Monday, September 8, 2008

நீங்க எந்த ஈயம்-ங்க?

நீங்க ஒரு வேளை ஆணியவாதியா இருந்தீங்கன்னா - அதாவது ஆண் விடுதலைக்கு போராடறவரா இருந்தீங்கன்னா, கீழே இருக்கறதை உங்க ஆண் நண்பர்களுக்கெல்லாம் சொல்லுங்க.

அல்லது நீங்க பெண்ணியவாதியா இருந்தீங்கன்னா - அதாவது பெண் விடுதலைக்கு போராடறவரா இருந்தீங்கன்னா, கீழே இருக்கறதை உங்க பெண் நண்பர்களுக்கெல்லாம் சொல்லுங்க.

A - அடங்க மறு
B- போங்காட்டம் ஆடு
C- குக்கர் வெக்கத்தெரியாதுன்னு சொல்லு
D- தினமும் நிறைய பேசு. வேறே யார்கிட்டேயாவது
E- என்னாலே முடியும்னு சொல்லாதே
F- ஃபார்வட் மெயில் நிறைய அனுப்பு
G- ( நீ) குண்டாயிட்டேன்னு சொல்லிக்கிட்டே இரு
H- ஹல்வா கொடுக்கத் தெரிஞ்சிக்கோ
I- இளிச்சிக்கிட்டே இருக்காதே
J- ஜால்ரா போடாதே
K- குட்டகுட்ட குனியாதே
L- லொள்ளு பண்ணு
M- மண்டைய மண்டைய ஆட்டாதே
N- நல்லவனாட்டம் நடி
O- ஒட்டடை அடிக்காதே
P- பழைய மேட்சானாலும் எப்பவும் கிரிக்கெட் பாரு
Q- கியூவில் நிக்கமுடியாதுன்னு சொல்லு
R- ராவடியா பேசு
S- சமையலறைப் பக்கம் போகாதே
T- தொடப்பத்தை எடுத்து பெருக்காதே
U- உட்கார்ந்த இடத்தில் சாப்பாடு கேள்
V- விடுமுறை அன்னிக்கு லேட்டா எழுந்திரு
W- வகை வகையா சமைக்கச் சொல்லு
X-
Y- எங்கே போறேன்னு சொல்லாதே
Z- சுகமா தூங்கிக்கிட்டே இரு


என்னது, நானா? நான் நடுநிலைவாதிங்க.... இந்த பதிவு பத்தி எங்க வீட்டுக்கு யாரும் தொலைபேசாதீங்க.... அவ்வ்வ்...

16 comments:

Anonymous said...

இந்தப் பதிவு உங்களுக்குத்தான் பொருந்தும் ஏன்னா,
A - அடங்க மறு(க்கிறீங்க)
B- போங்காட்டம் ஆடு(றீங்க)
C- குக்கர் வெக்கத்தெரியாதுன்னு சொல்(குக்கர் எப்படியிருக்கும்னாவது தெரியுமா)
D- தினமும் நிறைய பேசு(றீங்க, தங்க்ஸ விட்டுட்டு சாட்ல வேறே யார்கிட்டேயாவது)
E- எனால முடியும்னு சொல்லதே (அப்பத்தான வேலைய அடுத்தவன் தலையில கட்டலாம்)

F- ஃபார்வட் மெயில் நிறைய அனுப்பு(றீங்க)
G- ( நீ) குண்டாயிட்டேன்னு சொல்லிக்கிட்டே இரு(க்கீங்க)
H- ஹல்வா கொடுக்கத் தெரிஞ்சிருக்கு ( அது மட்டும்)
I- இளிச்சிக்கிட்டே இருக்கறீங்க(உங்க தங்கமணிகிட்ட)
J- ஜால்ரா நல்லா போடுறீங்க ( உங்க தங்கமணிக்குத்தான்)
K- குட்டகுட்ட குனியாதே(ன்னு நினைக்கிறீங்க. ஆனா தங்கமணி உங்களை விட விவரம்.)
L- லொள்ளு பண்ணு(றீங்க பதிவுல)
M- மண்டைய மண்டைய ஆட்டாதே(ன்னு நினைக்கிறீங்க ஆனா முடியல, தங்கமணியப் பார்த்ததும் தலை தஞ்சாவூர் பொம்மையாயிடுது)
N- நல்லவனாட்டம் நடி(க்கிறீங்க. என்னா நடிப்பு!)
O- ஒட்டடை அடிக்காதே. (பிஸிபேளா பாத், அவல்பாயசம் சாப்டுட்டு மட்டையகீட்டு, எங்க ஒட்டடை அடிக்கிறது?)
P- பழைய மேட்சானாலும் எப்பவும் கிரிக்கெட் பார்(க்கிறீங்களான்னு தெரியல. ஆனா பழைய பதிவுன்னாலும் சில சமயம் உங்க பின்னூட்டம் வருது.)
Q- கியூவில் நிக்கமுடியாதுன்னு சொல்லு ( என்னைக்கு நின்னுருகீங்க? அப்பட்யே நின்னுட்டலும் தூங்கிருவீங்க)
R- ராவடியா பேசு ( இது வேற தனியாச் சொல்லனுமா? பண்ணுறதெல்லாம் அதுதானே?)
S- சமையலறைப் பக்கம் போகாதே (எங்க இருக்குன்னாவது தெரியுமா?)
T- தொடப்பத்தை எடுத்து பெருக்காதே (இதுக்கு நான் கமெண்ட் போட்டா வம்பாயிரும். தொடைப்பத்துல ----- வாங்கதே னுதானே எழுத வந்தீங்க)
U- உட்கார்ந்த இடத்தில் சாப்பாடு கேள். ( அப்படியே படுக்க வசதியாயிருக்கும்னுதானே?)
V- விடுமுறை அன்னிக்கு லேட்டா எழுந்திரு ( மத்த நாள்ல ஏதோ நேரத்து எழுந்திருக்கிற மாதிரி?)
W- வகை வகையா சமைக்கச் சொல்லு (அதான பார்த்தேன் பிஸிபேளா பாத், அவல் பாயசம் என்ன சாதாரண சமையலா?)
X-
Y- எங்கே போறேன்னு சொல்லாதே ( நீங்க சொல்றது ஒரு எடம் போறது ஒரு எடமுன்னு தங்க மணிக்குத் தெரியாதுன்னு உங்க நெனப்பு.)
Z- சுகமா தூங்கிக்கிட்டே இரு (அப்பாடா இது ஒன்னுதான் உங்களப் பத்தின 100% அக்மார்க் உண்மை)

விஜய் ஆனந்த் said...

:-)))...

மங்களூர் சிவா said...

/
D- தினமும் நிறைய பேசு
/

இது ஏன் D-ல லிஸ்டாகியிருக்கு
தினமும் நிறைய Dog மாதிரி குலைன்னு அர்த்தமா??

புதுகை.அப்துல்லா said...

நல்ல சென்ஸ்யா உனக்கு :))))

வெண்பூ said...

கலக்கல்

X - XXX படம் நிறைய பாரு.

சின்னப் பையன் said...

மக்கள்ஸ் -> காலங்கார்த்தாலேர்ந்து பயங்கர பிஸியாகையால், பின்னூட்டங்களுக்கு பதில்கள் மதியம் 2 மணிக்கு மேல்தான்.... நன்றி...

வெண்பூ said...

Are you in India? it is 5 AM in the morning.... :))

ers said...

சூப்பர் வெண்பூ... என்ன எது சின்னப்பிள்ளை தனமா... வெண்பூ மாதிரி யோசிங்க சின்னப்பையன்
http://nellaitamil.com

வால்பையன் said...

புதிய ஆத்திசூடி நல்லாத்தான் இருக்கு!
ஆனா எல்லாத்துக்கும் எதிர்வினை பூரிக்கட்டையாவுல இருக்கு

rapp said...

சூப்பர் :):):)

குடுகுடுப்பை said...

நான் பின்னூட்டம் போடமாட்டேன்.

Thamira said...

ஜூப்பருங்க..
வெண்பூ ://X - XXX படம் நிறைய பாரு.// ரிப்பீட்டேய்..

Kanchana Radhakrishnan said...

X டிரிமா எதிலும் ஸ்டெப் எடுக்காதே

சின்னப் பையன் said...

ஹாஹாஹா வாங்க வடகரை வேலன் ஐயா -> போட்டு தாக்கிட்டீங்க... யார்கிட்டேயும் சொல்லாதீங்க... அதனால்தான் நான் இந்த பதிவை என் பக்கத்திலே போடாமே, வவாசவில் போட்டேன்.... அவ்வ்வ்வ்...

வாங்க விஜய் -> நன்றி...

வாங்க சிவா -> இல்லீங்கோ... தினமும் மற்றும் டெய்லி - இந்த ரெண்டும் 'டி'தான் வருதுன்னு போட்டுட்டேங்கோ......

வாங்க அப்துல்லா -> ரொம்ப நன்றிங்க நான்சென்ஸுன்னு சொல்லாமே விட்டதுக்கு.... :-)

சின்னப் பையன் said...

வாங்க வெண்பூ -> அவ்வ்வ்... XXX-ஆ? அப்படின்னா?

நான் எங்கேங்க இந்தியா வந்தேன். இங்கேதான் இருக்கேன். ஒரு நண்பரை பிக்கப் செய்யவேண்டி விடியற்காலையில் எழுந்திருக்க வேண்டியிருந்தது....

வாங்க தமிழ் சினிமா -> எனக்கு XXXனா என்னன்னு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா போட்டிருப்பேனே???? சொல்லாமே 'மறைச்சிட்டாங்களே'!!!!!!!!!!

வாங்க வால் -> அதுக்கெல்லாம் பயப்பட்டா நடக்குமா!!!!!

சின்னப் பையன் said...

வாங்க ராப் -> எல்லாத்தையும் நோட் பண்ணிட்டீங்கல்ல.... :-)

வாங்க குடுகுடுப்பை -> பின்னூட்டம் போடவேண்டாங்க.. இதையெல்லாம் செயல்படுத்தினா போறும்...

வாங்க தாமிரா -> நன்றிங்க...

வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா -> இதுதான் சரியா இருக்கு..... எதிலேயும் வழவழான்னு இருன்னு சொல்றீங்க....