Wednesday, February 28, 2007

இம்மாத அட்லாஸ் வாலிபரின் நிறைவுப் பதிவு..

நம்ம ஆஸ்தான நகைச்சுவை நாயகன் வடிவு (வடிவேலுவோட செல்ல பேர்) ஹோட்டல்லருந்து வெளிய வறார். வெத்தல போட்டதுல உதடு செவந்துருக்கான்னு பாத்துக்கிட்டே வறார்.

வடி: அடடா.. அய்யர் கபேன்னாலே ஒரு அலாதி டேஸ்ட்தாம்ப்பா.. அந்த சாம்பாரும்.. ரசமும், மோரும்.. சேத்து ஊத்தி சாதத்த கொளச்சி அடிக்கற சுகம் இருக்கே.. (புளிச்சென்று வாயிலிருந்த வெற்றிலை எச்சிலை துப்பிவிட்டு வானத்தைப் பார்க்கிறார்) எய்யா ச்சாமி.. இன்னைக்கி ஒன் மொகத்துலதானய்யா முளிச்சிட்டு எறங்குனேன்.. அதான் இம்புட்டு திருப்தியா ஒரு சாப்பாட்ட குடுத்துருக்கே.. ரொம்ப தாங்ஸ்ய்யா.. ஏஏஏஏஏவ்...

பின்னாலிருந்து ஒரு குரல்: டேய் நில்றா..

(வடிவு திரும்பிப் பார்க்காமல் போகிறார்)

குரல்: டேய் ஒன்னெத்தாண்டா.. நில்றாங்கறேன் போய்க்கிட்டேருக்கே.. ஒங் காதென்ன செவிடா?

வடி: (திடுக்கிட்டு நிற்கிறார்) இது எங்கனயோ கேட்ட கொரலாட்டம்ல இருக்கு.. இது அவனாருக்குமோ.. ச்சீச்சீ இருக்காது. நாம ஊர்லருந்து ரொம்பத் தூரம்லே வந்துருக்கோம்.. அது இவனாயிருக்காது.. இது வேற யாரோ.. (முன்னே நடக்கிறார். அடுத்த நொடியே தோளில் ஒரு கை விழுகிறது. அவரையுமறியாமல் மந்தரித்து விட்ட கோழி மாதிரி திரும்புகிறார். அடுத்த நொடியே முகம் களையிழந்து போகிறது.)

பார்: என்ன சொன்னே அது இவனாயிருக்காதா? இப்ப பார். இது அவனேதான். அது இவனேதான்.

வடி: ச்சரிய்யா.. நீ அவனே தான்.. அவன் நீயே தான்.. இப்ப என்ன அதுக்கு.. எதுக்கு என்னெ புடிச்சி நிறுத்தி வம்பு பண்றே.. சிவனேன்னு நாம்பாட்டுக்கு போய்கிட்டுதான இருந்தேன்..

பார்: டேய் நீ சிவனேன்னு போய்ட்டுருந்தா நா ஏண்டா ஒன்னெ புடிச்சி இளுக்கேன்.. என்னெ நீ சிவப்பாக்கிட்டில்லடா போனே..

வடி: என்னது நா ஒன்னே சிவனாக்கிட்டேன்னா.. என்னய்யா சொல்றே?

பார்: (தன் ஜிப்பாவைக் காட்டுகிறார்) இதென்ன?

வடி (தனக்குள்) அடடா.. இவன் மேலயே போய் துப்பிட்டம் போலருக்கே.. வேலியில போற ஓணானப் புடிச்சி வேட்டிக்குள்ள விட்டுட்டேன் போலருக்கே.. ச்சும்மாவே கொடஞ்சி எடுத்துருவானே.. இப்பம் என்னென்னல்லாம் செய்வானோ தெரியலையே..(வானத்தைப் பார்க்கிறார்) எய்யா.. இப்பத்தானய்யா ஒங்கிட்ட தாங்ஸ் சொன்னேன்.. அதுக்குள்ள இப்படியா? இது நல்லால்லையா.. நல்லால்ல..

பார்: டேய்.. மேல பாத்து பேசிட்டா விட்டுருவமா.. ச்சாமி மொகத்துல முளிச்சிட்டு பொறப்பட்டா என்ன வேணும்னாலும் செஞ்சிருவியா? களட்றா..

வடி: (முறைக்கிறார்) என்னது களட்றதா? எத?

பார்: (கேலியுடன்) ஊம்.. வாயை மட்டும் அசைக்கிறார் (சென்சார் பண்ணிட்டாங்க போலருக்கு).

வடி: யோவ் வேணாம்.. கொளப்பாத.. நீ ஒளுங்கா பேசினாலே ஒரு எளவும் புரியாது.. இதுல வாய மட்டும் தொறந்து மூடுறே?

பார்: டேய்.. நீ என்ன செவிடா? (சாலையில் போய்க்கொண்டிருக்கும் ஒருவரைப் பிடித்து நிறுத்துகிறார்) அண்ணே நா சொல்றது ஒங்களுக்கு கேக்குதா பாருங்க (வாயை மட்டும் அசைத்து காட்டுகிறார்)

(அவருக்கும் ஒன்றும் கேட்கவில்லை. இருந்தாலும் பார்த்தியையும் வடிவையும் ஏற்கனவே அறிந்து வைத்திருந்ததால் நமக்கேன் வம்பு என்று நினைத்து) என்ன தம்பி நீங்க.. பக்கத்துலயே நிக்கேன். இப்படி செவிடங்கிட்ட பேசற மாதிரி கத்தறீங்க.. காது கொய்ய்யுங்குது..

பார்: தாங்ஸ்ணே நீங்க போங்க.. பார்த்தியாடா.. அவர் நா கத்தறேங்கறார்.. நீ கேக்கலேங்கறே.. இப்பவாவது கேக்குதா பாரு (மீண்டும் பிரசுரிக்க முடியாத வார்த்தையொன்றை சப்தம் வராமல் உச்சரிக்கிறார்)

வடி: (தனக்குள்) என்னடா இது ரோதனையா போச்சி.. அதெப்படி இவன் பேசறது மட்டும் நமக்கு கேக்க மாட்டேங்குது.. பஸ்சு சத்தம் கேக்குது.. தோ.. அந்த பளக்காரன் அங்கனருந்து கூவுறது கூட தெளிவா கேக்குதே.. இந்த பயதான் என்னமோ ஃப்ராடு பண்றான்னு நினைச்சா அந்தாள் வேற கேக்குதுங்கறானே...

பார்: டேய் என்ன ஒனக்குள்ளயே பேசிக்கறே.. களட்டு..

வடி: (அழுதுகொண்டே தன்னுடைய மேல் சட்டையைக் கழற்றுகிறார்) யோவ் ஒனக்கு இதே வேலையா போச்சுய்யா.. இந்தா புடி..

பார் (அருவறுப்புடன் வாங்கி சாலையில் வீசிவிட்டு மீண்டும் வடிவைப் பார்க்கிறார்) டேய், இதைய்யா கழட்டச் சொன்னேன்..

வடி: பின்னே..வேட்டியையும் கழட்டுனுமாக்கும்.. சொன்னாத்தானய்யா தெரியும் (வேட்டியையும் கழற்றிக் கொடுக்கிறார்)

பார்: (அதையும் வாங்கி வீசிவிட்டு முறைக்கிறார்) டேய்.. கடுப்படிக்காத.. நா சொன்னத கழட்டு..

வடி: (தனக்குள்) வெறுமனே வாய மூடி, மூடி தொறக்கான்.. காத்துதான் வருது.. இவன் என்னத்த கழட்டச் சொல்றானேன்னே தெரியலையேய்யா..

பார்: மொனகாத.. கழட்டு..

வடி: மேலருக்கறதையும் குடுத்தாச்சி.. கீழருக்கறதையும் குடுத்தாச்சி.. இன்னும் என்னத்தையா கேக்கே.. இதுக்குக் கீழ -----------தாய்யா இருக்கு..

பார்: ஆங்.. அதத்தான் அப்பத்துலருந்து கழட்டிக் குடுறாங்கறேன்.. கழட்டு..

வடி: (குதித்து பின்வாங்குகிறார்) என்னது?

பார்: ஊம்? நொன்னது.. கழட்றான்னா..

வடி: போய்யாங்கொய்யா.. (கழற்றிப் போட்ட வேட்டி சட்டையையும் மறந்து நாலு காய்ச்சலில் ஓடுகிறார்)

சாலையோரத்தில் அமர்ந்திருந்த பிச்சை சாலையில் கிடக்கும் வேட்டி சட்டையையும் பார்த்திபனையும் மாறி மாறி நோட்டம் விடுகிறார்)

பார்: என்னங்க பாக்கிறீங்க.. எடுத்துக்கிட்டு போங்க.. இன்னைக்கி நரி மொகத்துலதான் முளிச்சிருக்கீங்க..

(பிச்சை பாய்ந்து வந்து எடுத்துக்கொண்டு தூரத்தில் ஒளிந்துக்கொண்டு நின்ற வடிவேலுவைப் பார்க்கிறார். வடிவேலும் நாக்கை மடித்து கொன்னுருவேன் என்று சைகைக் காட்டுகிறார். பிச்சை சாலையோரத்தில் வைத்திருந்த அலுமினிய பாத்திரத்தையும் மறந்து நாலு கால் பாய்ச்சலில் எதிர் திசையில் ஓட வடிவேலு தன்னுடைய ட்ரேட் மார்க் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்று அழ.. பார்த்தி 'மவனே.. என் சட்டையிலயா துப்பறே.. இப்ப ஊருக்கு எப்படி போய் சேர்றேன்னு பாக்கேன்..' என்றவாறு சாலையோரக் கடையில் சென்று அமர்கிறார்)

********

இம்மாதம் முழுவதும் ஏதோ என்னால் ஆன வகையில் கிச்சு, கிச்சு மூட்ட முயற்சி செஞ்சேன்.. சிரிப்பு வந்ததோ இல்லையோ மாசம் முடிஞ்சிருச்சி..

என்னையும் வாலிபனா நெனச்சி என்னெ இங்க வரவழைச்ச சிபிக்கும் அவ்வப்போது தனி மயிலில் என்னை ஊக்குவித்த நண்பர் தேவுக்கும்.. நானும் எழுதியதை வேலை மெனக்கெட்டு படித்து வேலைமெனக்கெட்டு பின்னூட்டம் இட்ட வாலிப சிங்கங்களுக்கும் நன்றியோட சேர்ந்த சலாமுங்கோ..

நன்றி வணக்கம்..

அன்புடன்,
ஜோசஃப்

8 comments:

கோவி.கண்ணன் said...

//அட்லாஸ் வாலிபரின் இறுதிப் பதிவு.. //

ஜோசப் ஐயா,
நிறைவு பதிவு என்று தலைப்பிட்டு இருந்தால் சரியாக இருக்கும் !
:)

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க கண்ணன்,

நிறைவு பதிவு என்று தலைப்பிட்டு இருந்தால் சரியாக இருக்கும் !
:) //

இதோ மாத்திட்டேன்..

பரிந்துரைக்கு நன்றி:)

dubukudisciple said...

joseph!!
adukulla niraivu padiva??
ennnaga idu!!
innuma konjam ezhutunga!!!
supera comedy varuthu ungaluku

தேவ் | Dev said...

ஜோசப் சார் உங்க எல்லாப் பதிவுகளிலும் எனக்கு மிகவும் பிடித்தப் பதிவு உங்க தொடர் தான்.. அசத்தலா இருந்துச்சு..

சங்கத்தின் அழைப்பினை ஏற்று உங்கள் பணிகளுக்கு இடையிலும் எங்களுக்காகப் பதிவுகள் இட்டு சிறப்பித்ததற்கு சங்கத்தின் சிங்கங்கள் அனைவரது சார்பாகவும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க டுபுக்கு,

இது அட்லாஸ் வாலிபராத்தான் நிறைவுப் பதிவு.. நேரம் கிடைக்கறப்ப எல்லாம் வந்துக்கிட்டுத்தான் இருப்பேன்.:)

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க தேவ்,

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி..

dubukudisciple said...

joseph!!
naan dubuku illeengo!!! avaruku disciple!!
dubuku ketarna odaika varuvaru!!
namma ramarku oru chinna thondu senja anil mathiri.. ramar aakidatheenga

tbr.joseph said...

வாங்க டிசைப்பிள்,

முதல்ல பார்த்தப்பவே நினைச்சேன்..

என்ன பண்றது இப்ப யார் தலைவர் யார் டிசைப்பிள் யார் ஒரிஜினல் யாரி போலிங்கறதே தெரிய மாட்டேங்குதே..