Tuesday, February 13, 2007

இரு துருவம்

"சார் வர சொன்னீங்களாமே... அட்டேண்டர் சொன்னாரு" ஹெச்.ஓ.டி முன் நின்றிருந்தான் சரவணன்.

"இன்னைக்கு ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ஸ் ஜாயின் பண்றாங்கனு தெரியும் இல்லை"

"தெரியும் சார்" அமைதியாக சொன்னான் சரவணன்.

"நம்ம பசங்க யாரையும் ராகிங்க்ல இன்வால்வ் ஆக வேண்டாம்னு சொல்லு. போன வருஷம் அதிகமா மெக்கானிக்கல் பசங்களை சஸ்பெண்ட் பண்ணிட்டோம்னு அந்த டிப்பார்ட்மெண்ட் ஹெ.ஓ.டீ கடுப்புல இருக்காரு. நம்ம பசங்க யார் மாட்டினாலும் கண்டிப்பா சஸ்பெண்ட் தான். புது ஸ்க்வாட்ல அந்த டிப்பார்ட்மெண்ட் வாத்தியாருங்க தான் அதிகம். புரிஞ்சிதா?"

"யெஸ் சார்"

"அப்பறம் யார் மாட்டினாலும் உங்களுக்காக நான் பேசமாட்டேன்... போய் உங்க ஜூனியர்ஸ்கிட்ட சொல்லிடு"

ஹெச்.ஓ.டீ அறையிலிருந்து வெளியே வந்தான் சரவணன்.

சரவணன் கம்ப்யூட்டர்ஸ் டிப்பார்ட்மெண்டில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவன். அந்த டிப்பார்ட்மெண்டின் ஜாயிண்ட் செக்ரட்டரி அவன். படிப்பிலும் சுட்டி, ஆசிரியர்களிடமும் நல்ல பேர். அதே சமயம் காலேஜ் மாணவர்களுக்கே இருக்கும் துடிப்பும், குறும்பும் அவனிடம் இருந்தது.

அவன் செகண்ட் இயர் க்ளாஸ் ரூமிற்குள் நுழையும் போது அங்கே கூட்டம் கூட்டமாக மக்கள் இருந்தனர். பாதி மாணவர்கள் கோழி திருடியவர்கள் போல் திருட்டு முழி முழித்து கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் முதலாமாண்டு மாணவர்கள் என்பது அவர்கள் நெற்றியில் எழுதி ஒட்டியிருந்தது.

முதல் பெஞ்சிலேயே டேபிள் மேல் இருவர் மட்டும் டெஸ்க் ஓரத்தில் அமர்ந்திருக்க அவர்கள் முன் ஒரு பெண் நின்றிருந்தாள். நேராக அவர்களிடம் அவன் செல்ல...

டெஸ்க் மேல் அமர்ந்திருந்தவர்கள் கீழே இறங்கினர்.

"என்னடா ரேகிங்கா?"

"இல்லைனா... சும்மா..." அப்படியே வழிந்தான் ஒருவன்

"ஏன்ணா நீங்க பண்ணாத தான்னா நாங்க பண்றோம்" என்று பம்மி கொண்டே சொன்னான் மற்றொருவன்

அந்த பெண்ணை பார்த்தான் சரவணன். அவள் அழுது முகம் சிவந்திருந்தது.

"எந்த டிப்பார்ட்மெண்ட்?"

"கம்ப்யூட்டர் சயின்ஸ்" அவள் குரல் அழுகையோடு வந்தது.

"சரி நீ கிளம்பு" சொல்லிவிட்டு மற்ற அனைவரையும் பார்த்தான்...

"இங்க ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூண்ட்ஸ் யார் இருந்தாலும் உடனே வெளிய போகலாம். ஹெச்.ஓ.டி இப்ப இங்க வருவாரு. உங்ககிட்ட ஏதோ பேசனுமாம்"

அவன் சொல்லியவுடன் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் ஒரு 10 - 15 பேர் வெளியே சென்றனர்.

"ஏன்டா முதல் நாளே ராகிங் பண்ணனுமா? அதுலயும் பொண்ணுங்கள கூப்பிட்டு பண்றீங்க. அறிவு இல்லை. இன்னைக்கு எப்படியும் ரெய்ட் வருவாங்கனு தெரியாதா? மாட்னா சஸ்பெண்ட் தான் அப்பறம் யாராலையும் காப்பாத்த முடியாது" அவன் டென்ஷனாக சொல்லி கொண்டிருந்தான்.

"ஏன்னா நீங்க மட்டும் ரொம்ப நல்லவர் மாதிரி பேசறீங்க? போன வருஷம் எங்களை எப்படி பண்ணீங்க?" சரவணனிடம் போன வருடம் கிரிக்கெட் மேட்சில் சத்தம் போட்டு அடி வாங்கிய ஒருவன் பேசினான்.

"டேய்... உங்களை ரேகிங் பண்ணாதீங்கனு சொல்லல. எப்பவுமே முதல் ஒரு மாசத்துக்கு யாரடா சஸ்பெண்ட் பண்ணலாம்னு திரியுவானுங்க. அப்ப மாட்டிக்கிட்டா சங்கு தான். மோர் ஓவர் பொண்ணுங்களை எப்பவுமே பசங்க ரேக் பண்றது தப்பு. அத ஈவ் டீசிங் கேஸ்லையும் போட்டுவிட்டுடுவாங்க. உங்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசக்கூட முடியாம போயிடும். ஜாக்கிரதையா இருக்க சொல்லி ஹெச்.ஓ.டி சொல்லிருக்காரு. இதுக்கு மேல பண்ணா உங்களை யாரும் காப்பாத்த மாட்டோம்" சொல்லிவிட்டு அவன் வெளியே வந்தான்.

அந்த காரிடரின் இறுதியில் அந்த பெண் நின்றிருந்தாள். அழுது சிவந்து போன முகம்.

"ரொம்ப தேங்க்ஸ்" அவளாகவே வந்து பேசியது அவனுக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.

"சரி... முதல்ல போய் முகம் கழுவிட்டு வீட்டுக்கு கிளம்பு"

"நான் ஹாஸ்டல்ல இருக்கேன்" வருத்தமாக சொன்னாள் அவள்.

"ஓ"

" நீங்க தேர்ட் இயர் தானே?" கொஞ்சம் அப்பாவியாக கேட்டாள்.

"ஆமாம்! அப்பறம் நீ அழுவற மாதிரி அப்படி என்ன கேட்டானுங்க?"

"பேர் என்னனு கேட்டாங்க?"

"அப்பறம்?"

"அவ்ளோ தான் கேட்டாங்க" அப்பாவியாக சொன்னாள்.

"அதுக்கு எதுக்கு அழுத?"

"அழுதா அப்பறம் எதுவும் கேக்க மாட்டாங்க இல்லை.. அதனால தான்..." சொல்லிவிட்டு சிரித்து கொண்டே ஹாஸ்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

தொடரும்...

9 comments:

ஜி said...

என்ன வெட்டி..
அடுத்தத் தொடரா...
கல்லூரிக் காதல் கதை...

என்ன இருந்தாலும் அந்தப் பொண்ணு சரியான ஊமக்குசும்புதான் :)))

இலவசக்கொத்தனார் said...

காதலர் தின ஸ்பெஷலா? பட்டையை கிளப்பும்!

Anonymous said...

சூப்பர் ஆரம்பம் வெட்டி.

-உண்மை

வெட்டிப்பயல் said...

//ஜி said...

என்ன வெட்டி..
அடுத்தத் தொடரா...
கல்லூரிக் காதல் கதை...
//
ஆமாம் ஜி...
உங்க அளவுக்கு இல்லைனாலும் சுமாராவாது எழுத முயற்சி செய்யறேன்...

//
என்ன இருந்தாலும் அந்தப் பொண்ணு சரியான ஊமக்குசும்புதான் :)))//
அப்படியெல்லாம் இல்லை.... போக போக தெரியும் (சும்மா பில்ட் அப்)

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

காதலர் தின ஸ்பெஷலா? பட்டையை கிளப்பும்!//

ரொம்ப நன்றி கொத்ஸ் :-)

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

சூப்பர் ஆரம்பம் வெட்டி.

-உண்மை//

ரொம்ப நன்றி உண்மை!!!

ஜோ / Joe said...

வெட்டிபயல்,
ம்.நல்லாத் தான் இருக்கு குசும்பு.

ஆமா! மறு மொழி பட்டியல்ல இது ஜோசப் சார் எழுதுனதா வருது.ஏன்?

ஜி said...

//ஆமாம் ஜி...
உங்க அளவுக்கு இல்லைனாலும் சுமாராவாது எழுத முயற்சி செய்யறேன்...//

தன்னடக்கத்திற்கு அளவே இல்லாமல் எடுத்தியம்பும் வெட்டியை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்... :))))

chinnasr said...

Very nice...Flying start...