Monday, May 22, 2006

கைப்புள்ளயின் புதுக் கலாட்டா

எப்பவும் எதிலும் பரபரப்பாக இருக்க வேண்டும் என விரும்பும் தலக் கைப்பு தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார்..

பார்க்க படங்கள்...

கே: கைப்பு சார் நீங்க தீடிரென்னு ஜெர்மனி கிளம்புறதாச் சொல்லுறாயங்க உண்மையா?
ப: தப்பாக் கேக்குற... கிளம்பல்ல.. புல்லட் மாதிரி பாஞ்சிகிட்டு இருக்கேன்.. இனிமே நீ அடுத்த கேள்வி கேக்க ஜெர்மனிக்குத் தான் வரணும் ஆமா

கே: அரசியல்ல நீங்க ஆப்பு வாங்குனதுன்னாலேத் தான் இப்படி ஊர் விட்டு ஊர போறதாப் பேசிக்கிறாயங்க உண்மையா?
ப:பாண்டி.. இங்கேப் பார்றா .. நல்லாக் கேக்குறாயங்கய்யா கேள்வியை.... இப்படி கேட்டா நாங்க பயப்பட மாட்டோம்..( மெதுவானக் குரலில்) ஆமா இந்த உண்மையை உன் கிட்ட யாரு சொன்னா?

நிருபர்: நான் சும்மாப் போட்டு வாங்க்னேன்....
கைப்பு: மறுபடியும் போட்டு வாங்குறீயா.....கைப்புள்ள இனி நீ இருக்க கூடாது..கிளம்பிருடா.. கிளம்பிரு.. இல்லன்னா உன் மானத்தை மானிட்டராக்கி ராவா அடிச்சுபுட்டு உன் தன்மானத்தை சைட் டிஷ்ஷா தொட்டு அசிங்கம் பண்ணிருவாய்ங்கடா...
( கைப்பு காணாமல் போகிறார்)

ஜெர்மனி செல்லும் வழியில் புதரக வரு.வா.ச அபிமானியும் புதரக வாஷிங்டன் வெள்ளை மாளிகை தலக் கைப்பிள்ளை ர்சிகர் மன்றத் தலைவருமான ஜார்ஜ் புதரைச் சில நிமிடங்கள் கைப்பு மீட் செய்துள்ளார்...

அப்போது கைப்பு செர்மனிக்கு வருமாறு ஜார்ஜ் புதருக்குப் பாசமிகு அழைப்பு விடுத்தார். செர்மனிக்கு வரும் போது புதர் அணிவதற்கு சிறப்பு சீருடையும் வழ்ங்கினார்.

கைப்பும் புதரும் கலந்து மகிழ்ந்த அந்த விழாவில் கைப்பு கொடுத்த சிறப்பு ஆடையில் புதரின் படம் இதோபடங்கள் உதவி: விவசாயி இளா

23 comments:

கீதா சாம்பசிவம் said...

அது தான் தலையைச் சுற்றி ஒளிவட்டம் தெரியுதே. அதானே தலைவர்னு சொல்லப் போறீங்க?

நாகை சிவா said...

அட கொக்கா மக்கா, இங்கயுமா.
நம்ம தல யாரு? அவரு என்ன?
இது எல்லாம் சும்மா அவருக்கு தூசு.
இருந்தாலும் தல பாத்து பந்து அடுத்தவன் உதைக்கிறப்ப கொஞ்சம் தள்ளியே இருங்க. படாத இடத்துல பட்டுட போது.

ஜொள்ளுப்பாண்டி said...

ரொனால்டினோவுக்கே கோலடிக்கப்போகும் தல கைபூ வாழுக வாழுக !! கைப்பு என் தல! எங்கம்மா நீ?? தேடவேண்டியிருக்கே ??

செந்தழல் ரவி said...

இப்படி சொல்லி சொல்லியே உடம்ப ரணகளமாக்கிட்டானுங்க...

வேணாம்...விட்டுடு...அழுதுடுவாரு...

தேவ் | Dev said...

வாங்க ரவி நீங்க ஆட்டத்துக்கு புதுசு அதான் தலப் பத்தி உங்களுக்கு சரியாத் தெரியல்ல.... சரி போனப் போகுது நீங்க சின்னப் பில்ல மாதிரி தெரியுறீஙக அதுனால தல உங்களை எக்ஸ்யூஸ் மீ பன்ணிடுவாரு... ஓ.கே:)))))

நாமக்கல் சிபி said...

போர்க்களங்கள் மட்டுமல்ல!
கால்பந்தாட்டக் களங்களையும் கலக்கப் போகும் தலை கைப்புள்ளைக்கு எங்கள் வாழ்த்துக்கள்!

இமாலய வெற்றிகளை சூடி வெற்றிக் கோப்பைகளுடன் வருவார் எங்கள் தலை!

வெட்டிப்பயல் said...

//இமாலய வெற்றிகளை சூடி வெற்றிக் கோப்பைகளுடன் வருவார் எங்கள் தலை! //

அந்தக் கோப்பைகளுக்கு ஒரு எவர்சில்வர் பாத்திரக்கடையில உங்க தலை ஒரு பல்க் ஆர்டர் குடுத்திருக்காருன்னு நம்ம சிம்பு சொல்றாரே!

பெருசு said...

தல கைப்பு அவர்களே

போற வழிலே அப்படியே அமேரிக்கா பக்கம் தலயா காட்டிட்டு போங்கப்பு.சில பல எளந்தாரிங்க
குமுறிகிட்டிருக்காய்ங்க.


செருமேனி பக்கம் போம்போது
கண்டமேனிக்கு துணிய போட்டுட்டு போயிராதீங்கப்பு.அதுலயும்துபாய் டிரஸ் மட்டும் வேண்டாம்.சொல்லிப்புட்டேன்.

சந்தோஷ் aka Santhosh said...

//அந்தக் கோப்பைகளுக்கு ஒரு எவர்சில்வர் பாத்திரக்கடையில உங்க தலை ஒரு பல்க் ஆர்டர் குடுத்திருக்காருன்னு நம்ம சிம்பு சொல்றாரே! //

வேணாம் விட்டுடூ சங்கத்தோட மொத்த கூட்டமும் வந்து அழுதுடுவோம்.

பொன்ஸ்~~Poorna said...

என்னப்பா எல்லாம் வாழ்த்தி வழி அனுப்பவதிலேயே குறியா இருக்கீங்க!!!

யாராவது தலயோட கால்பந்தாடப் போங்கப்பா.. எனக்குத்தான் ரூல்ஸ் தெரியாது.. இல்லைன்னா நானே லீவ் போட்டுட்டு போய்டுவேன்!!!

தேவ் | Dev said...

சிம்புக்கு ஏதுப்பா அதுக்கு எல்லாம் நேரம்.. ?

பார்த்தி பாத்துப் பதமா புரளியக் கிளப்ப்பு.. இப்படி கண்டமேணிக்குப் பேசபிடாது... ஆமாச் சொல்லிபுட்டேன்... கேட்டுக்க

தேவ் | Dev said...

//வேணாம் விட்டுடூ சங்கத்தோட மொத்த கூட்டமும் வந்து அழுதுடுவோம். //

இந்த மிரட்டலுக்கே பார்தி பம்மிருவானே சந்தோஷ் அது போதும்ய்யா

தேவ் | Dev said...

பெருசு கவலைப்படாதீங்க நம்ம சிங்கம் செருமனில்ல செயிச்சுப் போட்டு அப்புறம் வேர்ல்ட் டூர் அடிக்கப் போவுதாம் அப்போ அங்கிட்டு வந்து உன் கூட குடிச்சுப்புட்டு கும்மாளமா ஒரு நாள் இல்ல ஒரு வாரம் இருந்துட்டுத் தான் இந்தியா வரும்ன்னு சொல்லுராரு.

தேவ் | Dev said...

பொன் ஸ் அக்கா பொறுமை...
தலக் கூட சரளாக்காப் போறாங்களாம்.. பாசக் கார அக்கா இல்ல.. தலக்கு ஆட்டுக் காலு சூப்பு, சாத்துக் குடி சூஸ் இப்படி வகை வகையாச் செஞசுக் கொடுத்து தலயை நல்லாப் பாத்துப்பாயங்க்...
சரளாக்காவுக்கு தம்பி பாசம் சாஸ்திக்கா...

நீங்க புதரகத்தில்ல கைப்பொண்ணைப் பாத்தா தல இன்னும் அவங்களை நினைச்சு உருகுகிட்டு இருக்கார்ன்னு மட்டும் சொல்லுங்க..:)

சுதாகர் said...

//தலக் கூட சரளாக்காப் போறாங்களாம்.. பாசக் கார அக்கா இல்ல.. தலக்கு ஆட்டுக் காலு சூப்பு, சாத்துக் குடி சூஸ் இப்படி வகை வகையாச் செஞசுக் கொடுத்து தலயை நல்லாப் பாத்துப்பாயங்க்...
சரளாக்காவுக்கு தம்பி பாசம் சாஸ்திக்கா...//

ஆட்டுக் காலு சூப்பு, சாத்துக்குடி ஜூஸ்-ன்னு குடிச்சிட்டு குப்புற கவுந்து தூங்காம, தலய போயி ஒழுங்கா பிராக்டிஸ் பண்ணச் சொல்லுங்கப்பு!

Anonymous said...

"///கைப்புள்ள இனி நீ இருக்க கூடாது..கிளம்பிருடா.. கிளம்பிரு.. இல்லன்னா உன் மானத்தை மானிட்டராக்கி ராவா அடிச்சுபுட்டு உன் தன்மானத்தை சைட் டிஷ்ஷா தொட்டு அசிங்கம் பண்ணிருவாய்ங்கடா...
( கைப்பு காணாமல் போகிறார்)///".

"தன்மானம் காத்த இனமானச் சிங்கம்
எங்க தல கைபுள்ள வாழ்க!வாழ்க!."

அன்புடன்,
துபாய் ராஜா.
(பார்வைத்திரையிலே(Display Board)
முழுவாக்கியமும் வரது தெரியுதமாதிரி
ஒரு Video Clipings போடுங்கப்பு!!!.)

Suka said...

ஹஹா .. அடிக்கற கூத்தைப் பார்த்தா சங்கத்துல அடிப்படை உறுப்பினர் ஆகிடலாமான்ன்னு கூடத் தோணுது :)

சுகா

பொன்ஸ்~~Poorna said...

'அடி'படை உறுப்பினருக்கு (அதாங்க அடி வாங்குற படை) ஆள் தேடிகிட்டு தான் இருக்கோம்.. சுகா வந்தாலும் சந்தோஷமே.. :))))

Suka said...

பொன்ஸ் .. சங்கத்துக்காக ராத்திரி பகலா உழைக்கிறீங்க போல.. :)

ஆமா யாராவது கைப்புள்ளக்கு ரூல்ஸ் சொல்லிக்குடுங்க .. இல்லைன்ன இப்பிடித்தான்..


கைப்புள்ள .. "என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு ... மனுசன் இங்க உசுரக்குடுத்து விளையாடீட்டு இருக்கான் ... பிகிலடிச்சுட்டு கூடவே ஒடியாரே ஆனா பந்தை உதைக்க மட்டும் மாட்டீங்குறே.. என்னா மாட்ச் பிக்ஸிங்கா .. " என நடுவரைப் பார்த்து எகிற ..அப்புறமென்ன :)

பொன்ஸ்~~Poorna said...

புதிதாக சங்கத்துக்கு வந்த சுகா!!!

ராத்திரி பகலான கதையை இங்கு பார்க்கவும்.

ஆமாம், பிகிலு அடிச்சிகிட்டு தல கூட ஓடி வந்தது நான் இல்லை தானே?!! :)

Suka said...

ஓ ..ஓகே.... 'பிகிலு' எப்பிடியோ coincidence ஆகிவிட்டது :)

எனிவே.. புதரகம் உங்களை இனிதே வரவேற்கிறது. சங்கத்துப் பணிகள் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் :)


வ.வா.ச.அ.உ (சான் உசே கிளை)

தேவ் | Dev said...

அன்பின் நண்பர் சுகாவை வரு,வா.சங்கம் தலைமைக் கிளை அன்போடு வரவேற்கிறது.

வரு.வா.சங்கம் தலைமை நிலையம் சென்னை.

Suka said...

'பாசக்கார பயலுகலா இருக்காங்கப்பா ..' தேங்க்ஸ் தேவ் :)