Friday, September 19, 2008

இந்த வாரயிறுதியில் நான் செய்யப்போகும் வேலைகளின் நீண்ட பட்டியல்!!!

ரொம்ப நாட்களாக தள்ளிக்கொண்டே போன வேலைகள் சிலவற்றை இந்த வாரயிறுதியில் செய்தே ஆகவேண்டும் என்று வீட்டில் சொல்லிவிட்டேன். யார் நினைத்தாலும் என்னைத் தடுக்கமுடியாது என்றும் கூறிவிட்டேன்.

அதன்படி, செய்ய வேண்டிய வேலைகளை பட்டியல் தயார் செய்துகொண்டுவிட்டேன். அது உங்கள் பார்வைக்கு.... பட்டியலில் ஏதேனும் விட்டுப்போயிருந்தால், தயவு செய்து எனக்கு உடனே தெரியப்படுத்தவும்...

சனிக்கிழமை:

1. காலையில் சிற்றுண்டி
2. சிறு தூக்கம்
3. மதிய உணவு
4. சிறிது நேரம் ஓய்வு
5. மாலை சிற்றுண்டி
6. சிறிது நேரம் கட்டையை சாய்த்தல்
7. இரவு உணவு
8. இரவுத் தூக்கம்

ஞாயிற்றுக்கிழமை:

1. காலையில் சிற்றுண்டி
2. சிறு தூக்கம்
3. மதிய உணவு
4. சிறிது நேரம் ஓய்வு
5. மாலை சிற்றுண்டி
6. சிறிது நேரம் கட்டையை சாய்த்தல்
7. இரவு உணவு
8. இரவுத் தூக்கம்

18 comments:

தமிழ் பிரியன் said...

கும்பி, மொக்கை, பயங்கர மொக்கை எல்லாம் விடுபட்டு இருக்கிறது. தயவு செய்து சேர்க்கவும்.. ;)

Rajaraman said...

இவ்வளவு கஷ்டமான வேலைகளை எப்படி தான் சமாளிக்க போகிறிர்களோ பாவம் நீங்கள். தோஸ்த் எனது நல்வாழ்த்துகள்.

Anonymous said...

பாத்துங்க இவ்வளவு வேலை செஞ்சு ரெம்ப டய்ர்ட் ஆகிடப் போரீங்க. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துச் செய்யுங்க.

பரிசல்காரன் said...

thangamanikitta adi vaangara nigazhchi vidupattirukkirathu!

T.V.Radhakrishnan said...

கட்டையை சாய்த்தபின் இரவு உணவுக்கு கட்டை எழுந்திருக்குமா?

amaradith said...

Palluvilakkarathu, Kulikkarathu(Intha Plakkam Ellaam Irukka?),...Athaiyellam vittuteengale.

ச்சின்னப் பையன் said...

வாங்க தமிழ் -> கும்மிக்கெல்லாம் விடுமுறை விட்டாச்சு..... :-)))

வாங்க ராஜாராமன் -> அதை நினைச்சாத்தான் எனக்கும் கஷ்டமாயிருக்கு. பாப்போம்.... :-))

வாங்க வேலன் ஐயா -> ஆமாங்க. ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர்டாயிடுச்சுன்னா, மறுபடி ரெஸ்ட் எடுத்துதான் சமாளிக்கணும்.... :-)))

ச்சின்னப் பையன் said...

வாங்க பரிசல் -> ஹிஹி.. அதெல்லாம் விளம்பர இடைவேளை மாதிரி - அடிக்கடி வரும் போகும் - இப்படி யாராவது வெளிப்படையா சொல்வாங்களா?????

வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா -> கட்டை எழுந்திருக்கலேன்னா பூரிக்கு முன்னாலே பூரிக்கட்டைதான் வரும்.... அவ்வ்வ்...

வாங்க அமராதித் -> ஹிஹி... லீவ் நாள்லே அதெல்லாம் எதுக்கு?????

வெண்பூ said...

கலக்கல்... பட்டைய கிளப்புறீங்க..ஆனாலும் நீங்க என்னோட ஷெட்யூல எனக்கு தெரியாம காப்பி அடிச்சிருக்க வேணாம். தமிழ்மணத்துல காப்பிரைட் வயலேஷன்னு சொல்லி நோட்டீஸ் குடுத்துடுவேன் :)))))

வால்பையன் said...

இது நான் தினமும் செய்யுறது,
நீங்க வாரத்துக்கு ரெண்டு நாளா
'

விஜய் ஆனந்த் said...

:-))))...

குடுகுடுப்பை said...

ரெண்டு நாளக்கி பதிவு கெடயாதுன்னு சுலுவா சொல்லுங்க

வெண்பூ said...

//வால்பையன் said...
இது நான் தினமும் செய்யுறது,
நீங்க வாரத்துக்கு ரெண்டு நாளா
//

பொய் சொல்லாதீங்க வால். நீங்க சாப்பாடு சாப்புடுறது மட்டும்தான் செய்யுறீங்களா?? :)))

ச்சின்னப் பையன் said...

வாங்க வெண்பூ -> அவ்வ்வ்.... எல்லோரட ஷெட்யூலும் அதுதானா????? நான் ஒருத்தந்தான் அப்படின்னு நினைச்சேன்..... :-)))

வாங்க வால் -> ஓ. அப்போ அலுவலகத்துக்குப் போனாக்கூட இந்த ஷெட்யூல் மாறாதா?

வாங்க விஜய் -> நன்றி...

ச்சின்னப் பையன் said...

வாங்க குடுகுடுப்பை -> டக்குன்னு புரிஞ்சிக்கிட்டீங்க..... அதேதான் மேட்டரு....

வாங்க வெண்பூ -> நீங்க கேக்கறதைப் பாத்தா வாலோட வால் உங்களுக்குத் தெரியாம ஆடாது போலிருக்கே?????

ILA said...

சே இவ்ளோ கஷ்டமான வேலைகளா?.. ரொம்பதான் குஷ்டப்படுறீங்க போலிருக்கு :(

ரமேஷ் வைத்யா said...
This comment has been removed by a blog administrator.
வெட்டிப்பயல் said...

:))