Wednesday, September 17, 2008

சுயசொறிதல் எனக்கும் பிடிக்காது - சென்ஷி, பரிசல் FYI...


நான் முதல் பதிவு போட்டு சுமார் 9 மாதங்களாகின்றது. தொடக்கத்திலிருந்தே எனக்கு சுயசொறிதல் பிடித்ததேயில்லை. நேற்றிலிருந்து தமிழ்மணத்தில் இப்படிப்பட்ட தலைப்புகள் சுற்றிக்கொண்டிருப்பதால், நானும் என் சார்பு நிலையை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறேன்.


ஆனால், சில சமயம் சுயசொறிதல் செய்தே ஆகவேண்டும் என்ற நிலை வரும்போது, நான் செய்வது என்னவென்றால்....

கீழே போய் பார்க்கவும்...

.....

கீழே......

..

இன்னும் கொஞ்சம்தான்......


சஹானாவிடம் சீப்பு கொடுத்து உதவி கேட்பேன்... ஹிஹி... பின்னே முதுகுலெல்லாம் ஒரு மனுசனாலே எப்படி சுயசொறிதல் செய்யமுடியும், சொல்லுங்க....
20 comments:

வெண்பூ said...

ஹா...ஹா...ஹா.. சூப்பர்.

பதிவோட முதல் பேரா படிச்சவுடனே ஓரளவுக்கு புரிந்தது. ஆனால் சஹானாவிடன் சீப்பை கொடுத்தது எல்லாம் ரொம்ப டூ மச்.. :)))) ரூம் போட்டு யோசிச்சது போயி இப்ப பால்கனியில நின்னு யோசிச்சீங்களா இந்த ஐடியாவை??? :)

Bleachingpowder said...

இடுப்பு சைஸ பாத்தா சுத்தி வரதுக்கே மூனு நாளாகும் போலிருக்கே :))

அப்புறம் கொண்டு வரும் போது அது சீப்புதானானு ஒரு தடவ நல்லா பாத்துக்கோங்க, அவங்க ஏதோ நியாபத்துல அருவாமனையை கொண்டு வர,அப்புறம் அணில் முதுகுல ராமர் கோடு போட்ட மாதிரி ஆயிடும்.

தமிழ் பிரியன் said...

:)))))))))))))

தமிழ் பிரியன் said...

சுயசொறிதல் போய் பிறத்தியார் சொறிதலில் செம தூக்கம் வரும்.. ;)

rapp said...

me the 5th

rapp said...

super :):):)

rapp said...

என்னங்க இது நீங்களும் குசும்பன் அவர்களும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி விளக்கம் போட்டிருக்கீங்களே :):):)

rapp said...

என்னங்க இது நீங்களும் குசும்பன் அவர்களும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி விளக்கம் போட்டிருக்கீங்களே :):):)அது எந்த சொரிதல் வகையைச் சாரும்? அவ்வ்வ்வ்வ்வ்...............

kanchana Radhakrishnan said...

:-)))))))

ச்சின்னப் பையன் said...

வாங்க வெண்பூ -> இப்பல்லாம் பால்கனியிலேயே ரூம் போடலாமான்னு யோச்சிட்டிருக்கேன்.... :-))

வாங்க ப்ளீசிங் -> அவ்வ்வ்... மூணு நாள் போதாதுன்னு விட்லே சொல்றாங்க....:-(((

வாங்க தமிழ் -> இது என்ன புதுக்குறளா?????... நன்றி...

ச்சின்னப் பையன் said...

வாங்க ராப் -> என்னை மூத்த பதிவரோட ஒப்பிட்டதற்கு நன்றி... லொள்ளின் கால் லொள்ளறியும்... அவ்ளோதான்.... :-)))

வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா -> நன்றி...

குடுகுடுப்பை said...

யோவ் முதுகுக்கு பதிலா, இப்ப்டியா தொப்பையை காமிக்கிறது. என்ன நமீதான்னு நெனப்பா

விஜய் ஆனந்த் said...

:-)))...

அவ்வ்வ்வ்...வர லேட்டாயிடிச்சி...அதுக்குள்ள என்னோட கருத்துக்கள மத்த மக்கள் சொல்லிட்டாங்க...அதனால கருத்தாளர்கள் எல்லாருக்கும் ரிப்பீட்டேய்!!!!

புதுகை.அப்துல்லா said...

யோவ் முதுகுக்கு பதிலா, இப்ப்டியா தொப்பையை காமிக்கிறது. என்ன நமீதான்னு நெனப்பா

//

ஹா..ஹா..ஹா..

ARUVAI BASKAR said...

எப்பெடிங்க இதல்லாம் ?

ச்சின்னப் பையன் said...

வாங்க குடுகுடுப்பை -> எனக்கு புறமுதுகு காட்டி பழக்கமேயில்லீங்க... அதான்... அதுக்காக என்னெ நமீதாவோட கம்பேர் பண்ணிட்டீங்களே... ரொம்ப நன்றிங்க......ஹிஹி...

வாங்க விஜய் -> அது சரி.... நன்றி...

வாங்க அப்துல்லா -> என்ன சிரிப்பு?.... ம்?... என்ன சிரிப்புன்றேன்..... அவ்வ்வ்...

வாங்க பாஸ்கர் -> அட. என்ன இதுக்கே இப்படி அசந்துட்டீங்க?.... இன்னும் முதுகை காட்டியிருந்தா என்ன சொல்லியிருப்பீங்களோ தெரியலியே????? :-))))

வால்பையன் said...

ஒரு பெரிய செங்கலா எடுத்து கையில கொடுத்து தேய்க்க சொன்னா அரிப்போட செத்து கொழுப்பும் அடங்கும்

ச்சின்னப் பையன் said...

வாங்க வால் -> அவ்வ்வ்... நீங்க நிறைய தமிழ் சீரியல் பாக்கறீங்கன்னு நினைக்கறேன்... அதான் இப்படி பேசறீங்க....

தமிழன்... said...

:))))

தமிழன்... said...

பெயர் என்னமோ சின்னப்பையன் ஆனா ஆள் ரொம்ப பெரிசா இருப்பிங்க போல...:)