னு குண்டு குண்டா கொண்டாந்து குமிச்சிருப்பாம்யா. இப்ப குண்டு இல்லாம சோத்தை வடிச்சி தின்னுட்டிருக்குய்யா அந்த புள்ள. பொதரு அங்கிருக்கும் போது இப்பிடி நம்ம சங்கத்து ஆளு சோத்துக்கு கஷ்டப் படலாமா நீயே சொல்லு!

இலவசக்கொத்தனார் said...

யப்பா,
முதலில் உங்க சங்கத்தில் இருக்கறவங்களை நல்லா தெரிஞ்சுக்கோங்க.
அப்புறம் ஒண்ணுமில்லாம பாலைவனத்தில் தண்ணிக்கு அலையுற உங்க தலைக்கு இந்த பில்ட் அப் எல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியலை.

(ஆஹா, இப்போ இதுக்கு எல்லாஉம் பதில் போட்டே 50ஆவது அடிக்க மாட்டீங்க? என்ஜாய்)

செல்வன் said...

தலை இந்த கலக்கு கலக்கறாரு?
புதரகத்துல ஏற்கனவே பொன்ஸ் அக்கா புஷ்ஷண்ணனை மிரட்ட போயிருக்காங்க.தம்பியும் போயி மிரட்டுனா புஸ்ஸு என்ன ஆவாரு?

தயா said...

நியூயார்க் டைம்ஸ் நாளிதழா? அல்லது பத்திரிக்கையா?

எப்படிய்யா அட்டையில் வரும்?

அப்பவே துபாயில் போடற துணியை ஊருக்குள்ள போட்டு சுத்தாதன்னு சொன்னாரு பார்த்தி! இன்னும் திருந்தலையா?

தேவ் | Dev said...

//சங்கத்துல இல்லாத ஆளுங்களுக்கு "தல" முக்கியத்துவம் கொடுக்கறது சரி இல்ல சொல்லிப்புட்டேன். அதாங்க "தல" கூட இருக்காரே அவருதான்.:-))//

நன்மனம் என்ன இப்படி பட்ன்னு பேசிப்புட்டீங்க அது யாரு தெரியும்ல்ல அண்ணி கைப்பொண்ணுவோட ஸ்கேட்டிங் கிளாஸ்க்கு வர்றவங்க வளக்குற நாயோட கேர்ள் பிரண்ட் நாய்.. அது தலயோட போட்டோ எடுக்கணும்ன்னு ஒரே அடம்

பி.கு: அட என்னப்பா நீங்க வேற மொத்த தமிழ் மணமும் நாயாப் பதிவுப் போட்டு குலைச்சுட்டுத் திரியறாயங்க, தலக்குன்னு ஊருக்குள்ளே ஒரு கெத்து இருக்குல்ல அதை மெயின்டெயின் பண்ணனும் இல்ல.. தலயைப் பிடிச்சு இந்த நாய் பக்கத்துல்ல உக்கார வச்சு ஒத்தப் படம் எடுக்குறதுக்குள்ளே சங்கத்து மொத்தக் கூட்டத்துக்கும் கண்ணு கட்டிப் போச்சுப்பா

தேவ் | Dev said...

துபாய் ராஜா, அங்கிட்டு சங்கப் பணி எப்படி நடக்குது... துபாய்ல்ல ஒரு நாலைஞ்சு ஷேக் பசங்களை நம்ம சங்கத்துல்ல சேத்து மெம்பர் ஆக்குய்யா அப்போத் தான் நம்ம கெத்து அங்கே கொஞசம் கூடும். தல நாலு அரபி படத்துல்ல தலக் காட்டணும்ன்னு ஆசப் படுறாரு இல்ல...

தேவ் | Dev said...

//"கை" தேவு! வரு.வா.சங்கத்துத் தலைமை கழகத்துல இருந்துக்கிட்டு இப்படியொரு தவறானதொரு அறிக்கையை வெளியிட்டுட்டியேய்யா?நம்ம "புதரை" யாரோ ஒரு மூணாம் மனுஷனைப் போலத் தவறாச் சித்தரிச்சிருக்கியே... //

எக்ஸ் க்யூஸ் மீ தல...

பிகுலுன்னு பேர் வச்ச நேரம் அக்கா பிகுலை வீட்டுல்ல வைச்சுட்டுப் போயிடுச்சு.. இப்போ சோத்துக்கு சங்கடம் படுதாம்.. கேட்டதும் நம்ம தலைமை நிலையத்துல்ல எல்லோரும் ஒண்ணாக் கூடி ஒன்றரை மணி நேரம் அக்கா எழுதுன வெண்பாவைப் பாண்டியை படிக்க விட்டு கதறி கதறி அழுதோம்ன்னாப் பாரேன்...

கைப்புள்ள said...

//நியூயார்க் டைம்ஸ் நாளிதழா? அல்லது பத்திரிக்கையா?

எப்படிய்யா அட்டையில் வரும்?//

நம்ம அருமை பெருமை தெரியாம பேசிட்டாரு தயா? தேவ்! நீ அவரைக் கோவப்பட்டு ஏசிராத ராசா! நமக்காக ஸ்பெசலா, நியுயார்க் டைம்ஸ் வரலாற்றில் முதல் மொறையா பொஸ்தகம் போடப் போறதப் பத்தி நம்ம "நமது கைப்புள்ள" பேப்பர்ல வந்தத அவரு படிக்கலைன்னு இதுலேருந்தே தெளிவாத் தெரியலை?

கைப்புள்ள said...

//அப்புறம் ஒண்ணுமில்லாம பாலைவனத்தில் தண்ணிக்கு அலையுற உங்க தலைக்கு இந்த பில்ட் அப் எல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியலை.//

பாண்டி! இந்த கொத்ஸின் எகத்தாளத்தைக் கொஞ்சம் அடக்கு ராசா...ரொம்ப தான் சவுண்டு சாஸ்தியாவுது.

("கை" - கொத்ஸ் சொன்னா மாதிரி 50 தேத்த முடியும்னு நெனக்கிறே?)

கீதா சாம்பசிவம் said...

50-க்கு மேலேயே வரும் பாருங்க.

இலவசக்கொத்தனார் said...

//("கை" - கொத்ஸ் சொன்னா மாதிரி 50 தேத்த முடியும்னு நெனக்கிறே?)//

இந்த மாதிரி ஒரு பீடு போட்டுக் குடுத்த பின்னாடியும் தேத்தலைன்னா உங்களுக்கெல்லாம் டுவிஷண்தான் எடுக்கணும்.

பொன்ஸ்~~Poorna said...

//சங்கத்துல இல்லாத ஆளுங்களுக்கு "தல" முக்கியத்துவம் கொடுக்கறது சரி இல்ல சொல்லிப்புட்டேன். அதாங்க "தல" கூட இருக்காரே அவருதான்.:-))
//

என்ன நன்மனம், அப்படிச் சொல்லிட்டீங்க?!! அவரு உங்க ஒற்றர்படைல இருக்காருன்னு இல்ல நான் நினைச்சிகிட்டு இருக்கேன்!!! :))

பொன்ஸ்~~Poorna said...

//'நரி நியூஸ்'(நன்றி:பொன்ஸ்)//
துபாய் ராசா, இது ஏதோ கிண்டல் மாதிரி தெரியுது.. இந்த ஊர்ல நெசமாலுமே ஒரு நரி நியூஸ் சானல் இருக்கய்யா :)

பொன்ஸ்~~Poorna said...

//எல்லாம் நான் பொதருக்குப் போட்டுவுட்ட ஒரு எஸெமெஸ் தான்.//
அண்ணே, உங்க அன்புக்கு முன்னாடி, அவ்வ்வ்வ்வ்வ்
எனக்கு பேச்சே வரலைண்ணே!!!

குக்கர் குண்டுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்புங்கண்ணே :)

பொன்ஸ்~~Poorna said...

//புதரகத்துல ஏற்கனவே பொன்ஸ் அக்கா புஷ்ஷண்ணனை மிரட்ட போயிருக்காங்க.தம்பியும் போயி மிரட்டுனா புஸ்ஸு என்ன ஆவாரு? //
புஸ்ஸூன்னு ஆவாரு.. அதான் நீங்களே சொல்லிட்டீங்களே :)
செல்வன், யாரைத் தம்பின்னு சொல்றீங்க?!! ரஜினிக்கப்புறம் ஒரே அண்ணன் நம்ம கைப்பு அண்ணன் தான். சந்திர முகியில் பேய் பங்களாவுக்கு ரஜினிக்கே வழிகாட்டி அவரு அழைச்சிகிட்டு போனத மறந்துட்டு பேசறீங்க!!
ஏதோ எங்க அண்ணனுக்காகவும், உங்க அண்ணன் குமரனுக்காகவும் பார்க்கிறேன்..!!! இல்லைன்னா நீங்க இப்படிச் சொன்னதுக்கு நடக்கிறதே வேற!! :)

செந்தழல் ரவி said...

சந்திரமுகின்னு சொன்னதும், பொண்டாட்டி சொர்ணாவ சூப்பர் ஸ்டார் கிட்ட இருந்து காப்பாத்த ரெண்டு கையயும் விரிச்சி , ஒரு காலை தூக்கி பறவை மாதிரி ஒரு போசு குடுப்பாரு பாரு கைப்பு...

அத என்னான்னு சொல்லறது போ..

ரவி

நன்மனம் said...

//என்ன நன்மனம், அப்படிச் சொல்லிட்டீங்க?!! அவரு உங்க ஒற்றர்படைல இருக்காருன்னு இல்ல நான் நினைச்சிகிட்டு இருக்கேன்!!! :))//

வ.வா.ச ஒற்றர் படை இரண்டு கால் ஜீவன்களை வைத்து தான் அவசியமான செய்திகளை சேகரிக்கிறது என்பதை இந்த தருணத்தில் சங்க கண்மணிகளுக்கு சொல்லிக்கொள்கிறேன். (இதுக்கு யாரு என்ன சொல்ரீங்கனு பாப்போம்)

"தல" 50 கேட்டதுக்கு அப்புறம் தராம இருப்பமா?

ஜொள்ளுப்பாண்டி said...

// யப்பா,
முதலில் உங்க சங்கத்தில் இருக்கறவங்களை நல்லா தெரிஞ்சுக்கோங்க.
அப்புறம் ஒண்ணுமில்லாம பாலைவனத்தில் தண்ணிக்கு அலையுற உங்க தலைக்கு இந்த பில்ட் அப் எல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியலை. //

யோவ் கொத்ஸ்ஸூ
கேவலம் குடிக்கிற தண்ணிக்கா எங்க 'தல' அலையுதுன்னு நெனக்கறே ? இது வேற 'தண்ணி' அதெல்லாம் உன்னைய மாதிரி பால்புட்டிக்கு எங்கென தெரிய போகுது ?

பாடி பில்டப் பண்ணி வச்சிருக்கற 'தல'க்கி பில்டப்பே தேவையில்லைதான் ஆனாலும் உங்களை மாதிரி ஆளுகளுக்காக தேவைப்படுதே என்ன செய்ய?

'தல' ஓகே வா??

பொன்ஸ்~~Poorna said...

//கேட்டதும் நம்ம தலைமை நிலையத்துல்ல எல்லோரும் ஒண்ணாக் கூடி ஒன்றரை மணி நேரம் அக்கா எழுதுன வெண்பாவைப் பாண்டியை படிக்க விட்டு கதறி கதறி அழுதோம்ன்னாப் பாரேன்... ///
பசங்க பாசம் தாங்க முடியலையே!!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இன்னிக்கு ஒரே உருக்கமான காட்சிகளா இருக்கே, ஆபீஸ் வேலை செய்யறதா வேண்டாமா?!!

பொன்ஸ்~~Poorna said...

//("கை" - கொத்ஸ் சொன்னா மாதிரி 50 தேத்த முடியும்னு நெனக்கிறே?) //
தலைவா, உங்களுக்காக உயிரையும் கொடுக்கும் (யாரோட உயிரை அப்டின்னு கேட்றாதீங்கப்பூ) தொண்டர்கள் இருக்கையில், ஒரு 50 கூடவா கொடுக்கமாட்டோம்?!!
உங்க படத்த தனியாப் போட்டாலே 50 தேறிடும் , ஒரு நாய் வேற இருக்கு :))

பொன்ஸ்~~Poorna said...

//இந்த மாதிரி ஒரு பீடு போட்டுக் குடுத்த பின்னாடியும் தேத்தலைன்னா உங்களுக்கெல்லாம் டுவிஷண்தான் எடுக்கணும். //
கொத்ஸ், பீடு என்றால் என்ன? பீடு= பெருமை இது தான் நான் கேள்விப்பட்ட பீடு.. நீங்க எழுதி இருப்பது புரியலை.. எந்த மொழி?!!

ட்யூஷன் எடுக்க வந்தீங்கன்னா, எங்க சங்கத்துல காணாம போன ரெண்டு காபி கப், ரெண்டு டீ கப், நாலு அஞ்சு பைசா காயின், அப்புறம் எங்க கஜானா, எல்லாத்தையும் கண்டு பிடிச்சிருவோம்.. உங்க ராசி அப்படியாமே!! வந்துட்டுப் போங்கய்யா!! :)

பொன்ஸ்~~Poorna said...

//வ.வா.ச ஒற்றர் படை இரண்டு கால் ஜீவன்களை வைத்து தான் அவசியமான செய்திகளை சேகரிக்கிறது என்பதை இந்த தருணத்தில் சங்க கண்மணிகளுக்கு சொல்லிக்கொள்கிறேன். (இதுக்கு யாரு என்ன சொல்ரீங்கனு பாப்போம்)
//

நன்மனம் உங்களைப் பத்தி நீங்க இப்படிச் சொல்லிக்கிடறது உங்க தன்னடக்கமான நல்ல மனசைக் காட்டுது.. விமானத்துல என்னோட வந்த உங்கூர்க்காரரு நல்லாச் சொல்லிட்டாரே, உங்க கிட்ட ஒரு துப்பறியும் நாய், பூனை, நரி படையே இருக்குன்னு!! :)

(இப்போ என்ன செய்வீங்க?!! இப்போ என்ன செய்வீங்க?!!! )

நாகை சிவா said...

ஐயோ! ஐயோ! தல........ புதரகத்தில் உனக்கு தெலுங்கு பட ஹீரோ சொக்கையையும், குழாயையும் கொடுத்து உன்ன கவுத்துடான்களே! கவுத்துடான்களே! சிங்கத்தை அசிங்கமா ஆக்கிடான்களே! இந்த அசிங்கத்தை போக்குறதுக்கு என்ன பண்ண போறேனூ தெரியலயே. மாப்பு தேவ், இதுக்கு எதாவது பண்ணுபு.

இலவசக்கொத்தனார் said...

//கொத்ஸ், பீடு என்றால் என்ன? பீடு= பெருமை இது தான் நான் கேள்விப்பட்ட பீடு.. நீங்க எழுதி இருப்பது புரியலை.. எந்த மொழி?!!//

அய்யோ. இது ஆங்கில feedங்க.

//ட்யூஷன் எடுக்க வந்தீங்கன்னா, எங்க சங்கத்துல காணாம போன ரெண்டு காபி கப், ரெண்டு டீ கப், நாலு அஞ்சு பைசா காயின், அப்புறம் எங்க கஜானா, எல்லாத்தையும் கண்டு பிடிச்சிருவோம்.. உங்க ராசி அப்படியாமே!! வந்துட்டுப் போங்கய்யா!! :)//

டிவிஷனெல்லாம் நான் வந்து எடுக்க மாட்டேன். நீங்கதான் இங்க வரணும். ஆனா, நீங்க வந்துட்டு போன பின்னாடி காணாமல் போனவை பற்றிய அறிவிப்பு ன்னு பதிவு போடற லெவலுக்கு நம்மளை கொண்டுவிடலைன்னா சரி.

எங்க புது பதிவு பக்கம் ஆளைக் காணும்?

கப்பி பய said...

தலைவரோட 'புலிகேசி' யானை, குதிரைங்கள வெச்சு படம் புடிக்க பெர்மிசன் வாங்காததால ரிலீஸ்ல பிரச்னையாமே...இந்த நாய் போட்டாக்கு பெர்மிசன் வாங்கியாச்சா??

இலவசக்கொத்தனார் said...

//எங்க சங்கத்துல காணாம போன ரெண்டு காபி கப், ரெண்டு டீ கப், நாலு அஞ்சு பைசா காயின், அப்புறம் எங்க கஜானா, எல்லாத்தையும் கண்டு பிடிச்சிருவோம்.. உங்க ராசி அப்படியாமே!!//

காபி கப் வேற. டீ கப் வேறையா?

நாலு அஞ்சு பைசா காயின் கிடைச்சுதுனா கஜானா கிடைச்சாச்சே. அப்புறம் அதி ஏன் தனியா சொல்லறீங்க?

தேவ் | Dev said...

கீதா மேடம் பொறந்த நாளுக்கு போட்டி வச்சியே அதுக்கு ஏன் தல கடைசி வரைக்கும் நீ பதிலும் சொல்லல்ல பரிசும் கொடுக்கல்ல? சொல்லு தல

தேவ் | Dev said...

தொடர்ந்துப் பின்னூட்டமிட்டு சங்கத்துப் பதிவு என எண்ணி எண்ணிக்கைகளை காணிக்கையாக்கும் பின்னூட்டச் சித்தர் பரொட்டாப் பாவலர் கொத்ஸ்க்கு நன்றி.

வரு.வா.ச. தலைமை நிலையம்.
சென்னை

தேவ் | Dev said...

சங்கத்தில் புதிதாக இணைந்துப் பணியாற்ற வந்திருக்கும் நாகை சிவா மற்றும் கப்பி அவர்களை அன்போடு வரவேற்கிறோம்.

வரு.வா.சங்கம் தலைமை நிலையம்
சென்னை

நன்மனம் said...

ஒற்றர் படைத்தளபதிக்கே ஒரு ஒற்றர் வைத்து அதையும் சபையில் சொன்ன "பிகிலு" மறந்த "பிகிலு" பொன்ஸை கேள்வி கேக்காத "வரு.வா.ச. தலைமை நிலையம். சென்னை" பொருப்பாளர்களே! இது ஏன்.

எப்பா வாங்கப்பா, வந்து கேள்வி கேக்கறா மாதிரி பின்னூட்டத்த ஏத்துங்க

தேவ் | Dev said...

அட என்னப்பா ஆள் ஆளுக்கு பொன் ஸ் அக்கா மேலயே தாக்குதல் நடத்துறீங்க ஏற்கனவே அவங்க குண்டு இல்லாம பெண்டு கழண்டு போய் இருக்காங்க...

இப்போ என்ன தலைமை நிலையம் அவங்களைக் கேள்விக் கேட்கணும் அவ்வளவு தானே இந்தா இப்போ கேக்குறேன்ய்யா

பொன் ஸ் அக்கா சோறு வடிச்சாச்சா?
வடிச்ச சோறு நல்லா இருந்துச்சா?
சாப்பிட்டிங்களா?

இதோ மூணு கேள்வி கேட்டாச்சு.. இனி பொறுப்பற்ற முறையில் தலைமை நிலையத்தை பார்து கேள்வி கேட்கவில்லை என்று விமர்சிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

கைப்புள்ள said...

//பொன் ஸ் அக்கா சோறு வடிச்சாச்சா?
வடிச்ச சோறு நல்லா இருந்துச்சா?
சாப்பிட்டிங்களா?//

ஒவ்வொண்ணுக்கும் தனி தனி பதில் வரணும் சொல்லிட்டேன்.

பொன்ஸ்~~Poorna said...

//பொன் ஸ் அக்கா சோறு வடிச்சாச்சா?//

நேரம் காலம் தெரியாம சங்கப் பணிகளைப் பார்த்ததில் சோறு வடிக்க நேரம் இல்லாமல் போய்விட்டது!! :(

பொன்ஸ்~~Poorna said...

//வடிச்ச சோறு நல்லா இருந்துச்சா?//
வடிக்கலையே தேவு,, வடிக்கலையே.. கண்ணீர் தான் வடிச்சிகிட்டு இருக்கேன் இப்போ.. உங்க அம்புட்டு பேரு பாசத்தையும் பாத்துபுட்டு!!

பொன்ஸ்~~Poorna said...

//சாப்பிட்டிங்களா?//

பாண்டி பேரச் சொல்லி ஒரு பர்கர், ரெண்டு நாய் அதாம்பா, ஹாட் டாக்கு,.. அதெல்லாம் சாப்பிட்டேன்.. ஒரு பிஸ்ஸா வேற சாப்பிடணும்.. இல்லாட்டி தம்பிக்கு கோபம் வந்திருமில்ல!! :)

பொன்ஸ்~~Poorna said...

//ஒவ்வொண்ணுக்கும் தனி தனி பதில் வரணும் சொல்லிட்டேன். //
தல, நீ சொல்லி நான் கேக்காம இருப்பேனா?.. தனித் தனித் தனியா பதில் சொல்லிபுட்டேன்.. நினைவு வச்சிக்க..

50க்கு மேலேயே வரும்னு வெறும் ஆசிர்வாதம் செஞ்சிட்டு போனவங்களையும் 50க்காக வெந்ததையும் வேகாததையும் தின்னுபுட்டு உட்கார்ந்து தட்டிகிட்டு இருக்கிற என்னையும் ஒரே தட்டுல வச்சி பாக்காத தல.. ஆமாம் சொல்லிபுட்டேன்!!!

பொன்ஸ்~~Poorna said...

நாகை சிவா, எங்க தல சூடானுக்கு வந்தா என்ன ட்ரெஸ் கொடுப்பீங்க?!!

பொன்ஸ்~~Poorna said...

//நாலு அஞ்சு பைசா காயின் கிடைச்சுதுனா கஜானா கிடைச்சாச்சே. அப்புறம் அதி ஏன் தனியா சொல்லறீங்க? //

கொத்ஸ், காயின் தனி.. அந்தக் காயினப் போட்டு வைக்கிற உண்டியல் தனி.. புரியுதா? அதான் தனித் தனியாச் சொல்றோம்.. உங்காளு வந்துட்டுப் போனப்புறம் ரெண்டுமே காணோம்.. நினைவு வச்சிக்குங்க.. நீங்க வந்தா கிடைச்சிரும்னு சொல்றாங்க.. பாக்கலாம் :)

கைப்புள்ள said...

//50க்கு மேலேயே வரும்னு வெறும் ஆசிர்வாதம் செஞ்சிட்டு போனவங்களையும் 50க்காக வெந்ததையும் வேகாததையும் தின்னுபுட்டு உட்கார்ந்து தட்டிகிட்டு இருக்கிற என்னையும் ஒரே தட்டுல வச்சி பாக்காத தல.. ஆமாம் சொல்லிபுட்டேன்!!!//

யப்பா...நீங்க ரெண்டு பேரும் போன ஜென்மத்துல டாம் அண்ட் ஜெரியாத் தான் இருந்திருப்பீங்க போல? இருக்குற பிரச்சினை போதாதுன்னு மகளிர் அணிக்குள்ளாற உள்பூசல் வேற?

தேவ் | Dev said...

சூடான்ல்ல தல அழகைப் பார்த்து மயங்கி அவர் கலரைப் பார்த்து கல்ங்கி அவருக்கு தோலே நல்ல ட்ரெஸ்ன்னு சும்மா விட்டுர போறாங்க.... தல உஷாருப்பா உஷார்.. சூடான் போயிராதே சும்மாத் தான் நிக்கணும் ஆமா...

இந்த தளபதியார் கொஞ்ச நாளா சங்கப் பக்கம் காணும் என்ன சமாச்சாரம்ன்னு தெரியல்லியே

Anonymous said...

///"துபாய் ராஜா, அங்கிட்டு சங்கப் பணி எப்படி நடக்குது... துபாய்ல்ல ஒரு நாலைஞ்சு ஷேக் பசங்களை நம்ம சங்கத்துல்ல சேத்து மெம்பர் ஆக்குய்யா அப்போத் தான் நம்ம கெத்து அங்கே கொஞசம் கூடும். தல நாலு அரபி படத்துல்ல தலக் காட்டணும்ன்னு ஆசப் படுறாரு இல்ல..."///.

தேவு!!நம்ம'தலயோட'அதிகாரபூர்வ அரண்மனையில துபாய் ஷேக்குங்க கூட சேந்துதானே சங்கபணி ஆத்துறோம்.கெத்தெல்லாம் கொத்து
கொத்தாய் காய்ச்சித்தொங்குதய்யா!!
அரபி படத்துல 'தலயோட' தலை என்ன தலை உடம்பு முழுக்காவே ஒரு காட்டு காட்டிரலாம்ன்னு துபாய் ஷேக்குமாரு சொல்லிட்டாகய்யா சொல்லிட்டாக!!!!!!.

அன்புடன்,
துபாய் ராஜா.

பெருசு said...

ஆஹா ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்க

புதருக் குபொடி மட்டை யளித்த
கைப்பூ வாழ்க வாழ்க

ஆபிஸ்க்கு வரதுக்கு கொஞ்ச நேரம் ஆயிருச்சய்யா.

அதுக்குள்ள எங்கக்கா பொன்ஸ கண் கலங்க வெச்சுட்டீங்களெய்யா.

50 இல்ல 100 ஆனாலும் சரி, அக்கா பொன்ஸூகிட்ட இருந்து
வெண்பா வரவரைக்கும் ஓய மாட்டான் இந்த பெருசு.

ஆத்தா பொன்ஸூ, போன இடத்துல கொஞ்சம் அப்பிடி
இப்பிடிதான் இருக்கும் தாயி , அஜீஸ் பண்ணிக்கோமா.

வெந்ததை தின்று விதி வந்தால் மாள்வோம் அப்படின்னுட்டு
எதுக்கும் கலங்காம போட்டு தாக்கு தாயி.

Anonymous said...

"//'நரி நியூஸ்'(நன்றி:பொன்ஸ்)//
துபாய் ராசா, இது ஏதோ கிண்டல் மாதிரி தெரியுது.. இந்த ஊர்ல நெசமாலுமே ஒரு நரி நியூஸ் சானல் இருக்கய்யா :)"

அம்மா பொன்சு,அது தெரியாமலயா
நாங்கல்லாம் துபாயில வந்து சங்கப்பணி ஆத்துறோம்!!!!!!.உங்க
'புதிய வானம் பழைய பூமி' புதரக பதிவுல குறிப்பிட்டிருந்ததைதான் நாங்க அப்படி அடைப்புகுறியில போட்டிருந்தோம்.

அன்புடன்,
துபாய் ராஜா.

நன்மனம் said...

//துபாயில வந்து சங்கப்பணி ஆத்துறோம்!!!!!!.//

எலே ராசா! பாத்து ஆத்துலே:-))

ஓ சூடான எடத்துக்கு தகுந்தாப்ல ஆத்துரீகளா... சரி சரி

நன்மனம் said...

//'புதிய வானம் பழைய பூமி' புதரக பதிவுல //

அது புதிய பூமி பழைய வானம் லே

இப்படி மாத்தி மாத்தி ஆத்தினா தான் சூடு கொறயுமா:-)) :-))

சிறிப்பான், சிறிப்பிலி எல்லாம் இருக்குபா

Dharumi said...

50- பின்னூட்டம் எட்டட்டுமேன்னு நல்ல மனசோட 'ஒண்ணு" போட்டுட்டு போறேன் - என்னதான் இருந்தாலும் எங்க ஊரு ஆளு பேர வச்சிக்கிட்டு (நாறடிக்கிறீங்களே!) இருக்கீங்களே, அந்தப் பாசந்தான்..சங்க ஆளுக எல்லாம் நல்லா இருங்கப்பு...

இலவசக்கொத்தனார் said...

இந்தா பிடி 50. எதோ என்னாலானது.

நன்மனம் said...

தருமி அய்யா.

அந்த பாசக்கார புள்ளயோட பேற எவ்வளவு தூரம் பரப்பி இருக்காங்க, இப்படி அடி வாங்கி அடி வாங்கி தான் இவ்வளவு தூரம் பரப்ப முடிஞ்சுதுனு தெரிஞ்சு நீங்களும் ஒரு அடி போட்டுட்டு போனதுக்கு நன்றி.:-)

அருட்பெருங்கோ said...

கைப்புவை கலாய்ப்பதில் வ.வா.ச. சிங்கங்களுக்கு வெளியிலிருந்து நிபந்தனையற்ற ஆதரவு வழங்க முடிவு செய்திருப்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்...

வருத்தத்துடன்,
அருள்.

(யப்பா நான் எழுதும்போது 49 பின்னூட்டம்தான் இருந்துச்சு...என்னுது 50வதா வருமா?? இல்ல எனக்கு முன்னால மட்டுறுத்தப் படாம எதாவது தேங்கிக்கிடக்கா?? எப்படியோ "இலவசம் வந்துட்டுப் போனாக் கிடைக்கிறதெல்லாம்" எனக்குதான் பரிசாக் கிடைக்கனும் ஆமா!!!)

Karthik Jayanth said...

அக்கா பொன்ஸ்,

//ஒரு பர்கர், ரெண்டு நாய் அதாம்பா, ஹாட் டாக்கு,.. அதெல்லாம் சாப்பிட்டேன்

இந்த அன்பு தம்பி சோல்லுறேன்.. கேட்டுகோங்க.. நீங்க இதே மாதிரி சாப்பிட்டா திரும்பி ஊருக்கு போகும் போது 2 டிக்கட்தான் எடுக்கனும் சொல்லிட்டேன்(எல்லாம் high கலோரி உணவு).. அதுவும் சூடான நாய் நம்ம இந்தியர்கள் சாப்பிடும் அசைவ பொருள் இல்ல.. பாத்துகோங்க..

Rishi said...

YErkanave...Kaipulla piranigalal romba kasta adrar..ithule ithu veraya :):)

Batsha still'na atleast pakkathule oru tattule 25/50 paise chillaya'vathu irundu irunda...romba soooopra irukkum...

தயா said...

//நியுயார்க் டைம்ஸ் வரலாற்றில் முதல் மொறையா பொஸ்தகம் போடப் போறதப் பத்தி நம்ம "நமது கைப்புள்ள" //

"நமது கைப்புள்ள" ன்னு ஒரு பேப்பர் வேறு இருக்கா? அது "ஓரு ரூபாய்" தானே? இல்லை இலவசமா அங்கங்கெ பெட்டியில் வைத்திருக்கிறீர்களா?

"இம்சை" அரசனுக்கு ஒரு இம்சையாமே? படம் எப்பங்க வருது? அதுலே (அந்தப்புர) ராணி யாருங்க?

Anonymous said...

//'புதிய வானம் பழைய பூமி' புதரக பதிவுல //
அது புதிய பூமி பழைய வானம் லே
இப்படி மாத்தி மாத்தி ஆத்தினா தான் சூடு கொறயுமா:-)) :-))
எலே ராசா! பாத்து ஆத்துலே:-))//

அய்யா நன்மணம்!உணர்ச்சிவசப்பட்டு ஏதோ கொஞ்சம் வேகமா ஆத்திப்புட்டோம். தப்பையெல்லாம் நல்லாதான்யா துப்பு துலக்கிறீரு!!!
வளர்க ஒற்றுப்பணி!!!!!

அன்புடன்,
துபாய் ராஜா.

ஜொள்ளுப்பாண்டி said...

//பாண்டி பேரச் சொல்லி ஒரு பர்கர், ரெண்டு நாய் அதாம்பா, ஹாட் டாக்கு,.. அதெல்லாம் சாப்பிட்டேன்.. ஒரு பிஸ்ஸா வேற சாப்பிடணும்.. இல்லாட்டி தம்பிக்கு கோபம் வந்திருமில்ல!! :) //


பொன்ஸக்கா எஞ்சொல்லுக்கு இப்பூட்டு மருவாதை குடுக்குறீயளே என் கண்ணில இருந்த ஆனந்த கண்ணீர் கன்னாபின்னானு வருதே ஆஆஆஅவ்வ்வ்வ் ....

ஜொள்ளுப்பாண்டி said...

//கைப்புவை கலாய்ப்பதில் வ.வா.ச. சிங்கங்களுக்கு வெளியிலிருந்து நிபந்தனையற்ற ஆதரவு வழங்க முடிவு செய்திருப்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்...

வருத்தத்துடன்,
அருள்.//


யப்பா அருளு என்னாதிது வருத்தத்துடன் ?? ம்ம்
திங்கத்தெரியாதவனுக்கு பன்னு மாதிரி உங்கதை என்ன சொல்ல ??

சரி சரி வெளியில இருந்து ஆதரவு தாரேங்கறீங்க வருக வருக !!!

கீதா சாம்பசிவம் said...

எல்லாரும் மறந்து போனாலும் அப்போ அப்போ நினைவு வச்சுக்கிட்டு தேவ் கேக்கறதுக்கு நன்றி.
ஆனால் பரிசு யாருக்குக் கொடுத்தாங்க தெரியலியே?

தேவ் | Dev said...

//வருத்தத்துடன்,
அருள்.//

வருத்தததை வெளியே விட்டுட்டு நீ உள்ளே வாய்யா..

கரூர்ல்ல வரு.வா.ச கிளை ஓப்பனிங் அப்ளிகேஷன் ரெடி பண்ணிருவோம்..அப்புறம் என்ன வருத்தம் ?

தேவ் | Dev said...

அக்கா உங்களுக்கு விழா எடுக்க முதல் குரல் என்னுடையது தான்...
அப்புறமா உங்க விழாவுக்குப் பரிசு த்ராம விட்டுருவோமா?
இப்பவாது இந்த தம்பிவோட பாசத்தைப் புரிஞ்சிக்கோங்க அவ்வ்வ்வ்வ்வ்

அருட்பெருங்கோ said...

கைப்பூ கவனத்திற்கு,

//எப்படியோ "இலவசம் வந்துட்டுப் போனாக் கிடைக்கிறதெல்லாம்" எனக்குதான் பரிசாக் கிடைக்கனும் ஆமா!// னு சொல்லிட்டு 50வது பின்னூட்டத்த நான் தான் போட்டேன்...இத எப்படியோ ரகசியமா தெரிஞ்சிக்கிட்ட கொத்சு 50வது பின்னூட்டம் அவர் போட்ட மாதிரி அழிச்சாட்டியம் பன்றாருப்பா..அவர் வந்துட்டுப் போனப்பக் கிடைச்சதெல்லாம் அவரே அள்ளிட்டுப் போகப் பார்க்கிறாரு..இது நல்லால..வீணா ஒரு வோட்ட இழந்துட வேண்டாம்...ஆமா...

அல்லாத்தையும் சுருட்டி இந்த முகவரிக்கு அனுப்பி வைங்க(கை)ப்பூஊஊ...

வ.வா.ச. வஞ்சிமாநகர் - சேரநாடு!

பொன்ஸ்~~Poorna said...

//வெந்ததை தின்று விதி வந்தால் மாள்வோம் அப்படின்னுட்டு
எதுக்கும் கலங்காம போட்டு தாக்கு தாயி//
பெருசு, விதி வந்தா மாள்வதா?!!! என்னய்யா, ஆட்டோ, ஹெலிகாப்டர்ன்னு என்னைப் போட்டுத் தக்க எதுனா அனுப்பி இருக்கீரா?!!

இப்போத் தான் வாலிபர் சங்கத்துல சேர்ந்திருக்கேன்.. அதுக்குள்ள விதி வந்தால் மாள்வோம்?!!!!

பொன்ஸ்~~Poorna said...

//அம்மா பொன்சு,அது தெரியாமலயா
நாங்கல்லாம் துபாயில வந்து சங்கப்பணி ஆத்துறோம்!!!!!!.//
அட ராசா, உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா?!! இப்படிஎதாச்சும் சொன்னாத்தான் 50 பிடிக்க முடியும்னு.. பாரு,.. நீயும் வந்து 100க்கு வழி பண்ணிப்போட்டியே!!! :)))

பொன்ஸ்~~Poorna said...

//இந்த அன்பு தம்பி சோல்லுறேன்.. கேட்டுகோங்க.. நீங்க இதே மாதிரி சாப்பிட்டா திரும்பி ஊருக்கு போகும் போது 2 டிக்கட்தான் எடுக்கனும் சொல்லிட்டேன்//
என்ன தம்பி கார்த்திக், பாசக் கார பயலாச்சே நீ.. நீ எடுத்துக் குடுத்திர மாட்டியா ரெண்டு டிக்கெட் :)???

பொன்ஸ்~~Poorna said...

//இல்லை இலவசமா அங்கங்கெ பெட்டியில் வைத்திருக்கிறீர்களா?//
தயா, எங்க, இலவசமா வச்சும் எவனும் எடுத்துட்டுப் போக மாட்டேங்கிறான்.. அதான் அங்கங்க எடுத்துக் கூவிக் கூவி குடுத்துகிட்டு இருக்கோம்.. இதெல்லாம் பப்ளிக்கா கேட்டுகிட்டு!!! தன்னால புரிஞ்சிக்கவேணாமா?!!!

பொன்ஸ்~~Poorna said...

//அய்யா நன்மணம்!உணர்ச்சிவசப்பட்டு ஏதோ கொஞ்சம் வேகமா ஆத்திப்புட்டோம். தப்பையெல்லாம் நல்லாதான்யா துப்பு துலக்கிறீரு!!!
வளர்க ஒற்றுப்பணி!!!!!
//
பரவாயில்லை துபாய் ராசா.. இப்படித் தப்பு பண்றா மாதிரி பண்ணி, நன்மனம் வேலை செய்யறாரா இல்லையான்னு கண்டுபிடிக்கிற பாரு?!! உன்னய மாதிரி ஆளுங்க இருக்கிறதுனால தான் நம்ம சங்கமே வாழ்ந்துகிட்டு இருக்கு.. சீக்கிரம் ப்ளாக்கர்ல வாப்பா!! :))

பொன்ஸ்~~Poorna said...

//திங்கத்தெரியாதவனுக்கு பன்னு மாதிரி //
புதரகம் போய் வெறும் பன் தின்று கொண்டிருக்கும் பொன்ஸ் அக்காவைக் கிண்டல் செய்வதுபோலிருக்கும் இந்த பின்னூட்டத்தை அனுமதித்த தலைக்கு என் கண்டனங்கள்.. !!!!

ஜொ.பா, உனக்கும் என் கண்டனங்களுடன், இனி உன் கண்களில் தாவணி போட்ட பெண்கள் தெரியாமல் போகக் கடவது என்னும் சாபங்களையும் கோபங்களோடு தெரிவித்துக் கொள்கிறேன்!!!

பொன்ஸ்~~Poorna said...

//எல்லாரும் மறந்து போனாலும் அப்போ அப்போ நினைவு வச்சுக்கிட்டு தேவ் கேக்கறதுக்கு நன்றி.//
கீதாக்காவே இந்தப் பக்கத்தை மறந்துட்டு அப்பப்போ நினைவு வச்சிகிட்டு வந்து பார்க்கிறாங்க?!! இதுல தேவுக்கு பாராட்டு வேற!! ம்ஹும்.. நல்லதுக்குக் காலமே இல்லை!~!!

பொன்ஸ்~~Poorna said...

இத்துடன் சங்கத்தின் காலை நேரப் பணிகளை முடித்துக் கொண்டு கல்கி கண்ட தலையின் வெள்ளை மாளிகைப் பயணம் ஒரு நூறு என்ன, இருநூறே காணவேண்டும் என்று வாழ்த்தி, வணங்கி வடை பெறும்.. ஓ.. விடைபெறும்,

உங்கள் பொன்ஸ் :)

(துபாய்) ராஜா said...

///"துபாய் ராசா.. உன்னய மாதிரி ஆளுங்க இருக்கிறதுனால தான் நம்ம சங்கமே வாழ்ந்துகிட்டு இருக்கு.. சீக்கிரம் ப்ளாக்கர்ல வாப்பா!! :))"///

'Profile' போட்டாச்சு பொன்சு!!!
பதிவுகள் விரைவில்.

அன்புடன்,
(துபாய்)Raja.

பொன்ஸ்~~Poorna said...

வாங்க வாங்க ராசா.. நல்ல பதிவுகளா போட்டீங்கன்னா, சங்கப் பலகையிலும் எழுதும் வாய்ப்பு கிடைக்கலாம் :)