Tuesday, February 13, 2007

அந்தக் காலத்து காதல் 4

ஆ.இ. பொண்ணுங்க பொதுவாவே நடுத்தரத்துக்கும் கொஞ்சம் கீழ இருக்கற குடும்பத்துலருந்து வர்றவங்க. குடும்பத்தலைவர்கள் பெரும்பாலும் சதர்ன் ரயில்வேல டிரைவரா இல்ல ஃபயர்மேனா இருக்கறவங்க. சம்பளம் பெருசா இருக்காதுங்கறதோட இவங்கள்ல பெரும்பாலானவங்க மடா குடியர்களா இருப்பாங்க. ஆண்கள் மட்டுமில்ல.. இல்லத்தரசிகளுந்தான்.

இவங்களுக்குன்னே பெரம்பூர்ல ஒரு ரயில்வே காலனியும் இருக்கு. வாடகை ரொம்பவும் சொற்பம். அதனால வாங்கற சம்பளம் முழுசும் உண்டு, குடிச்சி.. மீதி இருக்கறத உடுப்புக்கும், செருப்புக்கும் செலவு பண்ற வர்க்கம்.

வாரக் கடைசியானா ஒவ்வொரு சனிக்கிழமையும் காலனிக்குள்ளேயே இருக்கற டான்ஸ் ஹால்ல நடுராத்திரிவரைக்கு டான்ஸ் பார்ட்டி நடக்கும்.

இதுக்கெல்லாம் செலவழிக்க வாங்கற சம்பளம் பத்தாதுல்லே.. அதுக்காகவே இந்த இளம் மிஸ்சிக நம்ம தோஸ்த் மாதிரி இளவட்டங்கள 'கணக்கு' பண்ணி வச்சிக்குவாங்க.

அந்த ஏரியாவுலயே பத்து வருசத்துக்கு மேல குடியிருந்தவனாச்சே.. அத்தோட இவங்க போற சர்ச்சுக்குத்தான நானும் போய்கிட்டிருந்தேன். அதனால அவங்க பழக்கவழக்கம், நோக்கம் எல்லாம் நமக்கு அத்துப்படி.. நம்ம கிட்டருந்து காச புடுங்கறதுதான் இந்த மிஸ்சிங்க வேலைங்கறது நமக்கு நல்லாவே தெரியும். அதனால ஹை ஜோசஃப்.. ஹவ் ஆர் யூன்னு இளிச்சா.. சீரியசா மூஞ்ச வச்சிக்கிட்டு.. ஃபைன் தாங்யூன்னு சொல்லிட்டு போய்கிட்டே இருப்பேன். நா மட்டுமில்ல என்கூட சர்ச்சுக்கு வர்ற பசங்க எல்லாருமேதான்..

ஆனா நம்ம தோஸ்த் ஒரு இந்து. அது மட்டுமில்லாம அவர் குடியிருந்த பகுதியும் பெரம்பூர் இல்ல.. ஸ்டேஷன்லருந்து பத்து பதினஞ்சு நிமிசம் பஸ்ல போற தூரம். இப்ப அதுவும் சென்னையோட ஒரு பகுதியாயிருச்சி. அதனால இவங்களப் பத்தி அவருக்கு அதிகமா தெரிய வாய்ப்பில்லை.

அதனால அவங்க ரெண்டு பேரையும் ஸ்டேஷன்ல வச்சி பார்த்ததும் அடப்பாவி இவனும் மாட்டிக்கிட்டானான்னுதான் தோனிச்சி. ஆனா கண்டுக்காம நா பாட்டுக்கு போயி நின்னுக்கிட்டிருந்த வண்டியில வழக்கமா ஏர்ற கோச்சுல ஏறி ஒக்காந்துக்கிட்டேன். வண்டி புறப்பட்டதுக்கப்புறமும் அந்த ஜோடி ஏறவே இல்லை. சரி அடுத்த நாள் பாத்துக்கலாம்னு அத்தோட அந்த விஷயத்த மறந்துட்டு கைலருந்த புஸ்தகத்துல காலையில விட்ட எடத்துலருந்து படிக்க ஆரம்பிச்சிட்டேன்..

அடுத்த நாள்..

நான் ஸ்டேஷனுக்குள்ள நுழைஞ்சதுமே கண்ணுல பட்டது அந்த ஜோடிதான். சிமெண்ட் பெஞ்சில ஒக்காந்துக்கிட்டு அக்கம்பக்கத்து ஆளுங்கள மறந்துபோயி.. கட்டிப்பிடிக்காத குறைதான்.. ஆனா இந்த மாதிரி சீன்ஸ் எல்லாம் அந்த ஏரியாவுல சகஜங்கறதுனால அத யாரும் பெரிசா கண்டுக்கறதில்ல.

நம்ம கேங்கும் கொஞ்சம் தூரத்துல நின்னு இந்த ஜோடிய பாத்துக்கிட்டு நிக்கறத பார்த்தேன். 'டேய்.. என்னடா பாத்துக்கிட்டு நிக்கறீங்க. இவனுக்கு லவ் பண்றதுக்கு ஆளா கெடக்கலே.. போயும் போயும் இத போய் புடிச்சிருக்கான். இவளுங்க வாரம் ஒரு டான்ஸ் பார்ட்னர மாத்தறவளுங்களாச்சேடா.' என்றேன் கேங்கை நெருங்கியதும்.

யாரும் கண்டுக்கொள்ளவில்லை.. அவர்களுடைய பார்வை முழுவதும் மிஸ்சியின் ஏறி நின்ற கவுன் விளிம்பிலேயே இருந்ததை கவனித்த நான் டேய் நீங்க தேறாத கேசுங்கடா என்றவாறு ஒதுங்கி நின்றேன்..

இப்படியாக நம்ம தோஸ்த்தோட காதல் தொடர்ந்தது..

அடுத்த ரெண்டு மூனு வாரங்கள்ல அடிக்கடி நம்ம தோஸ்த்து காணாம போனான். அந்த மிஸ்சியிந்தான். 'என்னங்கடா ரெண்டு பேரும் சேந்தாப்பல அம்போலாயிர்றாங்க.. ஏதாச்சும் சில்மிஷம் பண்றானா நம்ம ஆளு?' என்றேன் நம் கேங்க் ஆசாமிகளுடன். ஆளுக்காள் கண்ணடிச்சிக்கிட்டான்களே தவிர ஒருத்தனும் வாய தொறந்து சொல்ல மாட்டேங்குறான்.' அதுல ஒருத்தன் ரெண்டு பேர் மட்டும் பெருமூச்சுடன் 'அவன் பயங்கரமான ஆள் ஜோசப். அந்த மிஸ்சிய எங்கயோ தள்ளிக்கிட்டு போறான் போலருக்கு. கேட்டா ஒன்னுமில்லடா ஜாலியா மகாபலிபுரம் வரைக்குங்கறான். என்ன நடக்குதோ தெரியல. எங்கயாவது எசக்கு பிசக்கா மாட்டிக்குவானோன்னு வேற பயமாருக்கு.' என்றபோது எனக்கு அப்படித்தான் தோன்றியது.

இத்தகைய கேஷுவல் நட்புகள் ஆ.இ. பெண்களுக்கு சகஜம்தான் என்றாலும் சாதாரணமாக அவர்கள் வெளியாட்களுடன் இத்தனை நெருங்கிய நட்பு வைத்துக்கொள்ள மாட்டார்கள். அப்படியே ஏதாவது ஒரு பெண் செய்தால் அந்த வகுப்பைச் சார்ந்த ரோமியோக்கள் நம்முடைய ஆட்களின் முதுகில் 'டின்' கட்டிவிடுவார்கள். நம் வகுப்பைச் சார்ந்தா பெண்கள் நமக்குத்தான் சொந்தம் என்பது அவர்களுடைய எண்ணமோ என்னவோ..

அப்படித்தான் முடிந்தது நம்ம தோஸ்த்தோட அஃபேரும்!

நாளை நிறைவு பெறும்..

4 comments:

இலவசக்கொத்தனார் said...

உங்க 'ப்ரெண்டு' நல்லா மாட்டிக்கிட்டாரா டிபிஆர்? அடி பலமோ? உங்களுக்கு நல்ல வலியா? அப்புறம் என்ன செஞ்சீங்க? வீட்டம்மா கிட்ட இந்த கதை எல்லாம் சொல்லியாச்சா? :))

tbr.joseph said...

வாங்க கொத்தனார்,

உங்க 'ப்ரெண்டு' நல்லா மாட்டிக்கிட்டாரா டிபிஆர்? அடி பலமோ? உங்களுக்கு நல்ல வலியா? அப்புறம் என்ன செஞ்சீங்க? //

அடடா? எத்தன கேள்விகள். எல்லா கேள்விகளுக்கும் விடை நாளை!

வீட்டம்மா கிட்ட இந்த கதை எல்லாம் சொல்லியாச்சா?//

என்னெ மாட்டிவிடறதுலயே குறியாயிருக்கீங்க போலருக்கு:)

தேவ் | Dev said...

ஜோசப் சார் ஆகக் கூடி காதலுக்கு அந்தக் காலல் இந்தக் காலம் எல்லாக் காலம் ரவுண்ட் கட்டி டின் கட்டிருக்காங்க...:(

tbr.joseph said...

வாங்க தேவ்,

ஆகக் கூடி காதலுக்கு அந்தக் காலம் இந்தக் காலம் எல்லாக் காலம் ரவுண்ட் கட்டி டின் கட்டிருக்காங்க...//

பின்னே சும்மாவா.. எல்லாக் காலத்துலயும் எல்லாப் பசங்களும் காதல் பண்ணுவாங்க.. அத அவங்க அப்பங்க எதிர்ப்பாங்க.. அண்ணன்க அவன்க ஃப்ரெண்ட்சோட சேர்ந்துக்கிட்டு பசங்க முதுகுல டின் கட்டிருவாங்க.. இது எல்லா காலத்துலயும் நடந்துக்கிட்டுத்தான் இருக்கும்.. காதலுக்கு மரியாதை படம் பார்த்தீங்கள்லே.. அதுமாதிரி..

அதனால பசங்களா காதல் பண்ணாதீங்க.. ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்குங்க.. அப்புறம் யார வேணும்னாலும் காதலிங்க.. மனைவிங்கல்லாம் அப்பாவிங்க.. ஒன்னும் பண்ண மாட்டாங்க. இது ஒரு அனுபவஸ்தனோட அட்வைஸ்:)