Friday, September 5, 2008

அன்புள்ள மாமாவுக்கு...


முன்: இந்த பதிவுக்குக் காரணம் இதுவோ அல்லது இதுவோ அல்ல!!!
-----

நீங்க ஊரெல்லாம் சுத்திட்டு ராத்திரி லேட்டா வந்தாலும், தூங்கறதுக்கு முன்னாடி சூடா பால் கேப்பீங்க. ஆனா நான் கொஞ்ச நேரம் லேட்டா வந்தாகூட, இருக்கிற பாலையெல்லாம் குடிச்சிட்டு நீங்க தூங்கியிருப்பீங்க.
-----

நீங்க தூங்கும்போது தொலைக்காட்சியின் ஒலியை கொஞ்சம் கூட்டினாலும், உங்களுக்கு கோபம் வரும். ஆனா, நான் தூங்கும்போது நீங்க மட்டும் நல்ல ஒலியை கூட்டி வெச்சிக்கிட்டு, மானாட மயிலாட பாப்பீங்க.
-----

சாப்பாட்டுப் பொருள் எவ்ளோ மேலே இருந்தாகூட உங்களுக்காக நான் மேசை மேல், நாற்காலி மேல் ஏறி எடுத்துத் தரணும். ஆனா, எனக்கு பசிச்சா நீங்க எனக்காக கண்டுக்கவே மாட்டீங்க.
-----

உங்க வாலை நான் தவறுதலா மிதிச்சிட்டா, மன்னிப்பு கேக்காதவரைக்கும் விடமாட்டீங்க. ஆனா, நீங்க என் வாலை மிதிச்சிட்டா, மன்னிப்பு கேக்கறதுக்கு எனக்கு கன்னடம் தெரியாதும்பீங்க.
-----

எனக்கு நாய்னாலே பிடிக்காதுன்னு உங்களுக்குத் தெரியும். ஆனாலும், இன்னொரு மொழி கத்துக்கப்போறேன்னு நீங்க நாய் மொழி கத்துக்கிட்டு வந்து தினமும் என்கிட்டே 'லொள்ளு' பண்றீங்க.
-----

தினமும் உங்க முகத்திலே முழிக்கறது நல்லதுன்னு நான் நினைக்கிறேன். ஆனா, நான் நடுவிலே வந்தாகூட சகுனம் சரியில்லேன்னு நீங்க வீட்டுக்குள்ளே போயிடறீங்க.
-----

உங்களுக்காக நானே தினமும் எலியைப் பிடிச்சி சுடச்சுட எலிக்கால் சூப் செய்து போடணும். ஆனா நீங்க, உங்க பக்கத்திலேயே எலி போனால்கூட, அதை பிடிக்காமெ ஒதுங்கி வழி விடறீங்க.
-----

மாமா...

ஒரு நாளாவது நீங்க நானாகவும்.. நான் நீங்களாகவும் மாறும் வரம் வேண்டுமெனக்கு...

அப்போதுதான் என் மியாவ் உங்களுக்குப் புரியும்!!!

------

24 comments:

தாமிரா said...

மீ த பஸ்டா..?

தாமிரா said...

ஹைய்யா..! நாந்தான் பஸ்ட்டு.! நம்ப தளத்துக்கு லிங்கு குடுத்ததுக்கு நா மொதல்ல பின்னூட்டம் போட்டு கடனக்கழிச்சுட்டேன்.. உய்..உய்..!

வால்பையன் said...

மியாவ்,மியாவ்,மியாவ்,மியாவ்,
மியாவ்,மியாவ்,மியாவ்,மியாவ்,
மியாவ்,மியாவ்,மியாவ்,மியாவ்,
மியாவ்,மியாவ்,மியாவ்,மியாவ்,
மியாவ்,மியாவ்,மியாவ்,
மியாவ்,மியாவ்,
மியாவ்,

வடகரை வேலன் said...

இந்தப் பதிவு விரைவில் சுட்டி விகடனில் வர வாழ்த்துக்கள்.

ஓவியா said...

:-)

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

மிய்யாயாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

rapp said...

:):):):):):):):):):):):):):):):):)
:):):):):):):):):):):):):):):)

rapp said...

//சாப்பாட்டுப் பொருள் எவ்ளோ மேலே இருந்தாகூட உங்களுக்காக நான் மேசை மேல், நாற்காலி மேல் ஏறி எடுத்துத் தரணும். ஆனா, எனக்கு பசிச்சா நீங்க எனக்காக கண்டுக்கவே மாட்டீங்க.
//
உங்க வீட்ல பூனைதான் சாப்பாடு பரிமாறுமா? மியாவ்வ்வ்வ்வ்

மங்களூர் சிவா said...

நான் கூட ட்ராபிக் போலிஸ்க்கு எதும் லெட்டர் எழுதிட்டிங்களோன்னு ஆவலா வந்தேன்!!

ச்சின்னப் பையன் said...

வாங்க தாமிரா -> ஆமா. ஆமா. நீங்கதான் பஷ்டு...

வாங்க வால் -> இதென்ன டைடில் சாங்கா?....

வாங்க வேலன், ஓவியா -> நன்றிங்க....

வாங்க அப்துல்லா -> மியாவ் மியாவ்...

ச்சின்னப் பையன் said...

வாங்க ராப் -> அவ்வ்வ். இது எங்க வீட்லே இல்லீங்கோவ்.....

வாங்க சிவா -> இதுதான் மாத்தி யோசின்றது...

குடுகுடுப்பை said...

தங்கமணி பாதிப்பு ரொம்ப அதிகம் போல

ஆயில்யன் said...

கலக்கல் :))))

இராம்/Raam said...

மியாவ்.... மியாவ்..... :))

ச்சின்னப் பையன் said...

வாங்க குடுகுடுப்பை -> நீங்க எதுக்கு அடிக்கடி அவங்கள நினைவு 'படுத்தறீங்க'???

வாங்க ஆயில்யன் -> நன்றி..

வாங்க இராம் -> மியாவ்...

வெண்பூ said...

// நீங்க எதுக்கு அடிக்கடி அவங்கள நினைவு 'படுத்தறீங்க'???
//

பதிவை விட இந்த பின்னூட்டம் கலக்கல். :)

குடுகுடுப்பை said...
This comment has been removed by the author.
kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஆனா, நீங்க என் வாலை மிதிச்சிட்டா, மன்னிப்பு கேக்கறதுக்கு எனக்கு கன்னடம் தெரியாதும்பீங்க//

பூனைக்குட்டி வெளியில் வந்துரிச்சி டோய்!
ச்சின்னப்பையரே..."அவங்க" கன்னடமா? :)))

ச்சின்னப் பையன் said...

யாருப்பா அது -> கமெண்ட் போட்டு போட்டு எடுக்கறது?....

வாங்க கேயாரெஸ் -> ஹலோ.. ஹலோ... பொறுமை.... இது வெறும் கற்பனை மியாவ் பதிவுதாங்க.... (அவிங்க கன்னடமெல்லாம் இல்லே.... வேறே ஒண்ணு.... அவ்வ்வ்....)

விஜய் ஆனந்த் said...

:-))))...

ARUVAI BASKAR said...

இந்த பதிவை யாருமே படித்தது இல்லையா ?
என்ன கொடுமை சரவணன் ?
http://abiappa.blogspot.com/2008/06/blog-post.html

ARUVAI BASKAR said...

பதிவு ரசிக்கும் படியாக இருக்கிறது !

மதுரையம்பதி said...

இன்றுதான் இந்த பதிவினை கவனித்தேன் கைலாஷி ஐயா...

நன்றி ஐயா!

ச்சின்னப் பையன் said...

வாங்க விஜய் -> நன்றி...

வாங்க பாஸ்கர் -> தலயோட அந்த பதிவை படிக்காமலா? கண்டிப்பா முன்னாடியே படிச்சிருக்கேங்க...

வாங்க மதுரையம்பதி ஐயா -> நன்றி...