இதனால் தமிழ் வலைப்பதிவு உலகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சியினருக்கும் அறிவிக்கப்படுவது என்னவென்றால், தமிழ் வலைப்பதிவு நாட்டில் மட்டும் கொடி நாட்டி ஆட்சி நடத்திக் கொண்டிருந்த எங்கள் சங்கத்தின் சிங்கம், முன்னாள் மால்கேட் மாணிக்கம், இந்நாள் சித்தூர்காட் சிறுத்தை, அண்ணன் கைப்புவின் சங்கமும், அவர்தம் பெருமையும் தமிழகத்தில் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிறைந்துள்ளது..
இதை, ஜொ.பாண்டியின் உற்ற நண்பரும், நமது தோழமைக் கட்சியான க.பி.கவின் தலைவருமான பால பாரதி சொன்ன போது நானும் நம்பவில்லை.. அவர் சொன்னது போல், இந்த வார கல்கி இதழ் வாங்கிப் பார்க்கும்போது தான் அண்ணனின் பெருமையை அறிந்து மனம் பெருமிதத்தால் விம்மியது என்று சொன்னால் அது மிகையாகாது.
கல்கி இதழில் "ஸர்ச் இன்ஜின்" பகுதியில் அண்ணன் கைப்புவின் மாண்மையும் வலைப்பதிவின் நோக்கமும் தெளிவாக, சந்தேகத்துக்கு இடமின்றி விண்டு விண்டு வைக்கப் பட்டுள்ளது.
கல்கி சொல்வது யாதெனில்:கைப்புள்ள கட்சி (கட்சி பேரத் தான்யா மாத்திப்புட்டாய்ங்க!!!)
(எங்கள் தலைவர் கைப்பு தலைமையில் உருவான லட்சிய கட்சி இது. கட்சியின் கொள்கை: கைப்புவைக் கலாய்த்தல்.)
கே: தேர்தல்ல உங்க வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?
ப: செயிச்சாச்சுன்னு எழுதிக்க...ஒரு மூணு பக்கத்துக்கு தமிழ் நாட்டுல்ல வ.வா.ச... அ.உ.ஆ.சூ.கு.க... மல்லிகை கூட்டணிப் போட்டிப் போடற தொகுதில்ல எல்லாம் எங்க கூட்டணி வேட்பாளர்கள் பேரை ஹைலைட் பண்ணி இவிங்க எல்லாம் செயிச்சுப்புட்டாயங்கன்னு போட்டுக்க...
கே: மால்கேட்ல்ல அப்படி என்ன பண்றீங்க?
ப:பில்டிங் கான்டிராக்ட்ன்னு ஊருக்குள்ளே கவுரமாச் சொல்லி வச்சுருக்கேன் நீயும் அதையே மெய்ன்டேன் பண்ணு அது தான் உனக்கும் நல்லது... எனக்கும் நல்லது...
கே:நீங்க ஆட்சிக்கு வந்தா என்னப் பண்ணுவீங்க?
ப: என்ன கேள்வி இது ராஸ்கல்... ஆட்சிக்கு வந்தா ஆட்சி பண்ணுவோம்ய்யா... வென்று...
கண்ணுகளா, எங்ஙனயோ பார்த்தமாதிரி இருக்குதா? எல்லாம் நம்ம கழகப் போர்வாள், சென்னை சுனாமி, சீவலப்பேரி பாண்டியான அண்ணன் தேவின் "கைப்புள்ள பேட்டி" யின் பகுதி தான்..
எனவே சங்கக் கண்மணிகள் தமிழ்நாட்டுக்கே அண்ணனான 'கல்கி கண்ட தல' கைப்புவுக்கு பெரிய வெடிசூட்டு விழாவை, ஆங், டங் ஆப் தி ஸ்லிப்புங்கோ, முடி சூட்டு விழாவை சீக்கிரம் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விழாவில் அண்ணன் புகழைத் திக்கெட்டும் பரவச் செய்த கழகப் போர்வாள் தேவுக்கு தங்க வாள் தர கட்சியின் நிதி நிலைமை இடம் கொடுக்காததால், ஒரே ஒரு வாளை மீன் போட்டு செய்த மீன் குழம்பையும் அளிக்க ஏற்பாடாகி இருக்கிறது. இந்த நல்ல செய்தியைச் சங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்த பாலபாரதி ஐயாவிற்கும் சங்கத்துச் சார்பாக பொற்கிழி காத்திருக்கிறது.. (அடியில் கிழிந்திருந்தால் சங்கம் பொறுப்பல்ல!)
அனைவரும் வாரீர்.. எதிரிக் கட்சித் தலைவரும் தொண்டர்களும் வரலாம், ஆனால், முகமூடியைக் கழற்றிவிட்டு வந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
15 comments:
சுட்டி கொடுங்க அக்கா.படிச்சு பாத்து சந்தோஷப்படுவமில்ல?
அக்கா பொன்ஸூ
இந்த செய்தியை படித்ததும் என் மனம் அடைந்த ஆனந்தத்தால் பேச்சே வரவில்லை.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
கல்கி குமுதம் ஆவிஜு வியுடன்
கல்கண் டேயாம் கைப்பு
அவ்வ்வ்வ் அடிக்காதீங்க.
அக்கா பொன்ஸூ
இந்த செய்தியை படித்ததும் என் மனம் அடைந்த ஆனந்தத்தால் பேச்சே வரவில்லை.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
கல்கி குமுதம் ஆவிஜு வியுடன்
கல்கண் டேயாம் கைப்பு.
அவ்வ்வ்வ் அடிக்காதீங்க
//'கல்கி கண்ட தல' கைப்புவுக்கு //
'கல்கி கண்ட தல' கைப்பு வாழ்க!
பொன்ஸ்,
மெய்யாலுமா 'கல்கி'யிலேவந்துருக்கு?
நமக்கு இங்கே 'கல்கி' வர்றதில்லைப்பா. அதான் கேட்டுட்டேன்.
அப்ப வலைஞர்கள் கவனிக்கப்படுகிறார்கள்!
நெசமாவா?
தல எங்கியோ போவுதே!
பாத்து!!
யப்பா கண்ணுங்களா,
கருப்புக்கண்ணாடி (இது கறுப்புக்கண்ணாடியோ) கார்த்திக்கைப் பத்தி கூடத்தான் என்னென்னவோ எழுதினாங்க. ஆனா கெலிச்சது யாரு?
ப.ம.க. ஆட்சியில் தனிமனித விரோதம் பாராட்டி நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்ற தைரியத்தில் வாய்க்கு வந்ததை பேச வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், நம் கட்சிகளிடையே நல்லுணர்வு பெருகி (அதான் தேர்தல் முடிஞ்சாச்சே, இனிமே பங்குதானே) வரும் இவ்வேளையிலே, இது போன்ற சதி வேலைகளில் ஈடுபட வேண்டாமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
///பாலபாரதி ஐயாவிற்கும் சங்கத்துச் சார்பாக பொற்கிழி காத்திருக்கிறது.. (அடியில் கிழிந்திருந்தால் சங்கம் பொறுப்பல்ல!)///
:-))
கல்கிக்கு சுட்டி எதுவும் இல்லை செல்வன்.. நாளைக்கு பக்கத்தை ஸ்கேன் பண்ணிப் போட முயற்சிக்கிறேன்..
உங்க (ஒரு நபர்???!) கட்சி பேரும் போட்ருக்காங்க பாருங்க :)
பெருசு,
உங்களுக்கும் நான் அக்காவா?!! சரி விடுங்க.. பேச்சு வராவிட்டாலும் இப்படி வெண்பாவா வடிக்கிறீங்களே!!! நீங்க தான் உண்மையிலேயே வெண்பாவுக்கு ஸ்டூடண்ட் நம்பர் 1!!!
அண்ணா அரையணா, உங்களையே அஞ்சு பேர் நம்பி பின்னூட்டம் போட்ருக்காங்க, எங்களை நம்பாமலா!! வாழ்க கைப்பு நாமம்!!! வளர்க வ.வா. சங்கம்!!!!
துளசி அக்கா, உண்மையா வந்துருக்குக்கா.. கல்கிக்கு இணைய எடிஷன் இல்லாததுனால சுட்டி கொடுக்க முடியலை.. நாளைக்கு நிச்சயம் (கம்பனி செலவுல) ஸ்கேன் பண்ணி போடறேங்கா.. வலைஞர்கள் நிச்சயம் கவனிக்கப் படுகிறார்கள்..
எஸ் கே, தல ஏற்கனவே எங்கயோ ராஜஸ்தான் பாலைவனம் எல்லாம் தாண்டி போய்ட்டாரு!!! உங்க ஆதரவு இருந்தா அடுத்த எலெக்ஷன்ல விருத்தாசலத்துல கைப்புவை நிக்க வச்சிடலாம்!!!
கொத்ஸ், என்ன சொல்றீங்க!! யாரைப் பாத்து?!! எங்க வாலிபவயசு உடன்பிறப்பை யாரோட ஒப்பிடறீங்க!! இது தான் நம்ம கட்சிகளின் நல்லுணர்வைக் கெடுப்பதாக இருக்கிறது..
//மேலும், நம் கட்சிகளிடையே நல்லுணர்வு பெருகி (அதான் தேர்தல் முடிஞ்சாச்சே, இனிமே பங்குதானே) வரும் இவ்வேளையிலே, இது போன்ற சதி வேலைகளில் ஈடுபட வேண்டாமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.//
சதியா!!! ஐயகோ பச்சோந்திகளுக்கும் வாலிபர்களுக்குமிடையில் நல்லுணர்வு பெருக வேண்டும் என்று உயிரையும் துச்சமாக மதித்து, உட்லண்ட் சென்று பார்த்துவந்து பார்த்திபன் போன்ற புல்லுருவிகளின் சதியை உலகறியச் செய்த நம் ஜி ராவுக்கு இது தெரிய நேரும் போது அவர் எவ்வளவு வருந்துவார் என்று எண்ணி இப்போதே நான் வருந்துகிறேன்..
கொத்ஸ், இந்தப் பதிவுல, உங்களை எதிர்த்து என்னங்க சதி செஞ்சோம்?!! உங்கள் பரோட்டாவில் அரிசி மாவைக் கலந்தோமா?? இல்லை உங்கள் மீன்கொத்தியைக் கொத்திக் கொண்டு போக பெருசை அனுப்பி வைத்தோமா?!! சுத்தமா புரியலை.. சதியை ஐயமறச் சுட்டிக் காட்டவும்!!!!
தல தல தான் !!
கூடிய விரைவில் NewYorkTimes ல் 'தல'ப்புச் செய்தியாக வரும் நாள் தொலைவில் இல்லை!!!
வா வா வவாச க்கு வாவா !!
( ராரா ஸ்டைலில் படிக்கவும் )
ஏய்...ஏய்...ப்ளீஸ்பா...கொஞ்சூண்டு பீட்டர் உட்டுக்கறேன்பா...ப்ளீஸ்பா...கண்டுக்காதேபா
//கே:நீங்க ஆட்சிக்கு வந்தா என்னப் பண்ணுவீங்க?
ப: என்ன கேள்வி இது ராஸ்கல்... ஆட்சிக்கு வந்தா ஆட்சி பண்ணுவோம்ய்யா... வென்று...//
That was topping man. Absolutely creative. Way to go Dev, Way to go Va Vaa Sangam.
:)-
கல்கி கண்ட நாயகன் 'தல' வாழ்க !
சங்கத்தின் பலத்தை பெருமையை இணையத்தில் உலகறிய செய்த ஆற்றலரசி, பாச மலர் பொன்ஸ் வாழ்க !
க.பி.க கண்டு, கணவான்களின் கண்ணியம் காக்க வந்திருக்கும் எங்கள் அண்ணன் எழுத்து சித்தன் பாலபாரதி வாழ்க !
வாழ்க சங்கம் !
கார்த்திக்
Post a Comment