Wednesday, August 8, 2007

விவாஜி - THE FARMER

சின்னத் தல ராயலாரின் நல்லாசியோடு சங்கம் புரொடக்ஷன்ஸ் வழங்கும்

விவாஜி - த பார்மர்

"எலேய் பொடியா கதையைச் சீக்கிரம் சொல்லு.. எங்க டேமேஜர் எந்நேரம் வேணும்ன்னாலும் வந்து என் டவுசரைக் கிழிப்பான்.. " சின்னத் தல கான் கால் போட்டுவிட, நான், அடியேன் சின்னப் பொடியன் கதையோட ஓப்பனிங் சீனைச் சொல்ல ஆரம்பிச்சேன்..

எடுத்த உடனே.. அந்த ஆறாயிரம் பேர் வேலைப் பாக்குற சங்கம் டெக்னாலஜீஸ் ஆபிஸ் கேம்ப்ஸை டாப் ஆங்கிள்ல்ல காட்டுறோம்... பின்னாடி ஓன்னு மியூசிக்...

கேமராவை ஜூம் பண்றோம்..
அப்படியே ஒரு சிஸ்டம் ஷட் டவுண் ஆகுது..
மானிட்டர் ஆப் ஆகுது..
கனெக்ஷ்ன் ஓயர் எல்லாம் கழட்டுறாங்க..
நம்ம ஹீரோவை அப்படியே பிடிச்சி எழுப்பி கூட்டிட்டு போறாங்க...

கையைப் பிடிச்சுட்டு இழுத்துட்டுப் போகும் போது ஆபிஸ்ல்ல ஒரு ஒரு டிபார்மெண்ட்ல்ல இருந்தும் மக்கள் சவுண்ட் விடுறாங்க..

"அய்யோ எங்க பார்மர் எங்களுக்கு எல்லாம் மாசம் பத்தாயிரம் பேருக்கு கடலைப் போடுறது எப்படின்னு ஐடியா கொடுத்தாரே அவரைப் போய் இப்படி பிடிச்சுட்டுப் போறீங்களே"

"ஆறு வருசமா சேட்டிங்க்கெ இல்லாத எங்க ஆபிஸ்க்கு எங்க பார்மர் ஒரு வாரத்துல்ல சேட்டிங் சாப்ட்வேர் எல்லாம் டகால்டியா டவுண்லோட் பண்ணிக் கொடுத்தாரே"

"எங்க பார்மர்க்கு மட்டும் மறுபடியும் சிஸ்டம் கொடுக்கல்ல தமிழ் இணையமே மொக்கையாயிடும்.. ஜல்லி அள்ளி தெறிக்கும்...ஆமா" என சில இளைஞர்கள் ஆவேசப் படுகிறார்கள்.

"அவனை கொறைஞ்சப் பட்சம் பத்து மாசமாவது பெஞ்ச்ல்ல உக்கார வைக்கணும்ய்யா.. நான் சேட் பண்ண பிகரைக் கூட கிடைச்சக் கேப்ல்ல உஷார் பண்ணிட்டான்..." டாப் மேனேஜ்மென்T சொட்டை ஒண்ணு பார்மர் மீது எரிச்சல் கொள்கிறது.

"எஸ் எஸ் அவனை பெஞ்ச் விட்டு எழுப்பவே கூடாது... ஆன் சைட் பிகரை கூட அபேஸ் பண்ணிட்டான்..WE SHOULD NOT LEAVE HIM" இன்னொரு மேனேஜர் பக்க வாத்தியம் வாசிக்கிறார்.

அப்படியே சீன் பெஞ்ச்கு மூவ் ஆகுது...

அட்மின் கேபின் அங்கே நம்ம ஹீரோ நிக்குறார்...

அட்மின் எக்ஸ்கிட்டிவ் நம்ம பார்மரைப் பார்த்துக் கேக்குறார்...

பெயரு.... விவாஜி
தொழில்.. கடலைப் போடுறது...சாரி கோடு எழுதுறது...

அப்புறம் பெஞ்ச்ல்ல போய் உக்காராரு நம்ம பார்மர்.. அங்கே பக்கத்து பெஞ்ச்ல்ல நம்ம அபி அப்பா (கெஸ்ட் ரோல்)

"ஆமா நீ எதுக்குப் பெஞ்ச்க்கு வந்த.. பிராஜக்ட் முடிஞ்சு போச்சா?"

குனிந்தப் படி பார்மர் இல்லை என தலையை ஆட்டுகிறார்...

"அப்புறம் பெர்மான்ஸ் சரி இல்லையா?"

மறுபடியும் பார்மர் குனிந்த தலை நிமிராமல் இல்லை எனத் தலை ஆட்டுகிறார்.

"எதாச்சும் ட்ரெயினிங்கா...?"

அதற்கும் இல்லையெனத் தலையாட்டா அபி அப்பா கடுப்பாகி அப்புறம் என்ன இழவுக்குய்யா இங்கே வந்து குந்திகிட்டு இருக்கன்னு சவுண்டா கேக்க

பயங்கர மீசிக் இங்கேப் போடுறோம்....அப்படியே கேமராவை கன்னாபின்னான்னு ஆங்கிள் வச்சு தரையிலே இருந்து பார்மர் தலையைத் தூக்குறதை எமோஷனலாக் காட்டுறோம்...
பார்மர் சிரிச்சிகிட்டே சவுண்டா சொல்லுறார்....

வேலைச் செஞ்சேன்ய்யா

அடப் பாவமே வேலைச் செஞ்சா பெஞ்சா... அபி அப்பா எமோஷனலாக
மறுபடியும் பார்மர் சிரித்துக் கொண்டே சொல்லுறார்..

பார்மர்ன்னா விவசாயி.. இந்த விவசாயிக்குத் நல்லாத் தெரிஞ்ச வேலை.. கடலைச் சாகுபடி பண்ணுரது.. அதைச் செஞ்சேன்....

அப்படின்னு சொல்லிட்டு ஹா...ஹா...ஹா...ன்னு அவர் பாணியிலே சிரிக்குறார்

"இது தான் சின்னத் தல நம்ம படத்தோட ஓப்பனிங்.. ஓகேவான்னு" நான் பயந்துக் கேக்க...

சின்னத் தல கான் கால் லைன்ல்ல தமிழ் மணத்தின் உச்ச நட்சத்திரமே லைன்ல்ல வந்தார் அவர் குரலைக் கேட்டு நான் ஆடிப் போயிட்டேன்...

"ம்ம்ம் டேய் சின்னப் பொடியா உன் ஓப்பனிங் எல்லாம் நல்லாத் தான் ஆனா பினிசிங் சரியா இருக்குமான்னு" அவர் கேக்க ....

"அண்ணே மீதி கதையையும் சொல்லுறேன் கேக்குறீயளா" அப்படின்னு கேட்டேன்...

"இப்போ நான் ரொம்ப பிசி பேஸ்கட் பால் பிராக்டீஸ்ல்ல இருக்கேன்.. டூமாரோ கால் பண்ணி கன்டினியூ பண்ணு" அப்படின்னு போனை வச்சிட்டார்...

அப்போ மீதியை நாளைக்குப் பாக்கலாமா இல்லை இத்தோட நிறுத்திக்குவோமா மக்களே நீங்களே சொல்லுங்க...

23 comments:

ILA(a)இளா said...

சும்மா இருந்த சிங்கத்தை சீண்டலாம், சீறிட்டு இருக்கிற சிங்கத்தை சீண்டினா, சின்னா பின்னான்னு ஆகிருவீங்க.

சூப்பர் ஸ்டார்டிங்க்

ஜொள்ளுப்பாண்டி said...

//அய்யோ எங்க பார்மர் எங்களுக்கு எல்லாம் மாசம் பத்தாயிரம் பேருக்கு கடலைப் போடுறது எப்படின்னு ஐடியா கொடுத்தாரே அவரைப் போய் இப்படி பிடிச்சுட்டுப் போறீங்களே"//

ஹஹஹஹஹஹா
விவாஜி
சும்மா பேரைக்கேட்டாலே கடலை கருகுதுல்ல?? :))))))

ஜொள்ளுப்பாண்டி said...

//நான் சேட் பண்ண பிகரைக் கூட கிடைச்சக் கேப்ல்ல உஷார் பண்ணிட்டான்..."//

ஓ மை காட் !!! அந்த ரேஞ்சுகு 'பிட்' டைப்போடுவாரா நம தல ?? ;))))))))

ஜொள்ளுப்பாண்டி said...

//பார்மர்ன்னா விவசாயி.. இந்த விவசாயிக்குத் நல்லாத் தெரிஞ்ச வேலை.. கடலைச் சாகுபடி பண்ணுரது.. அதைச் செஞ்சேன்....///

வார்ரே வா!!! சும்மா ஒப்பனிங்கே சும்மா 'கேலோபிங்' கா சிலுபிகிட்டு இருக்கே !!! போகப் போக எப்படியெல்லாம் இருக்குமோன்னு தோணுதே !!! பொடியா சீக்கிரம் அடுத்த பார்ட் ரெடி பண்ணுப்பா ! :)))))

Boston Bala said...

எக்சலண்ட் :)))

அப்புறம் என்னங்க ஆவுது? ;)

இராம் said...

//Boston Bala said...

எக்சலண்ட் :)))

அப்புறம் என்னங்க ஆவுது? ;) //


பாபா,

இன்னும் இருக்கு..... நம்ம விவாஜி கடைசி சீன்'லே மேட்ரிக்ஸ் டைப் பைட் பண்ணுறவரைக்கும் கலக்குவோமில்ல.... :)


//சும்மா இருந்த சிங்கத்தை சீண்டலாம், சீறிட்டு இருக்கிற சிங்கத்தை சீண்டினா, சின்னா பின்னான்னு ஆகிருவீங்க. //

விவாஜி,

சூப்பர் Quote'ங்க.... :)

சந்தோஷ் said...

////சும்மா இருந்த சிங்கத்தை சீண்டலாம், சீறிட்டு இருக்கிற சிங்கத்தை சீண்டினா, சின்னா பின்னான்னு ஆகிருவீங்க. ////
ssss ebba onnum mudiyalapa.. padathoda opening scene sonna vudane namma vivaku punch diaogue ellam varuthu paruda... mudiyala viva mudiyala

வெட்டிப்பயல் said...

சி.பொ,
கலக்கல் பதிவு...

பெருசு said...

சும்மா கருகுதில்லலலல!!!

பன்ச் டயலாக் வெச்சுக்கலாமா!

CVR said...

/அப்போ மீதியை நாளைக்குப் பாக்கலாமா இல்லை இத்தோட நிறுத்திக்குவோமா மக்களே நீங்களே சொல்லுங்க...//

என்ன கேள்விலே இது!!!
சீக்கிரம் அடுத்த பகுதிய போடு மக்கா!!!

பொடியன் அடிச்சு கிளப்பறான் போல!! :-D

G.Ragavan said...

சூப்பரு...படம்னா இப்பிடித்தாம்யா இருக்கனும்....கலக்கலு

படத்துக்குப் பாட்டு வேண்டாமா....அதையும் போடுங்கப்பா...கலக்கலா இருக்கும்.

யோசிப்பவர் said...

அட! பிளாஷ் பேக்ல என்ன வரப் போகுதுன்னு பயங்கர சஸ்பென்ஸா இருக்கே!

பி.கு.: பிளாஷ் பேக் வருமான்னே பயங்கர சஸ்பென்ஸா இருக்கு!!;-))

ILA(a)இளா said...

சீறிட்டு இருக்கிற சிங்கத்தை சீண்டுறதும், ஓடுற ஃபெராரி முன்னாடி நிக்கிறதும் ஒன்னுதான்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

சிபொ
விவாஜி சூப்பரு!

//எஸ் எஸ் அவனை பெஞ்ச் விட்டு எழுப்பவே கூடாது... ஆன் சைட் பிகரை கூட அபேஸ் பண்ணிட்டான்..//-இன்னொரு மேனேஜர் பக்க வாத்தியம் வாசிக்கிறார்//

நல்ல காலம் மேனஜர் பேர் எல்லாம் சொல்லலை!
இல்லாக்காட்டி சாங் கேக்குற மக்கள் ஃபைட்டும் இல்ல கேப்பாய்ங்க! :-)

Anonymous said...

கோடிக்கணக்குல பணம் போட்டு எடுக்கிறதை ஈஸியா காமெடி பணறீங்களே, எப்படிப்பா??

துரை

வெங்கட்ராமன் said...

அடுத்த பதிவ போடுங்கப்பா. . . .
சஸ்பென்ஸ் தாங்க முடியல. . .

J K said...

//"அவனை கொறைஞ்சப் பட்சம் பத்து மாசமாவது பெஞ்ச்ல்ல உக்கார வைக்கணும்ய்யா.. நான் சேட் பண்ண பிகரைக் கூட கிடைச்சக் கேப்ல்ல உஷார் பண்ணிட்டான்..." //

பேசுனாவே எரியறாங்க. அவனோட பிகர உசார் பண்ணினா, எவ்வளவு டென்சன் ஆகும்.


ஹாய் பொடிஸ்,

வில்லன் யாரு?...

அபி அப்பா said...

அடங்கொய்யால! எப்டிய்யா இப்படில்லாம்! சின்ன பொடியன் தூள் பண்றார்ப்பா! ஆஹ அடுத்த காட்சி கடலேலக்கா கடலேலக்கான்னு பாட்டோட ஆரம்பிக்குதா! சீக்கிரம் போடுங்கய்யா!:-))

கைப்புள்ள said...

//கடலேலக்கா கடலேலக்கான்னு பாட்டோட ஆரம்பிக்குதா! சீக்கிரம் போடுங்கய்யா!:-))//

:))

பொடியா! ஆரம்பமே அசத்தலா இருக்கு. நம்ம அண்ணன் விவாஜி யாரோட சோடி போடப் போறாருன்னு சொல்லவேல்ல? இப்பவே சீறுற சிங்கம், ஃபெராரின்னு சவுண்டு பலமா இருக்குது...அடுத்து என்ன ஆகப் போகுதோ தெரியலியே?

கண்டினியூமா...வெயிட்டிங் ஃபார் விவாஜி

Infinity said...

தயவுசெய்து மீதி கதையையும் சொல்லிவிடவும்

Infinity said...

Just Cool !!!கதையை மேற்கொண்டு நகர்தவும்......Awaiting

தம்பி said...

இப்ப தலைக்கு ஆப்பே வைக்கறதில்லயே ஏன்?

ஆதிகேசவன் கேரக்டருக்கு நம்ம பாலா பாய் இல்லன்னா அய்யனாரை சிபாரிசு செய்கிறேன்.

அந்த மொக்கை கேரக்டரை அவர்களைத்தவிர வேறு யாரும் சிறப்பாக செய்து விட முடியாது. :))

கோபிநாத் said...

\\"எங்க பார்மர்க்கு மட்டும் மறுபடியும் சிஸ்டம் கொடுக்கல்ல தமிழ் இணையமே மொக்கையாயிடும்.. ஜல்லி அள்ளி தெறிக்கும்...ஆமா" என சில இளைஞர்கள் ஆவேசப் படுகிறார்கள்.\\

அட்டகாசம் ;-)))