Tuesday, February 27, 2007

Alone...in a Woman's World

இல்லத்தரசிகளுக்குன்னு, தனியான சின்னஞ்சிறு உலகம் ஒன்னு இருக்குதுங்க. தன்னையும் தன் குடும்பத்தையும் தன் வீட்டைச் சுற்றியுள்ள ஒரு சிலரையும் தனது குடும்பத்தினரையும் கொண்ட ஒரு சின்னஞ்சிறு உலகம். (டிஸ்கி:இதெல்லாம் என் சிற்றறிவுக்கு எட்டிய வரை) அதில் நடக்கும் சிறு சிறு நிகழ்வுகள், அந்த உலகத்தில் அவர்களை ஒத்தவர்களுடன் அவர்கள் நடத்தும் உரையாடல்கள் இவை எல்லாம் இயந்திரமயமான இவ்வுலகில் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் சுவையாக இருக்கும். அவசரமாக எதையோ தேடிக் கொண்டு ஓடிக்கொண்டிருப்பது போன்ற நம் வாழ்க்கையில் ஒரு கணம் நின்று ஒரு 'அட!' போட வைக்கும், சில சமயம் ஒரு புன்னகையை உதிர்க்கச் செய்யும். "என்ன கார்த்திக்கம்மா பசங்க எல்லாம் ஸ்கூலுக்குப் போயிட்டாங்களா? சமையல் எல்லாம் ஆச்சா"ன்னு ஒரு இல்லத்தரசி கேட்டா நாமளா இருந்தா என்ன பதில் சொல்லுவோம்? ஆமா தெனமும் தான் பசங்க ஸ்கூலுக்குப் போறாங்க தினமும் தான் சமைக்கிறாங்க என்னமோ இந்தம்மா புதுசா வந்து கேக்குதேன்னு தானே நெனப்போம்? ஆனா இதுக்கு இன்னொரு இல்லத்தரசியோட பதில் "போய்ட்டாங்க பாலாஜியம்மா. இன்னிக்கு கத்திரிக்கா சாம்பாரும் வாழைக்கா பொடிமாஸும் சமையல். காய் அரிஞ்சு வச்சிட்டுத் துணி காயப் போடலாம்னு மாடிக்கு வந்தேன். குக்கர்ல இப்பத் தான் பருப்பு வேகுது"ன்னு வரும். அதோட "அவரு கூட மதியானம் சாப்புட வர மாட்டேன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு...ஒத்த ஆளுக்குச் சமைக்கனுமேன்னு இருக்கு. இந்தப் பசங்களுக்கும் ஸ்கூல்லேருந்து வந்து மதியானம் சாப்பிடும் போது காய்கறின்னா மட்டும் எறங்கவே எறங்காது"ன்னு ஒரு கொசுறு தகவலும் வரும். இந்த கேள்வியும் பதிலும் அந்த உலகில் தினமும் கேட்கப்படுபவை, தினமும் பதிலளிக்கப்படுபவை. அவர்களுக்குள் இவற்றைக் கேட்பதற்கும், பதிலளிப்பதற்கும் எப்போதும் அலுக்காதவை. அந்த 'Woman's World'இல் நடக்கும் இப்படிப் பட்ட நிகழ்வுகளை ஒரு வருத்தப்படாத வாலிபனாக, ஒரு 'invisible entity' ஆகத் தள்ளி நின்று அவர்களுக்கு இடையூறாக இல்லாமலும், அவர்களை சங்கடத்தில் ஆழ்த்தாமலும் ரசிப்பது ஒரு தனி ஜாலி தான்.

2005ல கிட்டத்தட்ட ஒரு நாலு மாசம்ங்க...சென்னையில் வீட்டுல [அதாவது அம்மா வீட்டுல :)] தங்கியிருந்து வேலைக்குச் செல்லும் ஒரு அரிய வாய்ப்பு கிடைச்சது.தென் சென்னையிலிருந்து ஆபீஸ் இருக்கும் வடசென்னை வரை தினமும் ஊர்ப்பயணம் செஞ்சுக்கிட்டு வேலைக்குப் போயிட்டு வந்துட்டிருந்தேன். முந்தைய கம்பெனி ஒரு உற்பத்தி சார்ந்த தொழிற்சாலையாக இருந்ததால் வாரத்தில் ஆறு நாள் மட்டும் வேலை நாளாக இருக்கும். அப்படிப் பட்ட ஒரு கம்பெனியில், நீங்க ஐடி துறையில் இருந்தால், மற்ற ஐடி துறையினருக்கு இரண்டாவது விடுமுறை நாளாக இருக்கும் ஞாயிற்றுக் கிழமையும் உங்களுக்கு வேலை நாளாகும் பாக்கியமும் கிட்டலாம். அப்படித் தான் ஒரு வாட்டி, நம்ம கஸ்டடில இருந்த ஒரு அப்ளிகேஷனோட டேட்டாபேஸ் வெர்ஷன் அப்கிரேட் செய்ய வேண்டியிருந்ததுனால, ஞாயித்துக் கிழமையும் ஆபிசுக்குப் போக வேண்டியதாப் போச்சு. சிஸ்டம் அட்மினிஸ்டிரேட்டர் வெர்ஷனை அப்கிரேட் பண்ணிக்குவாரு, நான் திங்கக் கிழமை வந்து பாத்துக்கறேன்னு பாஸ்சு கிட்ட ஒரு பிட்டைப் போட்டுப் பாத்தேன், வர்க் அவுட் ஆகலை. "நான் ராத்திரி ஹார்டுவேர் வேலையெல்லாம் முடிச்சிட்டு காலாங்காத்தாலை சாஃப்ட்வேர் அப்கிரேட் பண்ணிடுவேன். நீ காலைல ஒரு பத்து மணிக்கு வந்தின்னா அப்ளிகேஷன் சரியா வேலை செய்யுதா இல்லையான்னு டெஸ்ட் பண்ணிட்டு பதினொன்னரை பன்னெண்டு மணிக்கு எல்லாம் திரும்பிப் போயிடலாம்"னு நம்ம அட்மிணிஸ்ட்ரேட்டன்(என்ன மரியாதை வேண்டி கெடக்கு?) சொன்னதை உண்மைன்னு நம்பி மாங்கு மாங்குன்னு பஸ்ஸைப் புடிச்சு ஆஃபிஸுக்குப் போனா, தரையில தினத்தந்தி பேப்பரை விரிச்சி போட்டுத் தூங்கிட்டு இருந்தான். 'அட பாவி! ஞாயித்துக் கெழமைக்கு மொத்தமா சங்கு ஊதிட்டியேடா'ன்னு திட்டிக்கிட்டே அவனை எழுப்பி வேலையைத் தொடங்கும் போதே மணி பதினொன்னரை ஆயிடுச்சு.

"ஸ்க்ரிப்ட் ரன் பண்ணி வுட்டிருக்கேன். டேபிள், இண்டெக்ஸ் இதெல்லாம் க்ரியேட் ஆக இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும்"னு சொல்லும் போது "ஹையா! இவனோட சண்டேக்கும் சமாதி கட்டியாச்சு"ன்னு நெனைச்சு சந்தோஷமா சொல்லற மாதிரி இருந்துச்சு. சரி கெடக்குது கழுதைன்னுட்டு இன்னும் இரண்டு மணி நேரம் உக்காந்து ஸ்க்ரிப்ட் ஓடறதை சினிமா பாக்க வேணாம், அந்த நேரத்துல ஊட்டா மாடிட்டு வந்து வேலை பாக்கலாம்னு முடிவு பண்ணோம். எங்க ஆப்பீஸாண்டவே ஓட்டல் இருந்தாலும், "ஞாயித்துக் கெழமையும் அதுவுமா சாம்பார், ரசமா...நோ நெவர்"னு அட்மின் தடியன் அடம்புடிக்கவே ராயபுரம் கல்மண்டபத்துக்கு கிட்டே இருக்க ஹோட்டல் பாண்டியன்ஸ்ல சண்டே ஸ்பெசலான டர்ர்க்கி பிரியாணி சாப்பிடலாம்னு அஜாக்ஸ்லேருந்து ஷேர் ஆட்டோல பயணப் பட்டோம். சின்ன வயசுலேருந்து பழகிப் போன அல்ப புத்தியான ஜன்னலோர சீட்டுக்காக அவசர அவசரமா ஆட்டோல ஏறி உள்ளே குந்திக்கிட்டேன்.

வான்கோழியை ஊடகங்கள்ல பாத்துருந்தாலும்(அப்பா...ஊடகத்தையும் ப்ளாக்ல உபயோகிச்சாச்சு) ஒரு நாளும் சாப்பிட்டதில்லை. வான்கோழி பிரியாணி சாப்பிட போறோம்னு நெனச்சதும் காதல் பரிசு படத்துல வர்ற "வான்கோழி மயிலின் ஆட்டம் அறியுமா"ன்னு பாட்டு வரி நெனப்பு வந்து அந்த பாட்டையே முணுமுணுத்துக்கிட்டு இருந்தேன். மயிலின் ஆட்டத்தை அறியாத வான்கோழியை அன்னைக்கே பழி வாங்க மனம் வன்மம் கொண்டது.

ராஜா கடை வந்ததும், ஒரு அம்பது வயசு மதிக்கத் தக்க ஆண்ட்டியும் ஒரு ரெண்டரை வயசு மதிக்கத் தக்க பாப்பாவை இடுப்புல தூக்கி வச்சிட்டிருந்த ஒரு முப்பது வயசு மதிக்கத் தக்க அக்காவும் ஷேர் ஆட்டோவைக் கை காட்டி நிறுத்துனாங்க.

"பீச் டேஷன் போவுமா?" - இது அக்கா

"போவும்மா" - ஆட்டோகாரர்

"எவ்ளோ?"

"பதினைஞ்சு ரூபா"

"அஜாக்ஸ்லேருந்து தான் பதினைஞ்சு ரூபா. இங்கிருந்து பன்னெண்டு ரூபா தான்" - அக்கா கூட வந்த ஆண்ட்டி.

"சரி ஏறுங்க"

ஆட்டோக்கு உள்ளே ரெண்டு தடியனுங்க உக்காந்துருக்கறதை பாத்ததும் கொஞ்ச நேரம் தயங்கி நின்னாங்க. இருபத்தி நாலு ரூபா சவாரி கைவிட்டுப் போயிடுமோன்னு பயந்த ஆட்டோகாரர் அட்மினிஸ்டிரேட்டனைப் பாத்து "நீ இங்க முன்னாடி வந்துட்ணா" அப்படின்னவும், என் கூட வந்தவன் வேற வழியில்லாம ஷேர் ஆட்டோ டிரைவரோட சீட்டை ஷேர் பண்ணிக்கிட்டான்.

அப்படியும் அவங்க ரெண்டு பேரும் ஏறாம யோசிச்சி நின்னதைப் பாத்த டிரைவர் "நெறைய எடம் இருக்கும்மா...ஏறுங்க சீக்கிரம்"னு அவசரப்படுத்தவும் போனா போவுதுன்னு ஏறி உக்காந்தாங்க.

பாப்பாவை ஜன்னல் பக்கமா உக்காந்துருந்த என் பக்கத்துல உக்கார வச்சிட்டு, பாப்பா பக்கத்துல அவங்க ஆயாவும்(ஆயாவாத் தான் இருக்கணும்னு ஒரு யூகம்), அவங்க பக்கத்துல அவங்க டாக்டரும் உக்காந்துக்கிட்டாங்க(டாக்டர் இன் லாவாக் கூட இருக்க வாய்ப்பிருக்கு).

நியூட்ரல், ஃபர்ஸ்ட், செகண்ட், தர்டைத் தாண்டி ஆட்டோ ஃபோர்த் கியர்ல போறதுக்கு முன்னாடி "ஏம்மா..."ன்னு அக்கா கிட்ட பேச நம்ம ஆண்ட்டி.

என் பக்கத்துல உக்காந்துருந்த அந்த பாப்பா அப்பத் தான் வின்னர் படம் பாத்துட்டு வந்துருக்கும் போலிருக்கு. "ஏண்டா கைப்புள்ள இன்னும் முழிச்சிட்டிருக்கே"ன்னு சொல்ற மாதிரி பாப்பா என் கை மேலே சடக்குன்னு தலையைச் சாய்ச்சது, வெடுக்குன்னு கண்ணை மூடுச்சு, படக்குன்னு தூங்கிப் போச்சு. பரசுராமர் தூக்கத்தைக் கலைக்க விரும்பாத கர்ணன் மாதிரி பாப்பாவுக்குத் தலையணையா நான் ஆட்டோ ஓரத்துல உக்காந்துருந்தேன்.

"ஏம்மா..."னு ஆரம்பிச்சவங்க பாப்பா தூங்கறதைக் கூட கவனிக்காம பேச்சு சுவாரசியத்துல இருந்தாங்க.

"ஜோதி கிட்ட ஜல்லி கரண்டி குடுத்து வச்சிருந்தியே, வாங்கிட்டியா?"

"இல்லைம்மா"

"தீபாவளி நெருக்கத்துல நீயும் தானே பலகாரம் சுடணும்? உனக்கு வேணும்னு அவ நெனைக்க மாட்டாளா?"

"இன்னிக்கே கேட்டு வாங்கிடறேன்"

"நீ தான் இதுல எல்லாம் கரிட்டா இருக்கணும். இன்னும் நாலு நாள் தான் இருக்கு. இன்னும் மிச்சர் போடணும், லட்டு புடிக்கணும்...எவ்வளவு வேலை இருக்கு? ஒனக்குக் கூடமாட வேலை செய்ய ஆளா இருக்கு? நீ தனியாத் தானே செய்யணும்?"

"ஹ்ம்ம்ம்...."

"சூட்டைத் தாங்கிக்கிட்டு லட்டைப் புடிக்கறதுக்கும் எவ்வளோ நேரம் ஆகும். கொஞ்ச கொஞ்சமாப் புடிச்சாத் தானே முடியும்?"

"ஆமாமா...அது சரி தான். இல்லையா பின்ன?" - நியாயமான வாதத்தைக் கேட்டு மனசுக்குள்ளே தீர்ப்பு சொன்னது நானு.

எப்பவும் தண்டையார்பேட்டை வழியா பீச் ஸ்டேஷன் போற ஆட்டோ, ராஜா கடை கிட்டவே சவாரி கெடைச்சதும் டோல்கேட் டிப்போ கிட்ட திரும்பி கடலோரமா எண்ணூர் எக்ஸ்பிரஸ்வேல போக ஆரம்பிச்சது. மழை பெய்ஞ்சு குண்டும் குழியுமா இருந்த ரோட்டைப் பாத்து ஓட்டற கவனத்துல ஆட்டோ டிரைவரும், சின்ன சீட்டுல இடம் பத்தாம ஒட்டுல உக்காந்து வந்துட்டுருந்த நம்ம சகாவும் ரொம்ப அமைதியா வந்தாங்க. பாப்பாவுக்குத் தலையணையான நான் ஆட்டோவின் பின் சீட்டில் Woman's Worldஇல் ஒரு lone traveller ஆக உக்காந்துருந்தேன்.

எப்பவாச்சும் இந்த மாதிரி lone travellerஆக நேரும் போது கடைப்பிடிக்க வேண்டிய எழுதாத சட்டம்(cardinal rule) ஒன்னு இருக்கு. அது "பொறுமையிலும் பொறுமை", "அமைதியிலும் அமைதி" காப்பது என்பது தான். நாம மைனாரிட்டியா இருக்கும் போது சுதந்திரமாப் பேசுவதற்கும் சிந்திப்பதற்கும் முழு உரிமை அவங்களுக்குத் தான் இருக்கு. அந்த நேரத்துல அவங்களைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தாமல் இருப்பது நல்லது.

இப்படித் தான் போன ப்ராஜெக்டில சித்தூர்கட்ல இருக்கும் போது நாங்க தங்கியிருந்த டவுன்ஷிப்பிலிருந்து ஃபேக்டரிக்கு ஜீப்புல போயிட்டு இருக்கும் போது எதோ பூமி பூஜைன்னு ஸ்டாஃப் குவார்டர்ஸ்லே இருந்த ரெண்டு மூனு இந்திக் கார ஆண்ட்டிங்க ஏறிக்கிட்டாங்க.

வழக்கம் போல பல பரிமாணங்கள்ல நடை பெற்றுக் கொண்டிருந்த அவங்களோட பேச்சு வார்த்தையின் நடுவுல ஒரு ஆண்ட்டி "அண்ணி! இந்த சூட் உங்களுக்கு ரொம்ப நல்லாருக்கு. கலர் அருமை. நேத்து சீரியல்ல சலோனி போட்டுக்கிட்டு வந்த சூட் கலர் மாதிரியே இருக்கு"ன்னு இந்தியில சொல்ல, நான் ஆர்வம் தாங்க மாட்டாம திரும்பிப் பார்க்க...

வெயிட்டீஸ் வுட்டுக்கறேன்பா...ப்ளீஸ்...ப்ளீஸ்...இப்ப மணி பன்னெண்டு ஆகுது... ரொம்ப தூக்கம் வருது.

Woman's Worldஇல் நம்ம பயணம் இன்னும் ஒரு எபிசோட் தொடரும்.

28 comments:

கதிர் said...

ரொம்ப நாள் வராம இப்ப வந்து பதிவு போட்டதுக்கு தல க்கு ஒரு சபாஷ். கூடவே தொடரும் போட்டதுக்கு இன்னொரு சபாஷ்.

சேதுக்கரசி said...

அமெரிக்கால கூட இப்படி உரையாடல்கள் உண்டு நம்மூர் பெண்களுக்கிடையே :-) ஓவராலா பதிவு ரசிக்கும்படியா தான் இருக்கு.. இதைத் தவிர: "சமையல் எல்லாம் ஆச்சா" :-( பசங்க ஸ்கூலுக்குப் போயாச்சான்னு கேட்கிறது கூட ஓகே.. சாப்டாச்சான்னு கேட்டாலும் போகுதுன்னு பதில் சொல்லித் தொலையலாம்.. ஆனா எனக்குப் பிடிக்காத ரெண்டு கேள்விகள்:

1. சமையல் எல்லாம் ஆச்சா?

இல்லைன்னு சொன்னா நம்மை என்ன நினைப்பாங்களோ தெரியாது. (அமெரிக்கால நாங்க பாதி நேரம் ஃப்ரிட்ஜ்ல இருக்க மிச்சம் மீதிகளைத் தான் மைக்ரோவேவ் பண்ணி எப்ப பார்த்தாலும் பழைய சாப்பாடு தான் சாப்பிடுவோம்.. இப்படி leftovers-அ வச்சே ஓட்டறதால இல்லைன்னு சொன்னாலும் தப்பில்ல தான்..)

ஆமான்னு சொல்லித் தொலைச்சிட்டா எனக்குப் பிடிக்காத அடுத்த கேள்வி ரெடியா இருக்கும்:

2. என்ன சமையல்?

இந்த ரெண்டு கேள்விகளையும் நான் யாரையும் கேட்கிறதே இல்லைன்னு வச்சிருக்கேன். ஏன்னா எனக்கே இந்த 2 கேள்வியும் அலர்ஜி.

நான் சமைச்சா என்ன சமைக்காட்டி இவங்களுக்கென்னன்னு தோணும். கடுப்பா இருக்கும். அதுக்கு என்ன காரணமோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.. ஆனா ஒருவேளை நான் அப்படியொண்ணும் தினம் தினம் வெரைட்டி வெரைட்டியா சூப்பரா சமைக்கிற டைப் இல்ல..

I wish people will outgrow this question :-) மத்தபடி பதிவு ஓகே தான்.. கவலைப்படாதீங்க :-)

இராம்/Raam said...

தல,

போஸ்ட் கொஞ்சம் பெரிசா இருந்தாலும் படிக்க சுவராசியமா எழுதிருக்கே... :)

பொல்லாத மெளனம் கலைக்காத மேடமே நல்லா இருக்குன்னு சொல்லிருக்காங்க :)

சேதுக்கரசி said...

இராம்,
//
பொல்லாத மெளனம் கலைக்காத மேடமே நல்லா இருக்குன்னு சொல்லிருக்காங்க
//
"இல்லாத காதலிக்காக" பதிவு படிச்சதுலருந்து கைப்ஸோட ரசிகைல்ல.. அதான் :-)

இலவசக்கொத்தனார் said...

என்னய்யா ரொம்ப நாள் ஆச்சுன்னு சேர்த்து வெச்சு இம்மாம் பெரிய பதிவா? கொஞ்ச நேரம் கழிச்சு வந்து படிக்கிறேன். இப்போதைக்கு ஒரு உள்ளேன் ஐயா!

இப்போ இருக்கற தமிழ்மண விதிகளால் உள்ளேன் ஐயா பின்னூட்டம் போடலாமோ? :)

துளசி கோபால் said...

ம்ம்ம்ம்ம்ம்ம்........... அப்புறம்?

கைப்புள்ள said...

//ரொம்ப நாள் வராம இப்ப வந்து பதிவு போட்டதுக்கு தல க்கு ஒரு சபாஷ். கூடவே தொடரும் போட்டதுக்கு இன்னொரு சபாஷ்//

ரொம்ப நன்றி தம்பி.

//ரொம்ப நாள் வராம இப்ப வந்து பதிவு போட்டதுக்கு தல க்கு ஒரு சபாஷ். கூடவே தொடரும் போட்டதுக்கு இன்னொரு சபாஷ்//

Woman's Worldலேருந்து ஒரு படிப்பினை. பதிவைப் படிச்சிட்டு கருத்து சொன்னதுக்கு மிக்க நன்றி.

//"இல்லாத காதலிக்காக" பதிவு படிச்சதுலருந்து கைப்ஸோட ரசிகைல்ல.. அதான் :-) //
அடடா! அடியேன் தன்யன் ஆனேன்.
:)

//போஸ்ட் கொஞ்சம் பெரிசா இருந்தாலும் படிக்க சுவராசியமா எழுதிருக்கே... :)

பொல்லாத மெளனம் கலைக்காத மேடமே நல்லா இருக்குன்னு சொல்லிருக்காங்க :)//
நன்றிப்பா ராயல்.

இப்பல்லாம் முப்பது தான் லிமிட்டாமே. நன்றி எல்லாம் இனிமே அடக்க ஒடுக்கமா ஒரு பின்னூட்டத்துல சொன்னா தான் சரிபடும்.
:)

Anonymous said...

கைப்ஸ் சூப்பர் பதிவு.
எப்பவும் படிச்சிட்டு போயிடுவேன்! ஆனா இன்னைக்கு சொல்லணும்னு தோணிச்சி! ரொம்ப நல்லாருந்தது - வெரி ரியலிஸ்டிக்! :)

இந்த சில இனிமையான பெண் இயல்பு யதார்த்தங்கள் காணாமல் போயிட்டே இருக்கு! :) அழகா புடிச்சு வச்சிருக்கீங்க உங்க வார்த்தைகளில்.

மனதின் ஓசை said...

//அவர்களை சங்கடத்தில் ஆழ்த்தாமலும் ரசிப்பது ஒரு தனி ஜாலி தான்.//

சரியில்லையே :-)

ரொம்ப நாளைக்கப்புறம் வரீங்க போல.. நல்லாருக்கு..சீக்கிரம் அடுத்த பதிவையும் போடுங்க..



//அது "பொறுமையிலும் பொறுமை", "அமைதியிலும் அமைதி" காப்பது என்பது தான். நாம மைனாரிட்டியா இருக்கும் போது சுதந்திரமாப் பேசுவதற்கும் சிந்திப்பதற்கும் முழு உரிமை அவங்களுக்குத் தான் இருக்கு. அந்த நேரத்துல அவங்களைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தாமல் இருப்பது நல்லது.//

அட்வைஸுக்கு தேங்க்ஸ்ங்கண்ணா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்...அப்படியே அம்மா ஊருக்கு போன மாதிரி இருந்துச்சு.
இந்த என்ன வேலைஎல்லாம் ஆச்சாங்கற
கேள்வி கொஞ்சம் அரட்டை அடிக்க
ஆரம்பிக்கறதுக்கு போடற ஆரம்பம்.
அதுவும் குழந்தைகள பற்றி பேச ஆரம்பிச்சா முடியவே முடியாது.
நேத்து பண்ண சேட்டை ...அப்படி பண்ணுச்சுங்கன்னு சொல்லும்போது
பெருமையா இருக்கும். புலம்பல்களை
தவிர்த்து பகிர்தல் சுவாரசியம் . ஒரு வித ரிலாக்சேஷன். நல்லா இருக்கு பதிவு.

dubukudisciple said...

seekiram podunga adutha padiva...
renduthukum serthu comment podaren
(he he he)

Unknown said...

தல நீண்ட கேப்புக்கு அப்புறம் வந்து இருக்கே... அப்புறம் அந்த இந்திக்கார ஆன்டிங்களும் உனக்கு ஆப்பு வச்சிட்டீங்களா தல.... சொல்லு தல சஸ்பென் ஸ் தாங்கல்ல... அடி பலமோ.. ஜீப்புல்ல இருந்து உருட்டிகிட்டி விட்டுருல்லயே சொல்லு தல...

கைப்புள்ள said...

//எப்பவும் படிச்சிட்டு போயிடுவேன்! ஆனா இன்னைக்கு சொல்லணும்னு தோணிச்சி! ரொம்ப நல்லாருந்தது - வெரி ரியலிஸ்டிக்! :)

இந்த சில இனிமையான பெண் இயல்பு யதார்த்தங்கள் காணாமல் போயிட்டே இருக்கு! :) அழகா புடிச்சு வச்சிருக்கீங்க உங்க வார்த்தைகளில்//

வாங்க மதுரா,
ரொம்ப நன்றி. உங்க கமெண்டைப் படிச்சதும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அப்படியே பறந்துக்கிட்டு இருக்கேன்.
:)

//சரியில்லையே :-)//
அப்படீங்கறீங்க?
:)

//ரொம்ப நாளைக்கப்புறம் வரீங்க போல.. நல்லாருக்கு..சீக்கிரம் அடுத்த பதிவையும் போடுங்க..//
சீக்கிரமே போடறேன்.

//அட்வைஸுக்கு தேங்க்ஸ்ங்கண்ணா//
எதோ நம்ம மண்டையில உதைச்சது...சே...உதிச்சது. கமெண்டுக்கு நன்றி மாவீரரே!
:)

கைப்புள்ள said...

//ம்...அப்படியே அம்மா ஊருக்கு போன மாதிரி இருந்துச்சு.
இந்த என்ன வேலைஎல்லாம் ஆச்சாங்கற
கேள்வி கொஞ்சம் அரட்டை அடிக்க
ஆரம்பிக்கறதுக்கு போடற ஆரம்பம்.
அதுவும் குழந்தைகள பற்றி பேச ஆரம்பிச்சா முடியவே முடியாது.
நேத்து பண்ண சேட்டை ...அப்படி பண்ணுச்சுங்கன்னு சொல்லும்போது
பெருமையா இருக்கும். புலம்பல்களை
தவிர்த்து பகிர்தல் சுவாரசியம் . ஒரு வித ரிலாக்சேஷன். நல்லா இருக்கு பதிவு//

வாங்க மேடம்,
படிச்சிட்டு உங்க எண்ணங்களையும் பகிர்ந்துகிட்டதுக்கு மிக்க நன்றி.

//seekiram podunga adutha padiva...
renduthukum serthu comment podaren
(he he he)//
வாங்க சுதா,
உங்க ரெண்டு கமெண்டுக்காகவாச்சும் சீக்கிரமே அடுத்த பதிவைப் போட்டுடறேன்.

//சொல்லு தல சஸ்பென் ஸ் தாங்கல்ல... அடி பலமோ.. ஜீப்புல்ல இருந்து உருட்டிகிட்டி விட்டுருல்லயே சொல்லு தல...//
அடியா? நமக்கா? நம்ம வீரம் என்ன? விவேகம் என்ன? அடியெல்லாம் நாம என்னிக்கு வாங்கிருக்கோம்? நாம வாங்கறதெல்லாம் நெஞ்சுல ஈட்டி தானே? அடி கிடின்னுக்கிட்டு என்னாது சின்னப்பில்லத் தனமா? கொஞ்சம் வெயிட்டு நைனா...அடுத்த பாகத்துல தெரியும், நம்ம வீரதீர பிரதாபங்கள் எல்லாம்.
:)

Geetha Sambasivam said...

ரொம்ப நாளாக் காணாமப் போன ரகசியம், ஆணியோ, கடப்பாரையோ பிடுங்கறதாலேன்னு நினைச்சா? இது தானா? அது சரி, உங்க ரேஞ்சுக்கு ஏத்த பொண்ணுங்க வேறே கிடைக்காம, எல்லாம் ஆண்டியும், ஆயாவுமாவே கிடைக்குது! வாழ்த்துக்கள்!
:))))))))))))

கைப்புள்ள said...

//உங்க ரேஞ்சுக்கு ஏத்த பொண்ணுங்க வேறே கிடைக்காம, எல்லாம் ஆண்டியும், ஆயாவுமாவே கிடைக்குது! வாழ்த்துக்கள்!
:))))))))))))//

சிவ சிவ! இதைக் கேட்ட பின்னுமா நான் உயிர் நீக்காமல் இருக்கிறேன். ஐயகோ!!!
:((

Unknown said...

இன்று நீண்ட் இடைவெளிக்குப் பின் சங்கம் திரும்பியிருக்கும் எங்கள் அன்னையே...
வாலிபர்களின் வழிகாட்டியே..
என்றும் 16ஐ தாண்டாத தங்கத் தலைவியே...

நீங்க இல்லாமா .. சங்கம் பக்கம் வராம அயல் நாடு மற்றும் புண்ணியத் தலங்களுக்குப் பயணம் மேற்கொண்டீர்கள்.. தல தவித்து விட்டார்.. தடம் மாறி விட்டார்.. சரியான நேரத்தில் வந்து தலக்குத் தக்க புத்தி கூறிய தர்மத் தாயே நீ வாழ்க வாழ்க..

சங்கம் உன்னை அழைக்கிறது வாங்க தர்ம தேவதையே...

கப்பி | Kappi said...

தல

அடுத்தவங்களை வேடிக்கை பார்க்கறது ரொம்பவும் சுவாரஸ்யமான இனிமையான விஷயம்..நாம பார்க்கறதை அவங்க பார்த்துட்டா கொடுக்கற ரியாக்ஷன் கூடுதல் ப்ளஸ் :))

ரொம்ப அழகா படம்பிடிச்சிருக்கீங்க..அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்

தெனாலி said...

பதிவு சுவாரஸ்யமா இருக்கு, அதனால லெந்த் பத்தி கவலைப்படாம அடிச்சு விளையாடுங்க..மேடமே சொல்லிட்டாங்களா? அப்புறமென்ன, டபுள் ரைட். 30க்குள்ள முடிச்சுக்கணுமா..என்னக் கொடுமை கைப்பு..என்னக் கொடுமை!

கதிர் said...

////ரொம்ப நாள் வராம இப்ப வந்து பதிவு போட்டதுக்கு தல க்கு ஒரு சபாஷ். கூடவே தொடரும் போட்டதுக்கு இன்னொரு சபாஷ்//

ரொம்ப நன்றி தம்பி.

//ரொம்ப நாள் வராம இப்ப வந்து பதிவு போட்டதுக்கு தல க்கு ஒரு சபாஷ். கூடவே தொடரும் போட்டதுக்கு இன்னொரு சபாஷ்//

Woman's Worldலேருந்து ஒரு படிப்பினை. பதிவைப் படிச்சிட்டு கருத்து சொன்னதுக்கு மிக்க நன்றி.

//"இல்லாத காதலிக்காக" பதிவு படிச்சதுலருந்து கைப்ஸோட ரசிகைல்ல.. அதான் :-) //
அடடா! அடியேன் தன்யன் ஆனேன்.
:)

//போஸ்ட் கொஞ்சம் பெரிசா இருந்தாலும் படிக்க சுவராசியமா எழுதிருக்கே... :)

பொல்லாத மெளனம் கலைக்காத மேடமே நல்லா இருக்குன்னு சொல்லிருக்காங்க :)//
நன்றிப்பா ராயல்.

இப்பல்லாம் முப்பது தான் லிமிட்டாமே. நன்றி எல்லாம் இனிமே அடக்க ஒடுக்கமா ஒரு பின்னூட்டத்துல சொன்னா தான் சரிபடும்.
:)//


தல அநியாத்துக்கு திருந்திட்டியே தல!

30 சட்டம் போட்டாலும் போட்டாங்க அதுக்காண்டி இப்படியா ஒரே பின்னூட்டத்துல நாலு பேருக்கு பதில் சொல்லுவே!

நம்ம கவுரவம் என்னாகுறது??

கவிதா | Kavitha said...

தல..எங்க தல ரெம்ப நாளா ஆளையே காணோம்.?.. என்ன ஆச்சு. சரி நீங்க இப்படி பெருசா எழுதறத மாத்திக்கவே மாட்டிங்களா..?.. இவ்வளாம் பெருசா எழுதீனீங்க்க அடுத்த வாட்டி நான் வரமாட்டேன் சொல்லிட்டேன்..

ஆமா இல்லத்தரசிகள் உரையாடல் பத்தி எழுதி இருக்கீங்க.. ஆனா..கவிதா இந்த மாதிரி எல்லாம் பேசி நான் கேட்டதே இல்ல.. அம்மணி எப்பவும் ஓவர் தான்.!! ஓவர் னா தெரியாதா உங்களுக்கு.. மத்தவங்க பேசுவாங்க அம்மணி கவனிச்சிட்டு கடைசியில "கருத்து கந்தசாமி" வேலப்பார்த்துட்டு வந்துடுவாங்க.. நீங்க என்னவோ அவங்க பேசறது ஜாலி' ன்னு சொல்றீங்க.. ம்ம்.. கல்யாணம் ஆனா தெரியும்.. !!

கைப்புள்ள said...

//இன்று நீண்ட் இடைவெளிக்குப் பின் சங்கம் திரும்பியிருக்கும் எங்கள் அன்னையே...
வாலிபர்களின் வழிகாட்டியே..
என்றும் 16ஐ தாண்டாத தங்கத் தலைவியே...

நீங்க இல்லாமா .. சங்கம் பக்கம் வராம அயல் நாடு மற்றும் புண்ணியத் தலங்களுக்குப் பயணம் மேற்கொண்டீர்கள்.. தல தவித்து விட்டார்.. தடம் மாறி விட்டார்.. சரியான நேரத்தில் வந்து தலக்குத் தக்க புத்தி கூறிய தர்மத் தாயே நீ வாழ்க வாழ்க..

சங்கம் உன்னை அழைக்கிறது வாங்க தர்ம தேவதையே...//

சரி தான். இந்த சிச்சுவேசனுக்குத் தலைவி புகழ் பாடற பாட்டு ஒன்னு நம்ம கையில இருக்கு. அது என்னாங்குறியா? "சத்தியம் நீயே தர்மத் தாயே! குழந்தை வடிவே தெய்வ உருவே" பேக்கிரவுண்டலே(ஏ...டியான்...டியான்...டியான்...டிங்)

கைப்புள்ள said...

//பதிவு சுவாரஸ்யமா இருக்கு, அதனால லெந்த் பத்தி கவலைப்படாம அடிச்சு விளையாடுங்க..மேடமே சொல்லிட்டாங்களா? அப்புறமென்ன, டபுள் ரைட்//

வாங்க தெனாலி! வருகைக்கு மிக்க நன்றி. கீதா மேடம் சொல்றதைச் சொல்றீங்களா? ஹி...ஹி
:)

கைப்புள்ள said...

//தல அநியாத்துக்கு திருந்திட்டியே தல!

30 சட்டம் போட்டாலும் போட்டாங்க அதுக்காண்டி இப்படியா ஒரே பின்னூட்டத்துல நாலு பேருக்கு பதில் சொல்லுவே!

நம்ம கவுரவம் என்னாகுறது??//

என் அறிவுக் கண்ணைத் தெறந்து வச்ச அறிவழகா! இனிமே பழைய படி ஒண்டிக்கு ஒண்டி தான்.
:)

கைப்புள்ள said...

//தல..எங்க தல ரெம்ப நாளா ஆளையே காணோம்.?.. என்ன ஆச்சு. சரி நீங்க இப்படி பெருசா எழுதறத மாத்திக்கவே மாட்டிங்களா..?.. இவ்வளாம் பெருசா எழுதீனீங்க்க அடுத்த வாட்டி நான் வரமாட்டேன் சொல்லிட்டேன்.. //
முயற்சி பண்ணறேன் அனிதா. ஆனா சுருக்கமா எழுத வரவே மாட்டேங்குது.

//ஆமா இல்லத்தரசிகள் உரையாடல் பத்தி எழுதி இருக்கீங்க.. ஆனா..கவிதா இந்த மாதிரி எல்லாம் பேசி நான் கேட்டதே இல்ல.. அம்மணி எப்பவும் ஓவர் தான்.!! ஓவர் னா தெரியாதா உங்களுக்கு.. மத்தவங்க பேசுவாங்க அம்மணி கவனிச்சிட்டு கடைசியில "கருத்து கந்தசாமி" வேலப்பார்த்துட்டு வந்துடுவாங்க.. நீங்க என்னவோ அவங்க பேசறது ஜாலி' ன்னு சொல்றீங்க.. ம்ம்.. //

அப்படீங்கறே? அதெல்லாம் வரும்போது பாத்துக்கலாம்.
:)

Anonymous said...

ரொம்ப இயல்பா எழுதறீங்க. இந்த மாதிரி கேல்விகலை தினமும் கேட்டாக்கூட சலிக்காமல் பதில் சொல்லுவதுதான் பெண்களின் இயல்புன்னு நினைக்கிறேன்.நாங்கள் க்கூட யாருக்கு ஃபோன் பேசினாலும் இந்த வகை கேள்விகள் இல்லாமல் உரையடல் இருக்காது

கைப்புள்ள said...

//ரொம்ப இயல்பா எழுதறீங்க. இந்த மாதிரி கேல்விகலை தினமும் கேட்டாக்கூட சலிக்காமல் பதில் சொல்லுவதுதான் பெண்களின் இயல்புன்னு நினைக்கிறேன்.நாங்கள் க்கூட யாருக்கு ஃபோன் பேசினாலும் இந்த வகை கேள்விகள் இல்லாமல் உரையடல் இருக்காது//

வாங்க நர்மதா,
பதிவைப் படிச்சிட்டு உங்க கருத்தைப் பகிர்ந்துக்கிட்டதுக்கும் ரொம்ப நன்றிங்க.

ஜொள்ளுப்பாண்டி said...

//மயிலின் ஆட்டத்தை அறியாத வான்கோழியை அன்னைக்கே பழி வாங்க மனம் வன்மம் கொண்டது.//

ஆயிரம்தான் சொலுங்க தல தலதான். ரொம்ப சுவாரசியம் தல. எப்படித்தான் இப்படி பொறுமைசாலியா ஒரு தல ய ஆண்டவன் எங்களுக்கு கொட்டுத்தானோ !! :)))))

பிரியாணிக்குள்ள இருக்குற டர்க்கி பீஸ் மாதிரி அங்கங்கே காமெடிய போட்டு பொதச்சு வச்சுஇருக்கியே தல !!! :))))நல்லாவே இருக்கு !!