Thursday, February 22, 2007

சென்சஸ் எடுக்கப் போறாங்க.. 2

கவு: டேய் தண்டோராத் தலையா, நா ஒருத்தன் இங்க மூச்சுவிட முடியாம உளுந்துக் கிடக்கேன்.. ஒனக்கு அந்த பொண்ணோட பல்லுதான் முக்கியமா போச்சா..?

செந்: (சிரிக்கிறார். பிறகு குனிந்து ரகசியக் குரலில்) இல்லண்ணே.. அந்தப் பொண்ணு இந்தாளோட மக போலருக்கு.. அதான் கொஞ்சம் ஐஸ் வச்சேன்.. இந்த பயலுக்கு காச குடுக்காம தப்பிச்சிக்கலாம் இல்லே..

கவு: (ஓரக்கண்ணால் நாயரையும் பெண்ணையும் பார்க்கிறார்) (தனக்குள்) பொண்ணு சூப்பராத்தான் இருக்கு.. பிராக்கெட் போட்டு பாக்கலாம் போலருக்கே..(துள்ளி எழுகிறார்) டேய்.. இப்ப பரவால்லை.. காலையிலருந்து சரியா ஒன்னும் திங்கலையா அதான்.. கொஞ்சம் லேசா.. (மலையாளப் பெண்ணை நெருங்கி) மேடம்.. மேடம்.. குடிக்க கொஞ்சம் ஜில்லுன்னு தண்ணி கிடைக்குமா (குடிப்பதுபோல் ஆக்ஷன் செய்து காட்டுகிறார்)

கோவை: (எட்டி பின்னால் குதிக்கிறார்)ஏய்.. எந்தா இது.. தண்ணியோ.. இது வீடாக்கும்.. கள்ளு ஷாப்பல்லா.

செந்: (உரக்க சிரிக்கிறார்..பிறகு கவுண்டரை ஒதுக்கிவிட்டு நெருங்கி நிற்கிறார்) மேடம்.. தண்ணின்னா தமிள்ல வாட்டர்..

கவு: டேய்.. பண்டாரத் தலையா தமிள் வார்த்தைக்கு இங்க்லீஷ்ல அர்த்தம் சொல்றியா.. தள்றா.. (பெண்ணை ரொம்பவே நெருங்கி) கொஞ்சம் குடிக்க வாட்டர்..

கோவை (கலகலவென சிரித்தவாறு வீட்டிற்குள் ஓடிச்சென்று ஒரு பாட்டிலில் குடிநீருடன் வாசலில் வந்து நின்று) வரு.. இவ்விட வரு.. (வலது கையால் சைகைக் காட்டுகிறார்)

நாயர் (முறைத்தவாறு தன் மகளை நெருங்கி) எடி பிராந்தி..

செந்: போச்சிறா.. அந்த பொண்ணு குடிக்க தண்ணி தரேங்குது.. இவன் என்னடா பிராந்திய குடுங்கறான். நல்ல குடும்பம்டா.. அண்ணே வேணாம் இன்னும் பத்துவீடாவது நாம முடிக்கணும்.. பேசாம வந்துருங்க.. டீயே குடிச்சே மயங்கி விழுந்த ஆளு நீங்க.. இதுல இந்தம்மா குடுக்கற பிராந்தியயும் குடிச்சீங்க.. அவ்வளவுதான் சொல்லிட்டேன்..

(கோவை மீண்டும் லகலவென சிரிக்கிறார்)அல்லா.. பிராந்தி அல்லா.. மலையாளத்துல பிராந்துன்னா மேட்னு அர்த்தம்.

செந்: என்னது மேடா.. அப்ப பள்ளத்துக்கு என்ன மேடம்?

கவு: அடேய்.. அடேய்.. மேட்னா தமிழ்ல பைத்தியம்னு அர்த்தம்டா.. மானத்த வாங்காம கொஞ்ச நேரம் சும்மாயிருடா.. (கோவையின் கையைத் தொட்டு பாட்டிலை வாங்கி ஒரே மூச்சில் குடிக்கிறார்)

செந்: (சிரிக்கிறார்) அண்ணே நான் பத்தாங் க்ளாஸ் பாஸ்ணே.. மேடுன்னா பைத்தியம்னு ஒங்களுக்கு தெரியுமான்னு ஒரு சின்ன டெஸ்ட் பண்ணி பார்த்தேண்ணே..

(கவுண்ட பெல் கோபத்துடன் திரும்பி ஒரு உதை விடுவதுபோல் காலைத் தூக்க செந்தில் துள்ளி குதித்து தப்புகிறார். கோவை மீண்டும் கலகலவென சிரிக்கிறார்)

கவு: அடடடடா.. இந்த சிரிப்புக்கே குடுத்துரலாம்டா..

செந்: எத? ஒங்க ஓட்ட வீட்டையா? அக்காவுக்கு மட்டும் தெரிஞ்சது.. நீங்க தொலைஞ்சீங்க.. மரியாதையா வந்த வேலைய பாப்போம்.. (கக்கத்தில் வைத்திருந்த புத்தகத்தை எடுத்து புரட்டியவாறு வீட்டு எண்ணைப் பார்க்கிறார்) ஐ! ஒம்போது.. அண்ணே எட்டுக்கப்புறம் ஒம்போத காணம்னீங்களே இதான அது!

கவு: ஆமாடா.. எட்டுக்கப்புறம் ஒம்போதத்தான் தேடுவாங்க.. பின்னே பத்தையா தேடுவாங்க.. லிஸ்ட்லருக்கற பேர படிடா.. (ரகசியமாக) முதல்ல இந்த பொண்ணோட பேர படி.. சிரிப்பு மாதிரியே அளகா இருக்கான்னு பாப்போம்..

செந்: (லிஸ்ட்டைப் பார்த்துவிட்டு குழப்பத்துடன் கோவையையும் அவருகில் நின்ற நாயரையும் பார்க்கிறார்) என்னண்ணே இது..

கவு: என்ன நொன்னண்ணே.. பேர படிடான்னா..

செந்: அதாண்ணே.. லிஸ்ட்ல தமிளாளுங்க பேரால்லே இருக்கு? இதுங்க மலையாளமாச்சே..

கோவை: (சிரிக்கிறார்) அது நாங்க இல்லே.. ஹவுஸ் ஓனர். மேல இருக்குது..

செந்: வாங்கண்ணே (படிகட்டுகளை நோக்கி நகர்கிறார்)

கோவை: ஏய்.. பாத்து.. வாசல்ல நாய் இருப்பாங்க..

கவு: பாத்தியாடா எவ்வளவு மரியாதையா இருக்காங்க மலையாளிங்க.. நாய் இருப்பாங்களாம்..

செந்: (சலிப்புடன்) நீங்கதான் மெச்சிக்கணும்.. மனுசங்கள அது, இதுங்குது.. நாய அவங்கங்குது..

கவு: சலிச்சிக்காதட.. சரி பாத்துவா.. நாய்ங்க கடிச்சிடப் போறாங்க..

செந்: என்னாச்சிண்ணே.. ஒங்களுக்கு மலையாள வாடை அடிச்சிருச்சா.. ஒரு அளகான பொண்ணெ பாத்துரக்கூடாதே..

கவு: சரிடா பம்பரத் தலையா.. வா..

(வாசலில் கட்டிப்போட்டிருந்த நாய் ஆள் வரும் சப்தம் கேட்டு எழுந்து நின்று சோம்பல் முறிக்கிறது. பிறகு இருவரையும் முறைக்கிறது. குலைப்பதா வேண்டாமா என்று முடிவெடுப்பதற்குள்.. கவுண்டர் சார், சார்.. சென்சஸ் சார்.. என்று குரல் கொடுக்கிறார். உள்ளிருந்து டேய்.. சும்மாயிரு.. என்ற அதிகாரக் குரல். கவுண்டர் திரும்பி செந்திலை முறைக்கிறார்)

கவு: டேய்.. இவன் யாரச் சொல்றான் என்னையா இந்த நாயையா?

செந்: சிரிக்கிறார்... ஒங்கள சொல்வாராண்ணே.. அவர் கொரல் கேட்டதும் நாய் கப்சிப்புன்னு ஆயிருச்சி பாருங்க.. போங்க..

கவு: அதானே பாத்தேன்.. இல்லன்னா மவனே அவனெ தூக்கிப் போ... (கதவு திறந்து பயில்வான் சைசில் ஒருவர் வந்து நிற்க கவுண்டர் வாயை மூடிக்கொண்டு பரிதாபமாகப் பார்க்கிறார்) ச..சார்.. சென்..சஸ்..

செந்: (ரகசியமாக) நல்ல வேளைண்ணே.. நீங்க முடிக்கறதுக்குள்ளயே வந்துட்டார்.. தப்பிச்சீங்க.. இனியாச்சும் வாய தொறக்காம கேளுங்க..

கவு: (ரகசியக் குரலில்) டேய்.. என்ன நக்கலா.. வாய தொறக்காம என்னத்தடா கேக்கறது?

தொடரும்

9 comments:

நாகை சிவா said...

ஆக மொத்தத்தில் குடிச்ச டீக்கு காசு குடுக்கல..........

ரை....... ரை........

tbr.joseph said...

வாங்க சிவா,

ஆக மொத்தத்தில் குடிச்ச டீக்கு காசு குடுக்கல..........//

பின்னே.. அதுக்குத்தான் மயங்கி விழறா மாதிரியெல்லாம் நடிச்சது..

Syam said...

கடைசில கவுண்டருக்கு பிராந்தி கிடச்சுதா இல்லயா....:-)

Syam said...

//என்னது மேடா.. அப்ப பள்ளத்துக்கு என்ன மேடம்//

இது சூப்பருங்க....:-)

இராம் said...

மலையாளத்திலே பிராந்தி'ன்னா பைத்தியமின்னு அர்த்தமா????

Anonymous said...

:-))))))

tbr.joseph said...

வாங்க ஷ்யாம்,

கடைசில கவுண்டருக்கு பிராந்தி கிடச்சுதா இல்லயா....//

ஏற்கனவே மனுசன் ஒளறல் கேஸ்.. இதுல பிராந்தியவும் ஊத்தவா?

தேவைதான்:)

tbr.joseph said...

//என்னது மேடா.. அப்ப பள்ளத்துக்கு என்ன மேடம்//

இது சூப்பருங்க....:-)/

நன்றிங்க..

tbr.joseph said...

வாங்க இராம்,

மலையாளத்திலே பிராந்தி'ன்னா பைத்தியமின்னு அர்த்தமா???? //

பைத்தியம்னு இல்லை.. பைத்தியக்காரின்னு அர்த்தம்..

நாயர் தன் மகள நீ என்ன பைத்தியக்காரியான்னு கேக்கார்.