Wednesday, February 28, 2007

30 ஆச்சுன்னா ரிட்டயர்மெண்டு!!!







தமிழ்மணத்துல இனிமே 30தாண்ட கூடாதுன்னு சொல்லிட்டாங்க. யோவ், யார்யா அடிக்க வர்றது, பின்னூட்டத்தைதாம்பா சொல்றோம்.
வயசை சொல்றோம்னு நெனைச்சு கைய கீய வெச்சீங்க,
அப்புறம் ...அப்புறம்

அப்புறம் அப்புறம்

அப்புறம்

அப்புறம் அப்புறம்

அப்புறம் அப்புறம்

அழுதுபுடுவோம்ல.


சரி, கொலை வெறிப்படை என்னய்யா பண்ணுவாங்க. கம்னு இந்த அறிவிப்புக்கு எதிர் கொரலு வுடுற மாதிரி செந்தழல் ரவிய கொளுத்திப்புடலாமா? அப்படியே பெங்களூரு-காவிரி பிரச்சினைன்னும் சொல்லி அரசியல் ஆக்கிரலாம். எப்படி ஐடியா? இதெல்லாம் தெரிஞ்சுதான் ரவி அப்பபோ "நான் அவுஸ்திரேலியா போய்ருவேன்னு" சொல்றாரோ?
ஒரு தில்லாங்கடி பண்ணலாமே,


எப்படி?

வழக்கம்போல 20 பின்னூட்டம் வரைக்கு விளையாட்டு,
அப்புறம்?
20 பின்னூட்டத்தையும் Cut-Paste to ஒரு பின்னூட்டமா ஆக்கிறது. அப்பிடியே பழைய 20 பின்னூட்டத்தையும் டெலிட் பண்ணிறுவோம், அப்படியே 21 வரைக்கும் மறுபடியும் விளையாட்டு, மறுபடியும் Cut-Paste to ஒரு பின்னூட்டம் அப்ப்டியே 29 வரைக்கும் விளையாடலாம்.

என்ன ஒரு இது.. அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்ல இது வராது. அதுக்காக என்ன பண்றது..20-21-22ன்னு 29 வரைக்கும் முன்னேறனும் .. 30 ஆச்சுன்னா?

ஆச்சுன்னா என்ன? ஆட்டைய கலைச்சுபுட்டு போய்ட்டே இருக்க வேண்டியதுதான்.

என்ன பண்ண? இப்படியெல்லாம் ரோசனை பண்ணித்தான் பொழப்ப ஓட்ட வேண்டியிருக்கு. விடுங்க விடுங்க.. 30 ஆச்சுன்னா ரிட்டயர்மெண்டு!!!

இந்த விளையாட்டை இந்த பதிவிலே இருந்தே ஆரம்பிக்கிறோம்ய்யா.. ஆரம்பிக்கிறோம்ய்யா..!!!


[டிஸ்கி: நாங்களும் தமிழ்மணத்தின் 30 அம்ச(மான) திட்டத்தினை வரவேற்கிறோம்]

20 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

30 பின்னூட்டத்தின் பின் ,இதே பதிவை மீண்டும் போடமுடியாதா???சும்மா? கேட்கிறேன்.
மீள்பதிவு 30 க்குப் பின் ..அப்பிடினு!!!

ILA (a) இளா said...

பழைய பின்னூட்டங்கள்
//இலவசக்கொத்தனார் said...
cut paste பண்ணறதை பின்னூட்டமா போடாம பதிவில் போட்டா இன்னும் விசேஷம். யோசிப்பீர்களா?

28/2/07 3:52 PM


Anonymous said...
இந்த கொடுமையான ரோசனையை கொடுத்து ஆட்டையை கலைத்தது மனதின் ஓசைன்னு நெனைக்கிறேன்...பெங்களூரில் இருக்குற அவருக்கு ஒரு பார்ட்டி வெக்கலாம்னு இருக்கேன்...நந்தி ஹில்ஸ்ல ஏத்திவிட்டு எறங்க வைக்கனும்...ரெடியா.

செந்தழல் ரவி

28/2/07 4:56 PM


பொன்ஸ் said...
விவசாயி இளா,
இந்த விளையாட்டில் ஒரு தொழிற்நுட்பப் பிழை இருக்கிறது.

முதல் இருபது பின்னூட்டம் வந்து, நீங்க அதை வெட்டி ஒட்டி ஒரே பின்னூட்டமாக்கிவிட்டு இருபதை அழித்தால், தமிழ்மண பின்னூட்ட எண் இன்னமும் இருபதாகத் தான் இருக்கும்.

இதனால், மீண்டும் இரண்டாம் பின்னூட்டம் தொடங்கும் போது கூட, இருபது என்று தான் நினைக்கும். உங்கள் பதிவு முகப்பில் வராது...

இந்தப் பதிவிலேயே இரண்டு சோதனைப் பின்னூட்டம் போட்டு சோதித்துக் கொள்ளலாம் :)

28/2/07 5:01 PM


சயந்தன் said...
நீங்க சொன்னது சரிப்பட்டு வராது. wrong information..
உதாரணமா தமிழ்மணத்தில 20 பின்னூட்டு வந்த பிறகு நீங்க அதை ஒண்ணாக்கி திரும்ப இரண்டாவது பின்னூட்டம் போடுறீங்க.. அப்போ தமிழ்மணத்தில ரண்டுன்னு வராது. சரி 3வது பின்னூட்டம் போடுறீங்க.. அப்பவும் தமிழ்மணத்தில வராது. உங்களுக்கு எப்போ மறுபடியும் 21 பின்னூட்டம் வருதோ.. அப்போ தான் தமிழ்மணம் முழிச்சுக்கும்.. அதாவது கடைசியா தமிழ்மணத்தில எந்த நம்பரில விட்டீங்களோ அந்த நம்பருக்கு அடுத்த நம்பர் வரும் போது தான் தமிழ்மணம் அதை திரட்டும்..

வைச்சாங்கய்ல்ல அங்கயும் ஆப்பு ;)

28/2/07 5:04 PM


சயந்தன் said...
அடடா நமக்கு முன்னால பொன்ஸ் முந்திக்கிட்டாங்க.. நம்ப தொழில் நுட்பப் புலமைய காட்ட விடமாட்டேங்குறாங்க..

28/2/07 5:05 PM


உங்கள் நண்பன் said...
இளா சொளக்கியமா?

என்னுடைய ஒரு பதிவில் 90 பின்னூட்டங்கள் ஜல்லியடிக்கப் பட்டிருந்தது,தங்களின் அறிவுரையின் படி (நினைவிருக்கின்றதா?)ஜல்லிகளைக் குறைத்து 75 ஆக்கினேன், பின் தொடந்து வந்த நல்ல பின்னூட்டங்களை அனுமதித்தேன் ஆனால் அந்தப் பதிவு மறுமொழியப் பட்ட இடுகைகளின் கீழ் வரவில்லை,(தற்போதைய எண்ணிக்கை 85), ஒரு வேளை 90க்கும் மேல் வரும்(மறுமொழியப்பட்ட இடுகையின் கீழ் வந்த எண்ணிக்கை +1) பட்சத்தில் தான் மீண்டும் தெரியும் என நினைக்கின்றேன்,(அதற்க்கும் இப்போ ஆப்பு:))

அப்படியெனில்,29 க்குப் பிறகு தாங்கள் முதல் பின்னூட்டத்தில் இருந்து தொடரும் பட்சத்தில் எப்படி உடனே மறுமொழியப்பட்ட இடுகைகளில் கீழ் தெரியும்? 29+1 வந்தால் மட்டுமே தெரிய வாய்ப்புள்ளது! அப்படி 30 வந்துவிட்டால் தமிழ்மணம் அனுமதிக்காது!

ஆமா! நான் இப்போ என்ன சொல்ல வர்ரேன்? எதாவது புரிகிறதா?


அன்புடன்...
சரவணன்.

28/2/07 5:30 PM


உங்கள் நண்பன் said...
இளா!
உங்களை ஆபத்தில் இருந்து காப்பது எப்படி?னு ஆளாளுக்கு ஐடியா கொடுத்தே உங்களுக்கு ஆப்பு வைக்கிறமோ?

எக்ட்ஸ்டா ஆப்புடன்...

அன்புடன்...
சரவணன்.

28/2/07 6:05 PM


Anonymous said...
அய்யோ..அய்யோ

உங்க பின்னூட்ட நம்பர் RSS or XML Feed வைத்து கண்க்கிடப்படுகிறது. நீங்க இங்க அழித்தாலும் உங்க feed value சிஸ்டமுல(சர்வருல) அழிக்க முடியாது. அதனால feed பழைய valueலேதான் இருக்கும்.

28/2/07 6:22 PM


Anonymous said...
ஒரே வழி.
மொத்தமா 10 பின்னூட்டம் வந்தபின் ஒன்னா சேத்து ஒரே பின்னூட்டமா இட்டா அது counterயை 1தான் அதிகரிக்கும்.

28/2/07 6:29 PM


Anonymous said...
இன்னொரு வழி ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் பதில் தனியா சொல்லாம அதை எடிட் பண்ணி அதுலேயே சொல்லிடவேண்டியதுதான்

28/2/07 6:30 PM


அபி அப்பா said...
பொன்ஸக்கா சொல்றது சரி!! இதுனாலதான் நா வேற மாதிரி ரோசன பண்ணி implementம் செஞ்சு கை மேல பலனும் அனுபவிச்சுட்டேனே!! பாருங்க நம்ம"முக்கிய அறிவிப்பு!!!" தமிழ்மணத்துல...-:)))

28/2/07 6:33 PM


கைப்புள்ள said...
//20 பின்னூட்டத்தையும் Cut-Paste to ஒரு பின்னூட்டமா ஆக்கிரறது. அப்பிடியே பழைய 20 பின்னூட்டத்தையும் டெலிட் பண்ணிறுவோம், அப்படியே 21 வரைக்கும் மறுபடியும் விளையாட்டு, மறுபடியும் Cut-Paste to ஒரு பின்னூட்டம் அப்ப்டியே 29 வரைக்கும் விளையாடலாம். என்ன இது.. அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்ல இது வராது. அதுக்காக என்ன பண்றது..20-21-22ன்னு 29 வரைக்கும் முன்னேறனும் .. 30 ஆச்சுன்னா?//

அண்ணே! நீங்க பத்தாவது ஃபெயிலுன்னு ப்ரூவ் பண்ணிட்டீங்கண்ணே. இதுக்குத் தான் என்னைய மாதிரி ஏழாவது பாஸா இருக்கணும். போங்கண்ணே...எல்லாருக்கும் தெரிஞ்சது கூட உங்களுக்குத் தெரியலை.
:)

28/2/07 7:06 PM //

ILA (a) இளா said...

கொத்ஸ்--> அட இன்னும் விஷேசம் இது.
ரவி--> பாவம்யா, விட்டுருவோம் அவர.
பொன்ஸ்-->உங்க தொழில்நுட்ப அறிவு எல்லொருக்கும் தெரிஞ்சதுதானே. அதான் தமிழ்மணத்துல 20க்கு அப்புறம் 2 ன்னு வரும்னு நான்fக சொல்லவே இல்லே. தமிழ்மணத்துல வந்தாதான் இந்த விளையாட்ட விளையாடுவோம்னு சொல்லவே இல்ல. (:) ஸ்மைலி போட்டுக்குறோம்ல). தமிழ்மணத்துல 21க்கு அப்புறம்தான் வரும். சர்வர்லயும் feed-20ன்னுதான் காட்டும், 21 வது போட்டாதான் 21வது வரும். இப்படி விளயாண்டா
19+20+21+22+23+24+25+26+27+28+29=264 பின்னூட்டங்கள் போடலாம்னு ஒரு கணக்கு இருக்கு. இதனால தமிழ்மணத்துல ஒரு பதிவு வந்து போய்ட்டே இருக்கும் ஆனா 30 இல்லை 264 பின்னூட்டம் வரும். இதுக்கு மேலையும் வர வைக்கலாம் அது 29வது பின்னூட்டத்துல சொல்றோம்.

டண்டணக்கா said...

செய்திய இன்னும் முழுசா படிக்கலை....ஆனா விசயம் புரியுது.
யாராச்சும் பதிவு பொட்ட மூணே நிமிசத்துல 30 மொக்கை கமெண்ட் போட்டு பதிவரை நல்லா பழி தீர்க்கலாம். இந்த மாதிரி புது அனானி விளையாட்டு பிச்சுக்கப் போகுது :)

Boston Bala said...

can you make the title-bar (blog title) to be clickable? normally it leads to the hompage... thanks in advance

நாகை சிவா said...

//செந்தழல் ரவிய கொழுத்திப்புடலாமா? //

இளா இப்ப புரிஞ்சு போச்சுங்க.... உங்க திட்டம் எல்லாம்.

ரவி எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருங்க. கொலை வெறியில் இருக்கார் போல

நாகை சிவா said...

//30 பின்னூட்டத்தின் பின் ,இதே பதிவை மீண்டும் போடமுடியாதா???சும்மா? கேட்கிறேன்.
மீள்பதிவு 30 க்குப் பின் ..அப்பிடினு!!! //

இது சூப்பரா வேலை செய்யும் நினைக்கின்றேன். இன்சினியர் இளா விளக்குவார்.........

நாகை சிவா said...

//cut paste பண்ணறதை பின்னூட்டமா போடாம பதிவில் போட்டா இன்னும் விசேஷம். யோசிப்பீர்களா? //

பின்னூட்ட புயல் அப்படிங்குற பெயருக்கு ஏத்த மாதிரி அற்புதமான யோசனையை தெரிவித்து நீர் புயலுக்கு எல்லாம் பெரும் புயல் என்பதை நிருபித்து விட்டாய்.

நாகை சிவா said...

//யாராச்சும் பதிவு பொட்ட மூணே நிமிசத்துல 30 மொக்கை கமெண்ட் போட்டு பதிவரை நல்லா பழி தீர்க்கலாம். இந்த மாதிரி புது அனானி விளையாட்டு பிச்சுக்கப் போகுது :) //

ஏன் அண்ணாத்த அந்த மொக்கை கமெண்ட் வெளியீடா விட்டால் என்ன பண்ணுவீங்கோ.......

:-))))))))))

கதிர் said...

//இந்த விளையாட்டை இந்த பதிவிலே இருந்தே ஆரம்பிக்கிறோம்ய்யா.. ஆரம்பிக்கிறோம்ய்யா..!!!//

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

கதிர் said...

கயமைகள் பல விதம்...
ஒவ்வொன்றும் ஒரு விதம்...

ILA (a) இளா said...

இந்தப் பதிவினால் நாங்கள் சொல்ல வரது என்னான்னா..
"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது".
மற்றபடி தமிழ்மணம் செய்வதும் ஒருவகையில் சரியே, ஆனா நாணயத்துக்கு இன்னொரு பக்கமும் இருக்குங்க.

நாகை சிவா said...

//இப்படை தோற்கின் எப்படை வெல்லும்//

அப்படி சொல்லுய்யா என் சிங்க குட்டி.

நாகை சிவா said...

//ஆனா நாணயத்துக்கு இன்னொரு பக்கமும் இருக்குங்க. //

ஆமாங்க இளா நாணயத்துக்கு எப்பவுமே இரண்டு பக்கம் உண்டு. ஒன்னு பூ னா இன்னவொன்ன தலை. நான் சொல்லுறது சரி தானே

இராம்/Raam said...

//can you make the title-bar (blog title) to be clickable? normally it leads to the hompage... thanks in advance //

கண்டிப்பாக பாபா.... நாளை காலைக்குள் சரி பண்ணிறிலாம்....

நாளைக்கு ஸ்பெசல் கெஸ்ட் வேற வர்றாரு... :)

Syam said...

இப்போ எம்புட்டு ஆச்சு :-)

Syam said...

ஆமா அது என்ன கணக்கு...20 மட்டும் கட் அண்ட் பேஸ்ட் பண்றது...ஒரு கமெண்ட்ல 50 வெச்சோமுன்னா மினிமம் 50 * 29 = 1450...நாங்களும் ரவுடிதான் :-)

Srinan said...

டிவி ஸ்டைல்ல வாரத்துக்கு ஒரு தடவ லெட்டர் படிக்கலாம்.... example வவாவிலிருந்து இளா எழுதியிருக்கார் மொக்கை பதிவு என்று. இன்னும் தொடரும்னு மகிழ்ச்சியோட தெரிவிக்கிறோம்.... அடுத்ததா பாஸ்டனிலிருந்து வெட்டி என்ன எழுதியிருக்கார்னா and so on.

G.Ragavan said...

ஏற்கனவே சில பதிவுகள் முப்பதுக்கு மேல பின்னூட்டம் வாங்கியும் முகப்புல வருது. அதக் கொஞ்சம் பாருப்பா கோ.

Anonymous said...

http://blog.thamizmanam.com/archives/85#comment-2404