Friday, October 10, 2008

ஜே.கே.ரித்திஷ்குமார் ஆவது எப்படி ? பயிற்சிப்பதிவு


இப்பூவுலகில் பிறந்திட்ட அனைவருக்குமே ஒரு நாள் பிரபலமாகிட வேண்டும் என்கிற அவலும் ஆசையும் நிச்சயம் இருக்கும் . எனக்கும் உங்களுக்கும் ஏன் இவ்வலையுலகில் வலம் வரும் சகலருக்கும் இருக்கும் . ஆனால் இன்றைய சினிமா நட்சத்திரங்களில் புகழின் உச்சிக்கே சென்றுவிட்ட ஒரு நல்ல நடிகர்,மாமனிதர் , மாமாமனிதர் , தொழிலதிபர் , வாழும் பாரி,ஓரி,காரி,பூரி, இப்படி பல அடைமொழிகளையும் தனக்குத்தானே சூட்டிக்கொண்டு திரையுலகில் யாரும் எட்டாத இடத்தை பிடித்த அண்ணன் ரித்திஷ்குமார் அவர்களைப்போல ஆகவேண்டும் என்பதே இன்றைய இளைஞர்களின் கனவாகும்.
ரித்திஷ்குமார் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி ஒரு சிறந்த மனிதர் , அவரை பின்பற்றி இன்றைய தமிழக இளைஞர்களும் கண்களில் கண்ணாடியும் கலர்கலராய் ஜீன்சும் அணிந்துகொண்டு நம் நாட்டிற்கும் ஏழை மக்களுக்கும் சேவை செய்ய எண்ணி அவரைப்போல ஆகவிழையும் காட்சிகளை இன்றைய தமிழகத்தின் நெருக்கடி மிகுந்த ரங்கநாதன் தெரு , பர்மா பஜார் போன்ற பகுதிகளில் காணலாம் . ஊர்க்குருவி பருந்தாகுமா இல்லை ஓட்டகம்தான் படி ஏறுமா அது போல யாராலும் அவ்வளவு சுலபமாய் அண்ணன் ரித்திஷ்குமார் அவர்கள் எட்டிய தூரத்தை எட்ட இயலாது . அதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது , அதுக்குதாம்பா இந்த பதிவு அக்காங்..........

1.முதலில் உடனடியாக ஏதாவது ஒரு உப்புமா கட்சியிலாவது சேர்ந்து கொண்டு அதில் உறுப்பினர் ஆகி விடுங்கள் .

2.மறந்துவிட்டேன் அதறகு முன் எங்காவது டீக்கடையில் கிளாஸ் கழுவவும் .

3.பிறகு எவனாவது இளிச்சவாயனுக்கு பினாமியாக இருக்கவும்
4.அந்த இனா வாயன் எங்காவது தலைமறைவாக இருக்கையில் அந்த சொத்துக்களை உங்கள் பெயருக்கு மாற்றிக்கொள்ளவும் .
5.உடனடியாக ஒரு படம் துவங்கவும் . அதில் கௌரவ வேடத்தில் நடித்து வெள்ளோட்டம் பார்க்கவும் .

6.இப்போது உங்களுக்கே உங்கள் யோக்கியதை தெரிந்திருக்கும் .ஸாரி உங்களுக்கே உங்கள் அழகு தெரிந்துவிடும்

7.மிக பிரபலமான படப்பெயரில் ஒருபிரபல ஆங்கில படத்தின் கதையை அப்படியே சுட்டு புதிய படத்தை தொடங்கவும்...........

8.முதலில் ஜேகேஆர் போல ஆக உங்கள் முகத்தை எப்போதும் பைல்ஸ் வந்த குரங்கைப்போல வைத்துக்கொள்ள வேண்டும் . ( பல் தெரியாமல் சிரிக்கணும் )

9.ஜிகினா வைத்த சட்டைகளையும் ஆரஞ்சு , மஞ்சள் , ரோஜா நிற பேண்ட்களையும் உபயோகிக்கவும்

10.அடிக்கடி மீடியாக்களில் நம் பெயர் வருவது போல எதாவது குரங்கு சேட்டைகளை செய்ய வேண்டும்

11.ஊரில் இருக்கும் ஆட்டோ , பைக்கு, சைக்கிள் , கைவண்டி , குழந்தைகள் நடைவண்டி என பாரபட்சமின்றி எல்லாவற்றிலும் உங்கள் பெயர் அல்லது உங்களது லேட்டஸ்ட் பட விளம்பரம் என உங்கள் சம்பந்தப்பட எந்த கருமத்தையாவது மாதம் 2000 ரூபாய் என பேசி அளித்து விடவும்

12.பத்திரிகையாளர்கள் உங்களை அசிங்கமாக திட்டினால் அதை துடைத்து போட்டுவிட்டு சிரித்தமாதிரி ஒரு படத்திற்கு போஸ் மட்டும் கொடுத்துவிட்டு எஸ் ஆகி விடவும் . பதில் சொல்லாதீர்கள் . அது மாபெரும் காமெடி ஆக்கப்படலாம்.

13.ஆளுங்கட்சிக்கு நிறைய நிதி கொடுக்கவும் , உங்கள் விழாக்களுக்கு அவர்களை அழைத்து சீன் போட உதவும் .

14.உங்கள் ஏரியாவில் நடக்கும் காதுகுத்து , மூக்கு குத்து , பூப்புனித நீராட்டுவிழா என்று எல்லா நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொள்ளவும் .

15.அந்த நிகழ்ச்சி நடத்துபவரிடம் முன்னாலேயே காசு குடுத்து உங்கள் படத்தை பெரிதாக போட்டு சூறாவளி ஸ்டார் , அதிரிபுதிரி அண்ணன் இது போன்ற அடைமொழியோடு போஸ்டர் அடித்து கொள்ளவும்

16.நிறைய ஏழைகளுக்கு உதவி செய்யவில்லையென்றாலும் ஏழைகளோடு நின்று போட்டோ எடுத்து கொள்ளவும்

17.இது தவிர சினிமாவில் நடிக்கும் போது சில விடயங்களை பின்பற்ற வேண்டும்


1.காதல் காட்சிகளில் விளக்கெண்ணய் குடித்தமாதிரி முகத்தை வைத்துக்கொள்ளவும்

2.ஆக்சன் காட்சிகளில் இஞ்சிதின்ன டோமர் மாதிரி இருப்பது நல்லது

3.செண்டிமென்ட் காட்சிகளில் காலைவேளையில் எவ்வளவு முக்கியும் வரவில்லையெனில் எப்படி இருப்பீர்கள் அப்படி ஒரு முகபாவம் அவசியம்

4.வீரவசனம் பேசும்போது முகத்தை உராங்குட்டன் என்னும் விலங்கைபோலிருப்பது உசிதம் (உராங்குட்டனை பார்த்ததில்லையே மேலே படத்தில் பார்க்கவும் )


இதுபோல 45மண்டலங்கள் விடாது செய்து வர எல்லாம் வல்ல இலச்சிமலை ஆத்தா புண்ணியத்தில் நீங்களும் ரித்திஷ்தான்,


பி.கு. :


இது போன்ற முயற்சியால் விழையும் பின்விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல , இம்முயற்சியில் உங்களுக்கு மட்டுமல்ல உங்களை சுற்றியுள்ளவர்களுக்கும் பல பேராபத்துகள் நிகழலாம் அதனால் ஜாக்கிரதையாக இருக்கவும்.


இது தவிர நீங்கள் முழுமையான ரித்திஷ்குமார் ஆன பின் குழந்தைகளிடம் தயவு செய்து போய்விடாதீர்கள் குழந்தைகளுக்கு அடுத்த நாளே சீதபேதி,வயிற்றுப்போக்கு போன்ற வியாதிகள் வரலாம்


அதே போல் ஆடு,மாடுகள் இருக்கும் பகுதிகளுக்கும் செல்லவேண்டாம் . அவைகளின் சாவுக்கு நீங்கள் காரணமாயிருப்பதை கம்பேனி விரும்பாது.(பாவம் அனிமல்ஸ் )


ஜே.கே.ரித்திஷ் நாமம் வாழ்க ...... அகிலமெல்லாம் அவர் புகழ் வளர்க

30 comments:

வெண்பூ said...

சென்னை சைதாபேட்டை வட்ட அகிலாண்ட நாயகன் நற்பணி ரசிகர் மன்றம் சார்பில் இந்த கட்டுரைக்கு கடும் கண்டனம் தெரிவித்து அதிஷா வீட்டின் முன் மாபெரும் ஆர்பாட்டம் நடைபெறும் என்று எச்சரிக்கிறேன்..:))

கார்க்கி said...

ங்கொய்யால ஆர்ப்பாட்டாமா? ஆட்டோதான்..

ராப்
அப்துல்லா
ச்சின்னப்பையன்
ஜோசப்

எங்க போய்ட்டீங்க எல்லோரும்.. அதிஷா இன்னைக்கு அப்பளம்ஷா தான்.. இடம் தெரியாம கை வச்சிடிங்க. உங்கள என்ன பண்றோம் பாருங்க.. நாயகன் ஹிட்டானதக்கபுறமும் இந்த பேச்சா? தள்பது வருது.. வேட்டைப்புலி வருது.. எங்கத தல அவ்வளவு லேசா நினைச்சிட்ட்ங்க்ளா? உங்கள..
(வெறும் சவுண்டுதான் வுடுறேனோ)

தமிழ் பிரியன் said...

சங்கம் இதைக் வ’ண்’மையாகக் கண்டிக்கிறது. அதிஷாவின் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பும் செலவை சங்கமே ஏற்றுக் கொ’ல்’கிறது.

சரவணகுமரன் said...

:-))

விஜய் ஆனந்த் said...

:-)))...

சிங்கத்த சீண்டிப்பாக்குறீங்களா!!!

நான் மட்டும் said...

/சங்கம் இதைக் வ’ண்’மையாகக் கண்டிக்கிறது. அதிஷாவின் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பும் செலவை சங்கமே ஏற்றுக் கொ’ல்’கிறது./-தமிழ் பிரியன்


இதை நான் வழிமொழிகிறேன்

அண்ணன் அஞ்சா நெஞ்சன்,மாவீரன்,வீரச்செம்மல் வீரத்தளபதி வாழ்க..

இவன் said...

தோ வந்திட்டேன்... எங்க தலைவர பற்றி தப்பா பதிவா இத நான் வன்மையாக சங்கம் சார்பில் கண்டிக்கிறேன்..... இந்த பதிவுக்காக ஏற்கனவே ஆட்டோ வீடு தேடி அனுப்பப்பட்டது....மீண்டும் இவ்வாறு பதிவு போடப்பட்டால் லாரி அனுப்பபடும் எனபதையும் தெரிவித்துக்கொள்கிறேன்


வீரதளபதி
அகில உலகநாயகன்
J.K.ரித்தீஸ்
தொண்டர்கள் சார்பில்
இவன்

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

அகிலாண்ட நாயகன் அண்ணன் ரித்தீஷ் ரசிகர் மன்றம் சார்பாக எனது எதிர்ப்பினை இங்கே பதிகிறேன் !

குடுகுடுப்பை said...

நீங்க படம் பாத்திட்டீங்க அதீசா
நாயகம்,பந்தயம்,குருவி ...
எப்படி உங்களால மட்டும்

rapp said...

அப்படியே மஞ்சா சட்டை, நீல பேன்ட் போட்டு பீச்சுக்கு காற்று வாங்க செல்லவும்:):):)

இராப்
தலைவி,
அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்

புதுகை.அப்துல்லா said...

மவனே எதாவது பதிவர் சந்திப்புல உன்னைய நேர்ல பார்க்காமலா போப்போறேன்...அன்னைக்கு இருக்குடி ஓனக்கு சங்கு.....
ஆழம் தெரியாமல் கால விட்ட அதிஷா ஓழிக!ஓழிக!ஓழிக!

:))

மொக்கைச்சாமி said...

நடிப்பு சுனாமி, 8 வது உலக அதிசயம் ஜே.கே.ரித்திஷ் ரசிகர் மன்றம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

ILA said...

அடுத்த கேபின்ல இருக்கிற வெள்ளைக்காரன் என்னைய பார்த்து “கிறுக்கு புடிச்சு போச்சா”ன்னு கேட்டுட்டு போறளவுக்கு சிரிச்சுபுட்டேன்.

கப்பி | Kappi said...

:)))


அப்படியே உங்க பேரை போட்டு ஒரு கொலைத்தளம் உருவாக்கனும் - http://www.jkritheesh.com இது மாதிரி

ரொம்ப நல்லவன் said...

எல்லாரும் ஏன் கோபப்பட்டு ஆட்டோ லாரின்னு பேசுராங்கன்னே தெரியலையே?
தானை தலைவர் , செயல் புயல் J K R ஆவதற்கு பயிற்சி அளிப்பது ஒரு குற்றமா ?
அநியாயமா இருக்கே ..

தேவ் | Dev said...

தொடர்ந்து சங்கம் இப்படி அண்ணன் வீரத்தளபதியை இழிவுப் படுத்தும் விதம் கட்டுரைகள் வெளியிடுவதை தே.மு.தி.வ.வா.கழகம் கடுமையாக கண்டிக்கிறது. விரைவில் இதை எதிர்த்து எக்குத் தப்பானப் போராட்டங்கள் வலையுலகத்தின் திக்கெங்கிலும் நடைபெறும் என அறிவித்து கொள்கிறேன்..

செந்தழல் ரவி said...

///முதலில் ஜேகேஆர் போல ஆக உங்கள் முகத்தை எப்போதும் பைல்ஸ் வந்த குரங்கைப்போல வைத்துக்கொள்ள வேண்டும் ////

இந்த டேர்ம் எங்க புடிச்சீங்க ?

அதுவும் இல்லாம ப்ராக்டீஸ் செஸ்ஷன்ல மூனாவது பாய்ண்ட் !!!

அல்ட்டிமேட்...!!!

ச்சின்னப் பையன் said...

அதிஷாவுக்கெதிரான கண்டன போராட்டத்தில் நானும் குதிக்கிறேன்.... (பதிவ படிச்சிட்டு சந்தோஷத்திலே குதிக்குறதா யாரும் தப்பா நினைச்சிடவேண்டாம்....!!!).

பூச்சாண்டியார் said...

:))

கணினி தேசம் said...

///முதலில் ஜேகேஆர் போல ஆக உங்கள் முகத்தை எப்போதும் பைல்ஸ் வந்த குரங்கைப்போல வைத்துக்கொள்ள வேண்டும் ////

அவ்வ்வ்வ்வ்...... உக்கார்ந்து யோசிப்பிங்களோ..!!

இந்த வரியை படித்துவிட்டு சிரித்ததில் என் வயிறு புண்ணாகிவிட்டது.
மேலும் படித்ததில் விழுந்து விழுந்து சிரித்ததில் நிறைய Damage ஆகிவிட்டது.
மருத்துவ செலவை தாங்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லையேல் வக்கீல் நோட்டீஸ் வரும். தயாராக இருங்கள்.

tamilraja said...

ஆனாலும் ரொம்ப தைரியம்தான் உங்கள் போட்டோவை போட்டு விட்டு ரித்திசை கலாய்ப்பது

ரொம்ப கொடுமையான ஆட்கள் நீங்கள் பாவிகளா!!

(பின்னூட்டத்தில் ஒத்து ஊதியவர்களையும் சேர்த்து!)

tamilraja said...

கணினி தேசம் said...//
/
/ மிஸ்டர் மன்மத குஞ்சு !
உங்கள் போட்டோ எப்படி இருக்குன்னு கண்ணாடியில பாருங்க நண்பா அப்புறம் சிரிக்கலாம் கொடுமை!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தம்பி..

இது எல்லாத்தையும்விட முக்கியமானது ஒண்ணை விட்டுட்ட..

அதுதான் பணம்.. காசு.. துட்டு.. மாலு.. கரன்ஸி..

இதை அள்ள அள்ள குறையாத அட்சயப்பாத்திரத்தில் பக்கத்தில் வைத்துக் கொண்ட பின்புதான் நீ சொல்லியிருக்கும் மற்றவைகளைப் பின்பற்ற வேண்டும்.

'ஒரிஜினல்' அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.

அந்த 'அட்சயப்பாத்திரம்' எது என்பதுதான் யாருக்கும் விளங்கவில்லை..

கணினி தேசம் said...

///tamilraja///

நண்பா,
ஒரு போட்டோவுக்கு போரா?
பெரும் அக்கப்போராக இருக்கிறதே !!!

சூர்யா - மும்பை said...

>செண்டிமென்ட் காட்சிகளில் காலைவேளையில் எவ்வளவு முக்கியும் வரவில்லையெனில் எப்படி இருப்பீர்கள் அப்படி ஒரு முகபாவம் அவசியம்<

நச்சென்ற வரி. ஏதேனும் ஆட்டொ வந்ததா?

அன்புடன்

சூர்யா.

poonguzhali said...

Really excellent. ரெம்ப enjoy பண்ணுற மாதிரி இருந்தது.

பட்டிக்காட்டான் said...

http://selventhiran.blogspot.com/2008/10/blog-post_772.html

தயவு செய்து வ.வா. சங்கம் மற்றும் இங்கே பின்னூட்டம் இட்டவர்கள் செல்வேந்திரன் அவர்களின் இந்த இடுகையை பார்க்கவும்.

Anonymous said...

ரீசென்டா இந்தியா வந்திருந்தேன், சென்னைல எங்க பார்த்தாலும் ஒரே ரித்தீஷ் (காமெடி!) மயமா இருந்துது!
அதுல "வீரத் தளபதி"னு பட்டம் வேற, ஆனா... அதீஷா, இவ்வளவு பேர் பாக்கிறோமே, பாக்க வேண்டியவர் பாத்துத் திருந்துவாரா??

ஏக்கங்களுடன்(அவ்வ்வ்வ்வ்!!!!),
மது!!!
(அப்பாடீ, நம்ம பங்குக்கு நாமளும் ஏதோ (அதீஷா அளவுக்கு இல்லேன்னாலும்) கலாய்ச்சாச்சு!!)
ஹிஹிஹி!

-மது

Jayaprakash J said...

Super appu.. carry on

T.Jeyam said...

அருமையான பதிவு.. பயனுள்ள நல்ல தகவல்........!