Wednesday, February 21, 2007

கவுன்டரும் செந்திலும் சென்சஸ் எடுத்தால்...

நம்ம கவுண்டரும் செந்திலும் சேர்ந்து சென்சஸ் எடுக்கப் போறாங்க. கையில அஞ்சி வருசத்துக்கு முன்னால எடுத்த வாக்காளர்கள் லிஸ்ட்.

காலையிலருந்து சென்சஸ் எடுத்த களைப்பும் அலுப்பும் கவுண்டபெல் முகத்தில்..

செந்: என்னண்ணே.. ரொம்பத்தான் சோர்ந்து போய்ட்டீங்க போலருக்கு.. என்னைய பாருங்க.. அப்படியே இன்னைக்கி பூத்த பூ மாதிரி இருக்கேன்..

க.மணி: (கடுப்புடன் பார்க்கிறார்) டேய்.. நீ? இன்னைக்கி பூத்த பூ? வேணான்டா, என் வாய கெளறாத. சொல்லிட்டேன்..

செந்: கெளற்னா என்னண்ணே.. ரெண்டு திட்டு திட்டுவீங்க.. திட்டிட்டுப் போங்க.. ஆனா அதுக்காக நான் சொன்னது இல்லேன்னு ஆயிருமாண்ணே.. நா பூ மாதிரிதாண்ணே..

க.மணி: (களைப்புடன்) சரிடா அப்படியே வச்சிக்க.. ஆளவிடு.. அடுத்த வீட்டுக்கு போறதுக்கு முன்னால ஒரு டீ அடிப்பம் வா. (சாலையோர கடையை நோக்கி நகர்கிறார். செந்தில் கையிலிருந்த புத்தகத்தை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு பின்னால் ஓடுகிறார். டீக்கடை எதிரில் கிடந்த ஒரே மர நாற்காலியில் கவுன்டர் அமர்ந்துக்கொள்ள செந்தில் வேறு வழியில்லாமல் நிற்கிறார்)

செந்: (சிரித்தவாறு) என்னண்ணே இவ்வளவு சீக்கிரம் சரண்டராயிட்டீங்க.. ரொம்பத்தான் டயர்டாய்ட்டீங்க போலருக்கு..(கடைக்காரரை பார்த்து) யோவ் டீ இருக்கா? அண்ணன் ரொம்ப களைச்சி போயிருக்கார்.

டீ: ஏய் எந்தா, கேலியோ.. இது டீக்கடையாக்கும்? ஒங்கண்ணன் மாத்திரமல்லா.. காசு கொடுத்தா ஏது பட்டி வந்தாலும் இவ்விட டீ உண்டு.. எத்தன டீ வேணும் அதச் சொல்லு.

(க.மணி கண்டுக்கொள்ளாமல் அமர்ந்திருக்கிறார்.)

செந்: (கோபத்துடன்) இந்த நாயர் சொன்னத கேட்டீங்களாண்ணே.. ஒங்கள நாய்ங்கறான்.. யோவ், என்ன கொழுப்பா? நம்ம அண்ணன் யார்னு தெரியல?

டீ: (ஏளனத்துடன் கவுன்டரைப் பார்க்கிறார்) யாரான ஈயாளு? வெல்லிய கலெக்டரோ.. எத்தன டீ வேணும்.. அதச் சொல்லு..

செந்: யோவ்.. என்ன ஓட்ட ரெக்கார்ட் மாதிரி சொன்னதையே சொல்லிக்கிட்டிருக்கே.. ரெண்டு பேருக்கு ரெண்டு டீன்னு கூட தெரியாம.. நீயெல்லாம் ஊர் விட்டு ஊர் வந்துட்டே.. திங்கறதுக்கு எதாச்சும் இருக்கா?

டீ: ஓ இருக்கே.. நேந்திரம்பழம் புழுங்கி வச்சிருக்கி..

செந்: என்னது புளுங்கி வச்சிருக்கியா? என்னய்யா சொல்றே.. அண்ணே நீங்க எழுந்து வாங்க.. வேற எங்கயாச்சும் போவோம். இவன் என்ன சொல்றான்னே புரியமாட்டேங்குது..

க.மணி:(அலுப்புடன்) டேய் சும்மார்றா நீ வேற.. சூடா எதையாச்சும் ஊத்துனாதான் எனக்கு உயிர் வரும்போலருக்கு.. அவன்கிட்ட என்ன இருக்கோ எடுத்து வுடச் சொல்லு..

செந்: என்னது எடுத்து உடறதா? என்னாச்சிண்ணே ஒங்களுக்கு.. நீங்களும் அவன் மாதிரியே பேசறீங்க.. யோவ்.. ஒங்கிட்ட இருக்கறதயெல்லாத்துலயும் ஓன்னு எடுத்து வுடுய்யா.. சீ.. நமக்கும் அதே பாஷையே வருது.. எடுத்து ப்ளேட்ல வச்சி குடுய்யா.. அப்படியே ரெண்டு மசாலா டீ போடு.. ஏலக்காய் இருந்தா அதயும் பொடி பண்ணி போடு.. குடிச்சிட்டு அண்ணன் தெம்பா இன்னும் பத்து வீட்டுப்படி ஏறி எறங்கணும்லே..

(நாயர் தனக்குள் முனுமுனுத்தவாறே இரண்டு கண்ணாடி தம்ளர்களில் டீ கலந்து அதனுடன் ஒரு அலுமினிய தட்டில் இரண்டு வேகவைத்த நேந்திரம் பழத்தையும் கடைப் பையனிடம் கொடுத்தனுப்புகிறார்.)

(க.மணி தலையைக் குனிந்தவாறே டீயை வாங்கி மடமடவென குடித்து முடிக்க செந்தில் அவரை முறைக்கிறார்)

செந்: என்னாச்சிண்ணே உங்களுக்கு? இதெல்லாம் டீயாண்ணே.. களுவி ஊத்துன தண்ணி மாதிரி இருக்கு.. இதப்போயி மூச்சு புடிச்சி குடிக்கறீங்க.. யோவ்.. இதென்னா டீயா இல்ல பாத்திரம் களுவுன தண்ணியா.. இந்தா நீயே குடி.. (தட்டைப் பார்க்கிறார்) இதென்னா கன்னங்கரேல்னு..இதான் நீ சொன்ன புளுங்குன பளமா.. பாக்கவே அசிங்கமாருக்கு.. இது குப்பையில போடத்தான் லாயக்கு (இரண்டையும் எடுத்து சாலையோரத்திலிருந்த குப்பை தொட்டியில் வீசுகிறார்).. வாங்கண்ணே நாம போவோம்.. இதுக்கெல்லாம் இவனுங்களுக்கு பைசா குடுத்தா நாமதான் முட்டாப்பயல்க.. டீ போடறானுங்களாம் டீ..

(நாயர் பாய்ந்து வந்து குறுக்கே நிக்கிறார்)

டீ: எடோ.. ஞான் விடில்லா.. பைசா தந்துட்டு பொக்கோ..

செந்: என்னது பொக்கையா.. யோவ் யார பார்த்து பொக்கைங்கறே.. நம்ம அண்ணன் ஒரு குத்து விட்டார்னா ஒனக்குத்தான் வாய் பொக்கையாயிரும்.. எடுய்யா கைய.. உப்புச் சப்பில்லாத டீயயும் ரெண்டு அளுகிப்போன பளத்தையும் கொண்டுக்கிட்டு வந்துட்டான். இதுக்கு காசு வேறயா.. வாங்கண்ணே போலாம்..

(க.மணி எழுந்து இயந்திரக்கதியில் செந்திலை பிந்தொடர்கிறார். இருவரும் சாலையைக் கடக்க நாயர் அவர்கள் பின்னால் ஓடுகிறார்.)

செந்: (எதிர் வீட்டையடைந்து திரும்பிப் பார்க்கிறார்) அண்ணே என்னாச்சின்னே.. அதான் டீய குடிச்சிட்டீங்கல்லே.. பெறவு எதுக்குண்ணே தலைய தொங்கப் போட்டுக்கிட்டு வரீங்க?

க.மணி: டேய் அந்த டீயிலதான் என்னமோ இருக்குடா.. குடிச்சதுலருந்து தள்ளாடுது.. உழறா மாதிரி இருக்குதுடா.. (அப்படியே சரிந்து அமர்கிறார். உடம்பெல்லாம் வியர்த்துவிடுகிறது. செந்தில் பதற்றத்துடன் சற்று தள்ளி நின்ற டீக்கடை நாயருடைய சட்டையைப் பிடித்து உலுக்குகிறார். அடுத்த வீட்டினுள்ளிலிருந்து ஒரு மலையாளப் பெண் ப்ளவுஸ் முண்டுடன் ஓடிவந்து பார்க்கிறார். கோவை சரளாவை நினைத்துக்கொள்ளுங்கள்.)

கோவை: (கண் இமைகள் இரண்டு படபடக்க) எந்தா.. எந்தாயி.. (நாயரைப் பார்த்து) எந்தாச்சோ?

நாயர்: (பதற்றத்துடன் தன் மகளை நெருங்கி) எடி.. ஒன்னெ யார் இங்க வரச் சொன்னது. இவர் ரெண்டு பேரும் சாயா கழிச்சிட்டு பைசா கொடுக்காண்டு எஸ்கேப் ஆயவரா.. ஞான் நோக்கிக்கொள்ளாம்.. தான் அகத்து பொக்கோ..

செந்: (எரிச்சலுடன்) யோவ் ஒனக்கு இந்த பொக்கைங்கற வார்த்தைய தவிர வேற ஒன்னுமே வாய்ல வராதா? இவரையும் பொக்கைன்னே சரி.. ஒத்துக்கறேன்.. வயசான ஆளு.. . அந்த பொண்ணு என்ன சின்னதா அளகாருக்கு, பச்சரிசி கணக்கா பல்லும் இருக்கு. அதப் போயி பொக்கைங்கறே?

தொடரும்..

18 comments:

SP.VR.சுப்பையா said...

சரளாவின் அப்பாவாக வரும் நாயர்ருக்கு யாரை நினைத்துக் கொள்ள வேண்டும்?
ஓமக்குச்சியையா?

வினையூக்கி said...

:-) :-)

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

அட! வாங்க சுப்பையா சார்,

சரளாவின் அப்பாவாக வரும் நாயர்ருக்கு யாரை நினைத்துக் கொள்ள வேண்டும்?
ஓமக்குச்சியையா? //

நாளைக்கு பாருங்களேன்.. நேர் மாறா இருக்கப்போவுது:)

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க வினையூக்கி,

என்ன சிரிப்பு வருதா? வந்தாச் சரி..

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

நாயர்ருக்கு யாரை ஓமக்குச்சியையா? //

ஓ! அவருக்கா.. வச்சிக்கலாம்.. ரொம்ப பொருத்தமாருக்கும்:)

நாகை சிவா said...

//அப்படியே இன்னைக்கி பூத்த பூ மாதிரி இருக்கேன்..//

இந்த குசும்பு தான் செந்திலின் ஹைலைட்டே.......

உண்மையில் ஒரு கவுண்டர் செந்தில் ஷோ பார்த்த மாதிரி இருக்கு.

நாகை சிவா said...

நாயருக்கு குமரிமுத்து கூட சூப்பரா இருக்கும்

நாகை சிவா said...

//"கவுன்டரும் செந்திலும் சென்சஸ் எடுத்தால்..." //

என்னாகும், கடைசியில் கவுண்டர் உதைப்பாரு, செந்தில் கவுண்டரை எவன்கிட்டவாச்சும் உதை வாங்க வைப்பார்.

Syam said...

சூப்பர் நக்கல்... :-)

உண்மை said...

//
சரளாவின் அப்பாவாக வரும் நாயர்ருக்கு யாரை நினைத்துக் கொள்ள வேண்டும்?
ஓமக்குச்சியையா?
//

வெ. ஆ. மூர்த்தி :)

தேவ் | Dev said...

நாயர் ரோலுக்கு நம்ம முதல்வன்ல்ல ரகுவரன் அசிஸ்டெண்ட்டா வருவாரே கொச்சின் ஹ்னீபா அவர் கூட கரிக்கெட்டா இருப்பார்..

தேவ் | Dev said...

நாயர் ரோலுக்கு நம்ம முதல்வன்ல்ல ரகுவரன் அசிஸ்டெண்ட்டா வருவாரே கொச்சின் ஹ்னீபா அவர் கூட கரிக்கெட்டா இருப்பார்..

tbr.joseph said...

வாங்க சிவா,

உண்மையில் ஒரு கவுண்டர் செந்தில் ஷோ பார்த்த மாதிரி இருக்கு. //

இருந்தா சரிதான்:)

tbr.joseph said...

மீண்டும் வாங்க சிவா,

நாயருக்கு குமரிமுத்து கூட சூப்பரா இருக்கும் //

சூப்பராத்தான் இருக்கும்:)

tbr.joseph said...

என்னாகும், கடைசியில் கவுண்டர் உதைப்பாரு, செந்தில் கவுண்டரை எவன்கிட்டவாச்சும் உதை வாங்க வைப்பார். //

உண்மைதான்.. ஆனா இதுல கொஞ்சம் வித்தியாசமா..

என்னடாயிது.. எல்லா சினிமா டைரக்டர்களும் சொல்ற டயலாக்தானேன்னு பாக்கறீங்களா.

ரொம்ப நாளா கோடம்பாக்கத்துலதான குடியிருந்தேன்.. அந்த வாசம் லேசா அடிக்கத்தான் செய்யும்..

tbr.joseph said...

சூப்பர் நக்கல்... :-)

நன்றி ஷ்யாம்.. தொடர்ந்து படிங்க..

tbr.joseph said...

வாங்க உண்மை,

வெ. ஆ. மூர்த்தி :) //

அட! இதுவும் நல்லாதான் இருக்கு..

tbr.joseph said...

வாங்க தேவ்,

நாயர் ரோலுக்கு நம்ம முதல்வன்ல்ல ரகுவரன் அசிஸ்டெண்ட்டா வருவாரே கொச்சின் ஹ்னீபா அவர் கூட கரிக்கெட்டா இருப்பார்.. //

அடடடா.. எத்தன செலக்ஷன் பாருங்க.. கரிக்கட்டாத்தான் இருப்பார்.. அந்த முளியே போறும்..