Wednesday, February 7, 2007

கவுண்டர் Devil Show - வெட்டிப்பயல்கவுண்டர் நடத்தும் டெவில் ஷோ நம்ம வெட்டிப்பயல் பதிவில் படித்து இருப்பீர்கள். கவுண்டர், சினிமா நட்சத்திரங்களிடம் கேள்வி கேட்டு அலுத்துவிட்டபடியால் ஒரு மாற்றாக நம்முடைய வலைப்பதிவர்களிடம் அவருடைய பேட்டியை தொடரலாமின்னு முடிவு செய்கிறார். எப்பவும் அடுத்தவருக்கும் நமக்கு நாமே ஆப்புகள் பலவகையாய் வைத்து பழகிய சங்கத்து சிங்கங்களிடம் ஆரம்பிக்கிறார். முதன்முதலாக கவுண்டரிடம் சிக்கி சின்னபின்னாவென ஆனவரை பற்றி அறிய மேலும் படியுங்கள்.

கவுண்டர்:- வாங்க சங்கத்து இளையதளபதி, பாஸ்டன் புயல் , அறிவுச்சுடர், வெட்டிப்பயல் பாலாஜி அவர்களே!

வெட்டிப்பயல்:- என்ன வரவேற்ப்பெல்லாம் பலமா இருக்கு! எதுக்கு இவ்வளோ அடைமொழிகள் எல்லாம்??

க: பிளாக்கர் மண்டயா? நீதானடா இப்பிடியெல்லாம் சொல்லி வரவேறங்கன்னு கோமுட்டி தலையன்கிட்டே சொல்லிவிட்டுருக்கே! அதுக்கு வேற அவனுக்கு முருக்கு பொட்டலம் லஞ்சமா வேறே குடுத்திருக்கே! இங்கே வந்து நல்லவன்மாதிரி ஆக்ட் குடுக்கிறீயா பல்புமண்டயா?

வெ: சரி சரி விடுங்க... யாரும் பார்க்கலை! அப்பிடியே மெயிண்ட்ண் பண்ணிக்குவோம்.க:அப்பறம் என்னடா உன்னை எல்லாரும் வெட்டி வெட்டினு சொல்றாங்க?

வெ: அது என்னோட ப்ளாக் பேருங்கண்ணா!

க: எதுக்குடா அந்த பேரை வெச்ச?

வெ: வெட்டியாத்தானே இருக்கோம் ஏதாவது உருப்படியா பண்ணுவோம்னு ஆரம்பிச்சாதாலஅந்த பேரையே வெச்சிட்டேன்!

க: ஓ!!! அப்படினா உன்னை பொருத்த வரைக்கும் வெட்டியா இருக்கவங்க தான்ப்ளாக் எழுதறாங்கனு சொல்லற!

வெ: தெய்வமே! நான் அப்படி சொல்லலை... மத்தவங்க எல்லாம் பல வேலைகளுக்கிடையேசெய்யும் போது நாம வெட்டியா இருக்கும்போது ஏன் செய்யக்கூடாதுனுஆரம்பிச்சதால அந்த பேரு...

க: ஹீம்! சரி என்னந்தான் வேலை பார்க்கிறேன்னு சொல்லு?

வெ: நான் என்ன பண்ணுறன்னு இந்த உலகத்துக்கே தெரியுமே?

க: ஆமாம் இவரு.. பெரிய அமெரிக்க ஜனாதிபதி புஷ், இவரை ஊர்உலகத்துக்கே தெரியுது, அரை வேக்காடு மண்டயா, என்னப்பண்ணுறேன்னு ஒழுங்க சொல்லு, இல்லே அப்பிடியே வந்து காதை கடிச்சி வைச்சிருவேன்!

வெ: நானு சாப்ட்வேர் இஞ்சினியர், வேலை நிமித்தமா பாஸ்டன்'லே தங்கியிருக்கேன்.

க: உன்னோட ஹாபியை சொன்னே.... உன்னோட மெயின் வேலை என்னாது?? அதை சொல்லு?

வெ: அப்பிடி மடக்கிறீங்களா? கதை எழுதுவேன், கவிதை எழுதுவேன், கட்டுரை எழுதுவேன், படவிமர்சனம் எழுதுவேன்.

க: டேய் டவுசர் மண்டையா, நிப்பாட்டுடா! மனசிலே என்ன தலைகாணி உறையை அப்பிடியே முழங்காலு வரைக்கும் போட்டு அலையிற எழுத்தாளன்னு நினைப்பா?

வெ: அய்யோ! அதெல்லாம் இல்லீங்கண்ணா! ஏதோ சும்மாயிருக்கிற நேரத்திலே ஏதோ எழுதுறேன், அவ்வளவுதான்!

: ஏண்டா டேய்! நீ ஏதோ அரைவேக்காட்டுதனமா நீ எதாவது பேசுறது ,செய்யுறதையெல்லாம் கூட வேறே எவனோ ஒருத்தன் இதெல்லாம் பண்ணுவான், அவனுக்கு கூட நாங்க கோழின்னு பட்டப்பெயர் வச்சு கூப்பிடுவோமின்னு சொல்லி அதை அப்பிடியே இங்கே எழுதி படிக்கிற மக்களை ஏமாத்துறே இல்லே???

வெ: ஐயோ! இப்பிடியெல்லாம் யாருங்ண்ணா உங்களுக்கு தப்புதப்பா தகவல் சொன்னது???

: உன்னை பத்தி தகவல் சொல்ல ஏஜெண்ட் 007'ஆ வருவான், நீ இப்போ பேசுறப்பவே தெரியலை, அந்த கோழி நீதான்னு??

வெ: அது நானில்லை! நானில்லை!

க: நானில்லை? நரியில்லைன்னுட்டு? ஏண்டா பாப்பாயி மண்டயா! நீ பெங்களூரூலே இருக்கிறப்போ, டெய்லி பாயை பிடிச்சி பிராண்டுறது, சுவத்தை பார்த்துக்கிட்டே "எக்கட உந்தி, நம் அம்மாயி" பொலம்பிக்கிட்டே இருப்பியாமே!! அதை பாஸ்டனிலே சும்மா உட்கார்த்திருக்கிற நேரத்திலே கதையா எழுதிட்டே இல்லே??

வெ: கவுண்டருண்ணா, நீங்களும் என்னை சந்தேகப்படுறீங்க? அது என்னோட கற்பனை கதைங்கண்ணா!

க: டேய், பீட்டாதலையா! இதையே எத்தனை பேருக்கிட்டே சொல்லிட்டு திரிவே, அதெப்பிடிடா தூறல் கதையிலே ஏரியா, பஸ்ரூட் எல்லாமே எழுதுனே இல்லே, உனக்கு அதெல்லாம் முழுசா தெரிஞ்சாதானே உன்னோட டைரியிலே எழுதமுடியும்??

வெ: நான் உத்தமன் தான்கிறதே புருப் பண்ண என்ன செய்யணும், சொல்லுங்க?

க: ஆமா இவரு பெரிய நடிகர்திலகம் நடிச்ச உத்தமபுத்தரு, எல்லாத்தையும் எத்தனை நாளுதான் ஏமாத்தப்போறீயோ?? தொரை வெறும் தெலுங்கு படந்தான் பார்ப்பிங்களா, அதை பார்த்திட்டு வந்த அடுத்த அஞ்சுநிமிசத்திலே அதுக்கு ஒரு விமர்சனம் எழுதுறது?

வெ: அது ஏன்ன்னு கூட நான் சொல்லிருக்கேன், வேணுமின்னா என்னோட பொன்னான பதிவை படிச்சிப் பாருங்க, உங்களுக்கே காரணம் புரியும்?

க: அடடேய் எலமண்ட் தலையா! படம் பார்த்ததும் இல்லமா அதெப்பிடியெல்லாம் நக்கல் பண்ணி ரவுசு விடுறே, ஒரு சினிமா படமெடுக்க எவ்வளோ கஷ்டநஷ்டமிருக்குமின்னு தெரியுமா?

வெ: அண்ணே, சினிமா எடுக்கிற கஷ்டநஷ்டம் பத்தி எனக்கு தெரியாது, ஆனா அதை போயிபார்க்கிறப்போ எங்களுக்கு கஷ்டமும் , காசு நஷ்டமும் தான் வருது!

க: அடேய் ஆட்டுகல் மண்டையா! என்கிட்டே ரவுசா? அது ஏண்டா கரம் வைச்சு கேப்டனை வம்பிழுக்கிறே??

வெ: அய்யோ! நான் தெரிஞ்சே எந்த தப்பும் பண்ணுறதில்லை.. அதெல்லாம் தெரியாமே நடக்கிறதுங்ண்ணா?

க: அடேய் ! அடேய் ! அப்போ நீ கேப்டனை கலாய்க்கிறது தெரியாமே நடக்கிறதா??

வெ: அப்பிடிலீங்கண்ணா! நான் கேப்டன் படம் பார்க்கிறது என்னை அறியாமே நடக்கிற தப்புங்கண்ணா? அந்த தப்பை சரி செய்யிறதுக்கு அதை பத்தி கலாய்ச்சிட்டா சரியா போயிருமில்லை???

க: அடேய்! அவரு பைட்'லே காலை சுழட்டி அடிக்கிறது தெரியுமில்லே...??

வெ: ரொம்ப தாங்ஸிண்ணோவ், அடுத்த பதிவுலே அவரோட பைட் ஸ்டைல் வச்சு கும்மிறலாம்!!

க: கும்மிறீயா, அவரை நேரா பார்த்தா அப்பிடியே பம்மிருவே? ஏண்டா சினிமா படமெடுக்க எவ்வளோ கஷ்டமின்னு சொன்னா? நக்கல்நையாண்டியா பண்ணுறே?

வெ: நாங்க பிளாக் எழுதுறதுக்கு எவ்வளோ கஷ்டப்படுறோம், ஆனா நீங்க அதை வந்து இப்போ நக்கல் பண்ணலையா ,அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு , போங்க...!!

88 comments:

சென்ஷி said...

ஆஹா..மறுக்கா கெளம்பீட்டாருய்யா....


:))))))))))))

சென்ஷி

Anonymous said...

//////////நானில்லை? நரியில்லைன்னுட்டு? ஏண்டா பாப்பாயி மண்டயா! நீ பெங்களூரூலே இருக்கிறப்போ, டெய்லி பாயை பிடிச்சி பிராண்டுறது, சுவத்தை பார்த்துக்கிட்டே "எக்கட உந்தி, நம் அம்மாயி" பொலம்பிக்கிட்டே இருப்பியாமே!! அதை பாஸ்டனிலே சும்மா உட்கார்த்திருக்கிற நேரத்திலே கதையா எழுதிட்டே இல்லே??////////

கண்ணுல தண்ணி வர சிரிக்க வெச்சுட்டீங்க...

Anonymous said...

அந்த பின்னூட்டதை போட்டது நானு.

Anonymous said...

சிக்னேச்சர்.
செந்தழல் ரவி

Anonymous said...

பீட்டா சொதப்பிருச்சு.

தேவ் | Dev said...

தளபதி தளபதி.. இளையதளபதிக்கு ஆப்பு வச்சாச்சு.. அடுத்து உங்களுக்குத் தோப்புன்னு சொல்லி சிரிச்சிட்டுப் போறார்ங்க நம்ம கவுண்டர்

G.Ragavan said...

அடியாத்தீ! என்ன இது? இப்படியெல்லாம் கவுண்டர் செஞ்சா எப்படி? வருத்தப்படாதீங்க கவுண்டரே (சாதிப்பேரைச் சொல்லலாமா? இல்ல மணின்னு சொல்லனுமா?) உங்கள சொல் ஒரு சொல்லுல வெச்சி மரியாத செஞ்சிருவோம். அடுத்த சொல்லொரு சொல்லும் நீங்கதாங்கோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்....

தம்பி said...

அடக்கி வெச்சிருந்த கோபமெல்லாம் பீறிகிட்டு வெளிய வந்துடுச்சி போலருக்கு ராம்!

தம்பி said...

ப்ளாகர் மண்டையனா? :)))

அப்படியே அந்த தெலுகு பட விமர்சனம் எழுத சொன்ன அனானி யாருன்னு கேட்டு சொல்லுங்க கவுண்டபெல்.

தேவ் | Dev said...

வாங்க தம்பி.. ராமுக்கும் கவுண்டர் கிட்ட என் கவுண்டர் உண்டு இல்ல அப்போப் பாருங்க இதுக்கு ரியாக்ஷ்னை..

இம்சை அரசி said...

// நீதானடா இப்பிடியெல்லாம் சொல்லி வரவேறங்கன்னு கோமுட்டி தலையன்கிட்டே சொல்லிவிட்டுருக்கே
//

யாரு அந்த கோமுட்டி தலையன்???

இராம் said...

//ஆஹா..மறுக்கா கெளம்பீட்டாருய்யா....//

வாங்க சென்ஷி,

போணி பண்ணிருக்கீங்க.... பெரிய சிரிப்பா சிரிச்சிருக்கீங்க :)

இராம் said...

//கண்ணுல தண்ணி வர சிரிக்க வெச்சுட்டீங்க... //

வாங்க கொலைவெறி படை தலைவரே.....

நாமே கேட்க நினைச்ச கேள்வியெல்லாத்தையும் கவுண்டரு கேட்டுட்டாரு..... :)

இராம் said...

//தளபதி தளபதி.. இளையதளபதிக்கு ஆப்பு வச்சாச்சு.. அடுத்து உங்களுக்குத் தோப்புன்னு சொல்லி சிரிச்சிட்டுப் போறார்ங்க நம்ம கவுண்டர் //

போர்வாளு,

ஏனிந்த வேலை??? சங்கத்து ரகசியத்தை வெளியே சொல்லலாமா??? :)

கப்பி பய said...

:))))

வாங்கிப் போட்டு குத்துங்கோ!!!

கப்பி பய said...

கவுண்டர்: உனக்கு கீபோர்ட்ல ஆச்சரியக்குறி தான் புடிக்குமா? ஆன்னாஊன்னா பதிவுல தலைப்புலன்னு அங்கங்க தூவிவிடறயே?

வெட்டி: ஆமா!! பதிவு எழுதும்போது ஆச்சரியக்குறியும் கமெண்ட் போடும்போது சிரிப்பானும் போடனும்னு பெரியவங்க சொல்லி குடுத்திருக்காங்க!! :)

SP.VR.சுப்பையா said...

ஏமன்னு அன்னுக்குன்னுராண்ட்டி
கவுண்டரு! பிச்சி பட்டிந்தா? ஜரா அடுகண்டி! வெட்டி மனசு பங்காரு மனசுனி தெலுசுகோன்னு மீரு செப்பாலி! இட்ல ஒக்க சாரிக்கு அய்னா மல்லி மாட்லாடுத்தே மேமூ அந்தரு கலுசி ஒஸ்தாமுன்னு செப்பண்டி!

வெட்டிகாரு சினேகிதாலூ!
இந்தியா

ஜி said...

என்ன இது... சங்கத்து விதிமுறைகளை மீறி தலையைத் தவிர மத்தவங்களுக்கு ஆப்பு வைக்கிறீங்க....

வச்சாலும் வச்சீங்க இப்படியா ஆப்பு வைக்கிறது... :))) அய்யோ... அய்யோ...

இராம் said...

//அடியாத்தீ! என்ன இது? இப்படியெல்லாம் கவுண்டர் செஞ்சா எப்படி? வருத்தப்படாதீங்க கவுண்டரே (சாதிப்பேரைச் சொல்லலாமா? இல்ல மணின்னு சொல்லனுமா?)//

ஜிரா,

எதுக்கு இந்த சந்தேகம், அவருதான் அவரு பேரை அப்பிடி கூப்பிடனுமின்னுதானே வைச்சிருக்காரு, நாமே அப்பிடியே கூப்பிடுவோம். :)))

// உங்கள சொல் ஒரு சொல்லுல வெச்சி மரியாத செஞ்சிருவோம். அடுத்த சொல்லொரு சொல்லும் நீங்கதாங்கோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.... //

ஹி ஹி இதுக்கு எதிர்வினையா???

Anonymous said...

யாரங்கே என் தலயை வம்புக்கு இலுப்பது ?


- உண்மை

இராம் said...

/அடக்கி வெச்சிருந்த கோபமெல்லாம் பீறிகிட்டு வெளிய வந்துடுச்சி போலருக்கு ராம்! //

அன்பின் தம்பி'க்கு இதிலே எங்கய்யா கோவத்தை பார்த்தே...?? இதெல்லாம் வெட்டிவீரர் பாலாஜியின் கோடானுகோடி ரசிகர் மனதில் இருந்த சில ஐயங்கள் மட்டுமே....

அதை நம்ம கவுண்டரு கேள்வியா கேட்டுட்டாரு..... :)

இராம் said...

//ப்ளாகர் மண்டையனா? :)))

அப்படியே அந்த தெலுகு பட விமர்சனம் எழுத சொன்ன அனானி யாருன்னு கேட்டு சொல்லுங்க கவுண்டபெல். //

அந்த அனானி மண்டையனை பிடிச்சுதான் அடுத்த டெவில் ஷோ நடத்தப்போறாரு கவுண்டரு :)

இராம் said...

//வாங்க தம்பி.. ராமுக்கும் கவுண்டர் கிட்ட என்கவுண்டர் உண்டு இல்ல அப்போப் பாருங்க இதுக்கு ரியாக்ஷ்னை.. //

ஆஹா இதுக்கு பேருதான் நீயூட்டன் சொன்ன மூணாவது விதியா...

ஹிம் எல்லாம் என்னோட தலைவிதி....

வெட்டிப்பயல் said...

//இராம் said...

//வாங்க தம்பி.. ராமுக்கும் கவுண்டர் கிட்ட என்கவுண்டர் உண்டு இல்ல அப்போப் பாருங்க இதுக்கு ரியாக்ஷ்னை.. //

ஆஹா இதுக்கு பேருதான் நீயூட்டன் சொன்ன மூணாவது விதியா...

ஹிம் எல்லாம் என்னோட தலைவிதி.... //

தலிவா,
உங்களுக்காக கவுண்டர் ரொம்ப ஆர்வமா இருக்காரு...

CVR said...

ulti!!
I really enjoyed!!

sorry balaji!!
ha ha ha!! :D

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

ப்ளாகர் மண்டையனா? :)))

அப்படியே அந்த தெலுகு பட விமர்சனம் எழுத சொன்ன அனானி யாருன்னு கேட்டு சொல்லுங்க கவுண்டபெல். //

எலேய்,
அந்த அனானி யாருனு எனக்கும் சத்தியமா தெரியாது... இருந்தாலும் அந்த படம் ரொம்ப நல்ல படம்னு எழுதினேன்!!!

இராம் said...

//:))))

வாங்கிப் போட்டு குத்துங்கோ!!! //

வாப்பா கப்பிநிலவா!

எனக்கு எதுவும் இன்னும் வரலை... வாங்கி பையிலே போட்டுக்கிறே....ஆனா வெட்டியாரின் கொலைவெறி படையினர் என்னை எதுவும் செஞ்சுருவாங்களோ ???
:))

இராம் said...

//கவுண்டர்: உனக்கு கீபோர்ட்ல ஆச்சரியக்குறி தான் புடிக்குமா? ஆன்னாஊன்னா பதிவுல தலைப்புலன்னு அங்கங்க தூவிவிடறயே?

வெட்டி: ஆமா!! பதிவு எழுதும்போது ஆச்சரியக்குறியும் கமெண்ட் போடும்போது சிரிப்பானும் போடனும்னு பெரியவங்க சொல்லி குடுத்திருக்காங்க!! :) ///

ஆஹா நல்ல பாயிண்ட்... இதை ஏனோ கவுண்டரு கேட்க மறந்துட்டாரு.....

எனிவே டாங்கீஸ் கப்பி :)

மணிகண்டன் said...

உங்களுக்கு 'கட்டிங்' வாங்கித்தராத கோபத்தை பாப்பாயி மண்டையா ப்ளாக்கர் மண்டையானு திட்டி தீர்த்துட்டிங்க போலிருக்க்கு

கவுண்டமணி said...

டேய் பின்னூட்ட மண்டையணுங்களா
என்னய வெச்சி காமெடி பண்றிங்களா?

இராம் said...

/ஏமன்னு அன்னுக்குன்னுராண்ட்டி
கவுண்டரு! பிச்சி பட்டிந்தா? ஜரா அடுகண்டி! வெட்டி மனசு பங்காரு மனசுனி தெலுசுகோன்னு மீரு செப்பாலி! இட்ல ஒக்க சாரிக்கு அய்னா மல்லி மாட்லாடுத்தே மேமூ அந்தரு கலுசி ஒஸ்தாமுன்னு செப்பண்டி!

வெட்டிகாரு சினேகிதாலூ!
இந்தியா //


குருவுகாருவூ,

நேனு பிச்சிவாடினி காது! நேனு எப்புடோ அடிகானு? மனசு பங்காராமா காதா.. நாக்கு அனாவசிரம், சர்தாக்கா உன்னாஅபுடு அன்னி சேஸ்தாமு....

வெட்டிக்காரு சத்துருவுலு,
பிரபஞ்சம்.
ஒரிஜினல்'கா மாதி பிரம்மாண்டம்,

மீக்கு அர்த்தம் காதின்னி "பிரபஞ்சம்"ன்னு ராஸான்னு :)

தம்பி said...

நமீதாவை டெவில் ஷோவுக்கு அழைக்கவே இல்லை.

எங்கள் முறையீடுகளும் புறந்தள்ளப்பட்டன.

யாரொ ஒரு அனானி கேட்டுக்கொண்டார் என்பதற்காக தெலுகு படங்களை கொலகட்டி பாத்து நம்மள படிக்க வெச்சார்.

ஆளானப்பட்ட ப்ளாகர்களான ஜி, கோபிநாத், அப்பாவிதம்பி, போன்ற சின்ன தலைகள் கேட்டும் நமீதா டெவில் ஷோவை போடவில்லை.

இத டெவில் ஷோல ஏம்பா ராயலு கேக்கவேல்ல???????

இராம் said...

//என்ன இது... சங்கத்து விதிமுறைகளை மீறி தலையைத் தவிர மத்தவங்களுக்கு ஆப்பு வைக்கிறீங்க....//

ஜி ,

பிரேக் த ரூல்ஸின்னு ஒரு வெள்ளக்காரன் சொன்னான், அதுதான் அதை போட்டு உடைச்சிட்டேன். :)

//வச்சாலும் வச்சீங்க இப்படியா ஆப்பு வைக்கிறது... :))) அய்யோ... அய்யோ... //

ஹி ஹி

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

நமீதாவை டெவில் ஷோவுக்கு அழைக்கவே இல்லை.

எங்கள் முறையீடுகளும் புறந்தள்ளப்பட்டன.

யாரொ ஒரு அனானி கேட்டுக்கொண்டார் என்பதற்காக தெலுகு படங்களை கொலகட்டி பாத்து நம்மள படிக்க வெச்சார்.

ஆளானப்பட்ட ப்ளாகர்களான ஜி, கோபிநாத், அப்பாவிதம்பி, போன்ற சின்ன தலைகள் கேட்டும் நமீதா டெவில் ஷோவை போடவில்லை.

இத டெவில் ஷோல ஏம்பா ராயலு கேக்கவேல்ல??????? //

தம்பி,
அனானி கேட்டு 3 மாசம் கழிச்சி தான் போட்டேன்!!!

உன் கோரிக்கைக்காத்தான் நான் இன்னும் டெவில் ஷோவே போடல :-(

இராம் said...

//யாரங்கே என் தலயை வம்புக்கு இலுப்பது ?


- உண்மை //

இங்கே யாரும் வம்புக்கிழுக்கிலை!!

-பொய்

Santhosh Kumar said...

இராமன்னா ஏன் ஏன் நம்ம வெட்டி மேல இந்த கொலைவெறி.. என்னமோபோ ஆனா கலக்கலா எழுதி இருக்கே :))..

இராம் said...

//ulti!!
I really enjoyed!!

sorry balaji!!
ha ha ha!! :D ///

வாங்க CVR,

நீங்கெல்லாம் ரசிக்கனுமின்னு இந்த வேலையெல்லாம் பார்க்கிறோம் :)

thanks a lot

இராம் said...

//உங்களுக்கு 'கட்டிங்' வாங்கித்தராத கோபத்தை பாப்பாயி மண்டையா ப்ளாக்கர் மண்டையானு திட்டி தீர்த்துட்டிங்க போலிருக்க்கு //

மணி,

கட்டிங்கெல்லாம் இவ்வளோ கோபப்படுவாரா கவுண்டரு.....

அவரு பேசுறதே அப்பிடிதானே??? :)

தம்பி said...

//நேனு பிச்சிவாடினி காது! நேனு எப்புடோ அடிகானு? மனசு பங்காராமா காதா.. நாக்கு அனாவசிரம், சர்தாக்கா உன்னாஅபுடு அன்னி சேஸ்தாமு....

வெட்டிக்காரு சத்துருவுலு,
பிரபஞ்சம்.
ஒரிஜினல்'கா மாதி பிரம்மாண்டம்,

மீக்கு அர்த்தம் காதின்னி "பிரபஞ்சம்"ன்னு ராஸான்னு :) //

ടെലിവിഷന് വന്നപ്പൊള് നാം ഏറെ പ്രതീക്ഷകള് വച്ചുപുലര്ത്തിയിരുന്നു. പക്ഷേ പ്രതീ ക്ഷകളൊക്കെ അസ്ഥാനത്താവുകയും പ്രതീക്ഷിക്കാത്ത അപകടങ്ങള് ഇത് വരുത്തിവയ്‌ക്കുകയും ചെയ്‌തിരിക്കുന്നു. വ്യക്തമായി പരിശോധിച്ചാല് നമ്മുടെ പരബരാഗത സംസ്‌ക്കാരത്തെ ടെലിവിഷന് തച്ചുടച്ചുകൊണ്ടരിക്കുന്നു.

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

கவுண்டர்: உனக்கு கீபோர்ட்ல ஆச்சரியக்குறி தான் புடிக்குமா? ஆன்னாஊன்னா பதிவுல தலைப்புலன்னு அங்கங்க தூவிவிடறயே?

வெட்டி: ஆமா!! பதிவு எழுதும்போது ஆச்சரியக்குறியும் கமெண்ட் போடும்போது சிரிப்பானும் போடனும்னு பெரியவங்க சொல்லி குடுத்திருக்காங்க!! :) //

முக்கியமான இன்னோரு விஷயம் என்னனா நம்மலா இந்த பதிவ எழுதினோம்னு ஒரு ஆச்சர்யம்!

அடுத்து பின்னூட்டத்துல கேள்வி குறியும் இருக்கும்... அது ஏன்னா என் மேல நீங்க வைக்கிற பாசத்துக்கு என்ன கைமாறு செய்ய போறேனோனு :-)

வெட்டிப்பயல் said...

//
ടെലിവിഷന് വന്നപ്പൊള് നാം ഏറെ പ്രതീക്ഷകള് വച്ചുപുലര്ത്തിയിരുന്നു. പക്ഷേ പ്രതീ ക്ഷകളൊക്കെ അസ്ഥാനത്താവുകയും പ്രതീക്ഷിക്കാത്ത അപകടങ്ങള് ഇത് വരുത്തിവയ്‌ക്കുകയും ചെയ്‌തിരിക്കുന്നു. വ്യക്തമായി പരിശോധിച്ചാല് നമ്മുടെ പരബരാഗത സംസ്‌ക്കാരത്തെ ടെലിവിഷന് തച്ചുടച്ചുകൊണ്ടരിക്കുന്നു.//

என்னதிது???

ஜி said...

//தம்பி said...

நமீதாவை டெவில் ஷோவுக்கு அழைக்கவே இல்லை.

எங்கள் முறையீடுகளும் புறந்தள்ளப்பட்டன.

யாரொ ஒரு அனானி கேட்டுக்கொண்டார் என்பதற்காக தெலுகு படங்களை கொலகட்டி பாத்து நம்மள படிக்க வெச்சார்.

ஆளானப்பட்ட ப்ளாகர்களான ஜி, கோபிநாத், அப்பாவிதம்பி, போன்ற சின்ன தலைகள் கேட்டும் நமீதா டெவில் ஷோவை போடவில்லை.

இத டெவில் ஷோல ஏம்பா ராயலு கேக்கவேல்ல??????? //

இதனை நானும் கண்டிக்கிறேன்... புறந்தள்ளப்பட்ட எங்களது கோரிக்கைகளை முன்வைத்து எனது சார்பில் வெள்ளை மாளிகை முன்னும், தம்பு, காபியின் சார்பில், துபாய் பாராளுமன்றத்திலும் கலவரம் வெடிக்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்....

அருட்பெருங்கோ said...

ராம்,

என்னது இது நான் மொதல்ல வெட்டி எழுதினதுதான் உம்பேர்ல வருதோன்னு பாத்தா...

மணியண்ணன் கலாய்க்கைறதே வெட்டியதானா?

ம்ம்ம்...ம்ம்ம்... கலக்குற போ...

தம்பி said...

//இதனை நானும் கண்டிக்கிறேன்... புறந்தள்ளப்பட்ட எங்களது கோரிக்கைகளை முன்வைத்து எனது சார்பில் வெள்ளை மாளிகை முன்னும், தம்பு, காபியின் சார்பில், துபாய் பாராளுமன்றத்திலும் கலவரம் வெடிக்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.... //

ஏம்பா ஜி,

உனுக்கு கண்டிக்கறதுனா ரொம்ப புடிக்குமா?

இம்ச அரசி வலைப்பூவ மேய்ஞ்சிட்டு இருந்தேன் அங்கயௌம் ஒரு கண்டிப்பு பின்னூட்டம், இங்கயும் ஒரு கண்டிப்பு பின்னூட்டம்.
என்னவோ போ

எனக்கு சப்போர்ட் பன்ற மாதிரிதான் தெரியுது!

துபாயில பாராளுமன்றமெல்லாம் கடியாது!

மன்னராட்சிதான்!

தல சொன்னாருன்னா மறுபேச்சி கடையாது!

எவனாச்சும் பேசினான்னா அவன் தால் டேக்கனாயிடும்!

இங்கிலிஸ் பிரிலயா?

பருப்ப எடுத்துருவானுங்க!

தம்பி said...

//என்னதிது??? //

ஞான் மலையாளத்துல பறஞ்சு.

இராம் said...

//இராமன்னா ஏன் ஏன் நம்ம வெட்டி மேல இந்த கொலைவெறி.. என்னமோபோ ஆனா கலக்கலா எழுதி இருக்கே :))..//

சந்தோஷ்,

நம்ம வெட்டி வீரரு மேலே எனக்கு என்ன கொலைவெறி, கவுண்டருதான் கொஞ்சம் உணர்ச்சிவச பட்டு கேள்வி கேட்டு வைச்சிருக்காரு..... :)

டாங்கீஸ்ப்பா ஒன்னோட பாராட்டுக்கு :)

இராம் said...

//ടെലിവിഷന് വന്നപ്പൊള് നാം ഏറെ പ്രതീക്ഷകള് വച്ചുപുലര്ത്തിയിരുന്നു. പക്ഷേ പ്രതീ ക്ഷകളൊക്കെ അസ്ഥാനത്താവുകയും പ്രതീക്ഷിക്കാത്ത അപകടങ്ങള് ഇത് വരുത്തിവയ്‌ക്കുകയും ചെയ്‌തിരിക്കുന്നു. വ്യക്തമായി പരിശോധിച്ചാല് നമ്മുടെ പരബരാഗത സംസ്‌ക്കാരത്തെ ടെലിവിഷന് തച്ചുടച്ചുകൊണ്ടരിക്കുന്നു.//

சீக்கிரமே நல்ல சாப்ட்வேர் கம்பெனியிலே டெவலப்பர் வேலை கிடைக்க வாழ்த்துக்கள்... :)

நல்லாதாய்யா Cut & Paste பண்ணுறீங்க :)

இராம் said...

//முக்கியமான இன்னோரு விஷயம் என்னனா நம்மலா இந்த பதிவ எழுதினோம்னு ஒரு ஆச்சர்யம்!//

இந்த தன்னடக்கம் தான் ஒன்னை இம்புட்டு பெரிய இடத்திலே வைச்சிருக்கு :)

//அடுத்து பின்னூட்டத்துல கேள்வி குறியும் இருக்கும்... அது ஏன்னா என் மேல நீங்க வைக்கிற பாசத்துக்கு என்ன கைமாறு செய்ய போறேனோனு :-)//

நீயும் திரும்ப குடுப்பேன்னு தான் :)))

இராம் said...

//இதனை நானும் கண்டிக்கிறேன்... புறந்தள்ளப்பட்ட எங்களது கோரிக்கைகளை முன்வைத்து எனது சார்பில் வெள்ளை மாளிகை முன்னும், தம்பு, காபியின் சார்பில், துபாய் பாராளுமன்றத்திலும் கலவரம் வெடிக்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்...//

வெள்ளை மாளிகை முன்னாடி போராட்டம் பண்ண நம்ம 12B இருக்காரு ஜி,

அவருகூட சேர்த்து போராட்டம் பண்ணுங்க... நான் எதுக்கு சொல்லுறேன்னு சொல்லமாலே தெரியும் ;)

இராம் said...

/ராம்,

என்னது இது நான் மொதல்ல வெட்டி எழுதினதுதான் உம்பேர்ல வருதோன்னு பாத்தா...

மணியண்ணன் கலாய்க்கைறதே வெட்டியதானா?

ம்ம்ம்...ம்ம்ம்... கலக்குற போ...//

வாங்க காதல் முரசே,

ரொம்ப டாங்கீஸிங்கோ

கப்பி பய said...

//ടെലിവിഷന് വന്നപ്പൊള് നാം ഏറെ പ്രതീക്ഷകള് വച്ചുപുലര്ത്തിയിരുന്നു. പക്ഷേ പ്രതീ ക്ഷകളൊക്കെ അസ്ഥാനത്താവുകയും പ്രതീക്ഷിക്കാത്ത അപകടങ്ങള് ഇത് വരുത്തിവയ്‌ക്കുകയും ചെയ്‌തിരിക്കുന്നു. വ്യക്തമായി പരിശോധിച്ചാല് നമ്മുടെ പരബരാഗത സംസ്‌ക്കാരത്തെ ടെലിവിഷന് തച്ചുടച്ചുകൊണ്ടരിക്കുന്നു.////

இதை நான் வழிமொழிகிறேன்...

(கருமம்..என்ன எழவுன்னே புரியல :)))

கப்பி பய said...

//முக்கியமான இன்னோரு விஷயம் என்னனா நம்மலா இந்த பதிவ எழுதினோம்னு ஒரு ஆச்சர்யம்!
//

என்ன தன்னடக்கம்...என்ன தன்னடக்கம்...நோட் பண்ணுங்கடா..நோட் பண்ணுங்கடா :))

Syam said...

அட்றா அட்றா அட்றா சக்க...ராயலு பிண்ணி பெடல் எடுத்து இருக்கீங்க...:-)

Syam said...

என்ன ஆச்சு தம்பிக்கு ஜிலேபி சுட்டு வெச்சுறுக்காரு :-)

கப்பி பய said...

//என்னதிது??? //

தெலுகுல பேசுங்கய்யா..அப்ப தானே அண்ணனுக்கு புரியும்..அதை விட்டுட்டு உங்க மாமியார்மொழில பேசறீங்க? :))

Syam said...

சரி "கவுண்டர் devil show-ராயல்" எழுத போறது யாரு :-)

Syam said...

வெட்டி யாராவது ஊருக்கு போனாங்கன ரெண்டு பாட்டில் வாங்கி ராயல்க்கு குடுத்து விடுங்க...இல்லனா part II போட்டுட போறார் :-)

கப்பி பய said...

//என் மேல நீங்க வைக்கிற பாசத்துக்கு என்ன கைமாறு செய்ய போறேனோனு :-)
//

எங்க பாசத்தோட அளவே நீங்க கைமாறு செய்யறதுல தான் இருக்கு...

என்னோடது அதே பழைய அக்கவுண்ட் நம்பர் தான்..இந்த முறையாவது பார்த்து போட்டு குடுங்க :))

இராம் said...

// அட்றா அட்றா அட்றா சக்க...ராயலு பிண்ணி பெடல் எடுத்து இருக்கீங்க...:-)//

வாங்க 12B,

என்னாடா இவ்வளோ நேரம் ஆளை காணோமின்னு பார்த்தேன், வந்திட்டிங்க...... :)


// என்ன ஆச்சு தம்பிக்கு ஜிலேபி சுட்டு வெச்சுறுக்காரு :-)//

அவரு கீ போர்ட்'லே Ctrl, C ,V இந்த மூணு கீ மட்டும் சீக்கிரமே தேய்ச்சிரும் போலே :)

கப்பி பய said...

//வெட்டி யாராவது ஊருக்கு போனாங்கன ரெண்டு பாட்டில் வாங்கி ராயல்க்கு குடுத்து விடுங்க...இல்லனா part II போட்டுட போறார் :-) //

ராயல்,

நான் வரும்போது நாலு பாட்டில் வாங்கிட்டு வரேன்..part II சீக்கிரம் போடுங்க :D

வெட்டிப்பயல் said...

// Syam said...

சரி "கவுண்டர் devil show-ராயல்" எழுத போறது யாரு :-) //

நாட்ஸ்,
இதெல்லாம் கேட்டு தான் தெரிஞ்சிக்கணுமா??? ;)

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

//ടെലിവിഷന് വന്നപ്പൊള് നാം ഏറെ പ്രതീക്ഷകള് വച്ചുപുലര്ത്തിയിരുന്നു. പക്ഷേ പ്രതീ ക്ഷകളൊക്കെ അസ്ഥാനത്താവുകയും പ്രതീക്ഷിക്കാത്ത അപകടങ്ങള് ഇത് വരുത്തിവയ്‌ക്കുകയും ചെയ്‌തിരിക്കുന്നു. വ്യക്തമായി പരിശോധിച്ചാല് നമ്മുടെ പരബരാഗത സംസ്‌ക്കാരത്തെ ടെലിവിഷന് തച്ചുടച്ചുകൊണ്ടരിക്കുന്നു.////

இதை நான் வழிமொழிகிறேன்...

(கருமம்..என்ன எழவுன்னே புரியல :))) //

என்ன கப்பி,
இப்ப மட்டும் தான் ஏதோ புரியாம வழி மொழியற மாதிரி...

எப்பவுமே அத தானே பண்றோம் :-)

இராம் said...

//தெலுகுல பேசுங்கய்யா..அப்ப தானே அண்ணனுக்கு புரியும்..அதை விட்டுட்டு உங்க மாமியார்மொழில பேசறீங்க? :))//

அடபாவி சக்கை குத்து விட்டு வைச்சிருக்கே....

வெட்டிக்காரு செப்பண்டி.. :)

இராம் said...

//சரி "கவுண்டர் devil show-ராயல்" எழுத போறது யாரு :-)//

12B,
யாரும் அந்த தப்பெல்லாம் பண்ணமாட்டாங்கன்னு நம்புறேன்.. :)


// வெட்டி யாராவது ஊருக்கு போனாங்கன ரெண்டு பாட்டில் வாங்கி ராயல்க்கு குடுத்து விடுங்க...இல்லனா part II போட்டுட போறார் :-) //

ஹி ஹி அதை விட நம்ம கப்பி பெருசா சொல்லிருக்காரு... எனக்கு அவரு டீல் தான் ரொம்ப பிடிச்சிருக்கு :)

கைப்புள்ள said...

//பிளாக்கர் மண்டயா? நீதானடா இப்பிடியெல்லாம் சொல்லி வரவேறங்கன்னு கோமுட்டி தலையன்கிட்டே சொல்லிவிட்டுருக்கே! அதுக்கு வேற அவனுக்கு முருக்கு பொட்டலம் லஞ்சமா வேறே குடுத்திருக்கே! இங்கே வந்து நல்லவன்மாதிரி ஆக்ட் குடுக்கிறீயா பல்புமண்டயா?//

ப்ளாக்கர்,பீட்டா,பாப்பாயி எல்லா மண்டையனும் நம்ம வெட்டித் தானா? சூப்பரா இருந்துச்சப்பா ராய்லு. ஆமா ஆர்குட் மண்டையனை எப்படி நீ மறக்கலாம்? இதை நான் வன்மையாக் கண்டிக்கிறேன்.
:)

இராம் said...

//ப்ளாக்கர்,பீட்டா,பாப்பாயி எல்லா மண்டையனும் நம்ம வெட்டித் தானா? சூப்பரா இருந்துச்சப்பா ராய்லு.//

ரொம்ப டாங்கீஸ் தல..... கவுண்டரும் பிளாக் எழுதுறவங்கிட்டே கேள்வி கேட்கிறப்போ அந்த துறைரீதியான அறிவை வளர்த்துக்கிட்டு தான் இப்பிடி கலக்கி இருக்காரு :)

//ஆமா ஆர்குட் மண்டையனை எப்படி நீ மறக்கலாம்? இதை நான் வன்மையாக் கண்டிக்கிறேன்.
:)///

அதை பார்ட்-II 'லே போட்டு பின்னி பெடல் எடுத்துருவோம் :)

தம்பி said...

//அடபாவி சக்கை குத்து விட்டு வைச்சிருக்கே....

வெட்டிக்காரு செப்பண்டி.. :) //

ஆஹா

இதத்தான் சந்துல காத்து பிரிக்கற வேலன்னு சொல்லுவாங்க!

செப்பண்டி செப்பண்டி

வெட்டிப்பயல் said...

ராயல்,
முதல்ல சுடர யார் கைலயாவது கொடுத்துட்டு வாங்க...

ஒரு நாளைக்கு ரெண்டு பேர் கைலயாவது இருக்கனும்னு ஆசை படறாங்க... நீங்களே ரொம்ப நேரம் பிடிச்சிருந்தா மத்தவங்களுக்கு எப்ப போறது???

இராம் said...

/ராயல்,
முதல்ல சுடர யார் கைலயாவது கொடுத்துட்டு வாங்க...

ஒரு நாளைக்கு ரெண்டு பேர் கைலயாவது இருக்கனும்னு ஆசை படறாங்க... நீங்களே ரொம்ப நேரம் பிடிச்சிருந்தா மத்தவங்களுக்கு எப்ப போறது???//

இந்த திசைதிருப்பும் பின்னூட்டத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...

நாளைக்கு சுடரை அடுத்தவங்கிட்டே குடுத்துறேன் :)

இராம் said...

/ராயல்,
முதல்ல சுடர யார் கைலயாவது கொடுத்துட்டு வாங்க...

ஒரு நாளைக்கு ரெண்டு பேர் கைலயாவது இருக்கனும்னு ஆசை படறாங்க... நீங்களே ரொம்ப நேரம் பிடிச்சிருந்தா மத்தவங்களுக்கு எப்ப போறது???//

இந்த திசைதிருப்பும் பின்னூட்டத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...

நாளைக்கு சுடரை அடுத்தவங்கிட்டே குடுத்துறேன் :)

இராம் said...

/ராயல்,
முதல்ல சுடர யார் கைலயாவது கொடுத்துட்டு வாங்க...

ஒரு நாளைக்கு ரெண்டு பேர் கைலயாவது இருக்கனும்னு ஆசை படறாங்க... நீங்களே ரொம்ப நேரம் பிடிச்சிருந்தா மத்தவங்களுக்கு எப்ப போறது???//

இந்த திசைதிருப்பும் பின்னூட்டத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...

நாளைக்கு சுடரை அடுத்தவங்கிட்டே குடுத்துறேன் :)

ஜி said...

//தம்பி சொன்னது...
இம்ச அரசி வலைப்பூவ மேய்ஞ்சிட்டு இருந்தேன் அங்கயௌம் ஒரு கண்டிப்பு பின்னூட்டம், இங்கயும் ஒரு கண்டிப்பு பின்னூட்டம்.
என்னவோ போ//

ஓ... பாத்துட்டீங்களா? அந்த கோபி பதிவுல போட்ட பின்னூட்டத்த மறந்திட்டியே...

என்னப் பண்றது எல்லாரும் கண்டனப் பதிவா போடுறாங்க.. இல்ல கண்டனம் பண்ணி போட வைக்க வேண்டியதா இருக்குது...

//எவனாச்சும் பேசினான்னா அவன் தால் டேக்கனாயிடும்!

இங்கிலிஸ் பிரிலயா?

பருப்ப எடுத்துருவானுங்க!//

தூக்குமேடை நமக்கு பஞ்சு மெத்தை.. இந்த டையலாக் தெரியாதா???

ஜி said...

//இந்த திசைதிருப்பும் பின்னூட்டத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...//

கண்டனத்தை மூன்று முறைப் போட்டு கயமை புரியும் ராயலை நான் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்...

இராம் said...

//கண்டனத்தை மூன்று முறைப் போட்டு கயமை புரியும் ராயலை நான் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்... //


சாரிப்பா.... வீட்டுலே தெரியாதனமா கன்னத்திலே கைவச்சுக்கிட்டு போஸ் குடுக்கிறவரு கம்பெனியிலே இருந்து நெட் கனெக்ஷன் வாங்கிட்டேன்....

கொடுமைக்கு அது எப்போ டிஸ்கனெக்ட் இல்லே கனெக்ட் ஆகுதுன்னே தெரியலை :(

அதுதான் கொஞ்சம் டெக்னிக்கல் பால்ட் ஆகிருச்சு.....

இப்போ அது பி.க ஆகிபோச்சு :)

ஜொள்ளுப்பாண்டி said...

ஆஹா ராயலு நம்மவெட்டிய உட்டு பின்னுபின்னுன்னு பின்னி பெடல் எடுத்திருக்கியே மக்கா கலக்கு !!!:)))))))))))

இராம் said...

//ஆஹா ராயலு நம்மவெட்டிய உட்டு பின்னுபின்னுன்னு பின்னி பெடல் எடுத்திருக்கியே மக்கா கலக்கு !!!:))))))))))) //

பாண்டிண்ணே,

கவுண்டரும் ஒங்களை சீக்கிரம் பேட்டியெடுக்கனுமின்னு ஆவலா இருக்கிறாரு :)

இம்சை அரசி said...

நான் கேட்டதுக்கு யாருமே பதில சொல்லலை...

யாரு அந்த கோமுட்டி தலையன்???

வெட்டிப்பயல் said...

//SP.VR.சுப்பையா said...

ஏமன்னு அன்னுக்குன்னுராண்ட்டி
கவுண்டரு! பிச்சி பட்டிந்தா? ஜரா அடுகண்டி! வெட்டி மனசு பங்காரு மனசுனி தெலுசுகோன்னு மீரு செப்பாலி! இட்ல ஒக்க சாரிக்கு அய்னா மல்லி மாட்லாடுத்தே மேமூ அந்தரு கலுசி ஒஸ்தாமுன்னு செப்பண்டி!

வெட்டிகாரு சினேகிதாலூ!
இந்தியா //

ஐயா,
மீரு சால மஞ்சிவாரு...
மீரு பாகபடுகா!!! ஈ கவுண்டர்காரு மனவாடே!!! (இதுக்கு மேல தெலுகு தெரியல.. போக்கிரி படத்துல வர டையலாக் எல்லாம் இப்ப பார்த்து மறந்து போச்சி)

சால தேங்க்ஸ் வாத்தியார்...

வெட்டிப்பயல் said...

//இம்சை அரசி said...

நான் கேட்டதுக்கு யாருமே பதில சொல்லலை...

யாரு அந்த கோமுட்டி தலையன்??? //

இது என்ன கேள்வி???
கவுண்டருக்கு யாரு இந்த இண்ஃபர்மேஷன் கொடுத்தாங்களோ அவுங்க தான்...

யாராவது ராயலானு கேட்டா அப்பறம் நான் ஆமாம்னு உண்மைய சொல்ல வேண்டியது வந்திடும் ;)

இராம் said...

//நான் கேட்டதுக்கு யாருமே பதில சொல்லலை...

யாரு அந்த கோமுட்டி தலையன்??? //

ஓ சாரி இம்சை, ஏதோ டெக்னிகல் ஃபால்ட் ஆகிறுச்சு...

நீங்க வைதேகி காத்திருந்தாள் படம் பார்த்திருக்கீங்களா.... அதிலே கவுண்டருக்கு கூட வர்ற தோஸ்து பேரு கோமுட்டி தலையன், அவருதான் இப்போ நம்ம டெவில் ஷோ நடக்கிறப்போ ஹெல்ப் பண்ணினாரு... :)

இராம் said...

//இது என்ன கேள்வி???
கவுண்டருக்கு யாரு இந்த இண்ஃபர்மேஷன் கொடுத்தாங்களோ அவுங்க தான்...//

கரக்ட் வெட்டி :)

//யாராவது ராயலானு கேட்டா அப்பறம் நான் ஆமாம்னு உண்மைய சொல்ல வேண்டியது வந்திடும் ;) //

ஏலே எதுக்கு இவ்வளோ பெரிய பொய் சொல்லிட்டு திரியுறே??

இலவசக்கொத்தனார் said...

தலையை விட்டு விட்டு 'வாலை'ப் பிடித்த ராயலை வன்முறையாகக் கண்டிக்கிறோம்.

கோபிநாத் said...

\\தூக்குமேடை நமக்கு பஞ்சு மெத்தை.. இந்த டையலாக் தெரியாதா???\\

அப்ப தினமும் அங்குதான் தூங்குறியா???

Udhayakumar said...

ராம் , ரொம்ப நல்லா கலாய்ச்சிருக்கீங்க, வாழ்த்துக்கள்!!!

ILA(a)இளா said...

//க: கும்மிறீயா, அவரை நேரா பார்த்தா அப்பிடியே பம்மிருவே?//
Super Super, Vettike Devil showa?

இராம் said...

//தலையை விட்டு விட்டு 'வாலை'ப் பிடித்த ராயலை வன்முறையாகக் கண்டிக்கிறோம்.//

கொத்ஸ்,

நம்ம தல'தானே எப்ப வேணுமின்னாலும் கலாயக்கலாம்... ஆனா சங்கத்து இ.த'வே முடியாதே........ அவரு போனவருசத்துக்கு பெஸ்ட் வலைபதிவர்.. இந்த வருசம் இன்னும் பெரிய ஆளா ஆயிட்டா, நம்மளே ஒன்னும் செய்யமுடியாதே, அதுதான் கிடைச்ச கேப்'லே கிடா வெட்டியாச்சு :)

கவுண்டரு... வ.வா.சங்கத்தின் முதன் அ.வா'வேயும் பேட்டியெடுக்க ஆவலா இருக்காரு :)))

இராம் said...

\\தூக்குமேடை நமக்கு பஞ்சு மெத்தை.. இந்த டையலாக் தெரியாதா???\\

அப்ப தினமும் அங்குதான் தூங்குறியா???//


சரியான கேள்வி கோபி..... இந்த கேள்வி ஓவர் டூ "ஜி".......

இராம் said...

//ராம் , ரொம்ப நல்லா கலாய்ச்சிருக்கீங்க, வாழ்த்துக்கள்!!!//

ரொம்ப நன்றி சவுண்ட் :)