எதுக்கு?
அவருக்கு புடிச்ச மிஸ்சி எந்த கம்பார்ட்மெண்டுல ஏறுறாங்கன்னு தெரிஞ்சிக்கறதுக்குத்தான்.
சாதாரணமா ஆங்கிலோ இந்திய பெண்கள் பெண்கள் பெட்டியில் ஏறுவதில் குறியாயிருக்க மாட்டாங்க. அது நம்முடைய தமிழ் பெண்கள்தான். இவர்களுக்கு (ஆ.இ.பெண்கள்) அலுங்காமல் குலுங்காமல் போய் சேரவேண்டும். அதுதான் முக்கியம். ஆண்கள் பெட்டியில் ஆண்களுக்கு இடையில் அமர்ந்து செல்வதிலும் அவர்கள் தயங்கமாட்டாங்க.
இவங்களுக்குன்னு சீட் பிடித்துக் குடுக்கவும் சில ஜொள்ளர்கள் ஆவலுடன் இருப்பார்கள். அதுல பெரும்பாலும் நாற்பது, நாற்பத்தைந்து வயதைக் கடந்தவங்களாத்தான் இருப்பாங்க. அப்ப என்ன இப்பவும் அப்படித்தான்னு வச்சுக்குங்களேன். மிஸ்சிங்க கால் மேல கால் போட்டுக்கிட்டு ஸ்டைலா பார்பரா கார்ட்லாண்ட் புஸ்தகத்த பிரிச்சிக்கிட்டு அதுலயே லயிச்சிருவாங்க.. அதாவது ஏற்கனவே முட்டிக்கி மேல நிக்கற கவுன் இன்னும் கொஞ்சம் மேல ஏறி நிக்கறது தெரியாம. நம்ம ஜொள்ளர்களுக்கு அத பாத்து ரசிக்கறதுல ஒரு அல்ப சந்தோஷம்.
அந்த மிஸ் எந்த கம்பார்ட்மெண்டுல ஏறுனதும் பார்த்துட்டு அதுல ஓடிப்போய் ஏறிக்குவாரு நம்ம தோஸ்த். ஆனா அவர் சாதாரண ஜொள்ளர் மாதிரியில்ல.. அந்த மிஸ்சி மேல அப்படியொரு காதல்.. கண்டதும் காதல்னெல்லாம் இல்ல.. கொஞ்ச நாளாவே நோட் பண்ணிக்கிட்டே இருந்துட்டு தன்னையும் மறந்து விழுந்துட்டார்! காதல்லதாங்க.
நம்ம கேங்க் ஆசாமிகளுக்கு வண்டி ஸ்டேஷனுக்குள்ள நொழயறப்பவே ஏறி சீட் புடிக்கறது அத்துப்படி. ஒரு வருசமா ரெண்டு வருசமா? எத்தன வருச பழக்கம்? அரைமணி நேர பயணந்தானே நின்னா என்னன்னு கேக்காதீங்க. ஒக்காந்தாத்தானே சீட்டுக் க்ளப்ப ஸ்டார்ட் பண்ண முடியும்? ஒக்காந்தா போறாது.. கேங் முழுசுக்கும் ஒரே இடத்துல கிடைக்கணும். அதான் முக்கியம்... அப்படி ஒன்னு ரெண்டு மாறிப் போய்ட்டாலும் பரஸ்பரம் சீட் எக்ஸ்சேஞ்ச் பண்ணிக்குவாங்க..
நம்ம தோஸ்த்தும் கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் சீட்டு பைத்தியந்தான். அதாவது அந்த மிஸ்சி மேல கண்ணு போடற வரைக்கும்.
பசி வந்தா பத்தும் பறந்து போகுங்கறா மாதிரிதான் காதல் வந்தாலும்..
எனக்கும் சீட்டாட்டத்துக்கும் ரொம்ப தூரம். நம்ம ஹாபி கத படிக்கறதுதான். அப்பல்லாம் இந்த லெண்டிங் லைப்ரரி கான்செப்ட் அவ்வளவா பிரபலம் இல்லை. ஆனா கார்ப்பரேஷன் லைப்ரரியிலருந்து புத்தகம் கிடைக்கும். வண்டியில ஏறி ஒக்காந்து புத்தகத்த தொறந்தா அடுத்த சீட்லருக்கறவன் செத்து விழுந்தாக்கூட தெரியாது. வண்டி கடைசி ஸ்டேஷன்ல நின்னதும் நம்ம கேங் ஆசாமிங்க.. டேய் ஜோசப் செண்ட்ரல் வந்தாச்சுன்னு சொன்னா டேய் நீங்க போங்க இந்த பக்கத்த முடிச்சிட்டு வரேங்கற ரகம். அதுவும் ஜெயகாந்தன் கதைன்னா உசிரு..
அதனால நம்ம தோஸ்த் இந்த மிஸ் இருக்கற பெட்டிய பாத்து ஏறுறது கூட ரொம்ப நாளா எனக்கு தெரியாமயே இருந்திச்சி. அப்படியே கவனிச்சி நம்ம பசங்கக் கிட்ட கேட்டாலும் அவனவன் நக்கலா சிரிப்பானுங்களே தவிர சொல்லமாட்டான்க.
ஆக நம்ம தோஸ்த்தோட காதல் விஷயம் தெரியாமயே இருந்துது கொஞ்ச நாளா..
காலையில போறப்பத்தான் நம்ம கேங் மெம்பர்ஸ் ஒரே ரயில்ல போவோம். திரும்பி வர்றப்போ நா சீக்கிரமே திரும்பிருவேன். ஆஃபீஸ் அஞ்சரைக்கு முடிஞ்சிரும். ஆறு மணி வண்டிய புடிக்கறதுக்காக ஒரே ஓட்டம்தான் ஸ்டேஷனுக்கு.. அந்த வண்டியிலதான் ஈசியா சீட் கிடைக்குங்கறதும் ஒரு காரணம். ரயில்வே அலுவலர்கள தவிர வேறு யாரும் இருக்க மாட்டாங்க. நம்ம தோஸ்த்தோட ஜோடியும் இருக்கும். ஆனா நம்ம தோஸ்த்தோட கடை மூடறதுக்கே ராத்திரி ஒன்பது மணி ஆயிருமே.. நம்ம கேங்ல இருந்த நிறைய பேரும் நம்ம தோஸ்த் மாதிரிதான்.
ஆனா ஒரு நா ஸ்டேஷனுக்கு போய் சேர்ந்த நேரத்துல நம்ம தோஸ்த்தும் அந்த மிஸ்சியும் ஜாலியா அரட்டையடிச்சிக்கிட்டு நிக்கறத பார்த்தேன். ஆனா பெரிசா எடுத்துக்கலை.. ஏன்னா இந்த ஆ.இ. பெண்கள் சாதாரணமாவே ரொம்ப ஜாலி டைப்தான்.. எல்லார்கிட்டயும் சிரிச்சி பேசுவாங்க. அதுல சிலபேர் நா போய்கிட்டிருந்த சர்ச்சுக்குத்தான் வருவாங்கறதுனால நம்மள பாத்ததும் ஒரு ஃப்ரெண்ட்லி புன்னகைய வீசுவாங்க. நாமளும் பதிலுக்கு ஒன்னெ வீசிட்டு போய்க்கிட்டே இருந்தா பொழச்சோம்.. இல்லன்னா என்னாவும்?
நாளைக்கு சொல்றேன்..
15 comments:
ம்ம் ஆகா அப்புறம் என்னங்க ஆச்சு.. கதைய முக்கியமான இடத்துல்லக் கொண்டு நிக்க வச்சுட்டுப் போயிட்டீங்களே... சரி திங்ககிழ்மை அடுத்தப் பகுதியைப் பாப்போம்... ஆனா ஒண்ணு வாழ்ந்திருக்கீங்கய்யா நீங்களூம் ஓங்க கேங்கும்.... ம்ம்ம்
வாங்க தேவ்..
முதலும் கடைசியும் நீங்கதான் போல. நன்றி..
வாழ்ந்திருக்கீங்கய்யா நீங்களூம் ஓங்க கேங்கும்.... ம்ம்ம் //
அது ஒரு காலம்.. ஹூம்..
நானும் பின்னூட்டம் போடறதுக்குன்னே ஒரு அஞ்சாறு கூகுள் ஐடிங்கள க்ரியேட் பண்ணிக்கலாமான்னு பாக்கேன்..
யாராவது லக்கி லுக்கானாலும் பரவால்லை.. ஒரு ஐடியா குடுங்களேன்.. எப்படி மாட்டிக்காம இருக்கறதுன்னு:)
ஆஹா சூப்பர் சார்,
:)))))
இந்தக் கதையப் படிக்கும் போது எனக்கு ஒரு நிகழ்ச்சி நெனவுக்கு வருது சார். முந்தி தூத்துடி மதுரை அகல ரயில்பாதை போடுறதுக்கு முன்னாடி பெங்களூருக்கு லீவுக்கு வரனும்னா....தூத்துடில ரயிலேறி மதுரை வந்து மாறனும். மீனாட்சி எக்ஸ்பிரஸ்னு பேரு.
ஒரு வாட்டி அதுல ரொம்பக் கூட்டம். நின்னுக்கிட்டு போறோம். பொதுக்கம்பார்ட்மெண்டு. சாத்தூர்ல யாரோ ஒரு அம்மா எறங்குனாங்க. அது பெரிய சீட்டு. அதுல பாதைய ஒட்டுன சீட்டு. படக்குன்னு அதுல உக்காந்தேன். அப்பப்பா! எனக்குப் பக்கத்துல உக்காந்திருந்த ஒரு அம்மாவும் அந்தப் பக்கம் இருந்த அவரு வீட்டுக்காரரும் சண்டைக்கு வந்துட்டாங்க. எப்பிடி ஒரு பொம்பள பக்கத்துல உக்காரலாம்னு. எனக்குக் கோவம்னா கோவம். வர்ரது பொதுக்கம்பார்ட்டுமெண்டு. "ஏன்? ஒங்க அண்ணந் தம்பிங்கள்ளாம் ஒங்க பக்கத்துல உக்கார மாட்டாங்களா? அப்படி ஆம்பளைங்க பக்கத்துல உக்காரக் கூடாதுன்னா லேடீஸ் கம்பார்ட்மெண்ட்டுக்குப் போங்கன்னு" கத்தீட்டு நல்லா உக்காந்துக்கிட்டேன். அப்புறமும் அவங்க குடும்பத்துல அப்படி இப்பிடி மாறி உக்காந்து அந்த ஐயா என்னோட பக்கத்துல உக்காந்தாரு. என்ன மனுசங்கடா சாமீன்னு நெனச்சுக்கிட்டேன்.
//அதுல சிலபேர் நா போய்கிட்டிருந்த சர்ச்சுக்குத்தான் வருவாங்கறதுனால நம்மள பாத்ததும் ஒரு ஃப்ரெண்ட்லி புன்னகைய வீசுவாங்க. நாமளும் பதிலுக்கு ஒன்னெ வீசிட்டு போய்க்கிட்டே இருந்தா பொழச்சோம்.. இல்லன்னா என்னாவும்?//
த்ரில்லிங்கான எடத்துல கொண்டாந்து நிறுத்திட்டீங்க...ஹ்ம்ம்ம்...அப்புறம் சார்?
:)
வாங்க இராம்..
ஆஹா சூப்பர் சார்//
எது? பதிவுதானே..
அப்ப சரி.. தாங்ஸ்:)
வாங்க ராகவன்,
என்ன மனுசங்கடா சாமீன்னு நெனச்சுக்கிட்டேன்.//
இத ஏன் சொல்றீங்க? சர்ச்லயே இத பாப்பாங்க சில பெண்கள்..
மனசுல சுத்தமிருந்தா எங்க வேணும்னாலும் யார் பக்கத்துல வேணும்னாலும் ஒக்காரலாம்..
வாங்க கைப்புள்ள,
த்ரில்லிங்கான எடத்துல கொண்டாந்து நிறுத்திட்டீங்க...ஹ்ம்ம்ம்...//
ஆஹா நல்லாத்தான் கதைய கேக்கீங்க.. ஒங்களுக்காகவே இன்னும் கொஞ்சம் இழுக்கலாம் போலருக்கு:)
இனி மண்டேதான்..
வாவ்வ்வ்வ்வ்வ்..... ஜோசப் சார் 'கவுன்'னு கதைய சொல்லி கவுத்துட்டீங்களே சார்ர்ர்ர்ர்!!!! :)))))) ஒரு ஜொள்ளுமேளாவே நடந்திருக்கும் போல இருக்கே !!
ஜோசப் சார் அப்படியே அந்த கரி இஞ்சின் காலத்தை கண்ணு முன்னாடி கொண்டாந்து நிறுத்தீட்டீங்க !! ரொம்ம நல்லா போகுது சார் தொடருங்க !!
ஜோசப் சார்,
என்ன ஜொள்ளு கதையா! நல்லாத் தான் இருக்கு .தொடருங்கள்!
என்ன சார் வீட்டுல இப்போ எல்லாம் நீங்க எழுதறதை எல்லாம் படிக்கறாங்களா? அநியாயத்துக்கு நல்ல பிள்ளையா பிட்ட போடறீங்க?! :))
வாங்க ஜொ.பாண்டி,
ஒரு ஜொள்ளுமேளாவே நடந்திருக்கும் போல இருக்கே !! //
பின்னே.. நீங்க இப்ப வுடற ஜொள்ளெல்லாம் ஜொள்ளே இல்லேங்கற ரேஞ்சுக்கு இருந்தது..
வாங்க ஜோசஃப்,
அட நீங்கக்கூட இங்கல்லாம் வர்றதுண்டா.. பரவால்லையே:)
ச்சும்மா ஜோக்..
வாங்க இ.கொத்தனார்,
என்ன சார் வீட்டுல இப்போ எல்லாம் நீங்க எழுதறதை எல்லாம் படிக்கறாங்களா? அநியாயத்துக்கு நல்ல பிள்ளையா பிட்ட போடறீங்க?! :)) //
படிக்கிறதாருந்தா இப்படி தொடர்ந்து போட முடியுமா? அதுவும் நம்ம சின்ன பொன்னு பாக்காம இருக்கணும்..
அவளுக்கு என்னோட மத்த ரெண்டு பளாக் அட்றஸ்தான் தெரியும்:)
இப்ப தெரியுதா நம்ம ரெகுலர் தி.பாவ ஏன் நிறுத்தியிருக்கேன்னு? இப்படியும் எழுதி அப்படியும் எழுத மனசாட்சி தடுக்குது:(
Post a Comment