Friday, February 16, 2007

டவுசர் பாண்டி (vol-2)

காதலர்தினம் ஒரு வழியா முடிச்சுபோச்சு, காதலன் காதலிக்கிட்டே பேசுறதும், காதலி காதலன்'கிட்டே பேசுறதும் பார்க்கிறப்போ 'அப்பிடியே நம்மையறியாமே உள்ளுக்குள்ளே ஒன்னு பொங்கி வந்து அவனுகளை தலைமுடியை பிடிச்சு நறுக் நறுக்குன்னு நாலு குட்டு வைக்கணும் போலே தோணும். வீட்டுலே உட்கார்ந்து எழுதி வந்து மேடையிலே பேசுறமாதிரி பேசிட்டு திரிவானுக... அதுவும் நம்மளை மாதிரி காஞ்சுபோன கேஸ்களுக்கு அவனுக பேசுறத கண்டா அப்பிடியே பத்திட்டு வரும், அதாவது நம்மளை மாதிரி'ன்னு சொன்னது காதலர் தினத்தை அன்பர் தினம் , அதிசயமாய் வேலை பார்க்கும் தினமா கொண்டினவங்களுக்கு தான் சொல்லுறேன். வேற யாரும் டென்சன் ஆகவேணாம்....!!!!!

லவ் பண்ணிட்டு திரியறவயங்கே கூட ஆளுக்கு ஒருத்தர் துணை ஒன்னு இருப்பாய்ங்கே... அப்பிடி உட்கார்ந்து கிடந்த நம்ம டவுசரு பாண்டி சொல்லுறத கேளுங்க.

"எங்கவீட்டுலே யாராவது பொண்ணுக கூட பேசிட்டு இருக்கிற பார்த்தா பிரச்சினை ஆகிறும்.. ஸோ கொஞ்சம்கூட வாடா! நாமெல்லாம் இருந்தா கூட்டமா சேர்த்து கும்மாளம் போடற மாதிரி இருக்கும்'ன்னு சொல்லி கூட்டிட்டு போறீங்களே, உனக்கு அங்கே துணை இருக்கு, எனக்குன்னு யாராவது இருக்காங்களான்னு நினைச்சி பார்த்தீங்களாடா வீங்கி போன அரவிந்தசாமிகளா?"

"டேய்! இன்னிக்கு எனக்கும் அவளுக்கும் பெரிய சண்டை'டா! அவளை திட்டிட்டு வந்துட்டேன்! இப்போ என்ன ஆனாளோ? சாப்பிட்டாளா? தூங்குனாளோ?? இப்பிடி பல வகையா திங்க் பண்ணீறீங்களே..அவிஞ்சு போன அடுப்புலே வெந்து போன சாமிகளா? ஒங்ககூடவே குரங்கு குட்டியாட்டம் திரியுற எங்களுக்கு எப்பாவது வடையும் டீயும் வாங்கி தரனுமின்னு யோசிச்சுருக்கீங்களடா போண்டா தலையனுகளா?"

"ஊரெல்லாம் தொத்து வியாதி பரவிறுக்கே! நம்ம பயப்புள்ள'க்கு என்னாச்சோன்னு பார்க்கவந்த இடத்திலேயும் "ரெண்டு மூணு நாளா அடிச்ச காயச்சலிலே வெளியே எங்கயும் போகமுடியலை! அவளையும் பார்க்கமுடியலையே? ஐயோ ஐயோ'ன்னு கதருற ஒங்களை எல்லாம் ஏண்டா சிக்கன்குனியா டைனோசர் வந்து கடிச்சு வைக்கலை??"

"நம்ம பண்ணுற லவ்'லே எப்பாவது அடி கிடி வாங்க வேண்டியாதிருந்தா இந்த பயப்புள்ளயும் வாங்கட்டுமின்னு கூட்டிட்டு போறே பாசக்கார மச்சானுகளா!... ஊரோட ஒத்து வாழனுமின்னு பழமொழிக்கு ஏத்தமாதிரி அடிக்க வர்றவங்களோட சேர்த்து நாங்களும் குடுப்போமிடா எண்ணை சட்டியிலே வெந்து எந்திரிச்ச கோழிமண்டயனுகளா"

35 comments:

தம்பி said...

சீக்கிரமே காதலிக்காதவர் தினத்த கொண்டாடி பிகருங்க கவனத்தை நம்ம பக்கம் திருப்பணும்.

எவ்வளவு நாளைக்கு நாமளும் தரிசு நிலமாவே கெடக்குறது.

அண்ணே உங்க பீலிங் எனக்கு புரியுது ஆனா முயற்சி மட்டும் தளரவிடாதிங்க.

ஆன்லைன் ஆவிகள் said...

// ஊரோட ஒத்து வாழனுமின்னு பழமொழிக்கு ஏத்தமாதிரி அடிக்க வர்றவங்களோட சேர்த்து நாங்களும் குடுப்போமிடா எண்ணை சட்டியிலே வெந்து எந்திரிச்ச கோழிமண்டயனுகளா"
//

ஆஹா! இது நல்ல ஐடியாவா இருக்கே!

ஆன்லைன் ஆவிகள் said...

எங்களையும் சங்கத்துல சேர்த்துப்பீங்களா?

உறுப்பினர் கட்டணம் எவ்வளவு
.
.
.
.
.
.
.
.கொடுப்பீங்க?

இராம் said...

//சீக்கிரமே காதலிக்காதவர் தினத்த கொண்டாடி பிகருங்க கவனத்தை நம்ம பக்கம் திருப்பணும்.//

கதிரு இதுவல்லவா லட்சியம்... நடத்து சிங்கமே.... :)

//எவ்வளவு நாளைக்கு நாமளும் தரிசு நிலமாவே கெடக்குறது.//

ஆமாம்ப்பா இன்னும் நினைக்க நினைக்க பீலிங் ஆப் துபாயா இருக்கு :)

//அண்ணே உங்க பீலிங் எனக்கு புரியுது ஆனா முயற்சி மட்டும் தளரவிடாதிங்க.//

அதுதானே என்னாடான்னு பார்த்தேன்... இன்னும் நமக்கு ஆப்பை திருப்பி வைக்கமே இருக்கியேன்னு????

முயற்சி பயற்சின்னு ஏய்யா காமெடி பண்ணுறே..... ???

தம்பி said...

ஆவிகள் உலகத்துல காதலர் தினம் உண்டா?

ஏன்னா பாதி பேரு காதல் தற்கொல பண்ணிகிட்டு அங்கதான் வர்றானுங்க.
அங்க வந்து எதுனா பிகர் செட் பண்ணிட்டு சந்தோசமா இருக்க வழி இருந்தா சொல்லுங்க ஆ.ஆவி
நானும் வர்றதுக்கு முயற்சி பண்றேன்.

இராம் said...

//ஆஹா! இது நல்ல ஐடியாவா இருக்கே!//

ஆவி அண்ணாச்சி வாங்க வாங்க.......


//எங்களையும் சங்கத்துல சேர்த்துப்பீங்களா?

உறுப்பினர் கட்டணம் எவ்வளவு
.
.
.
.
.
.
.
.கொடுப்பீங்க?//

மாசம் 20 ஆயிரம் கூட கொடுக்கலாம்... ஆனா அதை வாங்கி உங்களுக்கு செலவு பண்ண தெரியுமா???

இலவசக்கொத்தனார் said...

ரொம்ப நொந்து போயி இருக்கீங்க. யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும். கவலைப்படாதீங்க.

(ஹலோ, நான் பொன்ஸ் பத்தி ஒண்ணும் சொல்லலை. ஏற்கனவே யாரோ செய்யறது எல்லாம் என் அக்கவுண்ட்ல க்ரெடிட் ஆவுது. புதுசா எதுனா கிளப்பாதீங்க)

ஜி said...

ராம் அண்ணே....

ஏன்? இல்ல ஏன் இந்த கொலவெறி....
பக்கத்து வீட்டு பாமா போனா என்ன... எதித்த வீட்டு அமலா இருக்காள்ல...

தோத்துப் போனதுக்காக இப்படியே அழுறது...

டவுசர் பாண்டி said...

உன்னோட வயித்தெரிச்சல சொல்லிப்புட்டி, ஏன் பா செவனேன்னு இருக்குற என்னைய வம்புக்கு இழுக்குற...

இராம் said...

//டவுசர் பாண்டி said...
உன்னோட வயித்தெரிச்சல சொல்லிப்புட்டி, ஏன் பா செவனேன்னு இருக்குற என்னைய வம்புக்கு இழுக்குற...
//

அடபாவிகளா,

எனக்கே ஃபிராக்ஸியா???????? :(

ஆன்லைன் ஆவிகள் said...

//(ஹலோ, நான் பொன்ஸ் பத்தி ஒண்ணும் சொல்லலை. ஏற்கனவே யாரோ செய்யறது எல்லாம் என் அக்கவுண்ட்ல க்ரெடிட் ஆவுது. புதுசா எதுனா கிளப்பாதீங்க)
//

புரியலையே!

:(

தேவ் | Dev said...

என்ன கொடுமைடா இது... போட்டிருக்க டவசரை இப்படி ஆளுக்கு ஆள் கிழிச்சா நீ தான் என்னப் பண்ணுவே?

காத்திருப்பவன் said...

//என்ன கொடுமைடா இது... போட்டிருக்க டவசரை இப்படி ஆளுக்கு ஆள் கிழிச்சா நீ தான் என்னப் பண்ணுவே?
//

ஓ! இன்னிக்கு டார்கெட் ராயல் ராம் அண்ணனா?

புரிந்தது! இனிமேல் பாருங்க! ஜூட்!

இராம் said...

//ரொம்ப நொந்து போயி இருக்கீங்க. யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும். கவலைப்படாதீங்க. //

கொத்ஸ்,

இப்பிடியே மனசை தேத்தி தேத்தியே இப்போ ஏழு கழுதை வயசாயிடிச்சு.... இதிலே யானை, பூனை'ன்னு சொல்லுறீங்க... :)

//(ஹலோ, நான் பொன்ஸ் பத்தி ஒண்ணும் சொல்லலை. ஏற்கனவே யாரோ செய்யறது எல்லாம் என் அக்கவுண்ட்ல க்ரெடிட் ஆவுது. புதுசா எதுனா கிளப்பாதீங்க) ///

பக்குவமா பத்த வைச்சிட்டிங்களே பரட்டை :)))

கேள்வி கேட்பவன் said...

--ஹலோ, நான் பொன்ஸ் பத்தி ஒண்ணும் சொல்லலை.--

ஏன் அவங்க என்ன ஆன்லைன் யானை பிஸினஸ் பண்ணுறாங்களா????

தருமி said...

ஹலோ! என்ன ராம் கேட்டீங்க?
ஓ! அதுவா, இந்த ரூட்ல அடிக்கடி டவுன் பஸ் வருங்க..இப்போ வந்துரும்... கொஞ்சம் பொறுமையா வெய்ட் பண்ணுங்க... அப்ப, நான் வர்ட்டா..?!,

இராம் said...

//ராம் அண்ணே....

ஏன்? இல்ல ஏன் இந்த கொலவெறி....//

வாலே. ஜீயீ.... என்ன சின்னப்புள்ளதனமான கேள்வி..... ஒனக்கெல்லாம் இந்தமாதிரி வெந்து நொந்த அனுபவம் இல்லியா???

//பக்கத்து வீட்டு பாமா போனா என்ன... எதித்த வீட்டு அமலா இருக்காள்ல...//

ஒன்னும் இல்லேன்னுதானே இந்தமாதிரி புலம்புனது :)

//தோத்துப் போனதுக்காக இப்படியே அழுறது... ///

இது அழுவை இல்லய்யா! இதுக்கு பேரு புலம்பல்ஸ் ஆப் பொன்மொழி :)

இராம் said...

//என்ன கொடுமைடா இது... போட்டிருக்க டவசரை இப்படி ஆளுக்கு ஆள் கிழிச்சா நீ தான் என்னப் பண்ணுவே? //

ஆரம்பிச்சுச்சா?? இனிமே என்னென்ன நடக்க போகுதுதோ?????? :(

இராம் said...

//ஓ! இன்னிக்கு டார்கெட் ராயல் ராம் அண்ணனா?

புரிந்தது! இனிமேல் பாருங்க! ஜூட்! //

அடபாவி யாருய்யா நீயி.... :(

இராம் said...

/ஏன் அவங்க என்ன ஆன்லைன் யானை பிஸினஸ் பண்ணுறாங்களா????//

குட் கொஸ்டின்..

இராம் said...

//ஹலோ! என்ன ராம் கேட்டீங்க?
ஓ! அதுவா, இந்த ரூட்ல அடிக்கடி டவுன் பஸ் வருங்க..இப்போ வந்துரும்... கொஞ்சம் பொறுமையா வெய்ட் பண்ணுங்க... அப்ப, நான் வர்ட்டா..?!,//

ஐயா,

என்ன இப்பிடி கோரிபாளைய பஸ்ஸ்டாப்பிலே நடந்ததெல்லாம் சொல்லிறீங்க.... :)))

அருட்பெருங்கோ said...

இந்தப் பதிவின் முதல் பாராவில் எந்த உள்குத்தும் இல்லையென்று நம்பிக்கையோடு...

பாவம்யா டவுசர் பாண்டி... நீ தான் கொஞ்சம் ஐடியா கொடுத்து ஹெல்ப் பண்ணேன்? ஓக்கேவா?

நாகை சிவா said...

நீ எதுக்கு இம்புட்டு பீல் பண்ணுற ராயல் ராபாட்

;-)))))))))))

நாகை சிவா said...

//எனக்குன்னு யாராவது இருக்காங்கன்னு நினைச்சி பார்த்தீங்களாடா வீங்கி போன அரவிந்தசாமிகளா?"//

இதுக்கு தான் எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் வர ஆளு கூட போகனும் என்று சொல்லுறது.

இராம் said...

//இந்தப் பதிவின் முதல் பாராவில் எந்த உள்குத்தும் இல்லையென்று நம்பிக்கையோடு...//


காதல்முரசு ஐயாவே,

அதில் எவ்வளவு உள்குத்து குறைவாக இருக்கிறது தெளிவுபடுத்தினால் அடுத்த புலம்பலில் கொஞ்சம் சேர்த்துக்கொள்ள வசதியா இருக்கும் :))))


//பாவம்யா டவுசர் பாண்டி... நீ தான் கொஞ்சம் ஐடியா கொடுத்து ஹெல்ப் பண்ணேன்?//

அந்த வேலை வேறயா????

இராம் said...

//நீ எதுக்கு இம்புட்டு பீல் பண்ணுற ராயல் ராபாட்

;-)))))))))))/

வா புலி....

நீ குகைக்கு திரும்பி போயி சேர்த்துட்டியா??? அப்போ இனிமே கொசுக் கடி பதிவு தான் :))

தூயா said...

ராம்ஸ், its ok its ok ;)

காத்திருப்பவன் said...

//அடபாவி யாருய்யா நீயி.... :(//

நான்தான்!

இராம் said...

//ராம்ஸ், its ok its ok ;)//

தூயா,

ஏங்க இப்பிடியெல்லாம்... :(

இராம் said...

// காத்திருப்பவன் said...

அடபாவி யாருய்யா நீயி.... :(

நான்தான்! //

ஐயோ நான் இந்த ஆட்டைக்கு வரலை :((

காத்திருப்பவன் said...

//ஐயோ நான் இந்த ஆட்டைக்கு வரலை //

அதான் ஏன் வரலைன்னு கேக்குறேன்!
வந்துதான் ஆகணும்!

Anonymous said...

:-)))))))))))))))))

Nice Comments

இம்சை அரசி said...

// சீக்கிரமே காதலிக்காதவர் தினத்த கொண்டாடி பிகருங்க கவனத்தை நம்ம பக்கம் திருப்பணும்.
//

என்ன தினம் கொண்டாடினாலும் பிகருங்க உங்க பக்கம் திரும்பாதப்பு.

இப்படியே உக்காந்து பொலம்பிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.

:)))))))))))))))))

(மொறைக்கப்படாது... அதான் ஸ்மைலிய போட்டுட்டோம்ல)

ஜி said...

// இராம் said...
//டவுசர் பாண்டி said...
உன்னோட வயித்தெரிச்சல சொல்லிப்புட்டி, ஏன் பா செவனேன்னு இருக்குற என்னைய வம்புக்கு இழுக்குற...
//

அடபாவிகளா,

எனக்கே ஃபிராக்ஸியா???????? :( //

ஆங்.. யாருப்பா அது.. ப்ராக்ஸி யார் கொடுத்தாலும் முன்னால வந்திருங்கப்பு.. அப்புறம் ராம் பொல்லாதவனாயிடுவாரு.

சொல்லிட்டேன் ராயலு... இப்ப வந்திடுவாங்க பாருங்க...

ஜி said...

// இராம் said...
வாலே. ஜீயீ.... என்ன சின்னப்புள்ளதனமான கேள்வி..... ஒனக்கெல்லாம் இந்தமாதிரி வெந்து நொந்த அனுபவம் இல்லியா??? //

அத்த்தான் நாங்க காதலர் தின ஸ்பெசல் பதிவாப் போட்டோம்ல... ;)))