Wednesday, February 14, 2007

அந்தக் காலத்து காதல் - நிறைவு

நம்ம தோஸ்த் கொஞ்ச நாளாவே வழக்கமா வர்ற நேரத்துல ஸ்டேஷன்னுக்கு வராம இருந்தத எங்க கேங்க்லருந்த எல்லாருமே கவனிக்க ஆரம்பிச்சோம். முக்கியமா அந்த பொண்ணோட மகாபலிபுரத்துல போய் ஒரு நா முழுக்க தங்குனார்னு கேள்விப்பட்டதுலருந்து ஆளையே காணல. 'என்னடா அவனெ காணோம். அந்த பொண்ணும் இப்பல்லாம் வர்றதில்லே. ஏதாச்சும் கசமுசாவாயிருச்சா. இல்ல நம்ம பையன நம்மள அவாய்ட் பண்றானா?' என்று எல்லோரும் பேசிக்கொள்ள ஆரம்பித்தோம்.

எங்க கேங் மெம்பர்ல ஒருத்தன் நம்ம தோஸ்த் குடியிருந்த ஏரியாவுலதான் இருந்தான். ஆனா அவனுக்கும் விபரம் ஒன்னும் தெரியலேன்னான். ஆனா அவன் தெரிஞ்சும் தெரியாத மாதிரி ஆக்ட் குடுக்கறானோன்னு எங்களுக்கொரு சந்தேகம். அதனால ஒரு நா காலைல எல்லாருமா சேர்ந்து அவனெ மடக்கி விசாரிச்சோம். பய ஒத்துக்கிட்டான்.

தொடர்ந்து அவன் சொன்னத கேட்டப்போ எங்க எல்லாருக்குமே பரிதாபமா இருந்தது.

அவன் சொன்னதுலருந்து எங்களுக்கு தெரிஞ்சது இதுதான்.

நம்ம தோஸ்த் அந்த பொண்ணோட பழக ஆரம்பிச்சத அவங்கப்பா விரும்பல போலருக்கு. அவர் எஞ்சின் டிரைவரா இருந்தார். ஆனா சென்னைக்குள்ள போற வண்டியில இல்ல. ஒரு குட்ஸ் வண்டி. எப்படியோ தன் பொண்ணு ஒரு தமிழ் பையனோட சுத்தறத கண்டுபிடிச்சிருக்கார். எல்லாம் லோக்கல் பசங்க வேலைதான். இந்த வகுப்பைச் சார்ந்த பசங்கள்ல நிறைய பேர் ஸ்கூல் ட்ராப் அவுட்டாத்தான் இருக்கும். ஒழுங்கா படிக்க மாட்டானுங்க. அதுக்கும் ஒரு காரணம் இருக்கு. அப்பல்லாம் ரயில்வேய்ல இவங்களுக்குத்தான் மவுசு ஜாஸ்தி. அதுவும் ஃபயர் மேன் வேலைக்கு. கரி அள்ளிப்போடற வேலை. ஒவ்வொரு குடும்பத்துலயும் அப்பா, அண்ணன்னு யாராச்சும் ஒருத்தர் ரயில்வேல இருந்தாப் போறும். எட்டாவது முடிச்சவுடனேயே பசங்கள ரெக்கமெண்ட் பண்ணி ஃபயர் மேன் வேலைக்கு சேர்த்துவிட்டுருவானுங்க. கவர்ன்மெண்ட் ஜாப் ஆச்சே. சொற்ப சம்பளம்னாலும் நிரந்தர வேலையாச்சே. அந்த வேலைதான் கிடைக்குமேங்கற நெனப்புல எட்டாவதுக்கு மேல ஒருத்தனும் படிக்கமாட்டான்.

ஆனா பொம்பளப் பசங்க எல்லாமே மெட்ரிக்குலேஷன முடிச்சிட்டு டெலிஃபோன் ஆப்பரேட்டர், ரிசெப்ஷனிஸ்ட் இல்லன்னா டைப்பிஸ்ட்டுன்னு ஏதாவது ஒரு வேலைய தேடிக்கிறுவாங்க. அப்போ சதர்ன் ரயில்வே ஆஃபீஸ்லருந்த இந்த மாதிர் பதவிகளுக்கு இவங்களதான் ப்ரிஃபர் பண்ணுவாங்க. ரெண்டு காரணம். ஒன்னு இவங்களுக்கு தாய் மொழி ஆங்கிலம்கறது. ரெண்டாவது இவங்க 'எதுக்கும்' தயாராருப்பாங்கங்கறது. புரியும்னு நினைக்கேன்.

அதனால பொண்ணுங்களுக்கு அவங்க வகுப்ப சேர்ந்த பசங்க மேல அவ்வளவா விருப்பமிருக்காது. குடும்பத்தோட நிர்பந்தத்துக்காக கல்யாணம் பண்ணிக்குவாங்க. ஆனா அது வரைக்கும் அந்த பசங்களோட டேட்டிங்லாம் வச்சிக்க விரும்பமாட்டாங்க. அதுக்கு வேறொரு காரணமும் இருக்கு. அந்த பசங்க சம்பாத்தியம் அவனுங்க ட்ரெஸ்சுக்கும், குடிக்குமே சரியாருக்கும். அப்புறம் இந்த பொண்ணுங்களுக்கு எங்க செலவு பண்றது? இவங்கக்கிட்டருந்து கடன் வாங்காம இருந்தா சரி..

ஆனா நம்ம பசங்க அப்படியில்லேங்கறது அந்த பொண்ணுங்களுக்கு நல்லாவே தெரியும். நம்ம பசங்களுக்கு தமிழ் பொண்ணுங்க கலரா, ஷேப்பா இல்லேங்கறதுதான் பெரிய வருத்தம். அதுவுமில்லாம சோஷியலா பழகவும் மாட்டாங்களே. கிட்ட போனாலே 'ச்சீன்னு' ஒதுங்கிக்கிறதுங்கக்கிட்ட போயி டேட்டிங்னு சொன்னா வேற வெனையே வேணாம். கால்லருக்கறதத்தான் மொதல்ல கழட்டும்!

அதனால கல்யாணத்துக்கு முன்னால ஒரு அஃபேர் இருந்தா நல்லாருக்கும்னு நினைக்கற பசங்களுக்கு ஆ.இ.பெண்கள்தான் கதி. மத்தபடி காதல், கத்தரிக்காய்னுல்லாம் ஒன்னுமில்லை.

ஆனா நம்ம தோஸ்த் அவனோட காதல்ல கொஞ்சம் சீரியசாவே இருந்துட்டான் போலருக்கு. ஒருவேளை அந்த பொண்ணுக்கும் அப்படி இருந்துருக்குமோ என்னவோ?

ஆனா அதோட அப்பாவுக்கு புடிக்கலைங்கறத நம்ம தோஸ்த் தெரிஞ்சதுக்கப்புறமாவது ஒதுங்கியிருக்கலாம். செய்யல. அதுவுமில்லாம அந்த பொண்ணுக்கு சொந்தக்கார பய ஒருத்தன் இருந்துருக்கான்.

அவனும் அவனோட தோஸ்த்துங்களுமா சேர்ந்து ஒரு நா நம்ம தோஸ்த்த வழியில மடக்கி.. அப்புறம் என்ன, நம்ம தோஸ்த் ரெண்டு நாளா ஆஸ்பத்திரியில இருக்க வேண்டிய அளவுக்கு ஆயிருச்சி..

அடுத்த நாள்லருந்து ஆஃபீஸ் வரைக்கும் அந்த பையன் கூடவே போறதுன்னு முடிவு பண்ணிட்டாங்க. லோக்கோ ஒர்க்ஸ் ஸ்டேஷனுக்கு வராம அதுக்கடுத்த பெரம்பூர் ஸ்டேஷன்லருந்து ட்ரெய்ன புடிச்சிருக்கு அந்த பொண்ணு. நாங்கதான் கவனிக்காம இருந்துருக்கோம்.

ரெண்டு மூனு வாரம் கழிச்சி மறுபடியும் நம்ம தோஸ்த்த பாத்தப்போ, 'டேய் இது ஒனக்கு தேவையா'ன்னு துக்கம் விசாரிச்சோம். பாவம், தோல்வியை சந்தித்த வேதனையில் இருந்த அவனை மேற்கொண்டு கேள்விக கேட்டு பலனில்லைன்னு தெரிஞ்சிது. அதுக்கப்புறம் எந்த பொண்ணையும் ஏறெடுத்து பாக்காத (அதாவது ஓரக்கண்ணால் மட்டும் பார்க்கும்) எங்கள மாதிரியே ஆய்ட்டான்.. ஆனா ரொம்ப நாளைக்கு அந்த சோகம் அவன் முகத்துல இருந்தத பாக்க முடிஞ்சது. கொஞ்ச மாசங்களுக்கப்புறம் அவன் பாத்துக்கிட்டிருந்த வேலைய விட்டுட்டதா கேள்விப்பட்டோம்.. யாருக்கும் வீட்டுக்கு போய் விசாரிக்கணும்னு தோனலை.. ரயில் சிநேகம்தானே..

கல்யாணத்துக்கு முன்னாடி ஒரேயொருதரம் 'அனுபவிச்சதோட' அவன் காதல் அல்பாயுசுல முடிஞ்சிருச்சி..

இப்ப அவன் எங்கருக்கான்? யாருக்கு தெரியும்? ஒருவேளை இந்த தொடர படிச்சிட்டு சிரிக்கானோ என்னவோ..

இதாங்க அந்தக் காலத்து காதல்..

4 comments:

தேவ் | Dev said...

ஜோசப் சார் ஒரு அருமையானத் தொடர்.

கன்னுக்குட்டி காதல்ன்னு சொல்லுவாங்களே அதன் உணர்வுகளை இயல்பான நடையிலே அசத்தலா எழுதியிருக்கீங்க.. இன்னொரு ரசனைக்குரிய விஷயம் என்னன்னா ஆங்கிலோ இந்தியர்களின் வாழ்க்கை முறையை கதையின் ஊடே விவரித்துச் சென்றதும் நன்றாக இருந்தது. நல்லதொரு தொடரை வாசிக்க முடிஞ்சது..

வாசித்து முடித்தப் பின் உங்க் தோஸ்த்து பற்றி கொஞ்ச நேரமாவது சிந்திக்காம இருக்க முடியல்ல.. அந்த ரயில் கேங்க் இந்தக் கதையை வாசிக்க நேர்ந்திருக்குமா.. இப்படி பல எண்ணங்கள்... நன்றி

ஜொள்ளுப்பாண்டி said...

ஜோசப் சார் இதுதான் கதை !! நல்லா கொண்டுபோய் ரெம்ப நல்லாவே முடிச்சு இருக்கீங்க !

போர்க்களத்திலே அடிபடறது ஜகஜம் தானே ஹிஹிஹிஹி !! அந்த காலத்துக்கே கூட்டிட்டு போய்ட்டு வந்துட்டீங்க !! :))))

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க தேவ்,

மிக்க நன்றிங்க..

உங்கள மாதிரி இளைஞர்களோட சேர்ந்தா தன்னால மனசும் இளமையாயிடறது..

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ஜொ.பாண்டி,

போர்க்களத்திலே அடிபடறது ஜகஜம் தானே ஹிஹிஹிஹி //

காதல்களமும் போர்க்களம் மாதிரிதானே.. ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பொண்ணுன்னு இருந்துட்டா இந்த போட்டியெல்லாம் இருக்காதுதான்.. ஆனா திருட்டுத்தனமா காதலிக்கறதுல த்ரில்லு போயிருமே..

நாலு பேர்கிட்ட அடிவாங்கி பண்ணாத்தான் காதல்ல த்ரில் இருக்கும்:)