Wednesday, October 22, 2008

தோழர் மப்பு மன்னாரு !!

என் இனிய வலைத்தமிழ் மக்களே வணக்கம் , உங்கள் பாசத்திற்குறிய அதிஷகாந்த்( பேரோட காந்த் சேத்திகிட்டா பேமஸ் ஆகிரலாம் பிற்காலத்தில சி.எம்மா கூட ஆகலாம்னு சோசியர் ..... யாரு சுப்பையா சாரா இல்லைங்க நம்ம ஓம்கார் சுவாமிகள் சொல்லிஇருக்காரு அதான் )கொஞ்ச நாளா பிஸியாகிட்டேன் , தோ வந்திட்டேன் , அப்படிலாம் உங்ககிட்ட சொல்லணும்னு ஆசைதான் , ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் , அட்லாஸ் சிங்கத்துக்கும் முப்பத்தி ஒரு நாள் தானாமே , அதினால் இன்னைக்கு நாம நம்ம தோழர் மப்பு மன்னாருவோட கதைய பாக்கலாம் ,

_____________________________________________________________________

இந்த மப்பு மன்னாரு இருக்கானே அவன் ரொம்ப நல்லவன் சார் , அப்படித்தான் ஊருக்குள்ள யாருகிட்ட மன்னாருவ பத்தி கேட்டாலும் சொல்லுவாய்ங்க , ஆனா அவன பத்தி பேச ஆரம்பிச்சி சரியா பதினஞ்சே நிமிஷத்தில வெறி புடிச்ச முள்ளம்பன்னியாட்டம் நம்மளயும் குதறி , பக்கத்தில நிக்கறவங்களையும் பிச்சி பிராண்டி நோண்டி நொங்கெடுத்துருவாய்ங்க , ஏன்னா இதுல பாருங்க , மன்னாரு தண்ணியடிக்கற வரைக்கும் சாது , தண்ணியடிச்சிட்டான் பரம சாது (நான் சேதுனு சொல்லுவேன்னு நீங்க நினைச்சிருந்தா அதான் இல்லை , ஏன்னா நம்ம மன்னாருவோட ஸ்பெசலே அதான... )

அட விசயத்துக்கு வாடா என் பொங்கி னு நீங்க திட்றது எனக்கு கேக்குது , அப்படித்தான் பாருங்க ஒருநா ( அட எழவெடுத்தவனே எத்தினி கதைலதான் ஒருநாள் ரெண்டு நாளுனு , மாத்தி சொல்லுனு மனசு தவிக்குது , ஆனா உங்க மேல இருக்கற பாசம் அத தடுக்குது ) டிசம்பர் மாசம் 31ம் தேதி , அந்த டாபரும் நானும் இன்னும் கொஞ்ச பேரும் சேர்ந்து புத்தாண்ட ப்புல் பாட்டிலோட கொண்டாடலாம்னு முடிவு பண்ணோம் .

மன்னாரு அன்னைக்குனு பாத்து பர்ஸ் எடுத்துட்டு வரலியாம் ( ______ அப்படினு நான் திட்டினேன் அதெல்லாம் இங்க எழுதினா நாளானிக்கு அதே வார்த்தைல நாலு பேரு என்ன திட்டுவாங்க ) அந்த _____ என்னைக்குதான் பர்ஸ் எடுத்துட்டு வந்திருக்கு.

பாருக்கு போயி பர்ஸ் எடுத்த ஆம்பளையும் காருல போயி கடலைமிட்டாய் வாங்கின பொம்பளையும் உருப்பட்டதா சரித்திரம் பூகோளம் குடிமையியல் கூட இல்லையாமே !! ( இது கூட ஒரு நா மன்னாரு மப்புல உளறினதுதான் )

மீதி பேருலாம் காசுபோட்டு ஒரு புல் வாங்கிட்டு , வ.உ.சி பார்க்ல இருக்கற அம்மாம் பெரிய மைதானத்தில குந்திகிட்டு அடிக்க ஆரம்பிச்சோம் , சரியா பன்னெண்டு மணிக்கு ஆரம்பிச்சது , ஒன்னேகாலுக்கு முடிஞ்சிருச்சு , ஸ்ஸ்ப்பா இப்பவே கண்ண கட்டுதேன்னான் நம்ம மன்னாரு , (அந்த டாக் ஒரே ஒரு நைன்ட்டிதான் அடிச்சிருந்துச்சு ) . நான் வீட்டுக்கு போகணும் அம்மா வையும்னு அழ ஆரம்பிச்சிட்டான் . அந்த அர்த்த ராத்திரில நடந்தே ஊருக்குள்ள சுத்தி வந்து ஒரு பிரியாணி கடைய கண்டுபுடிச்சு வரிசையா உக்காந்தோம் , எலைய போட்டாங்க , அதுல மன்னாரு எலைக்கு வெளிய தண்ணிய தெளிச்சு லேசா டேபிள தொடச்சிவிட்டுக்கிட்டிருந்தான் . கேட்டா மப்புன்னான் ( 90 மப்பு ) .

மாப்பி எனக்கு ஒரு மாதிரி சுத்துதுடான்னான் , அதுலாம் ஒன்னுமில்ல ஒரு ஆப் பிரியாணி சாப்ட்டா எல்லாம் சரியாயிடும்ன்னேன் . பிரியாணி வந்திச்சி எல்லாருக்கும் வச்சாங்க , மன்னாரு மட்டும் கண்ண லைட்டா மூடிட்டு உக்காந்திருந்தான் ( 90 மப்பு ) . மன்னாரு மன்னாரு பாருடா உன் இலைல பிரியாணி போட்டாச்சுன்னேன் , சரிடா சாப்பிட்டேறனு கண்ண தொறந்து அத பாத்தவன் என்ன ஆச்சோ , உவ்வவ்வவே

நேரா வாஷ்பேசினுகட்ட ஓடினான் , கக்கி கக்கி வாந்தி எடுத்தான் , நான் தலைய புடிச்சி வுடட்டானு கேட்டா , அடப்போட ஒன்னுமில்ல ஸைடிஸ் சேரலன்னான் , ( நாங்க ஸைடிஸ் இல்லாமதான தண்ணியடிச்சோம் ) . அவன அங்கிருந்து கூட்டிட்டு வந்து மறுபடியும் சேர்ல உக்கார வச்சு தண்ணி குடிக்க வச்சு , தெளிவாக்கினா , லூசுப்பைய திரும்பி ஓடுறாட் பேசினுக்கு , போயிபாத்தா பேதில போறவன் ( ஸாரி வாந்தில போறவன் ) வாஷ்பேசின்ல வாந்தி முழுசா கரைஞ்சு போகலையாம் அதுனால பைப்ப திறந்து விட்டு குச்சி வச்சு குத்திக்கிட்டு நிக்கறான் . எங்களுக்கு செம கடுப்பாயிடுச்சு . அப்புறம் ஒரு மணிநேரத்திக்கு நாங்க அவன் கிட்ட பேசவே இல்லையே .


அது ஒரு பெரிய ஓட்டல் அங்க எங்க மானத்த வாங்கிட்டியேனு திட்டினோம் , அப்ப அவன் கேக்கறான் , மாப்பி ஒரு தம்மு கிடைக்குமானு , காலைல எல்லாரும் சேர்ந்து கேட்டோம் ஏன்டா நைட்டு அப்படி பண்ணேனு , மச்சி எனக்கு மப்புல ஒன்னுமே தெர்லடான்னான் .

அவ்ளோதான் மன்னாரு தண்ணியடிச்ச கதை.

இருங்க போயிடாதீங்க அவனுக்கெப்படி மன்னாருனு பேரு வந்திச்சுனு தெரியுமா... அது ஒரு கவித்துவமான நிகழ்வு , அதை பத்தியும் அதிலிருந்த அழகியல பத்தியும் மயஜோக்கன் கூட அவரோட வலைப்பக்கத்தில பக்கத்தில , பக்கத்திலனே ரொம்ப பக்கத்தில கிடையாது பக்கத்தில பக்கத்தில அத எழுதிதான் அவரோட வெப்ஸைட் சுலோ ஆகிருச்சுனு நம்ம வாசுகி சுலோ சொல்லிச்சு .


அவனும் நாங்களும் சேர்ந்து ஒரு நா சைட்டு அடிச்சிகிட்டிருந்தோம் அப்போ ஒரு ஆந்திரா பிகரு , ரோட்டில்ல யாருக்கோ வெயிட் பண்ணிருக்கும் போல இவனும் வெறிச்சு பாத்திகிட்டே இருந்தான் , ( ஏதாவது சொறிநாய் நம்மள உர் உர்னு பாத்துகிட்டே இருந்தா நாம அத்த திரும்பி பாக்க மாட்டமா அதே மாதிரி அந்த ஆந்திரா பார்ட்டியும் ஏதேச்சையா பாத்திடுச்சு) , பையனுக்கு உடனே குஷியாகி அவள இந்த நிமிசத்திலருந்து உயிருக்குயிரா காதலிக்கறேன்னுஎங்கிட்ட கவிதை சொல்ல ஆரம்பிச்சான் ( அப்பவும் 90 மப்பு பிளீஸ் நோட் திஸ் பாயிண்ட் ) ..


மச்சி அவ வசிக்கிறா ஆந்திரா
என் மனசில
வாசிக்கிறா தம்புரா...

எல்லாரும் அவன கேவலமா பாத்தோம் அவன் ஓயல , அந்த பொண்ணபாத்து ரொமாண்டிக்கா லுக் விட்டுகிட்டே

அவ என் மேல வீசறா சிறு பார்வைய
என் கவிதைல எதிர்பாக்காத கோர்வைய

எனக்கு கொலைவெறி வந்திச்சு , சரி சின்ன பையன் வயசுக்கோளாறுனு விட்டுட்டோம் ... ஆனாலும் சனியன் விடலையே

மச்சி
அவள பாத்தாலே பறக்குது தலை மேல கிளிடா
அவ என் மனசை சுக்குநூறா உடைச்ச உளிடாஅந்த பொண்ணு அப்பப்ப அந்த _______ ( மன்னிக்கனும் இங்கயும் கெட்ட வார்த்தை ) அடிக்கடி பார்த்து அவன சூடாக்கி எங்கள சாவடிச்சிட்டு இருந்தா

அவன் கவிதை சொல்லும் போது அப்படியே முகத்தில தில்லானா மோகானாம்பாள் சிவாஜியாட்டம் எக்ஸ்பிரசன் வேற .... அத பாத்து களுக்குனு ஒரு தடவ சிரிச்சிட்டா வேற ... அந்த எழவெடுத்தவ சிரிச்சா இவன் எங்க தாலியல்ல அறுப்பான் , அது அவளுக்கு தெரியுமாஅவள் பாஷையால மட்டும்தான்டா கொல்ட்டி- அவ
கற்புக்கு பங்கம் வந்தா காட்டிருவா
செருப்ப கழட்டி - அப்படிப்பட்ட
விசயத்தில அவ ஒரு தமிழ் சீமாட்டி சீமாட்டி....அப்ப பாத்து ஒரு கார் அதுல பத்து பதினைஞ்சு ( சரியா எண்ணல நான் கணக்குல வீக் ... அதுக்காக மத்த சப்ஜெக்ட்டுனு கேக்காதீங்க மத்ததில நான் ரொம்க வீக்கு ) பசங்க.. அவ அவங்கள பாத்ததும் ஏறி எஸ்கேப்பு.. போகும் போது இவன பாத்து சிரிச்சிட்டே போனா...

என்ன அவ தோள்ல்ல பக்கத்தில இருந்தவன் கைய போட்டிகிட்டு அவள கிஸ்ஸடிச்சிக்கிட்டே போனான்....

பையன் நொந்துட்டான்... கண்ணெல்லாம் தண்ணி , விசும்பி விசும்பி தேம்பி தேம்பி உருண்டு உருண்டு புரண்டு புரண்டுலாம் அழல சும்மா லைட்டா அழுதான் ..... மச்சி கவிதைய ஏன்டா நிறுத்திட்ட சொல்லுடானு நாங்க கலாய்க்க ... அவன் ரொம்ப சோகமா... ( கிளைமாக்ஸ்ல கேன்சர் வந்து செத்து போற ஹீரோ வாட்டம் முகத்த வச்சுகிட்டு )

பருத்தி உடைஞ்சா வெளிய வரும் பஞ்சு
எதுக்குமே உடையாததுடா என் நெஞ்சு
அவளுக்கு இருக்காலாம் ஆயிரம் பேரு
அவனால்லாம் மண்ணாங்கட்டி சேறுஅவ எப்பவுமே புரிஞ்சிக்கல என் காதல
நான் அவளோட போட முடியலயே கடல....

(இறுமுகிறான்... கதைனா சூழலும் பேசனுமாமே அதான்ப்பா இது )

என் மனசு ஏறி போகுது காருல...
இனிமே எப்பவும் நான் டாஸ்மாக் பாருல பாருல பாருல,..... க்க்க்க் ( இறுமுகிறான் )

அவனுக்கு நேர்ந்த கொடுமைய பாத்து எப்பவுமே காசு கொண்டு வராத மன்னாருகிட்டருந்த காசு வாங்கி நாங்கல்லாம் தண்ணியடிச்சோம் , அவன் எப்பவும் போல நைன்ட்டி அடிச்சு வாந்தியெடுத்தான் .

எப்பவும் போல வாஷ்பேசினேயும் குத்திவிட்டான்.... அப்போதாங்க எனக்கும் ஒரு கவிதை தோணிச்சு...

வாஷ்பேசின குத்திவிட்டா
அதோட அடைப்பு நீங்கும்
உன் நெஞ்ச அவ குத்திவிட்டா - உன் மனசு
எப்படி தாங்கும்......குச்சி வச்சு குத்திவிட்டா
அடைப்பு நீங்க
உன் மனசென்ன
கக்கூஸா...

பாவிப்புள்ள போகும்போது
வெடிக்க வச்சிட்டாலே
உன்மனச
பட்டாசா....இப்படி ஒரு கவிதைய எங்கிட்ட எதிர்பாக்காத மன்னாரு... வாழ்க்கைல மொத மொத அடுத்தவன் இவன் கவிதையால எவ்ளோ கஷ்டப்படுறானு பீல் பண்ணி நைன்ட்டியோட இன்னொரு பாட்டிபைவ் சேர்த்து அடிச்சு மட்டையானான்.....இப்படித்தாங்க வெறும் மன்னாருவா இருந்தவன் ஒரு மப்பு மன்னாருவா மாறினான் .

நம் தோழர் மன்னாருவின் சரித்திரம் இன்னுமொரு தரித்திரம் ........

இந்த சரித்திர தரித்திரத்தின் கதையை மேலும் தொடரலாம்... தொடராமலும் போகலாம் அல்லது என் வலைப்பூவில் தொடர வாய்ப்புண்டு .... ஜீவி ஆவி பாவி கூவி போன்ற பிரபல இதழ்களில் கூட வரலாம் அல்லது இதை ஒரு புதினமாக ( மப்புமன்னார் சரித்திரம் - பேர் நல்லாருக்கா ) கூட எழுதி காவியம் படைக்கலாம்... etc etc.......

___________________________________________________________________

21 comments:

அதிஷா said...

பின்னூட்ட டுபுரித்தனம்னு நான் சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க...

அதனால பின்னூட்ட குஜிலித்தனம்..

பூச்சாண்டியார் said...

T.R. ரேஞ்சுக்கு இந்த கொலை வெறி அவசியமா?

விஜய் ஆனந்த் said...

:-)))...

வெண்பூ said...

கலக்கல் அதிஷா...

//
இப்படி ஒரு கவிதைய எங்கிட்ட எதிர்பாக்காத மன்னாரு... வாழ்க்கைல மொத மொத அடுத்தவன் இவன் கவிதையால எவ்ளோ கஷ்டப்படுறானு பீல் பண்ணி நைன்ட்டியோட இன்னொரு பாட்டிபைவ் சேர்த்து அடிச்சு மட்டையானான்.....
//

இதை படிச்சிட்டு இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்..

narsim said...

What a coinsi thala.. namma postm ithuthaan today..

kalakkal..

narsim

அதிஷா said...

வாங்க பூச்சாண்டியார்....

நமக்கு இருக்கற கொலைவெறிய தீத்துக்கத்தான பதிவெழுதறதே..

ஹிஹி

அதிஷா said...

விஜய் சார் நான் எவ்ளோ சீரியஸா பதிவு போட்டிருக்கேன் இப்படி சிரிக்கிறியளே..

அதிஷா said...

நன்றி வெண்பூ

நன்றி நர்சிம் ... ஆமா தல இன்னைக்கு உங்க பதிவும் வாட் ஏ கோயின்சுடாண்சு

வால்பையன் said...

நம்ம வலையுலகில் கூட நிறைய மன்னார்கள் இருக்காங்க

ஒரு மன்னாரு எங்கிட்ட ஒரு புல்ல ரெண்டே ரவுண்டுல அடிப்பேன்னு சொல்லுச்சு
எப்படிடான்னு கேட்டேன்
ஒரு புல் கல்யாணி பீர் சொல்லுங்கறான்

வால்பையன் said...

கலக்கல் காமெடி

ILA said...

//குச்சி வச்சு குத்திவிட்டா
அடைப்பு நீங்க
உன் மனசென்ன
கக்கூஸா...

பாவிப்புள்ள போகும்போது
வெடிக்க வச்சிட்டாலே
உன்மனச
பட்டாசா....//

கலக்கல் கவுஜ.:))

கணினி தேசம் said...

:-))..

வடகரை வேலன் said...

யப்பாஆஆஆ! எப்டிப்ப இப்டி? தாஆஆங்க முடியல.

ச்சின்னப் பையன் said...

:-)))))))))))))))))

அதிஷா said...

நன்றி வால்பையன்

அதிஷா said...

நன்றி இளா

அதிஷா said...

சிரிப்பானுக்கு நன்றி கணினி தேசம்

அதிஷா said...

வாங்க வடகரை வேலன்

அதுக்கு பேருதான் கொலைவெறி கவுத

அதிஷா said...

மிக நீண்ட சிரிப்புக்கு நன்றி சின்னப்பையன்

அதிஷா said...

பின்னூட்ட குழந்தைத்தனம்

வீணாபோனவன் said...

யப்பா எப்படிப்பா உங்களால மட்டும் இப்படியெல்லாம்???? மண்டைய தடவி தடவி எழுதுவிங்களோ?? பாத்துப்பா இருக்கதே கொஞ்சம், அதுவும் கொட்டிட போவுது :))

வீணாபோனவன்.