Tuesday, September 9, 2008

தமிழகத்தில் ஒலிம்பிக்ஸ்: திரைக்கலைஞர்களின் கருத்துக்கள்!!!

உலக ஒலிம்பிக் சங்கத்தினர் அடுத்த ஒலிம்பிக்ஸை தமிழகத்தில் நடத்தலாம்னு முடிவு பண்ணிட்டாங்க. அதுக்காக கருத்துக்களைக் கேட்கறதுன்னு தமிழ் நாட்டுக்கு வர்றாங்க. இங்கத்திய மக்களுக்கு உடல், பொருள், ஆவி ஆகிய எல்லாமே திரைப்படக் கலைஞர்கள்தான் அப்படின்னு தெரிஞ்சிக்கிட்டு பல திரைப்படக் கலைஞர்களைப் பார்த்து பேசறாங்க. அந்த சமயத்திலே நம்ம கலைஞர்கள் சொன்ன கருத்துக்களைத்தான் நீங்க இப்போ பாக்கப் போறீங்க.


டாக்டர் விஜய்:

நமக்குன்னு சொந்தமால்லாம் ஒண்ணும் கருத்து இல்லீங்ணா. கொஞ்ச நாள் டைம் கொடுத்தீங்கன்னா, பக்கத்து நாட்லேல்லாம் எப்படி கருத்து சொல்லியிருக்காங்கன்னு பாத்துட்டு, அதை அப்படியே மொழி பெயர்த்து, என்னங்ணா, உல்டாவா... இல்லீங்ணோவ்... மொழி பெயர்த்து சொல்றேன். இதுக்கு மேலே ஏதாவது பேசணும்னா எங்கப்பாவை பார்த்து பேசுங்ணாவ்....

கமல்ஹாசன்:

எல்லா ஓட்டப்பந்தயத்திலேயும், எல்லா பதக்கங்களும் நம்ம பாரதத்துக்கே, பாரத மக்களுக்கே கிடைக்கறதுக்கு என்கிட்டே ஒரு நல்ல யோசனை இருக்கு. நானே பல நாட்டு வீரர்களைப் போல ஒப்பனை செய்துகொண்டு ஓடறேன். எல்லா கமலும் ஒரே சமயத்திலே ஒடக்கூட இப்பல்லாம் முடியும். க்ராஃபிக்ஸ் அந்தளவுக்கு வளர்ந்துடுச்சு. பரிசு வாங்கினப்பிறகு வேஷத்தை கலைச்சிட்டு எல்லாமே நாந்தான் அப்படின்னுட்டா, எல்லா பதக்கமும் நமக்கே!!!

பி.வாசு:

கேரளாலே படகுப்போட்டி சூப்பரா இருக்கும். அதை அப்படியே இங்கே கொண்டு வர்றோம். அஃப்கோர்ஸ், நம்ம தமிழக மக்களுக்காக அங்கங்கே மாற்றம் செய்றோம். அதாவது அந்தப்போட்டி தண்ணியிலேயில்லாமே, படகுகளுக்கெல்லாம் சக்கரம் மாட்டி பீச் ரோட்லே போட்டி வெக்கறோம். அருமையா இருக்கும். மக்கள் இப்போல்லாம் இதைத்தான் ரசிக்கறாங்க.

ஏ.ஆர்.ரகுமான்:

ஓட்டப்பந்தயப் போட்டிக்கு எல்லாரும் ஒரே இடத்துக்கு வந்து ஓடணும்றது இல்லே. அவங்கவங்க இடத்திலே ஓடிட்டு எனக்கு கேஸட் அனுப்பிடச் சொல்லுங்க. நான் எல்லாத்தையும் சேர்த்து ஒரே ட்ராக்லே போட்டுப் பாத்துக்கறேன். ஆனா, ஒரு விஷயம். போட்டி எப்போ நடந்தாலும் பரவாயில்லை. நான் முடிவுகளை ராத்திரி மட்டும்தான் அறிவிப்பேன்.

விவேக்:

ஓட்டப்பந்தயத்திலே பாத்தீங்கன்னா எல்லாம் அவங்கவங்க ட்ராக்லே சீரியஸா ஓடிக்கிட்டே இருக்காங்க. அவங்களுக்குப் பக்கத்திலே ஒரு காமெடி ட்ராக் போடுங்க. என்கிட்டே நிறைய ஐடியா இருக்கு. அந்த பந்தயத்துக்கு சம்மந்தமேயில்லேன்னாகூட, அந்த காமெடி ட்ராக்கை சேத்துக்கலாம். அப்படி சேர்த்தா, அந்த போட்டியும் சூப்பர் ஹிட்டாயிடும்.

கவிஞர் வைரமுத்து:

இதோ பாருங்கள், என்னிடத்தில் நிறைய யோசனைகள் இருக்கின்றன. ஆனால், நான் எதை கூறினாலும், வீட்டிலே... அதாவது... மண்டபத்துலே யாரோ எழுதிக்கொடுத்து - நான் அதை உங்களுக்கு கொடுத்ததாகப் ஊரார் பேசுவார்கள். இருந்தாலும் பரவாயில்லையென்று அவர்களை புறந்தள்ளி விடலாம். நீங்கள் எதற்கும் இரண்டு நாட்கள் கழித்து வரவும். என்னோட யோசனைகளை முதலில் தமிழினத் தலைவரிடத்தில்தான் காட்டுவேன். நன்றி. வணக்கம்.

விஜய டி.ஆர்:

இங்கே பாருங்க. நானும் 30 வருஷமா இந்த ஃபீல்டுலே இருந்தாலும் இன்னும் ஸ்டடியா இருக்கேன். அதுக்கெல்லாம் தன்னம்பிக்கைதான் காரணம். இன்னிக்கும் என் பையனோட என்னாலே குத்துச் சண்டை, மல்யுத்தம், நீச்சல், ஓட்டப்பந்தயம் ஆகிய எல்லாப் போட்டியிலும் போட்டி போட்டு - அதில் எல்லாத்திலேயும் வெற்றி பெற முடியும். அதனாலே, எல்லாப் போட்டியிலேயும் என் பேரும், என் பையனோட பேரும் எழுதிக்கோங்க.

எல்லா போட்டியிலேயும் எனக்குத்தான் தங்கம்...

எஞ்சியவங்க மானத்துக்கு வந்துடுச்சு பங்கம்...

மாங்கொட்டை சிம்புவுக்கு எல்லாத்திலேயும் வெள்ளி...

தமிழகமே பாடப்போகுது எங்க பேரை சொல்லி...

ஏய். டண்டணக்கா.. ஏய்.. டணக்குணக்கா...

ஒலிம்பிக்ஸ் குழுவினர் இந்தப் பேச்சைக் கேட்டு - வித்தவுட் ஆனாலும் பரவாயில்லை - ஸ்டாண்டிங் ஆனாலும் பரவாயில்லை - உடனடியா பத்திரமா ஊர் போய் சேர்ந்துவிடலாம் என்று ஓட்டம் எடுக்கின்றனர்.
18 comments:

வெண்பூ said...

சூப்பர் ச்சின்னப்பையன்..

முக்கியமா //மாங்கொட்டை சிம்புவுக்கு எல்லாத்திலேயும் வெள்ளி...// :))))

வடகரை வேலன் said...

//இதுக்கு மேலே ஏதாவது பேசணும்னா எங்கப்பாவை பார்த்து பேசுங்ணாவ்....//

இத விட வேற விதமா அவரு பேச சான்ஸே இல்ல.

வடகரை வேலன் said...

//அஃப்கோர்ஸ், நம்ம தமிழக மக்களுக்காக அங்கங்கே மாற்றம் செய்றோம். //

அங்கங்கே ஏமாற்றம் செய்றோம்

rapp said...

me the 4TH

முரளிகண்ணன் said...

முக்கியமான ரஜினி,விஜயகாந்த் எல்லாம் விட்டுட்டீங்க. அவங்க எல்லாம் நடிகர் இல்லையா?

rapp said...

//ஆனால், நான் எதை கூறினாலும், வீட்டிலே... அதாவது... மண்டபத்துலே யாரோ எழுதிக்கொடுத்து - நான் அதை உங்களுக்கு கொடுத்ததாகப் ஊரார் பேசுவார்கள்//
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே

rapp said...

ஆமாம், உங்க வாலிப வயசு இமேஜை கட்டிக்காக்குற இமேஜ் பில்டிங் ப்ராசசில், நம்ம தலயை மறந்திட்டீங்களே, இன்னைய தேதிக்கு அவரோட கருத்தில்லாம நாட்ல ஒன்னியும் நடக்காது தெரியுமில்ல :):):) என்ன துணைத்தலைவரோ போங்க :):):)

சரவணகுமரன் said...

:-))

kanchana Radhakrishnan said...

வடிவேலு- அடி வாங்கற போட்டி வைக்கலாம்ண்ணே..அதுலே பாருங்க நம்ம சரளா அம்மவும்..நானும் ஒரு டீம்.அவங்க அடிக்கறாங்க நான் அழறேன்..இப்படி ஒரு ஆட்டம் வைச்சா..கண்டிப்பா நான் நாட்டுக்கு தங்கபதக்கம் வாங்கித்தாறேன்..செய்வீங்களா....ஆவ்வ்வ்வ்வ்வ்வ்
இல்ல...கலாய்க்கற போட்டி..நானும்..அண்ணன் பார்த்திபனும்...அண்ணன் கலாய்க்க நான் வாயை காது வரைக்கும் விரிச்சு அழறேன்.இதை எந்த கொம்பனாலேயும் செய்ய்யமுடியாது.நமக்கு பதக்கம் நிச்சயம்..ம்...ம்....ம்....ம்...ம்ம்...

விஜெய்காந்த்-இதுவரைக்கும் நம்ம நாட்டு சார்பா 6200 பேர் கலந்துகிட்டு இருக்காங்க..அதுலே 2பேர் தங்கபதக்கம்..6 பேர் வெள்ளிபதக்கம்..20பேர் வெண்கலபதக்கம் வாங்கியிருக்காங்க.இதுக்கான மொத்த செலவு 120கோடி..விளம்பரத்தாலே கிடைச்சது 12கோடி.மீதி பணம் மக்களோட வரிப்பணம்..நான்,பிரேமா,என் மச்சான் ..மூணுபேரை மட்டும் அனுப்புங்க.மக்கள் ஆதரவு எங்களுக்கு இருக்கு..எந்த கூட்டணியும் வேண்டாம்..நாங்க தங்கம் வாங்கறோம்.

குடுகுடுப்பை said...

நல்லா இருக்கு
ராப் சொன்ன மாதிரி , தலய எப்படி மறக்கலாம். அவரு இந்த ஒலிம்பிக்ஸ ஸ்பான்சர் பண்ணிட்ட்டு, அப்படியே கவுரவமா பெண்கள் நீச்சல் போட்டில கலந்துக்க மாட்டாரா.

ச்சின்னப் பையன் said...

வாங்க வெண்பூ -> :-)))

வாங்க வேலன் ஐயா -> ஆமாமா. சரியா ஏமாத்துவாரு அவரு.... :-((

வாங்க முரளிகண்ணன் -> சரி கொஞ்சம் ரெண்டாவது வரிசையிலே இருக்கறவங்கள பாக்கலாமேன்னுதாங்க.... சரி விடுங்க... அடுத்த தடவை அவங்களையும் சேத்துப்போம்......

வாங்க சரவணகுமரன் -> நன்றி...

ச்சின்னப் பையன் said...

வாங்க ராப் -> ஏங்க இமேஜை கட்டிக்காக்கணுமா.... அப்போ வாலிப வயசு இல்லாதமாதிரி பேசறீங்களே.... அவ்வ்வ்....

நம்ம தல படத்தை ஒண்ணுகூட நான் இன்னும் பாக்கலை. முதல்லே நான் அதை பாக்கறேன். அப்போத்தான் அவரையும் எல்லா ஆட்டத்திலேயும் சேத்துக்கமுடியும்.... :-)))

வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா -> ஹாஹா... போட்டுத்தாக்குங்க... நானும் விஜயகாந்தை சேத்துக்கலாம்னு நினைச்சேன். பதிவின் நீளம் கருதி (!!) விட்டுட்டேன்.

வாங்க குடுகுடுப்பை -> அவரு சிறுவர்கள் ஒலிம்பிக்ஸ்லேதான் கலந்துப்பார். நிலா நிலா ஓடி வா....:-)))

விஜய் ஆனந்த் said...

:-)))...

சூப்பருங்கோவ்!!!!

வால்பையன் said...

எல்லாத்தையும் சொன்னியே மக்கா
நம்ம தலைவர விட்டுபுட்டியே

நம்ம தலைவர் தான் தற்போதைய
தமிழக வீர விளையாட்டுகள் சங்க தலைவரா இருக்கார்
(அட நிஜமா தாம்பா)

ILA said...

My Humble request to continue the same with other STARS(?!) too.

HILLARYiuos... :)
(சும்மானாச்சுக்கும்)

புதுகை.அப்துல்லா said...

நம்ம தல படத்தை ஒண்ணுகூட நான் இன்னும் பாக்கலை. முதல்லே நான் அதை பாக்கறேன். அப்போத்தான் அவரையும் எல்லா ஆட்டத்திலேயும் சேத்துக்கமுடியும்.... :-)))
//

சீக்கிரம் பாருங்க. இல்லாங்காட்டி துணைத் தலைவர் பதவிக்கு பங்கம் வந்துரும்.

ச்சின்னப் பையன் said...

வாங்க விஜய் -> நன்றி...

வாங்க வால் -> அவ்வ்வ். அப்படியா?...

வாங்க இளா -> நன்றி...

வாங்க அப்துல்லா -> சரியா சொன்னீங்க. இந்த வாரயிறுதியிலாவது நேரம் கிடைச்சிட்டா கண்டிப்பா பாத்துடணும்......:-))

பிரபு said...

நல்ல நகைச்சுவை