~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்
Saturday, May 27, 2006
உதை பந்து!
உலக கோப்பை கால்பந்தாட்டத்தில் கலந்து கொள்ள ஜெர்மனி சென்றுள்ள கைப்புவின் முதல் பேட்டி:
(சற்று முன்புதான் தல ஒரு பயிற்சி ஆட்டத்தில் வழக்கம் போல பலரை பந்தாடி விட்டு களைப்புடன் வந்து அமர்ந்தார்).
பேட்டி இதோ:
நிருபர்: எப்படி இருக்குங்க கால்பந்தாட்டம்
கைப்பு: மொதல்ல பேர மாத்துய்யா, உதை பந்துன்னு பேர் வை. உதைச்சுதானே ஆடுறாங்க அப்புறம் என்ன?
நிருபர்: எவ்வளவோ விளையாட்டு விளையாடி இருப்பீங்க இந்த விளையாட்டு உலகம் முழுசும் பிரபலமா இருக்கு, நீங்களும் சேர்ந்ததனால இன்னும் பரபரப்பாயிருச்சு.. அதனால்...
கைப்பு:(குறுக்கிட்டு) என்னைய்யா விளையாட்டு இது, இங்கிட்டும் அங்கிட்டும் ஓட ஓட ஒரே பந்தை உதைச்சுகிட்டு, சே. எல்லாருக்கும் ஒண்ணொண்ணு குடுத்துறலாமில்ல. சின்னபுள்ளத்தனமா.
நிருபர்: ரொனால்டோ, பெக்ஹாம், ரூனே எல்லாம் உங்களுக்கு பயந்துக்கிட்டு ஊர விட்டு ஓடிட்டாங்கன்னு பேசிக்கிறாங்களே, அது உண்மையா?
கைப்பு: அது உண்மைதான். நான் விளையாட்ட விட்டு போக என்கிட்ட கெஞ்சினாங்க . நாந்தான் அவுங்களையெல்லாம் சமாதானபடுத்தி கூட்டி வந்தேன். பின்னாடி சங்கத்துல சேர்த்துகிறதாவும் வாக்கு கொடுத்துட்டேன். இருந்தாலும் போட்டின்னு வந்துட்டா கைப்பு சிங்கம் மாதிரி குதிச்சிருவானுல. இந்த போட்டிக்கு அப்புறம் சங்கத்துல கேட்டு உதை பந்தாட்டத்திலிருந்து VRS வாங்கிரலாம்னு இருக்கேன். நமக்கு வேற வேலை இருக்குள்ள...
நிருபர்: இது வரைக்கும் நீங்க ஒரு கோல் கூட போடலையாமே?
கைப்பு: நான் கஷ்டப்பட்டு காலால பந்த உதைச்சுகிட்டே முன்னாடி போறேன் ஒரு லூசுப்பையன் கால குறுக்கால உடுறான், விட்டேன் பாரு ஒரு அறை, ஹாஹா அப்புறம் வருவான பக்கத்துல. யாருகிட்ட இதெல்லாம் நடக்கும். அப்புறமா ஒருத்தன் இடுப்புல இடிக்கிறான் ஒரே உதை..
நிருபர்: பந்தையா?
கைப்பு: அவனத்தான். பின்னே விட்டுறுவோமா? அது கூட பரவாயில்லை. இவ்வளவு கஷ்டப்பட்டு எல்லாரையும் ஏமாத்தி பந்த கொண்டுபோயி அந்த கூடையில போட்டா..
நிருபர்: என்னாது கூடையா? அது கோல் போஸ்ட்டுங்க
கைப்பு: எனக்கு தெரியாதா, உனக்கு தெரியுமான்னு டெஸ்ட்டு பண்ணேன்.(என்னா வில்லத்தனம்). எவ்வளவு கஷ்டப்பட்டு எல்லாரையும் ஏமாத்தி பந்த கொண்டுபோயி கோல் போஸ்ட்ல உதைச்சா பிக்காளி ஒருத்தன் கையால புடிக்கிறான், இருக்கட்டும்னு விட்டுட்டேன். அது யாரோ ஒருத்தன் நம்மல பார்த்து பிகுலு ஊதிட்டே இருக்கான் உதைக்கவும் மாட்டேன்கிறான், அவன் எதுக்கு வேஸ்ட்டா, அவனையும் மாத்தனும்.
பேட்டி தொடரும்
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
சூப்பரப்பு.. அந்த வெள்ளச்சட்டையும்.. பந்தடிக்கிற ஸ்டைலும்.. தல தல தான்!!!
போட்டோ எடுத்தவனைச் சுத்திப் போடணும்
அருமை, அருமை, கலக்கல்.
கால்பந்து ஜீரம் நம்ம கைப்புள்ளக்கும் பிடிச்சிட்டுதா?
உங்க தல வெறும் சவுண்ட் விட்டுகிட்டு பந்து பக்கதுல வராம இருக்கணும். இது என்ன பந்தை உதைக்கிற மாதிரி போஸு? கொஞ்சம்கூட நல்லா இல்லை . சொல்லிட்டேன்.
வெவசாயி! அடுத்ததா நான் ரோனால்டோவைத் திட்டற படத்தைப் போட்டிங்கனா இந்த எகத்தாளம் பேசுறவங்க வாயெல்லாம் வெத்தலை பாக்கு போட்டுக்கும்.
///"இங்கிட்டும் அங்கிட்டும் ஓட ஓட ஒரே பந்தை உதைச்சுகிட்டு, சே. எல்லாருக்கும் ஒண்ணொண்ணு குடுத்துறலாமில்ல.
கஷ்டப்பட்டு காலால பந்தஉதைச்சு
கிட்டே முன்னாடிபோறேன் ஒரு லூசுப்
பையன் கால குறுக்கால உடுறான்.
எவ்வளவு கஷ்டப்பட்டு எல்லாரையும் ஏமாத்தி பந்த கொண்டுபோயி கோல் போஸ்ட்ல உதைச்சா பிக்காளி ஒருத்தன் கையால புடிக்கிறான்,
. அது யாரோ ஒருத்தன் நம்மல பார்த்து பிகுலு ஊதிட்டே இருக்கான் உதைக்கவும் மாட்டேன்கிறான், அவன் எதுக்கு வேஸ்ட்டா, அவனையும் மாத்தனும்."///
எப்படியோ நம்ம 'தல'யால எல்லா
ரூல்சும் மாறப்போகுது.
கொத்துஸ்!
இந்த கிண்டல் எல்லாம் இங்க வேணாம்.
இந்த போட்டோ சும்மா ஜீஜிபி.... அந்தரத்துல பறந்து பறந்து தல பந்தை உதைத்த மாதிரி எல்லாம் போட்டோ இருக்கு. இத எல்லாம் இப்பவே இங்க போட்டுடா, உலக கோப்பையின் போது தலயே எப்படி சமாளிப்பது என சதி ஆலோசனையில் இருக்கும் எதிரணிக்கு க்ளூ கொடுத்த மாதிரி ஆயிடும் என்பதால் அதை எல்லாம் வெளியிட வேண்டாம் என சங்கத்து செய்ற்குழுவில் தீர்மானம் போட்டது உங்களுக்கு தெரியாதா?
எப்பா தேவ், என்னப்பா பண்ணுற, அந்த தீர்மான நகல நீ பதிவுல போடலையா? இப்ப பாரு கொத்துஸ் வந்து இலவசமா கொத்திடு போயிட்டாரு............
கொத்ஸ், இது "தல" டிரைனிங் குடுத்தப்ப எடுத்தது.
இதுக்கே அவிங்க ஆடி போய்டாங்க.
//என்ன கைப்புள்ள
ஆனாலும்... இது குசும்புங்க//
என்னங்க நான் எதோ பண்ண மாதிரி பேசறீங்க...எல்லாம் நம்ம சங்கத்து சிங்கங்களோட அன்பு தாங்க...
அது யாரோ ஒருத்தன் நம்மல பார்த்து பிகுலு ஊதிட்டே இருக்கான் .//
நல்லா பாத்தீங்களா? ஒருத்தனா இல்ல வேறயா? எனக்கு என்னமோ 'ஸேம் சைடு கோல்' மாதிரி ஏதோ ஒண்ணு தெரியுது
அது யாரோ ஒருத்தன் நம்மல பார்த்து பிகுலு ஊதிட்டே இருக்கான் .//
நல்லா பாத்தீங்களா? ஒருத்தனா இல்ல வேறயா? எனக்கு என்னமோ 'ஸேம் சைடு கோல்' மாதிரி ஏதோ ஒண்ணு தெரியுது
ஐயா தருமி, பெரிய ஆளைய்யா நீர்!!!.. இந்த விளையாட்டு புரியாமத் தானே நானே சும்மா உட்கார்ந்து வேடிக்கை பார்த்து என்னளவுல, அண்ணன் பந்தைத் தொடும் போதெல்லாம் பிகிலடிச்சிகிட்டு இருக்கேன்.. என்னைப் போய் போட்டுக் குடுக்கறீங்களே!!
சரி, மதுமிதாவுக்கு விவரங்கள் கொடுத்தீங்களா? உங்க ப்ளாக்கும் தமிழா ஆங்கிலமான்னு அத்தோட நின்னுபோச்சே!!
தல அந்தக் குறுக்காலேக் காலை விட்டாம்ல்ல அவனைப் புடிச்சிட்டோம் தல நம்ம பாண்டியும் நானும் தான் பாஞ்சுப் புடிச்சோம்.. அப்புறம் நம்ம சிவாவுக்குப் போன் போட்டு வரச் சொன்னோம்... ஒரு ரூம் போட்டு அடிப் பின்னிட்டோம் இல்ல.. பயப் புள்ளக்கு தமிழ் சுத்தமாத் தெரியாதுப் போல ஒரு தஸ் புஸ்ன்னு எதோ வாயிலே சுனாமி வந்த மாதிரி சங்கு ஊதுனான்...
மூணு பேரும் சேந்து தெளிய தெளிய வச்சு அடிப் பட்டயக் கிளப்பிட்டோம் இல்ல
அய்யோ தல ஒரு ஸ்மால் மிஸ்டேக் தல.. அந்த அடிப்பட்டவன் எஸ்கேப் ஆயிட்டேன் போகும் போது கோவமாக் கத்திட்டுப் போனான்... கெட்ட வார்த்தையில்ல வன்சியிருப்பான்னு நினைக்கிறேன்...
அப்புறம் உம் படம் ஒண்ணைக் கையிலேடுத்து டர் புர்ன்னு கிழிச்சுக் காட்டிட்டுச் சிரிச்சான்.
அநேகமா நாங்கப் பண்ண ரகளையிலே உனக்கு செம ஆப்பு இருக்குன்னு நினைக்கிறேன் எதுக்கும் கெட்டப் செஞ்ச் பண்ணிட்டு பாதுகாப்பாப் பந்தை உதை தல... சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன் ஆமா
"ஏன் தேவு!!நம்ம 'தல'க்கு தெரியாத
கெட்டப்பா???உதைவாங்கறதுக்காக
பந்தா கூட மாறிடுவாரு!!!!!!!"
aana ellarum sethu kaipullaiku ivaallo vangai taruveenga appadinu ninaikave mudiyala...padakara pasanga vittutu poga mattenguranga :)
//அநேகமா நாங்கப் பண்ண ரகளையிலே உனக்கு செம ஆப்பு இருக்குன்னு நினைக்கிறேன் எதுக்கும் கெட்டப் செஞ்ச் பண்ணிட்டு பாதுகாப்பாப் பந்தை உதை தல... சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன் ஆமா//
அடப் பாவிங்களா! எம் மேலே இருக்குற பாசத்துல செல்லமா ரெண்டு தட்டு தட்டமா போட்டு பொரட்டி எடுத்துட்டீங்க போலிருக்கே? நீ பொரட்டுனது யாருன்னு தெரியுமா ஒனக்கு...கேமரூன் நாட்டு காட்டுப்பயய்யா...காட்டுப்பயய்யா...ஐயோ! நேத்தாச்சும் வெறுமனே காலை மட்டுந் தேன் வுட்டான்...நீங்க பண்ணி இருக்குற வேலைக்கு இனிமே காலைவுட்டு ஒரு கிண்டு கிண்டாம வுடமாட்டானேயா...இந்த இன்சூரன்சு எளவும் இல்லியேய்யா என் பேருல...என்ன பண்ணுவேன்?
ஹ்ம் இன்சூரன்ஸ் ஏஜெண்டுன்னு சொல்லி உங்க ஒண்ணு விட்ட சித்தப்பாபையன் வீரபாகுகிட்ட ஒருத்தன் வந்து சேர்ந்தான்.(அர்ஜூன் - கிரி) அப்புறம்தான் அவருக்கு விதி வேற மாதிரி ஆச்சு, பார்த்து கைப்பு உங்களையும் யாரவது ஏமாத்திர போறாங்க.
சாரி தல, கொஞ்சம் மிஸ் ஆயிட்டு, அடுத்த தடவை இந்த மாதிரி ஏதும் நடக்கமா பாத்து பதமா நடந்துக்குறோம். மகளிரணி தலைவி பத்தி வந்த கடித்த படிச்சிகிட்டு இருக்கும் போது எஸ்கேப் ஆயிட்டான்.
ரெண்டு, மூன்று இன்சுரண்ஸ் கம்பெனிக்கு போனேன், உன் பெயரை கேட்டவுடன் வெளியே போ சொல்லுறான். என்ன பண்ணலாம், உன் உயிருக்கு ஆபத்துனு மத்திய அரசு கிட்ட பாதுகாப்பு கேட்கலாமா.(இது பாண்டி கொடுத்த ஐடியா)
//கேமரூன் நாட்டு காட்டுப்பயய்யா//
கேமரூன்னு ஒரு நாடு இருக்கா அண்ணே? நான் என்னவோ அதுவும் ஒரு பர்கர், பிஸ்ஸா மாதிரி சாப்புடுற ஐட்டம் கிடைக்குதான்னு பார்க்கலாம்னு நினைச்சேன்..
(பாருங்க..எத்தனை அப்பாவி சின்னப் பெண்ணைச் சந்தேகிக்கிறீங்கன்னு ஒரு அனானி இப்போ வந்து கேட்பார் பாருங்க!!)
(பாருங்க..எத்தனை அப்பாவி சின்னப் பெண்ணைச் சந்தேகிக்கிறீங்கன்னு ஒரு அனானி இப்போ வந்து கேட்பார் பாருங்க!!)
கேட்டாச்
தல உன்னிய எந்த டீம்ல்ல சேத்துகிட்டாய்ங்கன்னு சொல்லு தல மேட்ச்க்கு டிக்கெட் எடுக்கணும்ன்னு இல்ல
//(பாருங்க..எத்தனை அப்பாவி சின்னப் பெண்ணைச் சந்தேகிக்கிறீங்கன்னு ஒரு அனானி இப்போ வந்து கேட்பார் பாருங்க!!)//
அப்பாவி சின்னப் பொண்ணா... அட பாவின்னு ஒரு அனானி வந்து அலறுவார் பாருங்க:)
அட பாவி
அலறியாச்சு:)
Post a Comment