Saturday, February 10, 2007

காதலால் துடிக்கும் இதயங்களுக்கு

அடடா....... காதல் மாசம் வேற ஓடிகிட்டே இருக்கு. காதலர் தினம் வேற கிட்ட வந்துடுச்சு. சும்மா காதலிக்கறவங்களுக்காகவே எத்தனை நாள்தான் கவிதை எழுதிட்டு இருக்கறது? காதலிக்காம........... சாரி.......... காதலர் தினம் காதலர்களுக்காகதான......... அதனால காதலிச்சு அதை சொல்ல முடியாம இருக்கற நம்ம மக்களுக்கு எதாவது ஐடியா கொடுக்கலாம்னு என் குருவி மூளைய கசக்கி பிழிஞ்சு சில ஐடியாக்கள கண்டுபிடிச்சிருக்கேன். அஞ்சு யானைய நெஞ்சுல ஏத்துனாலும் ஒண்ணும் ஆகாதுன்ற அளவுக்கு தைரியம் உள்ளவங்க இந்த ஐடியாக்கள உபயோகப்படுத்தி உங்க காதலை சொல்லலாம். திருப்பி ரோஸ் கிடைச்சுதுனா எனக்கு ட்ரீட் வைக்கணும். ஒரு வேளை வெளக்குமாத்து கிடைச்சுதுனா அதுக்கு நான் பொறுப்பில்லை. ஓகே. வந்த வேலைய ஆரம்பிக்கலாம். ரெடி......... ஸ்டார்ட்.......... ஒன்.......... டூ......... த்ரீ............உங்க ஆள்கிட்ட ரோஸ் குடுக்கும்போது ஹெல்மட் போட்டுட்டு போய் கொடுங்க. உங்க தலைக்கு வரப் போற(?) பெரிய ஆபத்துல இருந்து தப்பிச்சுக்கலாம்.உங்க ஆள் கால்ல செருப்பும் கைல எதாவது பொருள் இல்லாதப்ப போய் உங்க லவ்வ சொல்லுங்க. அப்பதான் உங்கள தாக்க அவங்ககிட்ட எந்த ஆயுதமும் இருக்காது.அவங்க கையில மெஹந்தி போட்டிருக்கப்ப போய் காதலை சொல்லுங்க. அவ்ளோ நேரம் கஷ்டப்பட்டு போட்டத உங்களை அறையறது மூலமா அழிச்சுக்க விரும்ப மாட்டாங்க.நேராப் போய் உங்க மனசுல இருக்கறத எல்லாம் சொல்லுங்க. ஏத்துக்கிட்டா ஓகே. இல்ல திட்டினா ஹே! இப்படிதான் என் ஆள்கிட்ட சொல்லலாம்னு டயலாக் ரெடி பண்ணி வச்சிருக்கேன். ஓகேவானு உன்கிட்ட கேக்க வந்தா என்ன இப்படியெல்லாம் திட்டற. போப்பா நீ ரொம்ப மோசம்னு கோவிச்சுக்கிட்டு வந்துடுங்க.சூப்பரா உருகி உருகி எழுதி ஒரு SMS தட்டி விடுங்க. ஓகே ஆயிடுச்சுனா yaaaaaaaaaahhhhhhhoooooooooooo!!!!!! இல்லாட்டி சாரிப்பா என் ஃப்ரெண்ட் ......... நாயிதான் இப்படி அனுப்பி வச்சிடுச்சு. இப்பதான் நானே பாத்தேன். சீரியஸா எடுத்துக்காதனு சமாதானப்படுத்திடுங்க.chat பண்ணும்போது மேல இருக்கற மாதிரி ஒரு heart symbol-ஐ தட்டி விடுங்க. சந்தோசமா கேட்டா உண்மைய சொல்லிடுங்க. கோபப்பட்டா எல்லா smiley-யும் தட்டி விட்டு எல்லாமே சரியா work பண்ணுதானு டெஸ்ட் பண்ணினேன்னு சொல்லி சமாளிச்சுடுங்க.எதாவது ஒரு படத்துல(ரொம்ப முக்கியம் அந்த படத்த அவங்க பாத்திருக்க கூடாது) இருந்து சூப்பரா ஒரு காதல் டயலாக்க அவங்ககிட்ட சொல்லுங்க. சரின்னுட்டா enjoy maadi. முறைச்சாங்கன்னா நேத்து இந்த படத்த பார்த்தேன். இந்த டயலாக் ரொம்ப பிடிச்சிருந்தது. உன் டேஸ்ட் எப்படி இருக்குனு பாக்கலாமேனு சொன்னேன்னு ஒரு பிட்ட போட்டுடுங்க.உங்களோட situation-ஐ உங்க ஃப்ரெண்டோடதுனு முழு கதைய சொல்லி இந்த இடத்துல நீ இருந்தா என்ன பண்ணுவனு கேளுங்க. அவங்க சொல்ற பதிலப் பொறுத்து நீங்களே பார்த்து எதாவது பண்ணிக்கங்கப்பு....................


(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்................... அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா..................... இப்பவே கண்ண கட்டுதே. மேடம் ரொம்ப டயர்ட் ஆயிட்டாங்க. இந்த பாழா போன லவ்வுக்கு ஐடியா கொடுக்கறதுக்குள்ளயே இப்படி தலைய சுத்துதே. எப்படிதான் போயி சொல்லி வாங்கி கட்டிக்க போறாங்களோ. ஹ்ம்ம்ம்ம்ம்..............)

அல்லாரும் போயி சொல்லி வெற்றியோட திரும்பி வாங்கப்பு. உங்க வெற்றி செய்திய கேக்கறதுக்கு ஆவலோடு காத்து கொண்டிருக்கிறேன்.

காதல்ல ஜெயிச்சவங்க, காதல்ல ஜெயிக்க போறவங்க, காதலிச்சே ஆகனும்னு ஒரு முடிவோட சுத்திட்டு இருக்கவங்க, காதலிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கவங்க, காதலிக்கலாமானு யோசிச்சுட்டு இருக்கவங்க, காதல் ரொம்ப தப்புனு டயலாக் உட்டுட்டு இருக்கவங்க(எல்லாரையும் சொல்லியாச்சுனு நினைக்கறேன்) எல்லாருக்கும் என்னோட

காதலர் தின வாழ்த்துக்கள்...!!!

Happy Valentine's Day...!!!7 comments:

இராம் said...

இம்சை,

கலக்கிறியே தாயி... சூப்பரு., இதே ஸ்டைலிலே டவுசர் பாண்டியும் விரைவில் புலம்புவான் :)))

அருட்பெருங்கோ said...

ஐடியா அம்புஜமா இருப்பீங்க போல...

உங்ககிட்ட காதல் படாத பாடு படுது பாவம்!!! :-)))

நாமக்கல் சிபி said...

லெட்டர் எழுதும்போது முதல்ல "அன்பே உன்னோட கடுதாசி கிடைச்சுது" ன்னு ஒரு வரிய சேர்த்துடுங்க! அப்பதான் அவங்களோட அப்பன்கிட்டயோ, அல்லது வேற யார்கிட்டயாவதோ உங்க லெட்டரை கொண்டு போய் காட்டி புகார் பண்ண மாட்டாங்க!

:))

தேவ் | Dev said...

இதயங்களின் தெய்வம் இம்சை அரசி பேரவை பிப்ரவரி 14ல்ல ஆரம்பிக்க அனும்தி கேட்டு இளவட்டங்க சங்கத்துக்கு மடக்கி மடக்கி மடல் எழுதுறாயங்க.. என்ன்ப் பதில் சொல்ல...?

Iniyal said...

இம்சை கலக்குறீங்க..... ஐடியா மணி தோத்தாரு போங்க.....
அடி வாங்குறதுக்குனே யோசனை சொல்வீங்க போல.....எப்படி பா இப்படி.....!

இனியாள்

மனதின் ஓசை said...

//லெட்டர் எழுதும்போது முதல்ல "அன்பே உன்னோட கடுதாசி கிடைச்சுது" ன்னு ஒரு வரிய சேர்த்துடுங்க! அப்பதான் அவங்களோட அப்பன்கிட்டயோ, அல்லது வேற யார்கிட்டயாவதோ உங்க லெட்டரை கொண்டு போய் காட்டி புகார் பண்ண மாட்டாங்க!
//

இது ஐடியா..... நீயும்தான் சொல்லி இருக்கியே..

வெட்டிப்பயல் said...

கலக்கறீங்களே இ.அரசி!!!

ஐடியா மணியோட தங்கச்சியா நீங்க???