முதல்ல என்னையும் வாலிபன்னு ஒத்துக்கிட்டத்துக்கு ஒரு பெரிய தாங்ஸ்..
சிபி என்னை (எப்பங்க கூப்ட்டீங்க.. மறந்தே போச்சு போங்க..) கூப்பிட்டு நீங்க ------வா இருக்கீங்களான்னு கேட்டப்போ.. சத்தியமா சொல்றேன் சிபி.. நீங்க என்ன கேட்டீங்கன்னே எனக்கு சரியா கேக்கல.. அதுவும் நம்ம வீட்டம்மா வேற பக்கத்துல இருந்தாங்களா.. அவங்க இருக்கறப்போ சரி, சரின்னுதான் சொல்லிதானெ பழக்கம்? அந்த பழக்கத்துல ஒங்கக்கிட்டயும் சரின்னு சொல்லிட்டேன் போலருக்கு..
ஹூம்.. விதி யார விட்டது?
என்னெ சொல்லலீங்க.. நா எழுதுறத தலைவிதியேன்னு படிக்கப் போற ஒங்கள சொல்றேன்..
ஒருவாரம்னா பரவால்லை.. ஒரு மாசன்னு சொல்லிட்டீங்க.. வேணாம்னா விடவா போறீங்க..
எனக்கு ஒங்க சங்க ஆளுங்க எழுதற தமிழ்லல்லாம் எழுத வராதங்க.. அத படிக்கறப்பவே நாக்கு சுளுக்கிருது.. இதுல எப்படி எழுதறது?
ஏதோ என்னோட பாணியில எழுதறேன்.. சிரிக்க முடியுதான்னு பாருங்க..
சரி.. வ.வா சங்கத்தொட நோக்கம் என்னங்க.. அத முதல்ல சொல்லுங்க..
என்ன நடந்தாலும் வருத்தப்படாம இருக்கணுங்கறதுதான் ஒங்க கொள்கையா? அப்படீன்னா என்னையும் தாராளமா சேத்துக்கலாம்..
இதுவரைக்கும் வருத்தப்பட்டதே இல்லைன்னு சொல்ல முடியாதுன்னாலும்.. (அதான் ப்ர்ஷர் அடிக்கடி எகிறுதே) சின்னதுக்கெல்லாம் இடிஞ்சி விழற ஆள் இல்லை..
சரி விஷயத்துக்கு வருவோம்..
நகைச்சுவைங்கறது எல்லோருக்கும் அவ்வளவு ஈசியா வர்றதில்லை..
ஒரு நகைச்சுவை நடிகரால எல்லா ரோல்லயும் பிரகாசிக்க முடியும்.. ஆனா ஒரு கதாநாயகனால அது முடியாது.. நகைச்சுவைங்கற பேர்ல கோணங்கித்தனமா முகத்த சுளிக்கறதெல்லாம் நகைச்சுவையாயிராது..
இந்த விஷயத்துல நம்ம பார்த்திபன் ஒரு விதிவிலக்கு..
அந்த கரடுமுரடான மொகத்துலருந்த வரும் நகைச்சுவையே ஒரு தனி பிராண்ட் ஆயிருச்சி.
அதனால்தானோ என்னவோ அவரும் ஒங்க சங்கத் தலைவர் வடிவேலுவும் சேர்ந்து கொடுக்கும் நகைச்சுவை பிரமாதமான வரவேற்பை பெற்றிருக்குன்னு நினைக்கேன்..
இவங்க ரெண்டு பேரையும் வச்சி நானும் என்னால முடிஞ்ச அளவுக்கு காமடி (காமடின்னு நினைச்சித்தான் பண்ணது....) பண்ணிருக்கேன்.. படிச்சிருப்பீங்க..
நம்ம ஆஸ்தான காமடி நாயகன் வடிவு (செல்லப் பேருங்க) தலய வச்சே இந்த மாசத்து முதல் பதிவ ஒப்பேத்திரலாம்னு பாக்கேன்.. நம்ம கைப்புள்ள ஜனவரி 22ல எளுதுன 'சிங்கங்களுக்கு...' கடிதத்துலருந்தும் கொஞ்சம் திருடி (ச்சே.. ஒங்க பாஷையிலல சொல்லணும்) சுட்டிருக்கேன்.
சிரிப்பு வருமான்னு தெரியலை..
வடிவேலு தன்னுடைய வீட்டு முற்றத்தில் (பாரதிராஜா, பாக்கியராஜ் படங்களில் வரும் கிராமத்து வீட்டைக் கற்பனை செய்துக்கொள்ளுங்கள்) காலை விரித்து வேட்டிக்கு உள்ளே (ஏங்க பின்னே வேட்டிக்கு வெளியவா தெரியும்னெல்லாம் கேக்கப்படாது) இருந்த அண்டர்வேர் (உள்ளாடைன்னா வேற அர்த்தமாயிருமில்லே அதான்..) தெரிய வானத்தை பார்த்தவாறு விச்ராந்தியாக (என்ன ராந்தி?அர்த்தம் தெரியாதவங்க தெனாவட்டான்னு வச்சிக்கலாம்) படுத்து கிடக்கார்..
வடி: (முனகுகிறார்) படுபாவிப் பய எங்கன போனாலும் வந்துட்றான்யா.. என்ன பண்றதுன்னே வெளங்கமாட்டேங்குது.. இந்த கைப்புள்ள பயபுள்ளயெ வேற காணம்..
தலையோட தவிப்பு அகமதாபதா பாளையத்துலருக்கற கைப்புள்ள மூளையில பல்ப் எரியுது! ஒடனே போன போடலாம்னு பாத்தா எந்த பயலோ அத புடுங்கி அரையில (இடுப்புலன்னு சொன்னா கொச்சையா போயிரும்லே அதான் பாலிஷா) கட்டிக்கிட்டு அலையறான்.. சரி கெடக்குது களுதன்னு விடமுடியுதா.. கூப்ட்டது தலயாச்சே.. சட்டுன்னு அங்கருந்தே ஒரு மயில விடுறார்.. (மயிலா? போன் இல்லாமயா? அட! அதெல்லாம் நமக்கு சகஜமப்பா!)
மயில் பறந்துவந்து தல மடியில (தல மடியா? அதாங்க தலைவரோட மடி!) வந்து விழுது..
பதறியடிச்சிக்கிட்டு எழுந்து பாக்கார்.. கசங்கிப் போன ஒரு பேப்பர் கெடக்குது.. யாராருக்கும்னு சுத்தும் முத்தும் பாக்கார்..
வடி: (முனுமுனுக்கிறார்) ஒருவேள லவ் லெட்டர் கிவ் லெட்டராருக்குமோ.. நமக்கு எவ இவ்வளவு தெகிரியமா...? (பிரிச்சி பாக்கறார்.) 'என்ன தல.. எதுக்கு கூப்ட்டீங்க?' (திடுக்கிட்டு மீண்டும் நாலா திசையிலும் பார்க்கிறார்) என்ன இது? நா யார கூப்ட்டேன்.. இவன் யாரு? எந்த பயலுவலையும் காணமே..
நாந்தான் தல.. கைப்புள்ள..
வடி: எது கைப்புள்ளயா? ஏம்லே நீ எங்கனயோல்லே இருக்கே.. எங்க இங்க? சத்தம் மட்டும் வருது.. ஆள காணலயடா..
என்ன தல .. எதிர்லயே நிக்கேன்.. தெரியலேங்கறீங்க?
வடி:(இரண்டு கைகளையும் நீட்டி துழாவுகிறார்) எதிர்லயா.. எங்கடா.. யாரையும் காணமே?
அட போங்க தல.. மப்புல இருக்கீங்க போலருக்கு.. சரி போட்டும்.. என்னைய தெரியாட்டியும் பரவல்லை.. நா சொல்றத மட்டுமாவது கேளுங்க..
வடி: என்னடாயிது.. கொரலு மட்டும் இம்புட்டு தெளிவா கேக்குது.. பயபுள்ள மொகத்தயும் பாத்தா நல்லாருக்குமே..
என்ன தல சொல்லட்டா?
வடி: சொல்லு.. சொல்லு.. வேற என்ன ச்செய்ய?
வர்ற பதினாலாந்தேதியப் பத்திதான் தல..
வடி: (யோசிக்கிறார்) வர்ற பதினாலாந்தேதியா? என்ன சொல்ல வரான்னே தெரியலையே.. (ஒரு குத்துமதிப்பாக நேரே பார்த்து பேசுகிறார்) பதினாலாந் தேதியா? அதுக்கென்ன..?
என்ன தல நீங்க? அதான் தல நாமெல்லாம் ச்சேந்து பொண்ணு பாக்க போயி.. அடிபட்டு மிதிபட்டு.. மறந்து போச்சாக்கும்?
வடி: அட அத ஏம்லே ஞாபகப்படுத்திக்கிட்டு.... அதான் அன்னையிலருந்து எல்லா பயபுள்ளங்களும் கொன்டாடிக்கிட்டு அலையறானுவளே.. சரி.. இப்ப என்ன ?அத வளக்கம்போல கொண்டாடிறணும்.. அதானலே.. கொண்டாடிருவோம்..
அதான் தல.. அதுக்குத்தான் என்னைய தேடறீகளாக்கும்னு கூப்ட்டேன்..
வடி: என்னது கூப்ட்டியா.. அப்ப நீங்க இங்க இல்லையாக்கும்.. எலேய்.. கடுப்படிக்காத.. கொஞ்ச நேரத்துக்கு முன்னால எதிர்ல நிக்கேன்னு சொன்னிய..
ஹி..ஹி..ஹி.. அட என்ன தல நீங்க.. நானாவது அங்க வர்றதாவது.. நா இருக்கற எடம் நம்ம ஊர்லருந்து ரெண்டாயிரம் மைல் அப்பாலல்ல இருக்கு.. இப்பல்லாம் காலைலயே ஆரம்பிச்சிடீங்க போலருக்கு.. சரி தல வச்சிரட்டா..
டொக் என்ற சப்தத்துடன் குரல் நின்றுபோக.. வடிவேலு பதறியடித்துக்கொண்டு எழுந்து சுற்றும் முற்றும் பார்க்கிறார்..
வீட்டினுள்ளிருந்து ஒரு குரல்: எலேய்.. என்ன கனா கினா கண்டியா? எதுக்குலே நட்டநடு ராத்திரியில எளும்பி இந்த பாடு படுத்தறே.. ராத்திரியில கண்டதயும் திங்காதலேன்னு சொன்னா கேக்கறியா.. படுத்து தூங்கு.. இல்லையா கொல்லப்பக்கம் போயி எறக்கிட்டு வா. தெனக்கிம் ஒன்னோட இதே ரோசனையா போச்சிது..
வடி: அடச்சை.. கனவா இது.. நா என்னமோ ஏதோன்னுல்லே நெனச்சுட்டேன்.. எலேய் கைப்புள்ள நெதம் ஒன் நெனவாருக்குலா.. வெரசா வா.. பதினாலென்னா இந்த மாசம் முளுசுமே ஜமாய்ச்சுருவோம்..
********
29 comments:
இது பதிவோட பின் குறிப்புன்னு வச்சிக்கலாம்
அகமதாபாதா பாளையம்
வந்துர்றேன் தல.. நீங்க சொன்னா வராம இருப்பனா.. தோ வந்துட்டேன்..
'அரே.. தூ பாகல் ஹோகயா க்யா?' என்றவாறு சுளீர் என்று முதுகில் ஒரு அறை விழ பதறி எழுகிறார் கைப்புள்ள..
எதிரில் ஹிந்திக்கார நண்பர்..
பத்தடிக்கு பத்தடி அறையி பத்து நண்பர்களுடன் ஒண்டுக்குடித்தினம்.. ஒருவர் மீது ஒருவர் கட்டிப்புரண்டு படுப்பதே சற்று அதிகம்.. இதில் கனவில் தலையை பார்த்துவிட்டு எழுந்து நடந்தால்?
'மாப்கரோ யார்..' என்று மன்னிப்பு கேட்டு.. ச்சை இம்புட்டும் கனவாக்கும்.. நாளைக்கே ஊருக்கு டிக்கட் போட்டுறவேண்டியதுதான்.. தலய விடு.. நம்ம கூட்டாளி களவாணிப்பயலுவள பாத்துத்தான் எத்தினி நாளாயிருச்சி..
படுபாவிப் பய என்னமா அறஞ்சுப்புட்டான்.. மாட்டுக்கறி திங்கற பயலுவள்லே..
புரண்டுப் படுத்து கண்ணை மூடுகிறார் கைப்புள்ள
வாலிபர் சங்கத்துப் புதுமுகம் வாள்க! வலர்க!
நல்லா ஜமாய்ச்சுப்புட்டீரே:-))))
வாள்க! வாள்க!
Sengkamalam
அட்லாஸ் வாலிபர் டி.பி.ஆரை அன்போடு வரவேற்கிறோம்...
ஊரை விட்டு ஒதுங்கி யிருக்க எங்க தலயை ஊருக்கு வர வச்சு உருட்டி விட்டு அடிக்க இப்படி திட்டத்தோடவே மொதப் பதிவா.. நடக்கட்டும் சார் நடக்கட்டும்..
வாங்க அட்லாஸ் வாலிபரே...!!!!!! இந்த மாசம் கலக்குங்க...உங்க காலத்திய ல்வ்வு பற்றி கொஞ்சம் எடுத்தியம்பினால் கொஞ்சம் உதவியாக இருக்கும்....
வந்துட்டாரய்யா! வந்துட்டாரய்யா!
//சிபி.. நீங்க என்ன கேட்டீங்கன்னே எனக்கு சரியா கேக்கல.. அதுவும் நம்ம வீட்டம்மா வேற பக்கத்துல இருந்தாங்களா.. அவங்க இருக்கறப்போ சரி, சரின்னுதான் சொல்லிதானெ பழக்கம்? அந்த பழக்கத்துல ஒங்கக்கிட்டயும் சரின்னு சொல்லிட்டேன் போலருக்கு..
//
வீட்டுப் பழக்கம் சங்கத்து வரைக்குமா?
:))
புது மொழி கண புதுமுக அட்லாஸ் வாலிபர் ஜோசஃப் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்!
//எனக்கு ஒங்க சங்க ஆளுங்க எழுதற தமிழ்லல்லாம் எழுத வராதங்க.. அத படிக்கறப்பவே நாக்கு சுளுக்கிருது.. இதுல எப்படி எழுதறது?
//
அடப் பாவமே! உங்களுக்கு கழுத்து மட்டும்தான் சுளுக்கி இருக்கும்னு நினைச்சிட்டிருந்தேன் இத்தனை நாளா!
நாக்கு வேற சுளுக்கிகிச்சா இப்போ?
//என்ன நடந்தாலும் வருத்தப்படாம இருக்கணுங்கறதுதான் ஒங்க கொள்கையா? அப்படீன்னா என்னையும் தாராளமா சேத்துக்கலாம்..
//
இப்படிப்பட்ட ஆளுங்கதான் எங்களுக்கு வேணும்!
பசங்களா! எல்லாரும் வாங்க! வாங்க!
வாங்க துளசி,
எங்க போய்ட்டீங்க? ரொம்ப நாளா ஆளையே காணம்?
வந்ததுக்கு வாழ்த்துனதுக்கு நன்றி:)
நம்ம சங்கத்து பாஷையில:
தாங்குசுங்கோ
//இந்த விஷயத்துல நம்ம பார்த்திபன் ஒரு விதிவிலக்கு..
//
ஆஹா! ஆரம்பிச்சிட்டாருய்யா! தலைக்கு ஆப்பு வெக்க ஆரம்பிச்சிட்டாருய்யா!
என்ங்க செங்கமலம்.. அனானின்னு போட்டுக்கிட்டு கடைசியில பேரையும் போட்டுட்டீங்க?
ச்சரி.. ச்சரி.. வாள்த்தத்தான வந்துருக்கீங்க.. அதனால பொளச்சி போங்க..
அட்லாஸ் வாலிபர் டி.பி.ஆரை அன்போடு வரவேற்கிறோம்... //
அதான் நீங்க சொல்றதுக்கு முன்னாலயே வந்துட்டோம்லே.. பிறவென்ன..
ஊரை விட்டு ஒதுங்கி யிருக்க எங்க தலயை ஊருக்கு வர வச்சு உருட்டி விட்டு அடிக்க இப்படி திட்டத்தோடவே மொதப் பதிவா.. நடக்கட்டும் சார் நடக்கட்டும்.. //
பின்னே சும்மாவா.. எப்ப வருவீங்கன்னு காத்துக்கிட்டிருக்கோமில்லே..
ஊர்லருக்கறவிய முதுவுல டின் கட்ட முடியுமா? அதுக்கு ஒங்கள மாதிரி ஆளுகதான லாயக்கு.. வாங்கய்யா வாங்க..
வாங்க சிபி, வாங்க சிபி, வாங்க சிபி..
மூனுதரம் பின்னூட்டம் போட்டு நம்பர கூட்டலாம்னு பாக்கீகளாக்கும்..
அப்படியாச்சும் ஒங்க சங்கத்துக்கு நிறைய பேர் வராங்கன்னு ப்ரூவ் பண்ணலாம்னு பாக்கீங்க..
நடக்கட்டும்..
புது மொழி கண புதுமுக //
இதென்னங்க.. ஒன்னுமே பிரியலங்க..
ஒங்க சங்க பாஷையாக்கும்.. திட்டறீங்களா வாழ்த்தறீங்களான்னே தெரியமாட்டேங்குதே.. நம்ம தல கிட்டத்தான் கேக்கணும்போலருக்கு.. எளா கைப்புள்ள ஒனக்கு ஏதாச்சும் பிரியிதாலே
உங்களுக்கு கழுத்து மட்டும்தான் சுளுக்கி இருக்கும்னு நினைச்சிட்டிருந்தேன் இத்தனை நாளா!//
சொல்ல மாட்டீக.. எரநூறு தபால்லே திரும்பி பாத்துருக்கேன்..
போறாததுக்கு நாக்கும் சுளுக்கிரப்போவுது.. மாசக் கடைசிக்குள்ள..
பசங்களா! எல்லாரும் வாங்க! வாங்க! //
என்னய்யா இது அக்கிரமம்.. கூப்ட்டு வச்சி அடிக்கப் போறீகளாக்கும்.. போலீஸ்.. போலீஸ்..
ஆஹா! ஆரம்பிச்சிட்டாருய்யா! தலைக்கு ஆப்பு வெக்க ஆரம்பிச்சிட்டாருய்யா! //
யாருக்கு? ஒங்களுக்கா இல்ல ஒங்க சங்கத்துக்கா?
வாங்க சார் வாங்க. கடைசியா புது பிளாகருக்கு மாறுனதும் எளம திரும்புது பாத்தீங்களா? வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல சேந்துட்டீங்களே. கலக்குங்க. கலக்குங்க. இந்த மாதம் இனிய மாதமாக அமைய வாழ்த்துகள்.
//சிபி.. நீங்க என்ன கேட்டீங்கன்னே எனக்கு சரியா கேக்கல.. அதுவும் நம்ம வீட்டம்மா வேற பக்கத்துல இருந்தாங்களா.. அவங்க இருக்கறப்போ சரி, சரின்னுதான் சொல்லிதானெ பழக்கம்? அந்த பழக்கத்துல ஒங்கக்கிட்டயும் சரின்னு சொல்லிட்டேன் போலருக்கு..
//
என்ன சிபி, tbrjoseph, வீட்டுக்கு வீடு வாசப்படி, என்ன சரிதானே...
வாழ்த்துக்கள், நல் வரவு.
//புது மொழி கண புதுமுக //
புது மொழி கண்ட புதுமுக அட்லாஸ் வாலிபர் வாழ்க!
என்னங்க அது ஆணிபுடுங்கனுமா? யாருக்கு, சங்கத்தாளுங்களுக்கா? செஞ்சாலும் செய்வீங்க யார் கண்டா.
என்ன சிபி, tbrjoseph, வீட்டுக்கு வீடு வாசப்படி, என்ன சரிதானே...
வாழ்த்துக்கள், நல் வரவு. //
அதுக்குத்தான் வந்துட்டேன், வந்துட்டேன்னு ரெண்டு தபா போட்டாச்சே..
எது, வீட்டுக்கு வாசற்படியா? நீங்க வேற..
ஒலகத்துல எங்க போனாலும் இதான் கதி.. அது க்ளிண்டனாகட்டும், புஷ்ஷாகட்டும்.. இதுல சிபியும், டிபிஆரும் எம்மாத்திரம்?
வாங்க வாலிப(வ)ரே!
(அட்லாஸ் வாலிபர்னா நெறையப் பவர் வேணும்னு சொன்னாங்க அதான் ;))
தொடர்ந்து கல(லாய்)க்க வாழ்த்துக்கள்!
ஆஹா!! வாங்க வாங்க! ஆமா, இந்த மாதிரி தலைப்பு வெச்சு இருக்கீங்களே, இதுக்கு நம்ம கிட்ட உரிமை இருக்கே, ஒரு வாய் வார்த்த கூட கேட்காம எடுத்துக்கிட்டீரே!!
என்னங்க ஜோ சார், கொஞ்சம் திரும்பிப் பாருங்க... கொத்ஸ் இப்படி உரிமை மீறல் பிரச்சனைக் கிளப்புறாரே என்னச் செய்யலாம்
வாங்க ஜோசப் சார்,
கொஞ்சம் சங்கத்துக்காக திரும்பிப் பார்த்து உங்களுக்கு ஏற்பட்ட சுவையான அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
இது காதல் மாசம் வேறே :-)
சங்கத்து ஆட்கள் மாதிரி எழுத வராதுன்னு மருத, நெல்லை பாஷையையெல்லாம் பிரிச்சி மேஞ்சிட்டீங்க....
ஆமாங்க ஜோசப் சார்.. வீட்டம்மாக் கிட்ட திரும்பிப் பாக்க அனுமதி வாங்கிட்டு உங்க வாழ்க்கையின் பிப்ரவரி மாதங்களைப் பத்திச் சொன்னீங்கன்னா.. அதைப் படிச்சு சங்கத்து புள்ளகளும் நாட்டு மக்களும் நாலு விஷ்யங்களைத் தெரிஞ்சுக்குவாங்க இல்ல..
Post a Comment