Monday, February 5, 2007

இந்த வார கோட்டா

நம்ம வ.வா சங்க பதிவில இந்த வாரம் என்னத்த எழுதலாம்னு முடிய பிச்சிக்கிட்டு (ஆம்மா.. ரொம்பத்தான் இருக்குதுன்னு முனகுறது கேக்குது..) அலைஞ்சிக்கிட்டு இருக்கேன்யா.. ஏந்தான் இதுக்கு ஒத்துக்கிட்டமோன்னு இருக்கு சில சமயத்துல.. இருந்தாலும் ஒத்துக்கிட்டதுக்கு எதையாச்சும் எழுதனுமா இல்லையா?

என்னது? எதையாச்சுமா? சார்.. நாங்க சிரிக்கறாப்பல இருக்கணும் சார்... இல்லன்னா பயலுவ எங்கருந்து தல இவர புடிச்சிக்குட்டு வந்தீகன்னு பிச்சிருவானுவோ.. முடிய பிச்சிக்கிறீகளோ இல்ல தலையவே பிச்சிக்கிறீகளோ.. வாரம் ஒன்னுன்னு ஒரு அஞ்சி பதிவுகள போட்டு என் மானத்த காப்பாத்துங்க சார்.. அப்புறம் நாமக்கல்ல விட்டே ஓட வேண்டியதாயிரும்.. சொல்லிட்டன்.. நாமகல்லார் புலம்புறதும் கேக்கத்தான் ச்செய்யிது..

ஆனா ஒன்னுமே வரமாட்டேங்குதேய்யா.. ரெண்டு மணி நேரமா இருக்கற ஒன்னு ரெண்டையும் புடுங்கனதுதான் மிச்சம் (அட முடிய சொன்னேன்யா.. நீங்க வேற எதையாச்சையும் கற்பன பண்ணிக்கிட்டா அதுக்கு நானா பொறுப்பு?)..

சரி வீட்டுக்குள்ளறயே இருந்தா கற்பனை வளராது போலருக்கு.. ரோட்டுல எறங்கி நாலு பயலுவள பார்த்தாச்சும் வராதாங்கற ஐடியாவுல எறங்கி நடக்கறேன்...

ஞாயித்துக் கிளமையா.. ரோடே ஜிலோன்னு இருக்கு.. இதே வார நாளாருந்தா.. ஒன்னெ புடி, என்னெ புடின்னு ஆளுங்களும், காரும் பஸ்சும் போட்டி போட்டுக்கிட்டு..

'யோவ் பெருசு, இன்னா ஊட்டாண்ட சொல்லிட்டு வந்திட்டியாடா பே..னி.. ரோட்டுல பாத்து போய்யா. கஸ்.....ம்..'

ரொம்பத்தான் கற்பன பண்ணிட்டேன் போலருக்கு.. பின்னால வர்ற வண்டிய கவனிக்கல.. காலங்கார்த்தால அர்ச்சனை.. எதிர்ல வந்த நம்ம குடியிருப்புலருக்கற ஒருத்தர் என்னெ ஒருமாதிரி பார்த்துட்டு போறார்..

டிபிஆர்.. இது தேவையா ஒனக்கு?

'டேய்.. ஒன்னெ எத்தன மணிக்கு வரச்சொன்னேன்.. எங்க போய் தொலைஞ்சே.. ஒனக்காக அஞ்சி நிமிசமா நின்னுக்கிட்டிருக்கேன்.. எங்கடாருக்கே..'

அஞ்சி நிமிசமவா? ஐயோ பாவம்! கால் வீங்கியிருக்குமே..

குரல் கேட்டு திரும்பறேன்... பதினேழு பதினெட்டு வயசுருக்கும்.. சாயம் போன ஜீன்ஸ்.. முட்டி வரைக்கும்.. கீழல்லாம் கிளிஞ்சி தொங்குது.. தண்ணியில முக்கியே ஒரு வருசமாயிருக்கும் போலருக்கு.. மேல கையில்லாத.. (அதயும் கிளிச்சி எடுத்துருக்கும்னு நினைக்கேன்..) முண்டா பனியன் கனக்கா ஏதோ ஒன்னு பேண்ட்லருந்து அரை அடிக்கு மேல சுருட்டிக்கிட்டு நிக்கிது.. ஒட்ட வெட்டின பாப்பா, க்றாப்பான்னு (பிரியுதா?)தெரியாத ஒரு ரெண்டுங் கெட்டான் ஹேர் ஸ்டைல் (ஆங்.. இப்ப பிரியுது!).. காதுல களுத்துல ஒன்னையும் காணம்.. (அதாங்க நகை, நட்டு) ஆனா களுத்துலருந்து ஒரு மால மாதிரி செல் ஃபோன் தொங்குது.. அதுலருந்து இன்னொரு மாலையா காதுக்குள்ள.. ஹாண்ட்ஸ் ஃபிரி ஹெட்ஃபோன்.. இங்கருந்து பார்த்தா ஆணா பொண்ணான்னு தெரியாத அளவுக்கு உருவம்.. நல்ல வேளையா குரலாவது காட்டி குடுக்குது.. பொண்ணுன்னு..

'என்னா கண்ணு.. நா வரட்டா?' என்றவாறு சைக்கிளில் செல்கிறது ஒரு இளசு.. முறைக்கிறது ஜீன்ஸ்.. 'போடா பொறுக்கி!

தோற்றம் பாலிஷ்.. பாஷை கீலிஷ்!!

சட்டென்று ஒரு யோசனை.. நம்ம தல இந்த மாதிரி ஹேண்ட்ஸ் ஃபீரி ஃபோன்ல பேசி தர்ம அடி வாங்கனா எப்படியிருக்கும்?

சரீஈஈஈ.. யார் கூட பேச வைக்கிறது?

'ஒங்களுக்கு அந்த பாட்டுத்தானய்யா வேணும்..? போட்டுட்டோம்லே.?' சாலையோர நாயர் கடை.. சூரியன் எஃப்.எம்.. திருநெல்வேலி பாஷையில் கலக்கிக்கொண்டிருக்கிறார் .. இந்த குரலைக் கேட்கும்போதெல்லாம் அந்த கழுத்தைப் பிடித்து நெரித்தாலென்ன தோன்றியதுண்டு.. அதற்காகவே காரில் செல்லும்போது மிர்ச்சியை பிடித்துக்கொள்வேன்..

இவரும் நம்ம தலயும் பேசினா?

*****

'இதென்னாடா கைப்புள்ள?'

'போனு..'

'என்னது போனா.. ஏதோ சிகெரெட் பெட்டி கனக்காருக்கு, போனுங்கறே.. சரி இதென்ன.. பட்டன் கணக்கா ரெண்டு.. எலேய் இந்த தல பட்டிக்காட்டாந்தாம்லே.. ஆனா கிறுக்கன் இல்ல..'

'தல ஒங்களுக்குச் சொன்னா பிரியாது.. நா சொல்றத மட்டும் அப்படியே செய்ங்க..'

கைப்புள்ள தான் அகமதா பாளையத்திலிருந்து கொண்டு வந்திருந்த தன்னுடைய செல் ஃபோனை எடுத்து ஹெட் ஃபோன் இரண்டையும் அவருடைய காதில் செருகுகிறார். தல நெளிகிறார்.. 'ஏய்.. ஏய் பாத்து.. காதுக்குள்ளயே விட்டுருவ போலருக்கு..'

'இந்தாங்க இந்த போன கையில வச்சிக்குங்க.. கஸ்டமாருந்தா பாக்கெட்லயும் வச்சிக்கலாம்..'

'என்ன எளவோ.. போ.. டப்பா கனக்காருக்கு.. போனுங்கறே..'

கைப்புள்ள சற்று தள்ளி நின்று தன்னுடைய தலையைப் (தலை இல்லீங்க தல!) பார்க்கிறார்.

தல: (தனக்குள்) 'இவன் மூஞ்சில என்னமோ தெரியுதே? என்னெ வச்சி.. தமாஷ் கிமாஷ் பண்றானோ'

'சூப்பராருக்கு தல.. இப்ப பேசுங்க..'

'என்னது பேசறதா? இதுலயா?

'ஆமா தல..'

'யாருக்குலே பண்றது? எனக்கு தெரிஞ்சி இந்த ஊர்ல யார்கிட்டயும் இந்த டப்பா இல்லையேடா?'

'அதானே..' சாலைக்கெதிரில் ரேடியோ அலறிக்கொண்டிருக்கிறது.. கைப்புள்ள முகம் பிரகாசமாகிறது..

'தல ரேடியோ ஸ்டேஷனுக்கு போன் போடுங்க..'

'என்னது ரேடியோ ஸ்டேஷனுக்கா.. நம்பரு?'

'கொண்டாங்க நா டயல் பண்ணித் தாரன்.. நீங்க பேசுங்க.'

கைப்புள்ள படு சாமர்த்தியமாய் பட்டன்களை அமுக்கி டயல் செய்வதைப் பார்க்கிறார். 'பயபுள்ள வடக்க போயி நெறைய படிச்சிட்டாம்யா.. நாமளும் இருக்கமே..குண்டாஞ்சட்டிக்குள்ள குருதய ஓட்டிக்கிட்டு..

'எ.. யாரு..?'

காதுகளுக்குள் குரல் வெள்ளமாய் பாய தல துள்ளி ஒரடி பின்னால் குதிக்கிறார். தன்னையுமறியாமல்: 'எல கைப்புள்ள! யார்லே இது காட்டுக் கத்தா கத்தறான்.. எதோ ரேடியோ ஸ்டேசன்னு சொன்னியலே?'

'என்னது காட்டு கத்தா கத்தறனா? எலே யார்லே அது..? எங்கருந்து..? நீயா போன் போட்டுட்டு என்னையாவ சொல்ற?'

'தல.. அதான் தல ரேடியோ ஸ்டேசன்.. நீங்க பாட்டுக்கு பேசுங்க..'

'யார்யா இது.. காலங்கார்த்தால மொதல் கால் ஒங்களதுதாம்யா.. பேசுங்க.'.

தல கைப்புள்ளையைப் பார்த்து விழிக்கிறார்.. பேசுங்க தல என்று சைகைக் காட்டுகிறார் கைப்புள்ள..

'யாருன்னு கேக்கோம்லே.. பேசாம அடம்புடிச்சா என்ன ச்செய்ய?'

'நா.. நாந்தாம்யா.. பேசறன்.' தலயின் குரல் நடுங்க கைப்புள்ள சிரிக்கிறார்..

'நாந்தாம்னா..? பேரச் சொல்லுங்கய்யா..'

'என்னது பேரா? எதுக்குய்யா பேரல்லாம்.. கேக்கற பாட்ட போட்டுட்டு போவியா.'

'ச்சரிய்யா.. பேர ச்சொல்லாண்டாம்.. ஊர ச்சொல்லாம்லே..'

'எதுக்குய்யா.. பாட்டு என்ன வேணும்னு கேளு சொல்லுதேன்..'

'அண்ணாச்சி ரொம்ப கோவமாருக்கீக போலருக்கு..ச்சரிய்யா.. சொல்லுங்க.. என்ன பாட்டு வேணும்?'

தல பெருமையுடன் கைப்புள்ளையை பார்க்கிறார்..

'அசத்துறீங்க தல..'

'நம்ம தலைவரு பாட்டுல ஒன்னெ ப்போடு..'

'தலைவர்னா?'

'அதாம்யா.. தலைவரு.. சின்னபுள்ளத் தனமா கேக்கறே..'

'அதுக்கில்ல அண்ணாச்சி.. தலைவர்னா அவருக்கு பேருன்னு ஒன்னு இருக்கும்லே.. அதச் சொல்லுங்க...'

'வாணாம்.. கடுப்படிக்காத.. தலைவர்னு சொன்னா புரிஞ்சிக்கணும்..'

'அண்ணாச்சி கோச்சிக்கிராதீங்க.. ஒங்களுக்கு வேணும்னா அவரு தலைவராருக்கலாம்யா.. எல்லாருக்கும் இருக்காதுல்லே.. அதனால் கேட்டேன். பேரச் சொல்லிட்டு.. பாட்டயும் சொல்லுங்கய்யா.. டைம் ஆவுதுல்லே..

'எலேய்.. நீயெல்லாம் என்ன ஸ்டேசன் நடத்துற.. தலைவர்னு சொன்னாக்கூட புரிஞ்சிக்க முடியல?' கைப்புள்ளயைப் பார்த்து, 'எப்படில்லே..'

'சூப்பர் தல..'

நெல்லை பாஷையில் பேசிக்கொண்டிருந்த ஜாக்கி திடீரென்று சென்னைப் பாஷையில் தன்னெதிரில் நின்ற 'மைக்'கை அணைக்க மறந்து, 'எவனோ சாவுக்கிராக்கி வந்துட்டான் போலருக்கே.. இன்னைக்கி எவன் மொகத்துல முளிச்சமோ தெரியலையே..' என்று அங்கலாய்க்க நம்ம தல பொங்கி எழுகிறார்..

'எலே.. யாரப் பார்த்து.. என்ன வார்த்த சொல்லிப் போட்டே.. (அடுத்து அவர் வாயிலிருந்து சரமாரியாக வசவுகள் வந்து விழ கைப்புள்ள காதைப் பொத்திக்கொள்கிறார்)

ஆனால் அடுத்த நொடியே தல தலைக்குப்புற சாலையில் விழுகிறார்.. காதிலிருந்த ஹெட் ஃபோன் இரண்டும் திசைக்கு ஒன்றாக சிதறுகிறது.. கையிலிருந்த செல்ஃபோன் அந்தரத்தில் பறக்க கைப்புள்ள தாவி பிடித்துக்கொண்டு அம்பேல் ஆகிறார்..

'எலேய்.. காலங்கார்த்தால ஆத்தாள கும்பிட்டுட்டு.. எம் பொண்ணுக்கு சம்பந்தம் பேசலாம்னு நாம்பாட்டுக்கு போய்க்கிட்டுருக்கேன்.. யாரப் பார்த்து என்ன வார்த்த சொல்லிப் போட்ட?.. யார்லே '.....' நீயா.. ஒங்கப்பனா.. ஒன்னெ...' பேசியவாறே சட்டை காலருக்குள் கைவிடுகிறார்.. பளபளக்கும் அரிவாளுடன் வெளியில் வருகிறது கை!

தல ரோட்டில் கிடந்தவாறு ஒன்றும் பிரியாமல் திருதிருவென்று முழிக்கிறார்.. சற்று முன் வரை அங்கு நின்றிருந்த கைப்புள்ளயை காணாமல் அலங்க மலங்க முழிக்கிறார்... 'அய்யய்யோ இன்னைக்கி யார் முகத்துல முளிச்சோம்னு தெரியலையே.. இவனென்ன இந்த முளி முளிக்கான்.. ஏற்கனவே அருவா ஆறுமுகம்னு பட்டப்பேரு இருக்கே இவனுக்கு.. வெட்டிக் கிட்டி போட்ருவான் போலருக்கே..'

நிமிட நேரத்தில் இருவரையும் சுற்றி ஒரு கூட்டம்..

'வந்துட்டான்கய்யா.. ஒருத்தன் விளுந்துரப்படாது.. வந்துருவாய்ங்களே..'

கூட்டத்தில் கைப்புள்ள தெரிகிறானா என்று துழாவுகிறார்.. ஹுஹும்.. 'படுபாவிப் பய.. சிகரெட் டப்பாக் கணக்கா.. ஒரு பொட்டிய கொன்னாந்து குடுத்து இவன்கிட்ட சிக்க வச்சிட்டானே.. இப்ப எப்படி இவனெ சமாளிக்கறது? ஒரு வளியும் தெரியமாட்டேங்குதேடா.. '

சட்டென்று மூளையில் பல்பு பளிச்சிடுகிறது.. புரண்டு புரண்டு சிரிக்கிறார்.. அ.ஆறுமுகமும் சுற்றி நின்ற கூட்டமும் விழிக்கிறது..

கூட்டத்தில் ஒருவர்: 'அண்ணே.. நீங்க போட்ட போட்டுல இவனுக்கு கிறுக்கு புடிச்சிருச்சி போலருக்கேண்ணே? பாவம்ணே..'

அ.ஆறுமுகம் முறைக்கிறார்: 'எலேய். இவன் என்னெ பேச்சு பேசினான்னே கேட்டே இல்ல..'

தல தட்டுத் தடுமாறி எழுந்து நிற்கிறார். 'அண்ணே நா ஒங்கள சொல்வனா? நா போன்ல பேசிக்கிட்டிருந்தேன்ணே..'

'போன்லயா..? எலேய் காலங்கார்த்தால பொய் சொல்லாத.. . ஒன் வீட்டுலயே போன் இல்லேங்கறது இங்க எல்லாருக்கும் தெரியும்.. இதுல போனு ஒங் கையில வந்துருச்சாக்கும்..'

தல குலுங்கி குலுங்கி சிரிக்கிறார். 'அண்ணே.. என்னண்ணே நீங்க. இப்பல்லாம் எங்கருந்து வேணும்னாலும் போன் பேசலாம்னே.. நம்ம சிஷ்ய புள்ளதான் கொண்டு வந்து குடுத்து அண்ணே இதுல பேசுங்கண்ணேன்னான்.. அதுலதாண்ணே பேசிக்கிட்டிருந்தேன்.. அந்த ரேடியோகாரப் பய நம்ம எம்.ஜி.யார யார்னு கேட்டுப் போட்டுட்டாம்ணே.. அதான் எலேய் '....... பயலே'ன்னு ஏசிக்கிட்டிருந்தேன்.. அந்த நேரம் பார்த்து நீங்க வந்துட்டீக..'

கூட்டத்திலிருந்து: 'அண்ணே பய செல் போனுன்னு ஒன்னு பஜார்ல வந்துருக்கே.. அதப்பத்தி சொல்றான் போலருக்கு'

'என்னது சொல் போனா... இவனே சோலி ஒன்னுமில்லாம சுத்திக்கிட்டு கெடக்கான். இவன் கைல செல் போனா? எங்கலே போனு..காட்டிரு விட்டுடறேன்'

தல கூட்டத்தை மீண்டும் துழாவுகிறார்.. 'படுபாவிப் பய.. இப்படி நட்டாத்துல விட்டுபோட்டு போய்ட்டானே.. இப்ப போனுக்கு எங்க போவேன்..'

'என்னலே திருதிருன்னு முளிக்கே.. பொய்காரப் பய.. வாயத் தொறந்தா ஒன்னு பொய்யி.. இல்ல... பொசக் கெட்ட பய.. இவனுக்கு ஒரு சங்கம்.. இவனெ சுத்தி ஒரு கூட்டம்.. போடுங்கலே இவனெ..'

இதற்கெனவே காத்திருந்தது போல கூட்டம் முழுவதும் ஆளுக்கொரு அடி போட்டுவிட்டு கலைந்து செல்ல.. கந்தல் கோலமாய் அமர்ந்திக்கிறார் தல... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

*******

'அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா.. இந்த வார கோட்டா முடிஞ்சிருச்சிப்பா.. ஆள விடுங்க..'

*****

6 comments:

Unknown said...

ஜோசப் சார்...ஆனாலும் நீங்க இப்படி எல்லாம் எங்களைக் கலாய்க்கக் கூடாது.. இந்த வார கோட்டான்னு ஒரு வாரத்துக்கு உக்காந்துப் படிக்கிற மாதிரி நீளமாஆஆப் பதிவுப் போட்டுட்டு எஸ் ஆயிட்டீங்களே.. நான் படிக்கிறதுக்குள்ளே மூண்யு வாட்டி தூங்கிட்டேன்..

சிபி குறட்டைச் சத்தம் உங்களுக்குக் கேக்குதா.. சொல்லுங்க..

வெட்டிப்பயல் said...

என்னங்க ஜோசப் சார் கோட்டாவெல்லாம் வெச்சிக்கிட்டு...

அப்படியே அடிச்சி ஆடுங்க...

தலக்கு திருநேல்வேலில இருந்து ஆப்பு பார்சல் :-)

TBR. JOSPEH said...

வாங்க தேவ்..

இந்த வார கோட்டான்னு ஒரு வாரத்துக்கு உக்காந்துப் படிக்கிற மாதிரி நீளமாஆஆப் பதிவுப் போட்டுட்டு//

நக்கலு? இது நீஈஈஈளமா? ஒரு வேளை எதிர்மறையோ.. நீங்க ரொம்ப ஹேண்ட்சம்மா இருக்கீங்கன்னு சொல்றது மாதிரி:(

சிபி குறட்டைச் சத்தம் உங்களுக்குக் கேக்குதா.. சொல்லுங்க..//

எனக்கு சாதாரணமாவே கொஞ்சம் காது மந்தம்.. இதுல நாமக்கல்லுலருந்து.. எங்க கேக்கப் போகுது..

TBR. JOSPEH said...

வாங்க வெட்டி..


என்னங்க ஜோசப் சார் கோட்டாவெல்லாம் வெச்சிக்கிட்டு...//

அதெல்லாம் ச்சும்மா.. ஒரு பேச்சுக்கு.. இருந்தாலும் உண்மையிலயே சிரிக்கிறா மாதிரி ஒன்னும் வரமாட்டேங்குதேங்க..

அப்படியே அடிச்சி ஆடுங்க...//

யார? நிரந்தர அங்கத்தினர்களையா?

தலக்கு திருநேல்வேலில இருந்து ஆப்பு பார்சல்//

அல்வாதானே.. சிபிக்கு அனுப்பிருங்க.

ஜி said...

தலய வச்சே தலக்கு ஆப்பு அடிக்கிறீங்களா?

எத்தன ஆப்பத்தான் தல தாங்குவாரு....

அருமை... ஆனா தேவ் சொன்னது மாதிரி கொஞ்சம் நீளமா இருக்குது... ஆஃபிஸ்ல இருந்து படிச்சு முடிக்கிறதுக்குள்ள மேனேஜர் அடுத்த மீட்டிங்குக்கு கூப்டுட்டாரு :((

TBR. JOSPEH said...

வாங்க ஜி!

வார கோட்டா தெரிஞ்சா போறாது போலருக்கு.. டெய்லி கோட்டாவும் தெரிஞ்சிருக்கணும்:(