இரு துருவம் முதல் பகுதி படிக்க
"டேய் குமாரு! இப்பவே கட்டிக்கப்போற பொண்ண பத்தரமா சைக்கிள்ல வெச்சி ஓட்டிட்டு வர" குமார் சைக்கிளை நிறுத்தியவுடனே சொன்னார் பக்கத்துவீட்டு தாத்தா. அதை கேட்டு சிரித்து கொண்டே வீட்டிற்குள் ஓடினாள் சரண்யா.
"அதெல்லாம் இல்லை" சொல்லிவிட்டு வேகமாக வீட்டிற்குள் சென்றான் குமார்.
அங்கே அத்தையின் மடியில் போய் உக்கார்ந்து கொண்டாள் சரண்யா. நேராக அம்மாவிடம் வந்தான் குமார்.
"அம்மா! ஏன் அந்த தாத்தா எப்ப பார்த்தாலும் இப்படியே சொல்லிட்டு இருக்காரு? இதுக்கு தான் நான் இவளை கூப்பிட்டு வர போக மாட்டேனு சொன்னேன்" கொபம் கலந்த குரலில் கேட்டான் குமார்.
"அவர் கிடக்கறாரு போடா. பாட்டி உள்ள சாப்பாடு போட்டு வெச்சிருக்கு, நீ போய் சாப்பிடு"
குமார், உள்ளே சென்று பாட்டியிடம் சாப்பிட ஆரம்பித்தான். வெளியே அத்தையுடன் கொஞ்சி கொண்டிருந்தாள் சரண்யா.
சரண்யா, குமாரின் ஒன்று விட்ட மாமன் மகள். குமாரின் அம்மாவிற்கும் கூட பிறந்தவர்கள் யாரும் அருகில் இல்லாததால் இந்த அண்ணனையே சொந்த அண்ணன் போலவும், சரண்யாவை மருமகள் போலவும் பார்த்து கொண்டாள். அவளை வீட்டிற்கு மருமகளாக்கும் திட்டமும் அவளுக்கு இருந்தது. சரண்யாவின் அப்பாவிற்கும் தங்கை பையனுக்கு கொடுத்தால் பிரச்சனையில்லை என்ற எண்ணம் இருந்தது. அவர்கள் குமார் வசிக்கும் தெருவிற்கு பக்கத்து தெருவிலே இருந்தனர்.
சரண்யாவும், குமாரும் ஒரே பள்ளியிலே படித்து வந்தனர். குமார் ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தான், சரண்யா மூன்றாம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள். பள்ளிவிட்டு இருவரும் ஒன்றாக வந்து கொண்டிருந்தனர்.
"இங்க பாரு, இனிமே என்னை அண்ணனுதான் கூப்பிடனும். புரியுதா? மாமானு எல்லாம் கூப்பிட கூடாது" குமார் சொல்லி கொண்டு வந்தான்.
"சரி" தலையசைத்தாள் சரண்யா.
சரண்யா குமாரை அண்ணா என்று அழைப்பதை பார்த்துவிட்டாள் குமாரின் பாட்டி.
"ஏன்டி யாராவது அத்தை பையனை அண்ணானு கூப்பிடுவாங்களா? மாமானு தான் கூப்பிடனும். சரியா?" விளக்கி கொண்டிருந்தாள் பாட்டி.
"பாட்டி நான் தான் அண்ணானு கூப்பிட சொன்னேன். பள்ளி கூடத்துல மாமானு கூப்பிட்டா பசங்க எல்லாம் கேலி பண்றாங்க. இவ ஒண்ணும் என்னை மாமானு எல்லாம் கூப்பிட வேண்டாம். அண்ணானு கூப்பிட்டாலே போதும்" வேகமாக சொன்னான் குமார். பாட்டி எவ்வளவு சொல்லியும் அவன் கேட்கவில்லை.
.........................................
சரவணன் பரபரப்பாக சுற்றி கொண்டிருந்தான். அன்று அவன் டிப்பார்ட்மெண்ட் துவக்க விழா. அவன் டிப்பார்ட்மெண்ட் ஜாயின் செக்ரட்டரி என்பதால் முன் நின்று வேலை பார்த்து கொண்டிருந்தான்.
"சார்! இன்னைக்கு எங்க டிப்பார்ட்மெண்ட் இனாகரேஷன் ஃபங்ஷன். கொஞ்சம் சேர் எடுத்து போட ஆள் வேணும். ஒரு பத்து பசங்களை மட்டும் அனுப்ப முடியுமா?" எலக்ட்ரிக்கல் லேப் ஆசிரியரிடம் கெஞ்சி கொண்டிருந்தான் சரவணன்.
"அதேல்லாம் முடியாதுப்பா. உங்க பசங்களை வெச்சியே பண்ணிக்கோங்க. செகண்ட் இயர் பசங்கதான் சேர் எடுத்து போடணுமா?" சீரியஸாக சொல்லி கொண்டிருந்தார் அந்த ஆசிரியர். அவரிடம் விவாதிக்க மனமில்லாமல் டிப்பார்ட்மெண்டை நோக்கி நடந்தான் சரவணன்.
உள்ளே சென்று HODயை பார்த்தான்.
"சார் நம்ம செகண்ட் இயர் பசங்களுக்கு இன்னைக்கு எலக்ட்ரிக்கல் லேப். அந்த சார் விட மாட்றேனு அடம் பிடிக்கிறாரு. வேலை செய்ய பசங்க கொஞ்ச பேர் வேணும். நீங்க ஏதாவது சொல்லிவிடுங்க சார்" கோபமாக சொன்னான் சரவணன்.
"அதெல்லாம் வேணாம்பா. நீ நம்ம ஃபர்ஸ்ட் இயர் பசங்களை கூப்பிட்டு போ. நான் சொல்லிக்கறேன்" பொறுமையாக சொன்னார் HOD.
முதலமாண்டு மாணவர்களின் வகுப்பிற்குள் சென்றான் சரவணன். உள்ளே எந்த ஆசிரியரும் இல்லாத்தால் மாணவர்கள் தொண தொணவென்று பேசி கொண்டிருந்தார்கள். சரவணனை பார்த்ததும் அமைதியாகிவிட்டார்கள்.
"ஹாய் ஜினியர்ஸ். நான் உங்க டிப்பார்ட்மெண்ட் ஜாயின் செக்ரெட்டரி. இன்னைக்கு நம்ம டிப்பார்ட்மெண்ட் இன்னாகரேஷன் ஃபங்ஷன். எனக்கு ஹெல்ப் பண்ண ஒரு பத்து பேர் வேணும். யார் வறீங்க?" அவன் கேட்டு முடித்ததும் வகுப்பு மேலும் அமைதியானது.
"வரவங்களுக்கு ஓ.டி இருக்கு" இதை அவன் சொன்னவுடன் உடனே ஒரு இருபது மாணவர்கள் எழுந்தனர்.
"சரி நீங்க பத்து பேர் மட்டும் வாங்க" முதலிலிருந்த பத்து பேரை பார்த்து சொன்னான்.
"அப்பறம் அந்த ரங்கோலி போட ஒரு 4-5 பொண்ணுங்க வேணும். யாருக்கு போட தெரியும்" அனைவரும் அமைதியாக இருந்தனர்.
அன்று அவன் பார்த்த பேசிய அந்த பெண் முதல் பெஞ்சில் அமர்ந்திருந்தாள். அவள் அருகே சென்றான்.
"உனக்கு கோலம் போட வருமா?"
"ம்ம்... ஆனா ரங்கோலி எல்லாம் தெரியாது"
"சரி. நீ உன் ஃபிரெண்ட்ஸ் 4 பேரை கூப்பிட்டு ஆடிட்டோரியம் வந்துடு" அவன் சொன்னவுடன் அவள் திரு திருவென்று முழித்து கொண்டிருந்தாள்.
"ஆமாம். உன் பேரு என்ன?"
"சரண்யா..."
(தொடரும்...)
20 comments:
குமார் = சரவணக்குமார் அந்த சரண்யா = இந்த சரண்யா ??
vetti
unaku nalla kathai elutha varumnu
othukurom
athukaka ipdi suspense vache
heart beat ethataiya
நல்லாப் போறதே கதை.
சரண்யாவும் சரவணனும்
டூயட் உண்டா:-)0
சும்மா சொன்னேன் . இந்தக் காலக் கதை படிக்க ரொம்ப நல்லா இருக்கு.
சீக்கிரம் அடுத்த பார்ட் எழுதிடுங்க.
வெட்டி.. நான் கதைய லீக் அவுட் பண்ணட்டுமா???
சின்ன வயசுல ஒன்னா இருந்த சரவணனும், சரண்யாவும் வீட்டுல ஏற்பட்ட சண்டைல பிரிஞ்சிப் போயிடுறாங்க. சரவணனோட மாமா, சரண்யா கூட்டிட்டு வேற ஊருக்குப் போயிடுறாரு... அதுக்கப்புறம் திரும்ப கல்லூரில சந்திக்கிறாங்க... ஆனா அவங்களோட குணாதிசயங்கள் எல்லாம் இப்பா கம்ப்லீட் ஆப்போஸிட்டா இருக்குது...
அதுக்கப்புறம் அவிங்க ஒன்னு சேராங்களா இல்லையாங்க்றதுதான் கதை...
// Anonymous said...
vetti
unaku nalla kathai elutha varumnu
othukurom
athukaka ipdi suspense vache
heart beat ethataiya //
அடுத்த பகுதி சீக்கிரம் போடறேனுங்க...
//வல்லிசிம்ஹன் said...
நல்லாப் போறதே கதை.
சரண்யாவும் சரவணனும்
டூயட் உண்டா:-)0
//
டூயட்டா???
அவங்க ரெண்டு பேரும் காதலிப்பாங்கனு அவ்வளவு உறுதியா நம்பறீங்களாம்மா???
//
சும்மா சொன்னேன் . இந்தக் காலக் கதை படிக்க ரொம்ப நல்லா இருக்கு.
சீக்கிரம் அடுத்த பார்ட் எழுதிடுங்க. //
ரொம்ப நன்றி!!!
சீக்கிரம் எழுதிடறேம்மா!!!
தேவ்/ஜி,
ஹா ஹா ஹா ஹா....
அதே கல்லூரியில் தான் குமாரும் படிக்கிறான். சரண்யாவும் சரவணனும் ஒருத்தரஒருத்தர் புரிந்துகொள்கிறார்கள். சரண்யா குமாரையும் சந்திக்கிறாள் அவனையும் பிடித்திருக்கு. ஆனால், இருவரும் குணாஅதிசியிங்களிள் இருதுருவம். யாரை தேர்ந்தெடுப்பாள் என்பது தான் கதை :)
சூப்பரா போகுது கதை...தேவ் & ஜி வேற என்னவா இருக்க போகுது :-)
// உண்மை said...
அதே கல்லூரியில் தான் குமாரும் படிக்கிறான். சரண்யாவும் சரவணனும் ஒருத்தரஒருத்தர் புரிந்துகொள்கிறார்கள். சரண்யா குமாரையும் சந்திக்கிறாள் அவனையும் பிடித்திருக்கு. ஆனால், இருவரும் குணாஅதிசியிங்களிள் இருதுருவம். யாரை தேர்ந்தெடுப்பாள் என்பது தான் கதை :) //
எல்லாரும் ஆளுக்கு ஒரு கதை எழுதுங்க...
எது பிடிச்சிருக்கோ அதுதான் நான் யோசிச்சதுனு சொல்லிடறேன் :-)
அடுத்த நெல்லியா வெட்டி?
நல்லா போகுது!
ஜமாய் ராசா!
//அதுக்கப்புறம் அவிங்க ஒன்னு சேராங்களா இல்லையாங்க்றதுதான் கதை... //
சிங்காரவேலன் கமல்ஹாசன் மாதிரி...
ஆனா அது நடக்காத மாதிரி கதை எழுதுவாரு எங்க வெட்டி.
என்னா நெனச்ச எங்க வெட்டியார பத்தி??
தொடர்கதை சுனாமி அவரு! :))
//சிங்காரவேலன் கமல்ஹாசன் மாதிரி...
ஆனா அது நடக்காத மாதிரி கதை எழுதுவாரு எங்க வெட்டி.
என்னா நெனச்ச எங்க வெட்டியார பத்தி??
தொடர்கதை சுனாமி அவரு! :))//
ஏலே தம்பி,
எங்க இளைய தளபதி'க்கே வா???
இருடி ஒனக்கு ஒரு டெவில் ஷோ போட்டாதான் சரிப் படுவே :)
//Syam said...
சூப்பரா போகுது கதை...தேவ் & ஜி வேற என்னவா இருக்க போகுது :-) //
நாட்டாமை,
நீங்களுமா???
//தம்பி said...
அடுத்த நெல்லியா வெட்டி?
நல்லா போகுது!
ஜமாய் ராசா! //
நெல்லிக்காய் அளவுக்கு பெருசா எழுதற திட்டமில்லை... எல்லாம் மக்கள் ஆதரவை பொறுத்தது... ;)
//தம்பி said...
//அதுக்கப்புறம் அவிங்க ஒன்னு சேராங்களா இல்லையாங்க்றதுதான் கதை... //
சிங்காரவேலன் கமல்ஹாசன் மாதிரி...
ஆனா அது நடக்காத மாதிரி கதை எழுதுவாரு எங்க வெட்டி.
என்னா நெனச்ச எங்க வெட்டியார பத்தி??
தொடர்கதை சுனாமி அவரு! :)) //
எலேய்,
நக்கல் பண்றதுக்கு உங்களுக்கு வேற இடமே இல்லையா?
//இராம் said...
//சிங்காரவேலன் கமல்ஹாசன் மாதிரி...
ஆனா அது நடக்காத மாதிரி கதை எழுதுவாரு எங்க வெட்டி.
என்னா நெனச்ச எங்க வெட்டியார பத்தி??
தொடர்கதை சுனாமி அவரு! :))//
ஏலே தம்பி,
எங்க இளைய தளபதி'க்கே வா???
இருடி ஒனக்கு ஒரு டெவில் ஷோ போட்டாதான் சரிப் படுவே :) //
ராமண்ணே,
பொங்கனது போதும்...
பெருமையா சொல்றீங்களா இல்லை திட்றீங்களானே தெரியல.
இந்த டெவில் ஷோவைத்தான் நீங்க ரெண்டு பேரும் ஹை ஜாக் பண்ணிட்டீங்களே! நான் அடுத்து வேற யோசிக்கணும்...
Hi Vetti,
It is going interesting...
We are doing enjoy with your love story...
Carry on Vetti...
good story
சீக்கிரம் தொடரட்டும்..
Post a Comment