Monday, December 15, 2008

நெஞ்சுக்கு சேதி - பாகம் 1

பதிவுலக மாமணிகளே... பின்னூட்டப் பெருமணிகளே...கேள்விகள் ஒன்றும் எனக்கு புதிதல்லவே.. நான் நடந்து வந்த பாதையில் நாகங்களும் ஓடி வந்த ஹவேக்களில் ஒலமிட்ட ஒநாய்களும் ஏராளம்..தாராளம்..இந்தக் கேள்விகளில் ஒலிக்கும் ஏளனம் கூட எனக்கு பூபாளம்..

என் பொது வாழ்க்கை ஆசான் பாலைவன பகலவன் பெனத்தலாரும்..என் அண்ணன் ஜெர்சி தலைவன் இலவசனாரும் எனக்குக் காட்டிய வழியில் இது வரை இஞ்ச் அளவு கூட இப்படி அப்படி நகராமல் நடந்து கொண்டிருப்பவன் நான்...

பதிவுலகமும் அதைச் சார்ந்த ஆதி பதிவர்களின் வரலாறு புவியியல் புள்ளியியல் எதுவும் அறியாமல் காலம் மடியில் கொடுத்தக் கணிணியை விரலிடுக்கின் வித்தைகளுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்தச் சீமான்களும் கோமான்களும் கனவான்களும் கேள்வி என்ன... கேலி என்ன....விட்டால் பதிவுலகையேக் காலி கூடச் செய்வார்கள் போலிருக்கிறது...

பொறுமை காப்போம் பொறுத்துப் போவோம் என பல அன்பு நெஞ்சங்களும் பாச உள்ளங்களும் எனக்கும் மடலும் குடலும் ஆம் நல்ல அசைவ விருந்தில் முக்கிய பதார்த்தம் இட்டு கேட்டுக் கொண்டார்கள்.. சங்கத்தின் ஊது குழலாய் ஓயாமல் ஒலித்த என்னைப் பார்த்தூஉழல் ஊழல் என குழல் ஊத இன்று கிளம்பியிருக்கும் கண்ணபிரான்களின் கேள்விகளைப் படித்தப் போது...சங்கத்துச் சிங்கங்களே போர்வாளாம் எனக்கு இதயம் இடித்தது...கண்கள் பனித்தன....

போர்வாளுக்கு இப்படி என்றால்... ஒரு சாதரண அடிப்படை தொண்டனுக்கு எப்படி இருக்கும்... போர்வாளை தங்கள் தவப்புதல்வனாய் நினைக்கும் தாய்மார்களும்... அண்ணனாக கொண்டாடும் தங்கையரும் தாங்குவரா... சிந்தித்தேன்.. சித்தம் தெளிந்தேன்...களம் எனக்கு புதிதல்ல...பதிவு மேடை எனக்கு பஞ்சு மெத்தை..அதில் விழும் கமெண்ட்கள் என் மீது தெளிக்கப் படும் பன்னீர் புஷ்பங்கள் என எண்ணுபவன் நான்...


இன்று கேள்வி கேட்க கண்ணி தொடும் மேதாவிகள்.... சங்கம் வளர்ந்த வரலாறு அறிவார்களா...அவர்கள் எல்லாம் வேலை பார்க்கவே அலுவலகம் சென்றவ்ர்கள்... பன்னிரெண்டு மணி நேரம் உழைத்து அதற்கு பின் அவர் தம் மேலதிகாரிக்கு வளைத்து நெளித்து கூனி குறுகியவர்கள்... பதிவுலகமே வாழ்க்கை என பல நாட்கள் பணி செய்ய மறந்து புராஜ்க்ட்டைத் துறந்து..பெஞ்சில் அமர்ந்து.. அப்புரேசல் ஆப்புரேசல்களாய் மாற்றி.... அதனால் கிடைத்த வசைகளை இசையென மாற்றி கச்சேரி படைத்தவன் இந்தப் போர்வாள் என்பதாய் உண்ர்வார்களா...

அலுவலக கீ போர்ட்களுக்கும் அழகு தமிழ் உடுத்தி தமிழ் வளர்த்த பரம்பரையிடம் கேள்வி கேட்கிறீர்கள்..

பந்தல் போட்டு பதிவு வளர்த்த உங்களுக்கு சென்னை வீதி கச்சேரிகள் வைத்தவனிடம் எடக்கு கேள்விகள் கேட்க மட்டும் தான் தெரியும்...

ம்ம்ம்ம் மூன்று எழுத்துக்கும் தமிழக அரசியலுக்கும் உள்ள நெருக்கம் உம் கண்ணை மறைக்கிறதோ... ஆம்ஸ்ட்ராடாம்.. பாரீஸ் எனக் கண்ட இடத்தில் எல்லாம் கைத் தூக்கிய வண்ணம் புகைப்ப்ட கருவிக்கு வசிகரமாய் விருந்தளித்து உலகம் சுற்றும் வாலிபனாக ஆக முடியாது... அது பகல் கனவு... அதனால் கிடைக்காமல் போகலாம் உமக்கு அடுத்த வேளை உணவு...

அரிதாரம் பூசியதால் அரியணை ஏறலாம்... போர்வாள் போருக்கு வரவில்லை.. வாளோரம் துரு பிடித்திருக்கும்... அந்த துருவை வைத்து போர்வாளுக்கு பதிவுலகில் இருந்து துறவு கொடுக்கலாம் என எண்ணம் கொண்டீரோ....

நயகாரா ஓரமாய் நீங்கள் அமர்ந்து வயாக்ரா பற்றி நடத்திய ஆராய்ச்சி என்ன என்று என்னாலும் கேள்வி கேட்க முடியும்...கேள்விக்கு கேள்வி பதிலாகாது என நான் பாடம் படித்திருக்கிறேன்... அதனால் நாக் காக்கிறேன்... நாணயமாய் இருக்கிறேன்...

வாலிபத் தலைவன் வாலிபால் இளைஞன் கைப்புள்ள மால்கேட்டில் சிறைப்பட்ட போது சதிகாரர்களின் கையில் சங்கத்து மெயின் கேட் சாவி சிக்காமல் காத்தச் சரித்திரப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்து விட்டு வந்து கேள்வி கேளுங்கள்

பாலைவனத் தேசத்துக்கு பதிவுலக சூப்பர் ஸ்டார் விவாஜியார் பிடித்து அனுப்பப் பட்டப் போது அந்த விமானத்தில் அழகிகள் புடைச் சூழ அவர் அவதிப் பட்ட அல்லல் கதைகளை அயலவர் ஆசைக் காட்டி பதிவெழுதச் சொன்னப்போது கூட அதற்கெல்லாம் அசையாதவன் இந்த போர்வாள்

பல முக சித்தர் பல ஐடி பித்தர் அருமை நண்பர் தளபதியாரின் ஐடிகள் எத்தனை என்று என்னை விலை பேச வந்தவர்கள் புறமுதுகிட்டு ஓடிய விவரங்களைக் கேட்டு விட்டு வந்து கேள்வி கேளுங்கள்

தாவணி கனவுகளின் மொத்தக் காதலன் வாலிப தேசத்தின் முதல் குடிமகன் ஜொள்ளு பாண்டியின் காதல் டைரி குறிப்புகளுக்கு பொழிப்புரை புரியுமா உங்களுக்கு... முடிந்தால் புரிந்து கொண்டு வந்து கேள்வி கேளுங்கள்

நீங்கள் வரிசைக் கட்டி கேள்வி கேட்டு விட்டீர்கள்....

நெஞ்சுக்குள் பெய்யுது மாமழை... நீருக்குள் முழ்குது தாமரை....ஆம் இதயம் இடித்தது.. கண்கள் பனித்தன...

சத்தியத்தின் சோதனை துவங்கி விட்டது.... யுத்தம் துவங்கி விட்டது.... பதிவு போடும் நல்லுலகமே கேளுங்கள்... போர்வாள் முழக்கம்... உங்கள் நெஞ்சுக்கு ஒரு சேதி சொல்ல கிளம்பி விட்டேன்....

வாழ்க பதிவு... வளர்க பின்னூட்டம்... எழுக சங்கம்.. ஒழிக துரோகம்....

29 comments:

இராம்/Raam said...

இதை படிச்சா கலைஞர் என்ன, நம்ம லக்கியே கண்ணு'லே தண்ணி வர்ற அளவுக்கு கன்னாபின்னா'னு சிரிப்பாரு.... :))

பினாத்தல் சுரேஷ் said...

//என் பொது வாழ்க்கை ஆசான் பாலைவன பகலவன் பெனத்தலாரும்..என் அண்ணன் ஜெர்சி தலைவன் இலவசனாரும் எனக்குக் காட்டிய வழியில் இது வரை இஞ்ச் அளவு கூட இப்படி அப்படி நகராமல் நடந்து கொண்டிருப்பவன் நான்.//

என்னை மட்டும் அடிக்காதீங்க ந்னு சொல்ற மாதிரி இருக்கு!

//கண்ணபிரான்களின் கேள்விகளைப் படித்தப் போது...சங்கத்துச் சிங்கங்களே போர்வாளாம் எனக்கு இதயம் இடித்தது...கண்கள் பனித்தன....//

இதெல்லாம் மகிழ்ச்சியான மேட்டருக்குதானே நடக்கும்?

//உங்கள் நெஞ்சுக்கு ஒரு சேதி சொல்ல கிளம்பி விட்டேன்....//

அப்ப.. இன்னும் சொல்லலியா?

ஆனாஒண்ணு (ஆவன்னாதான் ரெண்டு) -- உங்கள் போராட்டத்துக்கு (அது எந்த எழவா இருந்தாலும்) என் கண்மூடித்தனமான ஆதரவு உண்டு!

இராம்/Raam said...

இன்னுமா நாம் நம்முடைய கழகத்தில் (ச்சே) கலக சங்கத்தில் பழைய மொந்தையில் புதிய கள் என தங்கள் சட்டைகளை தாங்களே கிழித்துக்கொள்ளும் வழக்கமான நகைச்சுவை பதிவுகளை தந்திருந்தனர். நகைச்சுவையை பலகோணங்களில் வைக்க வேண்டும் நிறைவேற்றுவார்களா??? என பலவகையில் வந்த கோரிக்கைகளை மறக்கலாமா?

இதை படித்தால் குடிக்கும் டீயில் சர்க்கரை இனித்து, தம் போட வேணுமின்னு தோண வேண்டாமா?

மறுபடியும் தம் வாடைய போக்க பான்-பராக் போடவேணாமா என எதிர் கழகத்தினர் கேள்விகளில் கொக்கரித்தால் அதற்குதான் உற்ற தோழன் ஹால்ஸ் என ஏடுகளில் குய்யன் எழுதி வைத்தது என பதில்களில் இறுமாப்பு கொள்வோம்'வென செங்கொடி (ச்சே) பச்சை கொடி (ஓ அதுவும் இல்லையா) JKR கட்சியின் கொடி தூக்குவோம் சிங்கங்களே.... :)

ஆயில்யன் said...

//கேள்வி என்ன... கேலி என்ன....விட்டால் பதிவுலகையேக் காலி கூடச் செய்வார்கள் போலிருக்கிறது//


ஆமாம்!

ஆமாம்!

(எண்ட்ரீக்கிறேன்ப்பா) :))

ஆயில்யன் said...

//இராம்/Raam said...
இதை படிச்சா கலைஞர் என்ன, நம்ம லக்கியே கண்ணு'லே தண்ணி வர்ற அளவுக்கு கன்னாபின்னா'னு சிரிப்பாரு.... :))
///


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

ஆயில்யன் said...

//பினாத்தல் சுரேஷ் said...
//என் பொது வாழ்க்கை ஆசான் பாலைவன பகலவன் பெனத்தலாரும்..என் அண்ணன் ஜெர்சி தலைவன் இலவசனாரும் எனக்குக் காட்டிய வழியில் இது வரை இஞ்ச் அளவு கூட இப்படி அப்படி நகராமல் நடந்து கொண்டிருப்பவன் நான்.//

என்னை மட்டும் அடிக்காதீங்க ந்னு சொல்ற மாதிரி இருக்கு!
///


எதுவா இருந்தாலும் பர்ஸ்ட்டு அங்க முடிச்சுட்டு அப்பாலிக்க என்கிட்ட வாஙக்ன்னும் சொல்ற மாதிரியே எனக்கு தோணுது!

:)))))

ஆயில்யன் said...

//பதிவுலகமே வாழ்க்கை என பல நாட்கள் பணி செய்ய மறந்து புராஜ்க்ட்டைத் துறந்து..பெஞ்சில் அமர்ந்து.. அப்புரேசல் ஆப்புரேசல்களாய் மாற்றி.... அதனால் கிடைத்த வசைகளை இசையென மாற்றி கச்சேரி படைத்தவன் இந்தப் போர்வாள் //


மறக்க முடியுமா???

:))))

(ஹய்ய்ய் இந்த டைட்டில் வைச்சும் அடுத்த அட்டாக் ஆரம்பிங்க பாஸ்!)

ஆயில்யன் said...

//அந்த துருவை வைத்து போர்வாளுக்கு பதிவுலகில் இருந்து துறவு கொடுக்கலாம் என எண்ணம் கொண்டீரோ....நயகாரா ஓரமாய் நீங்கள் அமர்ந்து வயாக்ரா பற்றி நடத்திய ஆராய்ச்சி என்ன//
பாஸ்

இதுக்கு பேர்தான்

”நய”வஞ்சகர்களா?

இராம்/Raam said...

//ஆயில்யன் said...

//அந்த துருவை வைத்து போர்வாளுக்கு பதிவுலகில் இருந்து துறவு கொடுக்கலாம் என எண்ணம் கொண்டீரோ....நயகாரா ஓரமாய் நீங்கள் அமர்ந்து வயாக்ரா பற்றி நடத்திய ஆராய்ச்சி என்ன//
பாஸ்

இதுக்கு பேர்தான்

”நய”வஞ்சகர்களா?//

இந்த இடத்திலே "நயம்" வந்ததால் நயமாய் நயந்தாரா'க்குவென தனி சங்கம் அமைந்த நயவஞ்சகர் நயந்தாரா பித்தர் சிபியின் துணிகரத்தையும் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன், ஆசைப்பட்டு இருக்கிறேன், அவருக்கு தனியே என் நெஞ்சத்தில் துரோகியென என பட்டமும் கொடுத்துருக்கிறேன்.... அடுத்த கலக'த்தின் பெயருக்கென இருக்கும் குழுவில் சங்கத்தின் வரவு-செலவுகளின் கணக்கு கேட்கவும் கடமைப்பட்டு இருக்கிறேன்... :)

ஆயில்யன் said...

//நெஞ்சுக்குள் பெய்யுது மாமழை... நீருக்குள் முழ்குது தாமரை....ஆம் இதயம் இடித்தது.. கண்கள் பனித்தன...சத்தியத்தின் சோதனை துவங்கி விட்டது.... யுத்தம் துவங்கி விட்டது///

யுத்தம்!

யுத்தம்!

கேக்கட்டும் எட்டுத்திக்கும்

வஞ்சகர்களின் அய்யகோ சத்தம்!

தூண்டிவிட்டீர் சிங்கத்தை

முடிந்தது உம் கதை!

ஆயில்யன் said...

நெஞ்சுக்கு ஒரு சேதி!

மாறும் தினமும் தேதி!

வரப்போகுது நிறைய சேதி!
மீ த வெயிட்டீங்க :)))))

ஆயில்யன் said...

//இந்த இடத்திலே "நயம்" வந்ததால் நயமாய் நயந்தாரா'க்குவென தனி சங்கம் அமைந்த நயவஞ்சகர் நயந்தாரா பித்தர் சிபியின் துணிகரத்தையும் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன், ஆசைப்பட்டு இருக்கிறேன், அவருக்கு தனியே என் நெஞ்சத்தில் துரோகியென என பட்டமும் கொடுத்துருக்கிறேன்.... அடுத்த கலக'த்தின் பெயருக்கென இருக்கும் குழுவில் சங்கத்தின் வரவு-செலவுகளின் கணக்கு கேட்கவும் கடமைப்பட்டு இருக்கிறேன்... :)///

ஆஹா இப்பத்தான் ஒண்ணொண்ணா வெளியே வருதா??

நயமாய் நயந்தாரா சங்கம் வைத்தவர்

நியாயமாய் கணக்கு சொல்ல வருவார் என்ற எதிர்பார்ப்புடன்

காத்திருக்கும் ராம்

நீங்க ஜெயிக்கணும்!

:)))

இலவசக்கொத்தனார் said...

நல்லது நடந்தாத்தான் கண்கள் பனிக்கணும். தம்பி ஆத்திரத்தில் அறிவிழந்து பேசி விட்டாய் போகட்டும். பனித்த என வந்ததை சிவந்தன எனப் படித்துக் கொள்கிறோம்.

வருங்கால முதல்வர் said...

என்னாதுப்பா இது,ஒன்னுமே புரியல

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

களை கட்டுதே! களை கட்டுதே!
என்ன களை-ன்னு அண்ணன் கொத்தனாரே வந்து கொத்துவாரு! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//மறுபடியும் தம் வாடைய போக்க பான்-பராக் போடவேணாமா என எதிர் கழகத்தினர் கேள்விகளில் கொக்கரித்தால் அதற்குதான் உற்ற தோழன் ஹால்ஸ் என ஏடுகளில் குய்யன் எழுதி வைத்தது என பதில்களில் இறுமாப்பு கொள்வோம்//

ராயலு...
இதை படிச்சா லக்கி என்ன,
நம்ம கலைஞரே கண்ணு'லே தண்ணி வர்ற அளவுக்கு கன்னாபின்னா'னு அழுவாரு! :)))
வசன உலக வாரிசு-ன்னு உன்னை அறி-விச்சாலும் விச்சுருவாரு! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//எதுவா இருந்தாலும் பர்ஸ்ட்டு அங்க முடிச்சுட்டு அப்பாலிக்க என்கிட்ட வாஙக்ன்னும் சொல்ற மாதிரியே எனக்கு தோணுது!//

ஆயிலுக்கு ஒரு முறை தோனினா, அது ஆயிரம் பதிவருக்கு, அவர்களின் ஆயிரம் பதிவில், ஆயிரம் முறை தோனினா மாதிரி-ன்னு சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இதுக்கு பேர்தான் ”நய”வஞ்சகர்களா?//

ஹா ஹா ஹா
ராமு! அது அப்படியில்ல!
நயனைக் கெஞ்சித்தும், தேவைக் கிஞ்சித்தும் சட்டை செய்யாது, சிபியிடம் தஞ்சித்து, போர்வாளை வஞ்சித்ததால் வந்த வினை!

சரி, இப்போ நான் என்னா சொன்னேன்? :)

//அடுத்த கலக'த்தின் பெயருக்கென இருக்கும் குழுவில் சங்கத்தின் வரவு-செலவுகளின் கணக்கு கேட்கவும் கடமைப்பட்டு இருக்கிறேன்... :)//

அடியேன் "ராமா"-னுஜ தாசன் :)))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

தேவ் அண்ணே!
ஒவ்வொரு கேள்விக்கும் தனித்தனி பதிவாப் போடுங்க-ண்ணே!
ஒங்களை நம்பித் தான் "நெஞ்சுக்கு சேதி" பதிப்புரிமையை இப்பத் தான் வித்து முடிச்சேன் :)

வால்பையன் said...

கூல் கூல்

நாகை சிவா said...

கச்சேரி வாசிச்சுக்கிட்டு இருந்தவரை இப்படி முரசொலி சே... சோக கீதம் வாசிக்க வச்சுட்டீங்களே....

நாகை சிவா said...

காந்திக்கு ஒரு சத்திய சோதனை
காலம் க்கு ஒரு அக்னி சிறகுகள்
கலைஞர் க்கு ஒரு நெஞ்சுக்கு நீதி
கச்சேரி வைப்பவனுக்கு ஒரு நெஞ்சுக்கு சேதி என காலம் பதிவு செய்யட்டும் ( கோவியாரே... சீக்கிரம் ஆகட்டும்)

நாகை சிவா said...

பத்தி பத்தியா எழுதினாலும் ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லாம சமாளிச்சு இருக்கான் பாருய்யா எங்க ஆளு..

ஆயில்யன் said...

// நாகை சிவா said...
பத்தி பத்தியா எழுதினாலும் ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லாம சமாளிச்சு இருக்கான் பாருய்யா எங்க ஆளு..
//


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்! :)))

சந்தனமுல்லை said...

ROTFL தேவ்!!

PoornimaSaran said...

// வருங்கால முதல்வர் said...
என்னாதுப்பா இது,ஒன்னுமே புரியல

//


ரிப்பிட்டேய்.........

ஜொள்ளுப்பாண்டி said...

அஞ்சாநெஞ்சன்...
வீராதி வீரன்...
எங்கள் தங்கம்...
சங்கத்து சிங்கம்...
புரட்சி ஏந்தல்....
தமிழின புல்டோசர்...
எங்கள் போர்வாள்...
வருக... வருக....

:))))

அண்ணாத்தே தேவ்.... பின்னிபுட்டீக போங்க..... :)))))

ஜொள்ளுப்பாண்டி said...

//பல முக சித்தர் பல ஐடி பித்தர் அருமை நண்பர் தளபதியாரின் ஐடிகள் எத்தனை என்று என்னை விலை பேச வந்தவர்கள் புறமுதுகிட்டு ஓடிய விவரங்களைக் கேட்டு விட்டு வந்து கேள்வி கேளுங்கள் //

:))))))
தள தள தான்....'தள'யின் ராஜதந்திரங்களை அறிந்தவர் யார்..?? :)))))

நாமக்கல் சிபி said...

//பத்தி பத்தியா எழுதினாலும் ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லாம சமாளிச்சு இருக்கான் பாருய்யா எங்க ஆளு..//

அதுதான்யா அரசியல் நாகரிகம்!
பதிவுலக பாரம்பரியம்!

எங்கள் போர்வாள் ஒன்றும் பதிவுலக பாரம்பரியம் மறந்தவர் அல்லவே!