Monday, February 12, 2007

உறக்கம் தொலைத்த இரவுகளில்.

எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதல்லவா இந்த தலைப்பு? ம்ம் நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்த தொடக்கத்தில் எழுதிய தொடர் இது.இங்கே காதலுக்காக ,காதல் மாததுக்காக ஸ்பெசலாய்.

ஆண்களும் பெண்களும் ஒன்றாக படித்த பள்ளியில் தான் நான் படித்தேன்
இருந்தாலும் எங்களை பிரித்தே வைத்திருந்தார்கள்.ஒரு சில வகுப்புகளுக்கு நாங்கள் ஒன்றாக இருப்போம்.பெரும்பாலும் எங்களுக்கு என்ன பாடம் எடுக்கிறார்களோ
அதே தான் பெண்கள் வகுப்பிலும் எடுப்பார்கள். அந்த ஆண்டில் புத்தக பற்றாக் குறை,ஆரம்ப நாட்களில் பெண்கள் எங்களிடமும் ,நாங்கள் பெண்களிடமும் புத்தங்கங்கள் வாங்கிக் கொள்வோம்.

அந்த பசுமையான காலங்களை நினைத்து எழுதிய
கவிதைகள்.


1.

உயிரியல் புத்தகத்தில்
'முத்தமிடல் நோய் பரவுவதற்கு முக்கிய காரணம்'
என்ற வரியில் முத்தமிடல் என்ற வார்த்தையை
அடிக்கோடிட்டு இருந்தாய்.


அன்றை தினம் இரவில் இந்த விஷயத்தை
நீ தொலைபேசியில் சொல்லி என்னிடம்
கேட்ட போது

உன்னிடன் புத்தகம் கடன் வாங்கிய
நான் அந்த வரியிலேயே அன்று முழுவதும்
நின்றிருந்ததை மறைத்து


'அப்படியா..? கவனிக்க வில்லையே' என்றேன்
நினைவிருக்கிறதா.....?


2.என் அக்காவுடன் பொருட்காட்சி நீ
சென்ற அந்த நாளில்
எங்கே உன்னுடன் வந்தால் நாம்
இருவரும் நண்பர்களாகி விடுமோ
இவள் என் காதலியாக தானே வரவேண்டும்
என்பதற்காக வேண்டுமென்றே
டியூசன் போகிறேன் என்று
ஓடி ஒளிந்தேன் நினைவிருக்கிறதா?



தொடரும்.....

7 comments:

ILA (a) இளா said...

//'முத்தமிடல் நோய் பரவுவதற்கு முக்கிய காரணம்'
என்ற வரியில் முத்தமிடல் என்ற வார்த்தையை
அடிக்கோடிட்டு இருந்தாய்.//
:)கோடிடுதலும், கோடிட்டு காட்டுதலும் அருமை

கார்த்திக் பிரபு said...

கோடிடுதலும், கோடிட்டு காட்டுதலும் அருமை //

முதல் கமெண்ட்டுக்கு நன்றி தலைவா

Unknown said...

என்னப்பா வெறும் இரண்டு போட்டுட்டு நிறுத்திட்டே.. முதல் கவிதை மறுபடியும் மறூபடியும் வாசிக்க வைக்கும் ரசனையான வரிகள்..:)

கார்த்திக் பிரபு said...

தேவ் | Dev said...
என்னப்பா வெறும் இரண்டு போட்டுட்டு நிறுத்திட்டே.. முதல் கவிதை மறுபடியும் மறூபடியும் வாசிக்க வைக்கும் ரசனையான வரிகள்..:)
//
அதுக்கு கீழே பாருங்க தொடரும்னு போட்டிருக்கேனே

Unknown said...

கார்த்திக்,

புத்தகம் விடும் தூதா? பள்ளிக்கூடத்துல நல்லா படிச்சிருக்கப்பா காதல் பாடத்த! ;-)

சரி, இப்படி ரெண்டோட நிறுத்தலாமா?

ஒரு அரை டஜனாவது போட்டிருக்க வேணாமா?

இனியாள் said...

கார்த்தி,

நான் உறக்கம் தொலைத்த இரவுகளில் படிச்சி இருக்கேன் ஆனாலும் இந்த ரெண்டு கவிதைகளும் படிச்ச நினைப்பு இல்ல..... மொத கவித சூப்பரு அப்பு....
நான் கூட ஆண்-பெண் ஸ்சூல் தான் ஆனாலும் இப்படி எதுவும் உருப்படியா செய்யலயே யா......

இனியாள்

கார்த்திக் பிரபு said...

அருட்பெருங்கோ said...
கார்த்திக்,

புத்தகம் விடும் தூதா? பள்ளிக்கூடத்துல நல்லா படிச்சிருக்கப்பா காதல் பாடத்த! ;-)

சரி, இப்படி ரெண்டோட நிறுத்தலாமா?

ஒரு அரை டஜனாவது போட்டிருக்க வேணாமா?

12/2/07 6:37 PM

//

வாரும் காதல் கோ ..அரை டஜன்னா அந்த அள்வுக்கு கற்பனை எல்லாம் இப்போ இல்லப்ப ..வயசாயிடுச்சுல்லா
Iniyal said...
கார்த்தி,

நான் உறக்கம் தொலைத்த இரவுகளில் படிச்சி இருக்கேன் ஆனாலும் இந்த ரெண்டு கவிதைகளும் படிச்ச நினைப்பு இல்ல..... மொத கவித சூப்பரு அப்பு....
நான் கூட ஆண்-பெண் ஸ்சூல் தான் ஆனாலும் இப்படி எதுவும் உருப்படியா செய்யலயே யா......

இனியாள் //


நீங்க மிஸ் பண்ணீட்டிங்க இனியாள்

அப்புறம் இவையெல்லாம் புதிதாய் எழிதிய கவிதைகள் ஆதலால் நீங்கள் படித்திருக்க வாய்ப்பில்லை