Wednesday, February 7, 2007

அந்தக் காலத்து காதல்..

சங்கத்து தோஸ்த்துங்க கேட்டுக்கிட்டா மாதிரியே இங்கயும் கொஞ்சம் திரும்பி பாக்கலாம்னு நினைக்கேன்.

வாலிப வயசுல நடந்தத எளுதுறதால பாஷையும் ஒங்க ஸ்டைல்லயே இருக்கும்..

ஆனா அந்த காலத்துல மாமு, மச்சி, கடல போடறதுங்கற வார்த்தைங்கல்லாம் டிக்ஷனரியில இருந்ததுல்லன்னு நினைக்கேன்..

சரி ரொம்ப போரடிக்காம விஷயத்துக்கு வாங்கன்னு சொல்றீங்க..

வந்துட்டேன்..

1974-75..

கல்யாணத்துக்கு இன்னும் மூனு வருசம்.. அதாவது ப்ரொஃபைல்லருக்கற ஃபோட்டோவுக்கு அஞ்சு வருசத்துக்கு முன்னால..

சென்னை பெரம்பூர் லோக்கோ ஒர்க்ஸ் ரயில் ஸ்டேஷன்லருந்து தினமும் செண்ட்ரல் வரை கரி எஞ்சின் பூட்டுன ரயில்ல பயணம். முக்கால் மணி நேரம் எடுக்கும்.

சுமார் பத்து கோட்ச் இருக்கற வண்டியில ஒரேயொரு லேடீஸ் கோச்தான். ஆனா மொத்த பயணிங்கள்ல கால்வாசி பெண்கள் இருப்பாங்க.

செண்ட்ரல சுத்தி சதர்ன் ரயில்வே ஆஃபீஸ், வால்டாக்ஸ் ரோடு, தங்கசாலை அப்புறம் ஈவ்னிங் பஜார்னு கடைங்களுக்கு பஞ்சமே இல்லை.. அத்தோட இப்ப அண்ணாசாலைங்கற மவுண்ட்ரோட்லருக்கற ஆஃபீஸ்களுக்கும் செண்ட்ரல்ல இறங்கித்தான் பஸ் பிடிக்கணுங்கறதுனால இந்த மாதிரி வண்டியில நிறைய பெண்கள் இருப்பாங்க..

என்ன சொல்ல வரேன்னா 'கலர்களுக்கு' பஞ்சமே இல்லைங்க..

என்னெ மாதிரி இளசுகளுக்கு கொண்டாட்டத்துக்கு கேக்கணுமா? என்னெ மாதிரின்னுதான் சொன்னேன்.. எனக்குன்னு சொல்லல. கவனிங்க.

என்னோட அண்ணா ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்சி லைன் க்ளியர்னாலும் எனக்கென்னவோ இந்த காதல் கத்தரிக்காய்லல்லாம் நம்பிக்கை இருக்கல அப்போ (நம்புங்க தம்பிங்களா அதான் உண்மை!).

வேலையில எதையாவது சாதிக்கணுமேங்கற வெறிதான் எனக்குள்ள அப்போ இருந்தது.. எதையாவது உருப்படியா சாதிச்சிருக்கேனாங்கறது வேற விஷயம்.

'சரியான மரக்கட்டைடா நீ. பேசாம சாமியாரா போயிருக்கலாம்'' இது என்னுடைய நண்பர்களுடைய அர்ச்சனை.

எனக்கு காதல் வந்துச்சோ இல்லையோ என் சகா ஒருத்தனுக்கு வந்துது..

அதப்பத்தி கொஞ்சம் குஜாலா பாக்கலாம்..

நாளைலருந்து ஒரு அஞ்சாறு நாள்.. அதாவது பிப்ரவரி பதினாலு வரை..

தமாஷா இருக்குமோ இல்லையோ கொஞ்சம் கிளுகிளுப்பா இருக்கும்..

தொடரும்

18 comments:

இலவசக்கொத்தனார் said...

கிளுகிளுப்புக் கதை எழுதும் வாலிபர் வாழ்க!

ஜொள்ளுப்பாண்டி said...

//என்ன சொல்ல வரேன்னா 'கலர்களுக்கு' பஞ்சமே இல்லைங்க..//

//தமாஷா இருக்குமோ இல்லையோ கொஞ்சம் கிளுகிளுப்பா இருக்கும்..//


அப்பாடா ஜோசப் சார் வயித்திலே பீரை வார்த்தீங்க போங்க ;)))))))))))))))))))))
ரொம்ப ஆவலா காத்துகிட்டு இருக்கோம் !!

Unknown said...

உங்க நண்பர்கள் உங்களைச் சாமியாராப் போகச் சொன்னாங்கன்னு சொல்லுறீங்க.. இப்போ கிளுகிளுப்பு கதை எல்லாம் எழுதப் போறதாச் சொல்லுறீங்க... ம்ம்ம்ம் ஜோசப் சார் என்னமோப் போங்க.. ஒண்ணுமே புரியல்ல... சங்கத்துப் பய்லவ எல்லாம் அப்பிராணிக ஆமா

இராம்/Raam said...

சார்,


ஆரம்பமே அசத்தலா இருக்கு.... :)

இராம்/Raam said...

தினமும் வரப்போகும் கதைக்காக ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறோம் :)

TBR. JOSPEH said...

வாங்க இ.கொத்தனார்,

கிளுகிளுப்புக் கதை//

இந்த காலத்து வாலிபர்கள விட அந்த காலத்து வாலிபர்களுக்குத்தாங்க இது சரளமா வரும்:)

TBR. JOSPEH said...

வாங்க ஜொ.பாண்டி,

அப்பாடா ஜோசப் சார் வயித்திலே பீரை வார்த்தீங்க//

எனக்கு வார்க்கத்தாங்க தெரியும்:)

TBR. JOSPEH said...

வாங்க தேவ்,

உங்களைச் சாமியாராப் போகச் சொன்னாங்கன்னு சொல்லுறீங்க.. //

அழுத்திச் சொல்லியிருக்கேன்.. புரியும்னு நினைக்கேன். அந்த அர்த்தத்துலதான் நம்ம தோஸ்த்துங்க சொல்லியிருக்காங்க போலருக்கு..

சங்கத்துப் பய்லவ எல்லாம் அப்பிராணிக//

அதான் தெரியுதே:)

TBR. JOSPEH said...

வாங்க ராம்

ஆரம்பமே அசத்தலா இருக்கு.//

ஆரம்பம் மட்டுந்தான்னு கடசியில சொல்லாம இருந்தாச் சரி..

TBR. JOSPEH said...

ரெண்டாம் தடவையா வாங்க ராம்:)

ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறோம்//

இருங்க, இருங்க:)

Unknown said...

//இந்த காதல் கத்தரிக்காய்லல்லாம் நம்பிக்கை இருக்கல அப்போ//

ஓக்கே சார் ஓக்கே.... புரியுது....

Unknown said...

:))))

போன பின்னூட்டத்துல ஸ்மைலி மிஸ் ஆகிடுச்சு ;-)

கைப்புள்ள said...

குஜால்ஸா சொல்லுங்க ஜோசப் சார். என்னை மாதிரி சின்னப் பசங்க எல்லாம் கதை கேக்க வெயிட்டிங்.
:)

வெளிகண்ட நாதர் said...

பராவாயில்லை நமக்கு ஒரு பத்து வருஷ முன்னாடி நடந்த உங்களுக்கு நடந்த காதல் திருவிழா பத்தி எழுதுங்க! மனசுக்கு ஒன்னும் வயசாகலையே!

TBR. JOSPEH said...

வாங்க அருட்பெருங்கோ,

ஓக்கே சார் ஓக்கே.... புரியுது.... //

புரிஞ்சா சரி..

நீங்க ஸ்மைலி போட்டா என்ன, போடாட்டி என்ன?

போட மறந்துட்டேன்னு சொல்றப்பதான் ஏதோ வில்லங்கம்னு புரியுது:)

TBR. JOSPEH said...

வாங்க கைப்புள்ள,

என்னடா இதுவரைக்கும் காணமேன்னு பாத்தேன்..

தலய மாட்டிவிட்டுட்டு அம்பேல் ஆனவர் இப்பத்தான் வரீங்க போலருக்கு:)

என்னை மாதிரி சின்னப் பசங்க எல்லாம் கதை கேக்க வெயிட்டிங்//

அதென்னெ ஒங்கள மாதிரி சின்னப் பசங்க.. நாங்கூடத்தான்..

TBR. JOSPEH said...

வாங்க வெ.க.நாதர்,

ஒரு பத்து வருஷ முன்னாடி நடந்த உங்களுக்கு நடந்த காதல் திருவிழா பத்தி எழுதுங்க//

ஏங்க கல்யாணம் ஆகியே இருபத்தேழு வருசமாவுது.. நாங்க ஒன்னாருக்கறது புடிக்கலையாக்கும்:(

மனசுக்கு ஒன்னும் வயசாகலையே!//

அத வீட்டுல ஒத்துக்கணுமே:)

நாமக்கல் சிபி said...

//தமாஷா இருக்குமோ இல்லையோ கொஞ்சம் கிளுகிளுப்பா இருக்கும்..
//

ஆஹா! பாண்டித் தம்பி ஜாக்கிரதை!
உன் இடத்தை சைக்கிள் கேப்புல தட்டப் பாக்குறாரு இந்த மனுஷன்!