Tuesday, September 30, 2008

எல்லோருக்கும் நன்றி!!! கேப்டனுக்கும் நன்றி!!!

எல்லோருக்கும் வணக்கம்.

எனக்கு அதிகமா எழுத வராது. ஆனா, நம்மளையும் மதிச்சி சங்கத்திலே கேக்கும்போது மறுக்கமுடியாம சிங்க அழைப்பை ஏத்துக்கிட்டேன்.

அன்னிக்கே வீட்லே சொல்லிட்டாங்க - சங்கத்திலே மட்டும்தான் நீங்க சிங்கம். அதுவும் ஒரே ஒரு மாசம்தான். வீட்லே எப்போவும் போல **&*$%** தான் அப்படின்னு. நானும் சரின்னு தலயை (அஜீத்தை இல்லீங்க) நல்லா ஆட்டி ஒத்துக்கிட்டேன்.

நான் இனிமே வவாச எழுதலே - அதனாலே வாலிபன் இல்லே - அப்படின்னு யாரும் தயவு செய்து நினைச்சிடாதீங்க... நான் எப்பவுமே வாலிப வாலிப அன்பன் தாங்க. (இந்த நேரம் யாரும் துக்ளக் பின்னட்டை விளம்பரத்தை நினைக்காதீங்க....)

என்னுடைய எல்லா மொக்கைகளையும் பொறுத்துக்கிட்டு பின்னூட்டம் போட்டவங்களும், பின்னூட்டம் போடாத கோடிக்கணக்கான மக்களுக்கும், சங்கத்துக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.. (அட.. கையெல்லாம் தட்டாதீங்கப்பா....)

போறதுக்கு முன்னாடி நம்ம கேப்டனுக்கு ஒரு முறை நன்றி கூறிவிட்டு சில புள்ளிவிவரங்களை கொடுக்கிறேன்.

மீண்டும் உங்க எல்லாரையும் பூச்சாண்டியில் சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் ச்சின்னப்பையன்... ச்சின்னப்பையன்... ச்சின்னப்பையன்...

சிங்கமாக எழுதிய மொத்த பதிவுகள்: 23 (இதையும் சேர்த்து)

கிடைத்த மொத்த பின்னூட்டங்கள்: 445 (இந்த பதிவை சேர்க்காமல்)

ஒரு பதிவுக்கு வந்த அதிக பின்னூட்டங்கள்:47

ஒரு பதிவுக்கு வந்த குறைந்த பின்னூட்டங்கள்: 8

நடுனடுவே வவாசவில் மற்றவர்கள் போட்ட பதிவுகள்: 5

நான் துவங்கும்போது வவாச்வின் Counter: 123050

நேற்றைய தேதியில் Counter: 137500


24 comments:

வெண்பூ said...

பாராட்டுக்கள் ச்சின்னப்பையன். நீங்கள் சிங்கமாக நன்றாகவே செய்திருப்பதாகவே நினைக்கிறேன். பூச்சாண்டியில் தொடருங்கள் உங்கள் மொக்கை சேவையை.. :))))

சரவணகுமரன் said...

வாழ்த்துக்கள்...

டா...டா... பை...பை... :-)

Rajaraman said...

நல்வாழ்த்துக்கள் ச்சின்னப்பையன் .. தொடரட்டும் உங்கள் பணி.. எங்கள் அன்பு என்றும் உண்டு..

siva sinnapodi said...

http://sivasinnapodi1955.blogspot.com/

தமிழன்... said...

வணக்கம்...

தமிழன்... said...

வணக்கம்...

தமிழன்... said...

வணக்கம்...

தமிழன்... said...

\\
நான் இனிமே வவாச எழுதலே - அதனாலே வாலிபன் இல்லே - அப்படின்னு யாரும் தயவு செய்து நினைச்சிடாதீங்க... நான் எப்பவுமே வாலிப வாலிப அன்பன் தாங்க
\\

இதை நாங்க நம்பணும்ல...:)

(என்னன செய்ய விதி...)

தமிழன்... said...

வாழ்த்துக்கள்...அண்ணன்...

தமிழன்... said...

நன்றி...

(;@#$%^&(**&^^$$#@!%%$&^%&^)

தமிழன்... said...

#$%^&&*(

தமிழன்... said...

lsfhewiurfyewrhworhwoir##$%^&*()())

விஜய் ஆனந்த் said...

சிங்கமாக கலக்கியதற்கும்.....
இங்கு போட்ட மரண மொக்கையை சொந்த வீட்டில் தொடரவும்...

வாழ்த்துக்கள்!!!!

ச்சின்னப் பையன் said...

வாங்க வெண்பூ -> நன்றிங்ண்ணா... லீவ் முடிஞ்சபிறகு அங்கே வர்றேன்...

வாங்க சரவணகுமரன் -> ங்க.. ங்க.. பை பை... ( நான் யாருக்கும் டா போட்டு பேச மாட்டேன்....!!!)

வாங்க ராஜாராமன் -> நன்றிங்கோவ்...

வாங்க சிவா -> விளம்பர இடைவேளையில் வந்ததற்கு நன்றி.... :-)))

வாங்க தமிழன் -> என்ன இது ச்சின்னப்புள்ளதனமா?... இதுக்கெல்லாமா டென்சனாகறது... கூல் கூல்....:-))

ILA said...

சின்னப்பையன் - உங்களை ரொம்ப காலமாவே சிங்கமாக்க நினைச்சுட்டு இருந்தோம், போன மாசம்தான் முடிஞ்சது. நல்ல நகைச்சுவையாளனை அட்லாஸா ஆக்கினதுக்கு நாங்க பெருமை பட்டுக்கிறோங்க. வாழ்த்துக்கள்! அப்படியே பெரிய நன்றிங்க! பூச்சாண்டியா நெறைய பயமுறுத்துங்க..

ச்சின்னப் பையன் said...

வாங்க விஜய் -> ஹிஹி... மரண மொக்கையோட - அரைபக்க கதைகளும், துறை மாறுதல் பதிவுகளும் கூடவே வரும் - பரவாயில்லையா?????

வாங்க இளா -> நன்றிங்க....:-))

T.V.Radhakrishnan said...

பாராட்டுகள் ச்சின்னப்பையன்

கப்பி | Kappi said...

அட்லாஸா கலக்கலோ கலக்கல்ஸ் ச்சின்னப்பையன்!! நன்றி!! :)

வால்பையன் said...

//எனக்கு அதிகமா எழுத வராது.//

அப்படியா

வால்பையன் said...

//நான் எப்பவுமே வாலிப வாலிப அன்பன் தாங்க. //

ச்சின்னபையன்னு சொன்னாங்க

வால்பையன் said...

// (இந்த நேரம் யாரும் துக்ளக் பின்னட்டை விளம்பரத்தை நினைக்காதீங்க....)//

அதை பார்க்காதவர்கள், ராஜ் டி.வீ. தமிழக பெண்களின் தாத்தாவை நினைக்காதீர்கள்

வால்பையன் said...

வாழ்த்துக்கள்

tamiljunction said...

Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.

Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com

சுபாஷ் said...

வாழ்த்துக்கள்