Thursday, February 8, 2007

அந்தக் காலத்து காதல் 2

ரயில் நிலையத்துல ரயிலுக்காக காத்துக்கிட்டிருக்கற நேரத்துல கேங்கா நின்னு சைட் அடிக்கறதுதான் நம்மள மாதிரி ஆளுங்களோட வேலை.

இப்ப இருக்கற மாதிரி அஞ்சு, பத்து நிமிஷத்துக்கு ஒரு வண்டின்னுல்லாம் அந்த காலத்துல கிடையாது. அரைமணிக்கு ஒன்னுதான். ஒரு ரயில விட்டா இன்னும் அரைமணி நேரம் காத்துக்கிடக்கணுங்கறத மனசுல வச்சிக்கிட்டு பத்து மணி ஆஃபீசுக்கு போனா போறுங்கறவங்களும் காலை எட்டு மணிக்கெல்லாம் நிலையத்துக்கு வந்துருவாங்க.

எனக்கு 9.30 மணிக்கு ஆஃபீஸ்ல இருக்கணும்.. என் கேங் ஆளுங்கள்ல பலர் சதர்ன் ரயில்வே ஆளுங்க.. அவங்க போற நேரந்தான் ஆஃபீஸ் நேரம். மத்திய அரசு அலுவலகமாச்சே.. எமர்ஜென்சி காலம் தவிர்த்து மத்த நேரத்துல அவங்க வச்சதுதான சட்டம்!

ஆனாலும் நான் ஸ்டேஷனுக்கு போய் சேர்றதுக்கு முன்னாலேய நம்ம கேங் அங்க அசெம்பிள் ஆயிருக்கும். எதுக்கு.. எல்லாம் வந்திருக்கற கலர்கள ரசிக்கத்தான்.

இதுல என்ன விசேஷன்ம்னா பெரம்பூர் மற்றும் லோக்கோ ஒர்க்ஸ் ஸ்டேஷன் ஏரியாவுல ஆங்கிலோ இந்தியன் கிறிஸ்த்துவர்கள்தான் அதிகமா குடியிருந்தாங்க. சேலையிலிருக்கற 'கவர்ச்சி'யை விட முட்டிக்கு மேல நிக்கற 'கவுன்'ல கவர்ச்சி ஜாஸ்திதானே.

இங்க ஒரு சின்ன கிளுகிளுப்பான இடைசெருகல்.

நா மும்பை கிளைல மேனேஜரா இருந்தப்போ ஒரு கான்வென் ஸ்கூல் எங்க கஸ்டமர். ஒரு நாள் ஃபாதர பாக்கறதுக்காகப் போயிருந்தேன். அங்க ஒன்பதாம் வகுப்புல படிச்சிக்கிட்டிருக்கற மாணவர்கள்ல ரெண்டு பேர ஃபாதர் செமயா டோஸ் விட்டுக்கிட்டிருந்தத பார்த்தேன். இனி இப்படி ஏதாச்சும் அசிங்கமா செஞ்சீங்கன்னு கேள்விப்பட்டேன் ஸ்கூல விட்டே டிஸ்மிஸ் செஞ்சிருவேன்னு சொல்லி மிரட்டி அனுப்புனார்.

ஏதோ வில்லங்கம்னு தெரிஞ்சிது.. ஆனா ஃபாதராச்சே எப்படி கேக்கறதுன்னு பார்த்தேன். மெதுவா வெளியில வர்றப்போ வாசல்ல நின்னுக்கிட்டிருந்த ஸ்கூல் அட்டெண்டர கேட்டேன். அவர் சொன்னது இதுதான். 'இந்த பசங்க ரெண்டு பேரும் க்ளாஸ் நடந்துக்கிட்டிருந்தப்போ அடிக்கடி பென்சில், பேனான்னு எதையாச்சும் போட்டுட்டு பெஞ்சுக்கு கீழ போறதும் வர்றதுமா இருந்துருக்காங்க மிஸ் 'டேய் என்னடா பண்றீங்கன்னு கேட்டிருக்காங்க. கூட இருந்த பசங்கள்ல ஒருத்தன் போட்டுக் குடுத்துட்டான்.' நிறுத்திவிட்டு சிரித்த அட்டெண்டர்கிட்ட 'இதுல என்ன தப்பு இருக்கு?' என்றேன் புரியாமல். அவர் அக்கம்பக்கம் பார்த்துவிட்டு, 'சார் மிஸ் முட்டிக்கி மேல கவுன் போடுவாங்க சார். இந்த பசங்க முதல் பெஞ்சில ஒக்காந்துருக்கற பசங்க.. புரியுதா?' என்றார் கண்ணடித்தவாறு..

பிரியுதுங்களா?

ஏப்பா சங்கத்து பதிவில சென்சார் கின்சார் ஏதும் இல்லீங்களே?

அதுதான் நம்ம ஸ்டேஷன்லயும் நடக்கும். கூடியிருக்கற கேங் முழுசோட கண்ணும் இந்த கவுன் போட்ட மிசிங்க மேலதான் இருக்கும்.

நம்ம கேங்குல ஒருத்தன் நல்ல சிகப்பா ஹேண்ட்சம்மா இருப்பான். தமிழ்தான். பட்லர் இங்க்லீஷ்தான் பேசுவான். நமக்கு அப்பல்லாம் அதுகூட வராதுங்கறது வேற விஷயம்.

அவனுக்கு ஒரு பர்ட்டிக்குலர் மிசி மேல ஒரு கண். அதுவும் பாக்க அழகாத்தான் இருக்கும். சாதாரணமாவே ஆங்கிலோ இந்திய பெண்கள் நல்ல அழகுக்கு பெயர்போனவர்கள். இவர்களுள் பலர் பிற்காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துவிட்டனர்.

எங்க கேங்குலயே கொஞ்சம் பார்வையா இருப்பார் நம்ம தோஸ்த். கொஞ்சம் வசதியானவர்தான். ஆனா படிப்புல வீக். ஸ்கூல் ட்ராப் அவுட். ஒரு துணிக்கடையிலதான் வேலை. வீட்டுக்கு சம்பளத்த குடுக்க தேவையில்லேங்கறதால வந்த கொஞ்ச சம்பளத்தையும் ட்ரெஸ்லயும், செண்ட்லயும் போடற ரகம்.

ரயில் வந்து நின்னதும் காத்திருந்த ஆளுங்கல்லாம் அடிச்சி புடிச்சி ஏறும். நாங்களுந்தான். ஆனா இவர் மட்டும் அப்படியே நிப்பார். எதுக்கு?

நாளைக்கு சொல்றேன்..

5 comments:

ஜொள்ளுப்பாண்டி said...

ஜோசப்சார் மெய்யாலுமே ரொம்ப குஜால்ஸாதான் இருக்குங்க ;))))))))) தொடருங்க தொடருங்க ... ;))))

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ஜொள்ளுப்பாண்டி,

மெய்யாலுமே ரொம்ப குஜால்ஸாதான் இருக்குங்க//

அப்படியா.. அப்படி யாருக்கும் தெரியறா மாதிரி தெரியலையே..

கைப்புள்ள said...

ஜோசப் சார்!
ஹி...ஹி...ஜில் ஜில் அனுபவங்கள்...எடுத்து விடுங்க.
:)

tbr.joseph said...

வாங்க கைப்புள்ள,

விடறேன்.. விடறேன்..

தேவ் | Dev said...

ஜோ சார்.. திரும்பி பார்க்கிறேன் மாதிரி இந்தத் தொடருக்குக் குனிஞ்சுப் பாக்குறேன்னு டைட்டில் வச்சிருவோமா? கிளுகிளுப்பாத் தான் போகுது கதை... தொடரட்டும்... மூணாவது பகுதி வாசிச்சுட்டுக் கருத்துச் சொல்லூறேன்..