Thursday, February 1, 2007

நான் ஒரு தடவைச் சொன்னா..



அதிகாலை பத்து மணி. தூரத்தில் பாலைவன மணலில் கால் புதைந்து வரும் கைப்புள்ளையக் கண்டதும் டீக்கடை காரருக்கு திக் என்கிறது.
"ஐயோ.. இவன் இப்போ ஒட்டகப்பால் கேட்டு வம்பிழுப்பானே.. சரி.. சமாளிப்போம்"

டக்கென்று அரை டம்ளர் பாலில் கொஞ்சம் மைதாவைக்கலந்து திக்கான பாலாக்குகிறார். அதில் கொஞ்சம் டிக்காஷனை ஊற்றி டீயாக்கி மட்பாண்டத்தில் ஊற்றி தயாராக வவத்துக்கொள்கிறார்.

"வாங்க கைப்புள்ளை, சூடா டீ சாப்பிடறீங்களா? ஒட்டகப் பால்ல டீ போட்டிருக்கேன்"

"ஒட்டகப் பால்லயா! சரி குடு!"

வாங்கி டீயை ஒரு வாய் உறிஞ்சியவுடன் "த்த்தூ... என்ன இது ராஸ்கல்! டீ இவ்ளோ கெட்டியா இருக்கு? இப்படியெல்லாம் டீ போட்டா மனுஷன் குடிப்பானா?"

"என்னப்பா நீ! நீதான அன்னிக்கு ஒட்டகப்பால்ல டீ வேணும்ணு கேட்டே!"

"ஓ! அதான் இவ்ளோ திக்கா இருக்கா! ஆமா! என்னைய வெச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலியே!"

"இன்னாப்பா இது! உன்னன வெச்சி நான் காமெடி பண்ணுறதாவது?"
(தனக்குள்ளேயே) "உன்னை வெச்சி நீ பண்ணிக்குற காமெடியே போதாதா"

"என்னாது? என்னா அங்கே முணகுறே"

"ஒண்ணுமில்லைப்பா, அங்கன ஒக்காந்து டீயக் குடிச்சிட்டு நடையக் கட்டு"
அங்கே இருக்கும் பெஞ்சின் மேல் அமர்ந்து டீயை ரசித்துக் குடித்து விட்டு, மட்பாண்டத்தை கீழே போட்டு உடைக்கிறார் கைப்புள்ளை.

"ஆங்! இன்னிக்கு பேப்பர்லே என்ன நியூஸு...?" என்று தனக்குத்தானே பேசியவாறு ஒரு பேப்பரை எடுத்து கையில் பிடித்துக் கொண்டு பேப்பரில் மூழ்குகிறார்.

சாலை திருப்பத்திலிருந்து "ஐயோ..யாராவது காப்பபத்துங்களே... ச்சீ.. போ..போ.. யாராவது காப்பாந்துங்களே" என்றவாறே ஒருவர் மூச்சிரைக்க ஓடிவர பின்னாலேயே ஒரு நாய் துரத்தி வருகிறது. சப்தம் கேட்டு கவனம் கலைந்த கைப்புள்ளை பேப்பரிலிருந்து தலையை எடுத்து எட்டிப் பார்க்க
அந்த நாய் அந்த ஓடிவந்த நபரை சுற்றி வளைத்து ஓட விடாத வண்ணம் மரித்துக் கொண்டிருக்கிறது.

அந்த நபர் பதறியபடியே "யாராவது காப்பாத்துங்க" என்று கதறுகிறார்.
கூட்டம் கூடியவாறு நின்று அனனவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, சட்டென எழுந்த கைப்புள்ளை மிடுக்காக இடமும் வலமும் திரும்பிப் பார்த்து
"அந்த நாயை விரட்டக் கூட யாருக்கும் தெகிரியம் இல்லல.. எல்லாத்துக்கும் நாமளே போக வேண்டியிருக்கு" என்று தனக்குத் தானே பேசியவாறு அருகில் செல்கிறார்.

சுற்றும் முற்றும் பார்க்க ஒரு கருங்கல் கிடைக்கிறது.
சட்டென கல்லை கையிலெடுத்த கைப்புள்ளை, நச்சென்று ஒரே போடாக நாயின் தலையின் மீது எறிய, தலை நசுங்கி "அவ்..அவ்.." என்று முனகியவாறே உயிரை விடுகிறது.

"அப்பாடா தப்பினோம்.." என்ற நிம்மதியுடன் ஓடிவந்த அந்த நபர் கண்களில் நன்றியுடன் கைப்புள்ளையைப் பார்த்துக் கையெடுத்து கும்பிடுகிறார்.

"அண்ணே.. நல்ல வேளை ஆண்டவன் போல வந்து காப்பத்துனீங்க.. இந்த உதவியை என் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன் என்று ஒரு வித ஃபீலிங்குடன் கூற கைப்புள்ளையையும் அந்த ஃபீலிங்க் தொற்றிக் கொள்கிறது.

"என்ன தம்பி இப்படியெல்லாம். பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிகிட்டு, தம்பிக்கொரு கஷ்டம்னா அண்ணன் நான் வராம வேற யாரு வருவா.?"

"சரிண்ணே நான் கெளம்பறேண்ணே".

"பார்த்து பத்திரமா போப்பா, போ!" என்று கண்ணில் நீருடன் வழியனுப்பி வைக்கிறார் கைப்புள்ளை.

அதற்குள் வெகுவாக கூடிவிட்ட கூட்டத்தைப் பார்த்து தனக்குத்தானே பேசிக்கொள்கிறார். "ம்ஹூம், இவ்ளோ பேரு இருக்கானுவ, எவனுக்காவது காப்பாத்தணும்னு தோணிச்சா? அதான். அதான்யா இந்த கைப்புள்ளை"

கூட்டம் கலைவதற்குள் சர்ர்..என்று ஒரு போலீஸ் ஜீப் கைப்புள்ளைக்கு வெகு அருகில் வந்து நிற்கிறது. அதிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் கைப்ஸை ஏற இறங்க வெகு ஏளனமாக பார்த்து கூட்டத்தை நோக்கி திரும்புகிறார்.

"இந்த நாயைக் கொன்னது யாரு?" என்று சத்தமாகக் கேட்கிறார்.

"ஏன் என்னைப் பார்த்தா கொன்ன மாதிரி தெரியலையா? நம்மகிட்ட கேக்குறது?" என்று படு பந்தவாக கைப்புள்ளை கேட்க

"யோவ், உன் வேலையைப் பாருமைய்யா...சாவு கிராக்கி, செத்த நகரு அந்தப் பக்கம்,..." என்று ஒதுக்கி விட்டு மீண்டும் சத்தமாகக் கேட்கிறார்.

"இந்த நாயைக் கொன்னது யாரு?"

"நாந்தான் சொல்றனில்ல! இன்னும் என்ன வெசாரணை, சின்னப்புள்ளத்தனமா?"

"ம்ஹூம், சோப்ளாங்கி போய்யா அந்தப்பக்கம்... கேக்குறனில்லே சொல்லுங்க!
யாரு கொன்னது?"

கூட்டத்திற்குள்ளிருந்து ஒரு குரல் கேட்கிறது.

"கைப்புள்ளதான் கொன்னாரு!" குரல் வந்த திசையிலிருந்து கூட்டத்தை
விலக்கிக் கொண்டு வெளியில் வருகிறார் தேவ்.

"ஆமாம், கைப்புள்ளைதான் கொன்னாரு! " இன்னொரு பக்கம் இருந்து வருகிறார் நாகை சிவா.

"கைப்புள்ளைதான்!" என்று கூறிக் கொண்டே வேட்டியை மடித்துக் கட்டிக்
கொண்டே வந்து நிற்பது விவசாயி.

"எலேய்! எடுபட்ட பயலுவலா! எங்க தலை கைப்புள்ளை கொல்லாம வேற யாரு கொல்ல முடியும்" என்று எகத்தாளமாகக் கேட்டபடி ஜொள்ளுப் பாண்டி.
இப்படியே சொல்லிக்கொண்டு ராயல் ராம், வெட்டிப் பயல், சிபி ஆகியோரும்
கூட்டத்திலிருந்து ஒவ்வொருவராக வெளியில் வந்து பாட்ஷா படத்தில்
பாட்ஷாவின் அடியாட்கள் போல் பில்டப் கொடுத்து அணிவகுத்து நிற்க

"ஓ! அப்போ உங்க கைப்புள்ளைதான் கொன்னாருன்னு சொல்றீங்க!, இதை எங்க வேணும்னாலும் வந்து சொல்வீங்களா?" என்று அந்த போலீஸ் காரர் கேட்கிறார்.

"ஓ.. சொல்வமே!" கோரஸாய் பதில் வருகிறது.

"ஓ! அப்ப சரி!, யோவ் கைப்புள்ளை வண்டில ஏறு?"

இதைக் கேட்டதும் ஒரு கணம் அதிர்ந்து போன கைப்புள்ளை
"வண்டிலயா? என்னாத்துக்கு?" என்று வழக்கம்போல கேட்கிறார்.

"என்னாத்துக்கா..? ஏண்டா! கஷ்டப்பட்டுத் தேடிகிட்டிருந்த தீவிரவாதிய எங்க
போலீஸ் நாய் கண்டு பிடிச்சி விரட்டிட்டு வந்தா, அந்த நாயை நீங்க கொன்னுட்டு பாட்ஷா ஸ்டைல்ல பில்டப்பு வேற கொடுப்பீங்களோ? ஏறு வண்டில, உன்னையெல்லாம் லாக் அப்புல போட்டு முட்டிக்கு முட்டி தட்டணும்"

"என்னாது? போலீஸ் நாயா! சொல்லவே இல்ல... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்"
என்று ஆரம்பிக்கிறார் கைப்புள்ளை.

7 comments:

மனதின் ஓசை said...

:-)

//தலை நசுங்கி "அவ்..அவ்.." என்று முனகியவாறே உயிரை விடுகிறது.//

நாயுமா??


//இதை எங்க வேணும்னாலும் வந்து சொல்வீங்களா?" என்று அந்த போலீஸ் காரர் கேட்கிறார்.//

அதுக்குத்தானே இருக்காங்க பயபுள்ளைக.. கேக்க வேற வேணுமா?

Anonymous said...

ettaegaal lachanamae! Eamaneaarum Phariyyae!
Mattiyl Periyammai Vaganamae! Modilla Veedae!
Kularaman Thoothuvanae! AARAIadi Chonnaai Neey!

-Ovvai Piraatiyaar

Unknown said...

இந்தப் பதிவுக்கு சொந்தக்கார் தளபதி சிபி.. நேரமில்லாதக் காரணத்தினால் தளபதியின் படைப்பினை என் பெயரில் வெளியிடும் படி நேர்ந்து விட்டது. :)

SP.VR. SUBBIAH said...

:-))))

வெட்டிப்பயல் said...

தல வரலாறுல இந்த மாதிரி வீர சாகசம் எல்லாம் ரொம்ப ஜகஜம்...

தல நீ அந்த போலீஸ் கைய கடிச்சிட்டு அப்படியே ஓடிடூ... நம்ம பார்த்துக்கலாம் :-)

Syam said...

அதுதான தல எத செஞ்சாலும் கரெட்டா தப்பாதான பண்ணுவார் :-)

Syam said...

//தல நீ அந்த போலீஸ் கைய கடிச்சிட்டு அப்படியே ஓடிடூ... நம்ம பார்த்துக்கலாம்//

ஆமா நீங்க எங்க ஒளிஞ்சு இருந்தாலும் போலீஸ்கிட்ட கரெக்டா போட்டு குடுத்துடுவோம் :-)