Tuesday, September 16, 2008

ஜிங்சக்... ஜிங்சக்... ஜிங்சக்...!!!

அலுவலகத்தில் ஜால்ரா
அடிப்பவர்களைப் பார்த்தால்

சில சமயங்களில்
சிரிப்பாக இருக்கிறது

பல சமயங்களில்
பயங்கர கோபமாய் வருகிறது

என் மேல் எனக்கே
ஏகப்பட்ட வெறுப்பாய் இருக்கிறது

என்ன காரணமாக இருக்கும்
என்று நினைத்துப் பார்க்கிறேன்

ஒரு வாரமாக தினமும்
ஒரு கடைவிடாமல் தேடியும்

ஜிங்சக் போட
ஜால்ரா கிடைக்கவில்லை

பல கடைகளில் சொல்கிறார்கள்
பயங்கர டிமாண்டாம்

அட்வான்ஸ் புக்கிங் செய்து
அள்ளிப் போகிறார்களாம்

இனியும் தாமதிக்க வேண்டாமென்று
இணையத்தில் தேடினேன்

ஈபேயில் வாங்கியது கைக்கு வந்து சேரும்வரை
ஈஈயென இளிக்கவேண்டும் வாய் காதுக்கு வரும்வரை...

11 comments:

வெண்பூ said...

பக்கத்து டெஸ்க்ல இருக்குறவங்க என்னை ஒரு மாதிரி பாக்குறாங்க: இவன் எதுக்கு இப்படி மண்டைய பிச்சிக்கிறான்னு.. :))))))

rapp said...

:):):)

VIKNESHWARAN ADAKKALAM said...

பிரியல....... இன்னா இது...

சின்னப் பையன் said...

இந்த கவிதையின் மூலமாக நான் சொல்ல வந்த கருத்து (!!!):

அலுவலகத்தில் ஜால்ரா போடாமல் (மேலதிகாரியை காக்காய் பிடிக்காமல்) இருக்கும் ஒருவன், வேறு வழியின்றி அதை வாங்குகிறான். இனிமேல் அவனும் ஜால்ரா மன்னன் - அவ்ளோதான்....

Kanchana Radhakrishnan said...

அவன் ஜால்ரா வாங்கி என்னபயன்..அதைப் போட தெரிஞ்சிருக்கணுமே..
:-))))))

விஜய் ஆனந்த் said...

;-)))...

ஆபிஸ்ல ஆணிகள அளவுக்கதிகமா கொடுத்து புடுங்கச்சொல்றாரோ பாஸூ???

Raghav said...

//வெண்பூ said...
பக்கத்து டெஸ்க்ல இருக்குறவங்க என்னை ஒரு மாதிரி பாக்குறாங்க: இவன் எதுக்கு இப்படி மண்டைய பிச்சிக்கிறான்னு.. :))))))
//

வெண்பூ, ஒரு மாதிரி பாக்குறாங்களா இல்லை, எதுக்கு மண்டைய பிச்சிக்கிறான்னு அவங்க மண்டைய பிச்சிக்கிறாங்களா ?

சின்னப் பையன் said...

வாங்க வெண்பூ -> என்ன, மண்டைய பிச்சிக்கிறீங்களா - வழுக்கி வழுக்கி விடுமே?... எப்படி சமாளிக்கிறீங்க....:-)))))

வாங்க ராப் -> சிரித்து வாழ வேண்டும்னு உங்ககிட்டே யாராவது சொன்னாங்களா?

வாங்க விக்னேஸ்வரன் -> சரம் தொடுக்க போனதிலேர்ந்து உங்களுக்கு எதுவுமே புரியறதில்லை. ஒரு விளக்கம் போட்டிருக்கேன் பாருங்க.... :-))

சின்னப் பையன் said...

வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா -> அதுக்கு எங்கேயாவது க்ராஷ் கோர்ஸ் இருந்தா படிக்கலாம்... தெரிஞ்சா சொல்லுங்க... :-)))

வாங்க விஜய் -> நீங்க ஒருத்தர்தான் கரெக்டா சொல்லியிருக்கீங்க.... முடியல....அவ்வ்வ்...

வாங்க ராகவ் -> நீங்க ஏங்க பிச்சிக்கிற மாதிரி பின் போடறீங்க?.....:-)))

வால்பையன் said...

கவிதை சூப்பர்!

ரொம்ப அருமையா வந்துருக்கு

விகடனுக்கு ட்ரை பண்ணலாம்

எழுத்தாளுமை தெரிகிறது.

கவிதைக்கே இது தான் உதாரணம்

(ஜால்ரா போதுமா)

சின்னப் பையன் said...

வாங்க வால் -> ச்சே.... கடைசி வரியை படிக்கறவரைக்கும் சிரிச்சிக்கிட்டிருந்தேன்.... இப்படி பண்ணிட்டீங்களே.....