Thursday, October 2, 2008

காந்தி கணக்கு பற்றிய ஒரு ஆராய்ச்சி!!!

நம்ம எல்லாருக்குமே ஒரு டவுட்டு இருக்கும் காந்திகணக்குனா என்னானு , எனக்கு கூட அந்த காலத்தில ( அந்த காலம்னா அந்த காலம் கிடையாது , சமீபத்தில சமீப காலத்திலனு வச்சிக்கலாம் ) . சரி நண்பருங்கிட்ட கேட்டா அவங்க அதுலாம் சொல்லித்தந்தா புரியாது அனுபவிக்கனும் மச்சி னுட்டாங்க.

இன்னாங்கடா இவனுங்களோட ரோதனையா பூட்ச்சேனு நாமளா கண்டுபுடிக்கலாம்னு ஆராய்ச்சில இறங்கி ஆராஞ்சா , அப்போதான் தெரிஞ்சிது அட இந்த மேட்டர் (விசயம்ங்க ) அனுபவிக்க வேண்டியது ஆராயக்கூடாததுனு . என்ன இவன் அது என்னானு சொல்ல மாட்டேன்றானேனு நீங்க யோசிக்கறது புரியுது எசமான் , அது ரொம்ப சிம்பிள் உங்களுக்கு புடிச்ச ஒரு பிகரையோ ( பல பிகருங்க இருந்தாலும் ஒகேதான் ) அல்லது சில அல்லது பல நண்பர்களையோ ஒன்னா சேத்துகிட்டு ஊருக்குள்ள ரொம்ப காஸ்ட்லியான ( இட்லி இல்ல காஸ்டிலி விலை உயர்ந்த ஒகேவா ) ஹோட்டலுக்கோ இல்ல தியேட்டருக்கோ அதுவுமில்லனா ஒரு நல்ல பாருக்கோ கூட்டிட்டு போயி டிரிட்டுனு சொல்லிட்டோ இல்ல சும்மானாச்சிக்கும் வேணும்கிறதுலாம் உங்க செலவுல பண்ணுங்க , எல்லாம் முடிச்சுட்டு ஆன செலவுக்கு காசு கணக்கு போட்டு கூட்டிகிட்டு போன மக்கள் கிட்ட கணக்கு கேட்டு பாருங்க , அவங்கல்லாம் முகத்தில ஒரு ரியாக்ஷனும் குடுக்காம தேமேனு முழிச்சுக்கிட்டு நிப்பாங்க , அது மாதிரி செலவு பண்றதுக்கு பேருதான் காந்தி கணக்கு . குடுத்தா திரும்ப வராத கணக்கு எல்லாமே காந்தி கணக்குதான் . இந்த மாதிரி வரலாற்றில கூட பல உதாரணங்கள் இருக்கு , ஆனா அதெல்லாம் இங்க சொன்னா என்னயும் சங்கத்த விட்டு விரட்டி என்னையும் புதுசா ஒரு சங்கம் தொடங்க வச்சிருவாங்க அதனால நோ ஹிஸ்டரி , ஸ்டிரைட்டா கம்மிங் டு த பாயிண்டு . கணக்கு கேட்ட விவகாரம் எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே .

சரி இந்த காந்தி கணக்குக்கு எதுக்கு காந்தி பேர வச்சாங்கனு தெரியுமா ? அதுக்கு ஒரு கதை இருக்கு ... அப்படினு லாம் சொல்லி பதிவ வளக்க விரும்பல அதுவும் சிம்பிள்தான் , காந்தி தாத்தா நமக்கெல்லாம் என்ன வாங்கித்தந்தாரு , ம்ம்ம் சுதந்திரம் , எதுக்கு வாங்கி தந்தாரு நாமெல்லாம் நல்லாருக்கணும் நாலு இடம் சுத்தணும் வேலா வேலைக்கு தண்ணி அடிக்கணும் , நிறைய தம்மடிக்கணும் , சைட்டடிக்கணும்னுதான , ஆனா பாருங்க அவரு நமக்கு இப்படி ஒரு சுதந்திரத்த வாங்கி தந்ததுக்கு எதினா பிரதிபலன் பாத்தாரா , இல்லையே அது மாதிரிதான் , எந்த பிரதிபலனும் பாக்காம நீங்க மத்தவங்களுக்கு செய்ற செலவுக்கு காந்திகணக்கு னு பேரு .

இதுக்கு டமாரு குமாரு மிக்கீபீடியால இன்னொரு விளக்கமும் இருக்கு அதாவது காந்தி ஒரு தியாகி நம்ம தலைவர் கைப்புள்ள மாதிரி எவ்ளோ அடிச்சாலும் தாங்கிப்பாரு , அதே மாதிரி நீங்க யாருக்காவது காசு குடுத்தாலும் , அவங்க உங்கள ஒரு தியாகியா நினைச்சு உங்களயும் காந்தி லெவல்ல திங்க் பண்ணி அந்த காச திருப்பி குடுத்து உங்கள அசிங்கப்படுத்தாம நீங்க குடுத்த காசு கணக்க .... காந்தி கணக்கா ஆக்கிருவாங்க .... நீங்களும் அவன திட்டவும் முடியாம அடிக்கவும் முடியாம அஹிம்சா வழில கால் பாதம் தேயற வரைக்கும் காசு கேட்டு அலைஞ்சிகிட்டு காந்தி மாதிரி ஒல்லியாகிடுவீங்க....

மக்களே இப்ப புரிஞ்சுதா காந்தி கணக்குக்கு ஏன் காந்திகணக்குனு பேருவந்திச்சுனு... இது தவிர காந்தி கொள்கை கூட இருக்கு ஆனா அத பத்திலாம் எழுதினா என்ன சங்கம் கவனிக்கும்ங்கறதால கழண்டுக்கிறேன்பா.......

இன்னைக்கு நம்ம சங்கத்தோட சார்பா காந்திஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கறது சங்கத்து சிங்கங்கள் .

9 comments:

Athisha said...

பின்னூட்ட டுபுரித்தனம்

வீணாபோனவன் said...

மீ த வெஸ்ட்... நல்லாவே யோசிக்கிறிங்க... இன்னும் யோசிங்க.. :-))

-வீணாபோனவன்.

குடுகுடுப்பை said...

நல்ல ஆராச்சி, இதுக்கு ஆரு ஊட்டு கம்பூட்டர காந்தி கணக்குல யீசு பண்ணீய

வால்பையன் said...

//நம்ம எல்லாருக்குமே ஒரு டவுட்டு இருக்கும் காந்திகணக்குனா என்னானு//

திரும்பி வராத எல்லாமே காந்தி கணக்கு தான், சில நேரத்தில் பின்னூட்டங்கள் கூட அந்த கணக்கில் சேரும்

பரிசல்காரன் said...

காந்தி ஜெயந்தியன்னைக்கு, ஜெயந்தி பத்தி பதிவு போடாம காந்தி பத்தி ஏதோ எழுதினதால உங்களை போனாப் போகுதுன்னு விடறேன்...

தேவகோட்டை ஹக்கீம் said...

காந்தி தாத்தா வாழ்க...தாத்தாவை நினைவுபடுத்திய அதிஷா வாழ்க...வாழ்க...

Cable சங்கர் said...

//காந்தி ஜெயந்தியன்னைக்கு, ஜெயந்தி பத்தி பதிவு போடாம காந்தி பத்தி ஏதோ எழுதினதால உங்களை போனாப் போகுதுன்னு விடறேன்...//

பரிசல் ஆனாலும் உங்களுக்கு நகைச்சுவை உணர்வு ஜாஸ்தி..

ILA (a) இளா said...

//அந்த காலம்னா அந்த காலம் கிடையாது , சமீபத்தில சமீப காலத்திலனு வச்சிக்கலாம் ///
சமீபத்திலனாவே அந்தக்காலம்னுதான் நினைச்சுட்டு இருக்கேன். இதுல சமீப சமீபத்துலனா 1800 நூற்றாண்டுன்னுதானே அர்த்தம்

செல்வ கருப்பையா said...

அதானே... நான்கூட எதோ காந்தி ஒரு சேட்டுகிட்ட கடன வாங்கிட்டு ஏமாத்திட்டதுனால இந்தப் பேருன்னு நெனைச்சேன்.