Friday, February 23, 2007

சென்சஸ் எடுக்கப் போறாங்க 3

செந்: அதா நா இருக்கேன்லேண்ணே.. நீங்க பேசாம நில்லுங்க.. நா கேக்க, கேக்க நீங்க கம்முன்னு டிக் பண்ணிக்கிட்டே வாங்க..

பயில்வான்: யார்யா நீங்க? நீங்க முழிக்கற முழியே சரியில்லையே.. பால்கனியிலிருந்து கீழே பார்க்கிறார்.. வாசலில் நாயரும் மகளும் நிற்பது தெரிகிறது..) யோவ் நாயர்.. ஒன்கிட்ட வாடகைக்கு வீட்ட குடுக்கறப்பவே சொன்னேன்லே.. கேட்ட எப்பவும் மூடி வையின்னு.. கண்ட, கண்ட பயல்லாம் வீடேறி வர்ற வரைக்கும் என்னய்யா பண்ணிக்கிட்டிருக்கே..

(கவுண்டர் கோபத்துடன் ஏதொ பேச வாயெடுத்துவிட்டு பிறகு மூடிக்கொள்கிறார்.)

செந்: அண்ணே வேணாம்.. வந்த வேலைய மட்டும் முடிச்சிக்கிட்டு போயிருவோம்.. ஏற்கனவே மயக்கம் போட்டு விழுந்திருக்கீங்க.. நா பேசிக்கறேன் (முன்னால் சென்று) சார்.. நாங்க கவர்ன்மெண்ட் ஸ்டாஃப்ஸ்.. கொஞ்சம் மரியாதையா பேசுனா நல்லாருக்கும்..

(அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே பயில்வான் பின்னாலிருந்து ஒரு இளம் பெண் எட்டிப் பார்ப்பதைக் கண்டுவிடுகிறார்.. வாயெல்லாம் பல்லாகிறது..) (இவங்கள யார்னு கற்பனை பண்றது நக்மா? சீ.. அவங்க ரிட்டையர்டாயாச்சு.. சிம்ரன்.. சே.. அவங்க ரொம்ப குண்டாய்ட்டாங்க.. த்ரிஷா? வேணம்பா நா செந்திலுக்கு ஜோடியான்னு சண்டைக்கு வருவாய்ங்க.. சரி.. ஒங்களுக்கும் வேணாம் எனக்கு வேணாம்.. நம்ம கோவை சரளாவே டபுள் ஆக்ஷன் பண்ணிக்கட்டும்..)

பயில்: (செந்திலின் பார்வை செல்லும் பாதையை கவனித்துவிடுகிறார்) டேய்.. இதான் கவர்ன்மெண்ட் ஸ்டாஃபோட லட்சணமா.. நீ எதுக்கு வந்தியோ அந்த சோலியே பாக்காம அங்க என்ன லுக்கு விடறே.. ஒரு குத்து விட்டேனா சட்னியாயிருவே.. நீயும் ஒம் மூஞ்சியும்.. ஒனக்கு என்ன வேணும் இப்போ..அதச் சொல்லு..

(கவுண்டர் வாயை மூடிக்கொண்டு சிரிக்கிறார். செந்தில் அதைக் கண்டுக்கொள்ளாதவர் போல் கையிலிருந்த பட்டியலில் இருந்து படிக்கிறார்) இங்க மடசாமி யாரு சார்? நீங்களா? (முனகுகிறார்) சரியாத்தான்யா வச்சிருக்காய்ங்க..

பயில்: டேய் என்ன நக்கலா? மாடசாமிய மடசாமின்னு படிக்கே?(கோபத்துடன் முஷ்டியை குவித்து குத்த வருகிறார். அதற்குள் கோவை2 வந்து அவருடைய கையைப் பிடித்துக்கொள்கிறார்)

கோவை2: அப்பா.. அவருதான் கவர்ன்மெண்ட் ஸ்டாஃபுன்னு சொல்றாருல்லே.. அவர போயி அடிக்கப் போறீங்க.. டியூட்டியிலருக்கற கவர்ன்மெண்ட் ஸ்டாஃப் மேல கைய வச்சா வில்லங்கமாயிரும்பா.. வேணாம் (அவர் குரலிலிருந்த கொஞ்சல் செந்திலை மெய்மறக்கச் செய்கிறது. கண்களை மூடி அப்படியே கனவுலகுக்கு செல்கிறார்.. கட்.. கட்.. என்கிறார் டைரக்டர்.. யார்.. நம்ம கவுண்டர்தான். அதனால கனவுல டூயட்லாம் ஒன்னும் வேணாம்.)

பயில்: சரி ஒனக்காக விடறேன்.. என் செல்லம்லே.. (மகளைக் கொஞ்ச.. அவரோ செந்திலை ஓரக்கண்ணால் பார்த்து ஒரு வசீகர புன்னகையை விடுக்கிறார்)

செந்: சாரி.. சார்.. நா தமிள்ல கொஞ்சம் வீக்.. அதான்.. சரி.. அண்ணே மாடசாமிய டிக் பண்ணிக்குங்க.. ரைட்.. அடுத்தது ஜல்சா ராணி.. என்னது? (பயில்வான் மீண்டும் கோபத்துடன் முஷ்டியை உயர்த்துகிறார்)

கோவை2: ஊம்..(சிணுங்குகிறார்) அது ஜலஜா ராணி.. நாந்தேன்.. வயசு என்னன்னு போட்டுருக்கு?

செந்: பதினேழு..

கோவை2: (வெட்கத்துடன்) கரெக்டாதான் சொல்றீங்க (செந்தில் லிஸ்ட்டில் இருக்கும் தியதியை டிக் செய்கிறார்)

கவு: டேய்.. அது போன தேர்தலப்போ எடுத்ததுறா.. அஞ்சு வருசமாச்சில்லே..

செந்: (எரிச்சலுடன்) என்னண்ணே நீங்க.. வருசம் மாறுனா வயசுமா மாறும்.. நா பத்தாங்கிளாஸ் பாஸ்ணே..

கவு: (நொந்துபோகிறார்) டேய்.. அதையே எத்தனதரம்டா சொல்வே.. மேல படிடா..

செந்: மாணிக்கம்மாள்.. வயசு 80.. என்னது எண்பதா? எங்க காணம்? (பயில்வானுக்கு மேலே எம்பி பார்க்க முயல்கிறார். ஆனால் முடியவில்லை)

பயில்: யோவ்.. அவங்க இப்ப இல்லை..

கவு: மேல போய்ட்டாங்க போலருக்கு.. பேர அடிடா..

(கோவை2 கண் கலங்குகிறார். பயில்வான் கவுண்டருடைய கழுத்தில் கைவைக்கிறார்)

பயில்: டேய்.. இன்னைக்கி ஒங்க ரெண்டு பேரையும் என்ன பண்றேன் பார்..

கவு: (சிரமப்பட்டு அவருடைய கைகளை விடுவிக்க முயல்கிறார். ஆனால் முடியவில்லை. செந்தில் பார்த்துக்கொண்டு வெறுமனே நிற்கிறார்) டேய்.. டேய்.. ஏதாச்சும் பண்ணேண்டா.. செத்து கித்து போயிரப் போறேன்..

செந்: (சிரிக்கிறார்) பயப்படாதீங்கண்ணே.. நாம கவர்ன்மெண்ட் ஸ்டாஃப்ணே.. லேசா கைய வச்சாலே ஆறு மாசம் ஜெயில்.. இப்ப ஒங்கள கொன்னுட்டார்னு வச்சிக்குங்க.. தூக்குதான்..

(பயில்வான் செந்திலை முறைத்தவாறு கைகளை எடுக்கிறார். கவுண்டர் கழுத்தை தேய்த்தவாறு செந்திலைப் பார்க்கிறார்) டேய்.. இருந்தாலும் ஒன் லொள்ளு தாங்கலடா.. நா செத்ததுக்கப்புறம் இவன் ஜெயிலுக்கு போனா என்ன போவாட்டி என்ன.. இப்ப நா என்னடா தப்பா சொல்லிட்டேன். கெழத்துக்கு அஞ்சு வருசத்துக்கு முன்னாடியே எண்பது வயசு.. இதுல இவன் இப்போ இல்லேங்கறான்.. நான் என்னத்தடா நினைக்கறது..

கோவை2: (கொஞ்சலுடன்) பாட்டி ஊருக்கு போயிருக்காங்க..

செந்: (முறைப்புடன்) நாங்க எப்படி நம்பறது.. அவங்க ஊருக்கு போன டிக்கெட் இருக்கா.. இருந்தா காமிங்க.. டிக் பண்ணிக்கறோம்.. (கோவை2 பரிதாபமாக தன் தந்தையைப் பார்க்கிறார்) சொல்லுங்க டிக்கெட் இருக்கா? இல்லன்னா சொல்லிருங்க.. பேர கட் பண்ணிடறோம்.. (கவுண்டர் செந்திலைப் பார்த்து பற்களைக் கடித்தவாறு தனக்குள்) டேய்.. ஒன்னெ கூட்டிக்கிட்டு வந்தேன் பார்.. ஊருக்கு போனவங்க டிக்கெட் இவங்கக்கிட்ட எப்படிறா?

(பயில்வான் தலையிலடித்துக்கொண்டு தன் மகளைப் பார்க்கிறார். அவர் ஒரு நொடி யோசித்துவிட்டு தன் தந்தையைப் பார்த்து கண்ணடிக்கிறார். திரும்பி செந்திலிடம்) இருங்க.. வாரன்.. (வீட்டிற்குள் சென்று அடுத்த சில நொடிகளில் ஒரு பழைய உள்ளூர் பஸ் டிக்கட்டைக் கொண்டு வந்து காட்டுகிறார்) இந்தாங்க.. நீங்க கேட்ட டிக்கெட்டு..

தொடரும்..

15 comments:

dubukudisciple said...

hello !!!
chancea illa
Supera ezhuthi irukeenga!!!
waiting for the next post!!!
seekiram podunga!!!

Subbiah Veerappan said...

///டேய்.. இருந்தாலும் ஒன் லொள்ளு தாங்கலடா.. நா செத்ததுக்கப்புறம் இவன் ஜெயிலுக்கு போனா என்ன போவாட்டி என்ன.. இப்ப நா என்னடா தப்பா சொல்லிட்டேன். கெழத்துக்கு அஞ்சு வருசத்துக்கு முன்னாடியே எண்பது வயசு.. இதுல இவன் இப்போ இல்லேங்கறான்.. நான் என்னத்தடா நினைக்கறது..//

சூப்பரா இருக்கு - கலக்கிட்டீங்க மி்ஸ்டர் ஜோசஃப்!

G.Ragavan said...

சார், உண்மையச் சொல்லுங்க. நீங்க கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் பின்னாடியே போய்த்தானே ஒட்டுக் கேட்டுட்டு வந்துதானே எழுதுனீங்க?

அந்த டிக்கெட்டு காமெடி சூப்பர்.

நாகை சிவா said...

//இவங்கள யார்னு கற்பனை பண்றது//

ஷர்மிலி தான் கரேக்டா இருப்பாங்க

என்ன சொல்லுறீங்க

Anonymous said...

மடசாமி, ஜல்சா ராணி ....
சூப்பரா இருக்கு, சீக்கிரம் முடிக்காதிங்க தல :)

TBR. JOSPEH said...

வாங்க டுபுக்கு,

நன்றிங்க..

TBR. JOSPEH said...

வாங்க சுப்பையா சார்,

நன்றி..

TBR. JOSPEH said...

வாங்க ராகவன்,

நீங்க கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் பின்னாடியே போய்த்தானே ஒட்டுக் கேட்டுட்டு வந்துதானே எழுதுனீங்க?//

கரெக்ட்.. சினிமாவுல:)

TBR. JOSPEH said...

வாங்க சிவா,

ஷர்மிலி தான் கரேக்டா இருப்பாங்க

என்ன சொல்லுறீங்க //

ஷர்மிலி? கொஞ்சம் குண்டாருப்பாங்களே அவங்களா?

மும்தாஜ் வேணும்னா.. அதாவது ஒல்லி மும்தாஜ் பொருத்தமா இருப்பாங்க..

TBR. JOSPEH said...

வாங்க உண்மை,

மடசாமி, ஜல்சா ராணி ....
சூப்பரா இருக்கு, சீக்கிரம் முடிக்காதிங்க..

28.2.07 அன்னைக்கி நம்ம டென்யூர் முடிஞ்சிருமே..

எக்ஸ்டென்ஷன் கேக்கணுமான்னு பாக்கேன்..

அதுலயும் என்னெ இந்த பதவியில ஒக்கார வச்சே சிபி ஆளையே காணம்!

அவருக்கே ஏன்டா இவர வச்சோம்னு இருக்கோ என்னமோ? என்ன சிபி..

கோச்சிக்காதீங்க..

நாகை சிவா said...

மும்தாஜ் ஒகே தான் ஆனா வீராசாமி சீ விஜய ராஜேந்தர் சண்டைக்கு வந்தா என்ன பண்ணுறது

நாகை சிவா said...

//அவருக்கே ஏன்டா இவர வச்சோம்னு இருக்கோ என்னமோ? என்ன சிபி..//

சே...சே.... அப்படி எல்லாம் கிடையவே கிடையாது. இன்னும் நாலு நாள் இருக்கே. நீங்க சும்மா அடிச்சு ஆடுங்க. பாத்துக்கலாம்

கைப்புள்ள said...

சார்,
தாமதமா வந்ததுக்கு மன்னிக்கனும். மூனு பாகத்தையும் இன்னிக்குத் தான் படிச்சேன். சூப்பரா எழுதிருக்கீங்க. குறிப்பா "செந்: (சிரிக்கிறார்) பயப்படாதீங்கண்ணே.. நாம கவர்ன்மெண்ட் ஸ்டாஃப்ணே.. லேசா கைய வச்சாலே ஆறு மாசம் ஜெயில்.. இப்ப ஒங்கள கொன்னுட்டார்னு வச்சிக்குங்க.. தூக்குதான்.." - இந்த லொள்ளை ரொம்ப ரசிச்சேன். அருமை.
:))

TBR. JOSPEH said...

வாங்க சிவா,

மும்தாஜ் ஒகே தான் ஆனா வீராசாமி சீ விஜய ராஜேந்தர் சண்டைக்கு வந்தா என்ன பண்ணுறது //

அதுவும் சரிதான். ஆனா ஒன்னுங்க.. நம்ம ராஜேந்தர் பண்றது செந்தில் பண்றதவிட நல்லாத்தான் இருக்கு.. அவர் டான்ஸ் ஆடறத சொல்றேன்.

TBR. JOSPEH said...

நன்றி கைப்புள்ள..