Monday, September 22, 2008

வ.வா. சங்கமும் 2011ம்

கே: தேர்தல்ல உங்க வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?

ப:செயிச்சாச்சுன்னு எழுதிக்க...ஒரு மூணு பக்கத்துக்கு தமிழ் நாட்டுல்ல வ.வா.ச... அ.உ.ஆ.சூ.கு.க... மல்லிகை கூட்டணிப் போட்டிப் போடற தொகுதில்ல எல்லாம் எங்க கூட்டணி வேட்பாளர்கள் பேரை ஹைலைட் பண்ணி இவிங்க எல்லாம் செயிச்சுப்புட்டாயங்கன்னு போட்டுக்க...


கே:நீங்க ஆட்சிக்கு வந்தா என்னப் பண்ணுவீங்க?
ப: என்ன கேள்வி இது ராஸ்கல்... ஆட்சிக்கு வந்தா ஆட்சி பண்ணுவோம்ய்யா... வென்று...


கே:மக்கள் மத்தியிலே உங்க வ.வா.ச கூட்டணிக்கு வரவேற்பு எப்படி இருக்கு?

ப: இது கேள்வி... நல்லா கேக்குறப்பூ...
வயல்ல மவுசு தின்ன விவசாயில்லருந்து ... வேலியில்ல கம்ப்யூட்டர் முன்னாடி மவுசு உருட்டற பயபுள்ளக வரைக்கும் வ.வா.சக்கு தான் மவுசு... எங்க கூட்டணி தான் ரவுசு.... அம்புட்டு பயலும் நம்ம சங்கத்து மேல பாச மழையப் பொழியறாங்க... ஓட்டு கேட்டு போகும் போதே நிறைய பேர் ஓட்டை இப்போவேப் பிடிங்கன்னு என் கையிலேயே கொடுக்கிறாயங்க....( அம்புட்டு குத்து வாங்கியிருக்கோம் இல்ல). அ.உ.ஆ.சூ.கு.க கொ.பா.செ செல்வனாரும் இதையே தான் சொல்லுறார்... இப்படி இப்போ என்க கையிலே இருக்க ஓட்டை எண்ணிப் பார்த்தாலே நாங்க எங்கிட்டோ லீடிங்ல்ல இருக்கோம் தம்பி...
இது தெரியாமா.. எதிர் கட்சிக்காரய்ங்க கிரகம் ஆடுறாயங்க....ஹய்யோ...ஹய்யோ...

கே: உங்க சங்கத்துல்ல ஆளே இல்லன்னு ஒரு குற்றசாட்டு அது பத்தி சொல்லுங்களேன்..
ப: இது என்ன சுப்பித்தனமாப் பேசுற...வாலிப சங்கம்ய்யா இது... இளைஞர்கள்ன்னா அங்கே இங்கேப் போய் அப்பிடி இப்பிடி இருப்பான்... அவங்களை எல்லாம் ஒரே இடத்துல்ல வச்சு எண்ணுறதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் முடியாதுப்பா...
எங்க சங்கத்து தம்பி பாண்டி டாவு கட்டுற புள்ளங்களை எண்ணுனா அதுவே அந்தக் கட்சிக்கு விழுற ஓட்டை விட மூணு மடங்கு அதிகம் இருக்கும்ப்பா எண்ண தெரியாததும் எண்ண முடியாததும் எதிர் குருப்போட வீக்னஸ் அப்பு... அந்த விவஸ்தக் கெட்ட கூட்டம் கூவிச்சுன்னு வக்கனையா நீயும் கேக்குற.. பாத்துக் கேளுப்பா இல்ல பத்திக்கும்....

கே: ப.ம.க பற்றி?
ப:நல்லவர்கள் நிறைந்த அந்த இயக்கம் இன்று பிளவுப் பட்டு கிடப்பது மனத்தை வாட்டுகிறது....ஒரு உண்மையச் சொல்லுறேன் அந்தக் கட்சி இப்போ தாலிபன் பிடியிலே இருக்கு....அதைக் காப்பாத்த
இந்த கைப்புள்ள வாலிபனால்
மட்டுமே முடியும் என அங்குள்ளவர்கள் உண்மையாக நம்புகிறார்கள்.. விரும்புகிறார்கள்... இது யாராலும் மறுக்க முடியாது...
என்ன ஆனாலும் சரி... பரிதாபகரமாக இருக்கும் ப.ம.க வை ஆண்டவன் மற்றும் அ.உ.ஆ.சூ.கு.க , மல்லிகை கூட்டணித் தோழ்ர்கள்...வ.வா.ச செயல் சிங்களின் துனை கொண்டு இந்தக் கைப்பு மீட்பதை யாராலும் தடுக்கவே முடியாது....

எல்லாரும் மீள் பதிவு எழுதுறபோது நாங்களும் டைமிங்கா போடுவோம்ல.. முன்னாடியே நாங்க இந்த விஷயத்தைப் பத்தி எழுதுன பதிவு

6 comments:

ILA said...

கள்ள வோட்டு-1

வடகரை வேலன் said...

//என்ன கேள்வி இது ராஸ்கல்... ஆட்சிக்கு வந்தா ஆட்சி பண்ணுவோம்ய்யா... வென்று...//

:-))))))))))))))

SP.VR. SUBBIAH said...

////வயல்ல மவுசு தின்ன விவசாயில்லருந்து ... வேலியில்ல கம்ப்யூட்டர் முன்னாடி மவுசு உருட்டற பயபுள்ளக வரைக்கும் வ.வா.சக்கு தான் மவுசு... எங்க கூட்டணி தான் ரவுசு.... அம்புட்டு பயலும் நம்ம சங்கத்து மேல பாச மழையப் பொழியறாங்க... ஓட்டு கேட்டு போகும் போதே நிறைய பேர் ஓட்டை இப்போவேப் பிடிங்கன்னு என் கையிலேயே கொடுக்கிறாயங்க....( அம்புட்டு குத்து வாங்கியிருக்கோம் இல்ல). அ.உ.ஆ.சூ.கு.க கொ.பா.செ செல்வனாரும் இதையே தான் சொல்லுறார்... இப்படி இப்போ என்க கையிலே இருக்க ஓட்டை எண்ணிப் பார்த்தாலே நாங்க எங்கிட்டோ லீடிங்ல்ல இருக்கோம் தம்பி...
இது தெரியாமா.. எதிர் கட்சிக்காரய்ங்க கிரகம் ஆடுறாயங்க....ஹய்யோ...ஹய்யோ...////

கெளப்பிட்டீங்க! (முன்னாடி தூள் என்று சேர்த்துக்கொள்ளவும்)

ARUVAI BASKAR said...

சூப்பர் தல !

வால்பையன் said...

நல்ல தமாஷ்
தொடரட்டும் பணி

senthil said...

எனக்கு MLA சீட் உண்டா ?