Friday, February 9, 2007

மாமாவின் காதல் - 2

மாமாவின் காதல் - 1


அடுத்த நாள் கல்லூரி முடியுமுன்பே வந்தவர்கள் அந்தப் பள்ளிக்கூடத்துக்கு முன் வந்து நின்றார்கள். அவர்களைப் போலவே இன்னும் சில கல்லூரிக்காளைகள் வெளியேக் காத்திருக்க,
விஜய் கேட்டான்,

“என்ன மாமா டாஸ்மாக்ல நாமப் பேசிக்கிட்டுருந்தத இவனுங்களும் ஒட்டுக் கேட்டுட்டானுங்களா?”

“டேய் அல்ப்ப… அவனுங்களாம் நம்மள மாதிரி ஒத்த பைக்ல மூனு பேராவா வந்திருக்காங்க? எல்லாம் தனித்தனியா வந்திருக்காங்க பாரு… நமக்கு சீனியருங்க… ஆல்ரெடி பொண்ணப் பிக்கப் பண்ணவங்க.. பார்ட்டிக்காக வெயிட்டிங்!”

“சரி சரி ஸ்கூல் விட்டாச்சுப் போல இருக்கு…சீக்கிரம் பொண்ண செலக்ட் பண்ணுங்க… நானும் பாக்கறேன்”

வெளியே வரும் பள்ளிக்கூடப் பெண்களையே உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“மாமா… ந்தா அந்தப் பொண்ணு செவப்பு கலர் பேக் வச்சிருக்குப் பாரு” – சுரேஷ்

“எது அதுவா அந்த சப்ப மூக்கா? போடா நீயும் உன் டேஸ்டும்… அங்கப் பாரு மூனுப் பொண்ணுங்க சேர்ந்து வர்றாங்கப் பாரு அதுல நடுவுல வர்றது ஓக்கேவா?” – விஜய்.

“டேய் டேய் அங்கப் பொடவைல ஒரு பொண்ணு வருதே அது நல்லாருக்கா? இன்னைக்கு பொறந்தநாளா இருக்குமோ? கருப்பா இருந்தாலும் கலையா இருக்குடா இப்பவே போய்ப் பேசிட்டு வரட்டுமா?” – மாமா.

“மாமா கண்ட்ரோல் கண்ட்ரோல் அது டீச்சர் மாதிரி இருக்கு”

அந்த வாரம் முழுக்க மூன்று பேருக்கும் பிடித்த மாதிரியான ஒரு பொண்ணைத் தேடிக் கொண்டேயிருந்தார்கள்.

அடுத்து வந்த இரண்டு சனிக்கிழமையும் தேடல் படலத்தில் நடந்ததை அசைபோட்ட படியே டாஸ்மாக்கில் கழிந்தது.

ஒரு திங்கட்கிழமை கல்லூரி முடிந்ததும் டீக்கடைக்கு வந்தார்கள் மூன்று பேரும்.

“சீக்கிரம் டீயக் குடிச்சு முடிங்கடா ஸ்கூல் விட்ற நேரமாச்சு”

“மாமா இந்த வாரத்தோட நிறுத்திக்குவோம்… அடுத்த வாரம் ஸ்டடி ஹாலிடேஸ் விடப் போறாங்க… அப்புறம் செம் வந்துடும்…”

“ஓக்கே ஓக்கே இந்த வாரம் தான் ஃபைனல்… கொஞ்சம் சீரியசாகத் தேடுவோம்”

டீயை முடித்து விட்டு பள்ளிக்கூட வாசலுக்கு வந்தார்கள்.

அவர்கள் வருவதற்கு முன்பே பல்ளிக்கூடம் விட்டு எல்லாப் பெண்களும் போயிருக்க வாசல் வெறிச்சோடி இருந்தது.

“இன்னைக்கு லேட்டா வந்துட்டமோ? எல்லாக் கிளியும் பறந்துடுச்சு” – மாமா.

“இல்ல மாமா ஒன்னோட டீச்சர் கிளி வருது பாரு , அநேகமா ஒனக்கு மட்டும் அந்த டீச்சர் செட்டாயிடும் போல இருக்கு…” - சுரேஷ்

“டேய் டேய் டீச்சர் பின்னாடி ஒரு சின்னக் கிளி வருது பாரு அத ஃபோகஸ் பண்ணுடா” – விஜய்.

விஜய் சொன்ன அந்தப் பெண்னை மாமா நன்றாக ஒருமுறை உற்றுப் பார்த்தான்.

“மாமா, பொண்ணு நல்லாதான் இருக்கு எனக்கு ஓக்கே”

“இப்பவே ஃபாலோ பண்ணுவோம்டா ஹோம்லி ஃபிகரா இருக்கு”

சுரேஷும் விஜயும் பேசுவதையெல்லாம் கவனிக்காமல் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான் மாமா.

“மாமா பொண்ணப் பார்த்தது போதும்! பொண்ண ஃபாலோப் பண்ணாதான் வீட்டக் கண்டுபிடிக்க முடியும்… டக்குனு பைக்க ஸ்டார்ட் பண்ணு”

பைக்கில் அவள் சைக்கிளை மிக மிக மெதுவாகத் தொடர்ந்துபோய் அவள் வீட்டை நெருங்கினார்கள்.

அது கிட்டத்தட்ட அவர்கள் எதிர்பார்த்த மாதிரியான வீடுதான். கீழே ஒரு பெரிய வீடும், ஒரு சிறிய வீடும் இருந்த ஒரு காம்பவுண்ட். மேலே ஒரே ஒரு ரூம் மட்டும் இருந்தது. பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடைக்குப் போன மாமா, அங்கே வீடெதுவும் வாடகைக்கு கிடைக்குமா என்று விசாரித்தான். வீடெதுவும் காலி இல்லையென்றாலும் அங்கேக் கிடைத்த தகவலின்படி அந்த மொட்டை மாடி ரூமில் இப்போது நான்கு பேச்சிலர்கள் தான் வசிக்கிறார்கள் என்று தெரிந்தது. எதற்கும் முயற்சி செய்வோம் என்று அந்த வீட்டுக்குள்ளே நுழைந்தான்.

எதிரே வந்த அம்மாவிடம், பவ்யமாகக் கேட்டான் “ஏங்க இங்க ரூம் எதுவும் வாடகைக்கு கிடைக்குமா?”

“நீ என்னப் பண்றப்பா? வேலைக்குப் போறியா? படிக்கிறியா?”

அந்த அம்மாவிடம் எல்லாத் தகவலையும், சொல்லி/கேட்டு விட்டு மேலே இருந்த தனி ரூமுக்கும் போய்விட்டு வெளியே வருவதற்கு 15 நிமிடம் ஆகியிருந்தது.

“மாமா என்ன ஆச்சு?”

“வாங்கடா டீக்கடைக்குப் போய்ப் பேசுவோம்” வண்டியை ஸ்டார்ட் செய்து வழக்கமான டீக்கடைக்கு கிளம்பினார்கள்.

டீக்கடையில் தம்மைப் பற்ற வைத்து விட்டு சிரித்துக் கொண்டே சொன்னான், “வீடு செட் ஆயிடுச்சு, இனிமே பொண்ணு செட் ஆகறது அவனவன் தெறமையப் பொருத்து இருக்கு”

“என்ன மாமா சொல்ற? வீடு காலி இல்லைனு சொன்னாங்கன்ன…”

“அந்த மொட்ட மாடி ரூம்ல இப்பவே நாலு காலேஜ் பசங்க தான் இருக்கானுங்க… இப்ப ஃபைனல் இயர் முடிச்சுட்டுப் போறாங்களாம்…அதனால அடுத்த மாசம் நாம அங்கப் போயிடலாம்… அப்புறம் அங்க தம் , தண்ணியடிக்கிறப் பசங்களுக்கு எல்லாம் ரூம் தர மாட்டங்களாம்… நான் நாமலாம் உத்தமனுங்க மாதிரி ஆக்ட் கொடுத்து வச்சிருக்கேன்… வீட்ட காலி பண்ற மாதிரி அங்க வச்சி எதாவது பண்ணா அப்புறம் பொண்ண மிஸ் பண்ணிடுவோம் இப்பவே சொல்லிட்டேன்”

“சரி சரி அங்க இருக்கும்போது மட்டும் கமுக்கமா இருந்துப்போம்... அப்பதான் பொண்ணும் நம்மளப் பார்க்கும்… மாமாப் பொண்ணப் பத்தி எதாவது தகவல்?”

“அதாண்டா… அந்தப் பொண்ணு வீடும் வாடகைக்குதான் குடியிருக்காங்க…அவங்கப்பா இல்ல போல… அம்மா மட்டும்தான்… ஒரு தம்பி இருக்கான்… நைன்த் முடிச்சு டென்த் போறான்…”

“ மாமா பத்து நிமிஷத்துல இவ்வளவு மேட்டர் கறந்துட்டு வந்திருக்க? அப்பா இல்லாத பொண்ணா? எனக்கென்னமோ மடங்கற மாதிரி தெரியல …ம்ஹும்… ஆனா பொண்ணத் தவிர மத்த டீட்டெயில் தான் தர்ற” சலித்துக் கொண்டான் சுரேஷ்.

“சரி இந்தவாரம் டாஸ்மாக்கு நீ செலவு பண்றியா? பொண்ணு பேர் சொல்றேன்…”

“சரி சொல்லு” மெதுவாக சொன்னான்.

“பொண்ணு பேரு இளவரசியாம். +1 முடிச்சுட்டு +2 போகுது”

“அப்ப இந்த வருசம் ஃபுல்லா படிச்சுக்கிட்டே இல்ல இருப்பா? எப்படி பிக்கப் பண்றதாம்?”

“அதெல்லாம் அடுத்த வருசம் வந்து பாத்துக்கலாம்… ரூமுக்கு அட்வான்ஸ் 5000 வாடகை 1800 ரூபாயாம்… உங்கப் பங்க சீக்கிரம் கொடுத்துடுங்க… அட்வான்ஸ கொடுத்து புக் பண்ணிடுவோம்”

பொண்ணும் வீடும் கிடைத்த(?) திருப்தியில் அந்த சனிக்கிழமை இரவு அவர்களுக்கு சந்தோசமாய்க் கழிந்தது.

செமஸ்டர் தேர்வுக்குமுன் கல்லூரி ஒரு வாரம் விடுமுறை விட்டார்கள். படிப்பதற்காக விட்ட விடுமுறையெல்லாம் பள்ளியின் வாசலிலேயே தீர்ந்து போனது. எப்பொழுதுதான் செமஸ்டர் முடியுமோ என்று காத்திருந்தார்கள். செமஸ்டர் முடிந்து எல்லோரும் ஊருக்குப் போய் விட, விடுதியிலேயே இருந்தது இவர்கள் மட்டும் தான். அந்த மாடி ரூமில் இருக்கும் நால்வரும் காலி செய்ததும் அங்கே போய் செட்டிலானபின் தான் ஊருக்குப் போவது என்ற முடிவில் இருந்தார்கள். கடைசியில் ஒருவழியாக அங்கு புது வீட்டில் குடியேறிவிட்டுதான் மூவரும் ஊருக்குக் கிளம்பிப் போனார்கள்.

அடுத்த வருடம் ஆரம்பமானது.

ஊரிலிருந்து நேராக புது வீட்டுக்கு வந்தவர்கள் முகத்தில் முதல்வருடம் தேர்வு ரிசல்ட் பற்றிய சந்தோசம் பல்லெல்லாம் வாயாகக் காணப்பட்டது.

“மாமா நல்லவேளை மூனு பேருக்கும் கப் எதுவும் விழல… நான் உனக்கு ரெண்டுலையாவது கப் வரும்னு நெனச்சேன்”. ( கப் = அரியர் )

“வாயக் கழுவுடா நாயே… நான் +2 ல ஸ்கூல் ஃபர்ஸ்ட் தெரியுமில்ல?”

“அடப்பாவிகளா… ஆல் பாஸ் ஆனதுல நம்ம மூனு பேரோட மார்க் தாண்டா பாட்டம் 3 ல இருக்கு! இதுல பெரும வேற”

“சரி இந்த செம்ல படிக்கிறோம்! டாப் 3 ல வர்றோம்!”

“ஏண்டா இப்போ காமெடி பண்ணிக்கிட்டு இருக்க? கப் வாங்காம “ஆல்பாஸ்” ஆகறதையே மெயிண்டெயின் பண்ணுவோம் அதுவேப் பெரிய விசயம்”

“சரி சரி நான் நம்ம இளா எப்படி இருக்கானு பாத்துட்டு வர்றேன்” கிழே எட்டிப் பார்க்கப் போனான் விஜய்.

“டேய் இன்னைக்கே ஒரு முடிவுக்கு வந்துடலாம்… அவளக் கொஞ்சறதெல்லாம் மனசுக்குள்ளயே வச்சுக்குங்க… நாளைக்கு எவனோ ஒருத்தனுக்குதான் அவ கிடைக்கப் போறா… அப்புறம் இப்பப் பேசறத எல்லாம் நெனச்சுப் பார்த்தா அந்த ஒருத்தன் ரொம்ப ஃபீல் பண்ணுவான்” மாமா ஏனோக் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினான்.

“சரி சரி ஓக்கே ஒக்கே பிக்கப் ஆயிடுச்சுன்னா ஒடனே சொல்லிடனும்… அதுதான் நல்லது… எவனுக்கு பிக்கப் ஆகுதோ அவன் தான் காலேஜ் முடியற வரைக்கும் தம்மு செலவப் பாத்துக்கணும்… பிக்கப் ஆகறதுக்கு முன்னாடியே பிக்கப் ஆயிடுச்சுன்னு பிலிம் காட்டினாலோ… பிக்கப் பன்ணிட்டு கமுக்கமா இருந்தாலோ மகனே கொலதான்” – சுரேஷ்.

இளாவைத் திரும்பிப் பார்க்க வைக்க, அவளிடம் பேச, அவளைக் கவர இருமுனை முயற்சிகள் ஆரம்பமாயின.விஜய் கொஞ்சமாய் நூல் விட்டுக் கொண்டிருந்தான்.சுரேஷ் மீட்டர் மீட்டராய் கயிறே விட்டுக் கொண்டிருந்தான். அவள் எதற்கும் மசியவில்லை.

மாமா எப்படி ஆரம்பிப்பது என்று ஆறு மாதங்களாய் அமைதியாய் யோசித்துக் கொண்டேயிருந்தான். இது ஒருபக்கம் போய்க்கொண்டிருக்க, கல்லூரியில் இவர்கள் இப்போது சீனியர் ஆகிவிட்டதால் கொஞ்சம் அதிகமாகவே ஆட்டம் போட இவர்களின் பெருமை எல்லா துறையிலும் தெரிய ஆரம்பித்தது. அந்த செமஸ்டரில் வாரத்துக்கு ஒருநாள் முழுவதும் கல்லூரிக்குள்ளேயே இருக்கும் தொழிற்சாலைக்குள் தொழிற்பயிற்சி இருக்கும். காலையில் போனால் மதியம் தான் வெளியே விடுவார்கள். 10:30 மணிக்கு ஒரு தம் அடிக்காமல் மாமாவால் இருக்க முடியாது என்பதால் அந்த பயிற்சிவகுப்புக்கு போகும்போது தொழிற்சாலைக்குள்ளேயே சிகரெட் எடுத்துக் கொண்டு போய் உள்ளேயே மறைவில் தம்மடிக்க ஆரம்பித்திருந்தான். அவன் பாக்கெட்டில் சிகரெட் இருந்ததை ஒருமுறை செக்யூரிட்டி ஆட்கள் பார்த்துவிட்டு HOD யிடம் சொல்லிவிட முதல்முறை 3 நாட்கள் சஸ்பெண்ட் ஆனான். ஒரு பிரச்சினையில் சுரேஷும், விஜயும் இன்னொரு துறை மாணவனை அடித்த விசயம் தெரியவந்து அவர்களும் ஒரு வாரம் சஸ்பெண்ட் ஆனார்கள். பயிற்சி நாட்களில் தம்மடிக்க முடியாமல் போனதால் உள்ளே இருக்கும் லேபர்களிடம் சிகரெட் கடன் வாங்கி அவர்களோடு பாத்ரூமில் புகைக்க ஆரம்பித்தார்கள். அவர்களிடம் அடிவாங்கிய மாணவர்கள் அதையும் போட்டுக்கொடுக்க மறுபடியும் சஸ்பெண்ட். இப்படியே ஒரு செமஸ்டர் முழுவதும் காதல்(?) வாழ்க்கை சஸ்பென்சாகவும் கல்லூரி வாழ்க்கை சஸ்பெண்டாகவும் போய்க் கொண்டிருந்தது.

நோட்டிஸ் போர்டில் இவர்கள் பெயர் மாதத்துக்கு இரண்டு முறையாவது வராமல் இருக்காது. நோட்டிஸ் போர்டில் பெயர் வந்தால் ட்ரீட், ஃபைன் கட்டினால் அதே அளவுக்கு ட்ரீட் என்று எல்லாவற்றையுமே டாஸ்மாக்கில் ட்ரீட் வைத்துக் கொண்டாடிக் கொண்டு இருந்தார்கள். மொத்தத்தில் கல்லூரியில் உருப்படாதது, தேறாதது, விளங்காதது என்று முத்திரை குத்தப்பட்டு பயங்கர பிரபலமாகி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் மாமாவின் பெயர்தான் முதலில் இருக்கும். இத்தனைக்குப் பிறகும் மாமாவைக் கல்லூரியை விட்டு நீக்காமல் இருப்பதற்கு ஒரேக் காரணம் எங்கு கல்ச்சுரல்ஸ் போட்டிகள் நடந்தாலும் இவர்கள் கல்லூரிக்கு நாடகப்போட்டி, பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி களில் கண்டிப்பாக ஒரு பரிசு நிச்சயம். அதற்கு காரணம் மாமாதான். அவன் கொஞ்சம் வித்தியாசமான ஆள்தான். இப்படி எல்லாத் திறமைகள் இருந்தும் கடலை போடத் தெரியாமல், பெண்களோடு கடலை போடுபவர்களை எல்லாம் கலாய்த்துக் கொண்டு இருந்தான். அதனாலேயே அவனிடம் பேசுவதற்கே பயந்து எந்தப் பெண்ணும் அவனை நெருங்குவதில்லை. அவனோடு சேர்ந்ததால் விஜய்க்கும், சுரேஷுக்கும் கூட அதே நிலைதான்.

கல்லூரியில் இப்படியெல்லாம் உதார் விட்டுக் கொண்டிருந்தாலும் வீட்டுக்கு வந்தால் மட்டும் அவர்களிடம் ஒரு மாற்றம் இருக்கும். விஜயிடம் நன்றாகவே மாற்றம் தெரிந்தது. புதிதாக ஷர்ட்டை இன் பண்ண ஆரம்பித்திருந்தான். தினமும் ஷேவ் செய்கிறான்.அவன் ஆள் பார்ப்பதற்கும் கொஞ்சம் கலராக இருப்பான். சுரேஷ் இப்போதெல்லாம் சத்தம்போட்டுதான் ப(ந)டிப்பது வழக்கம். வீட்டிலேயே அவ்வப்போது சமைப்பார்கள். அரைப்பதற்கு மிக்ஸி வாங்க கீழே ஓனர் வீட்டுக்கு சுரேஷ் தான் போவான். எல்லாம் இளாவைப் பார்ப்பதற்குதான். வீட்டிலும் அதிக மாற்றமில்லாமல் இருந்தவன் மாமா மட்டும்தான்.இளா விசயத்தில் மட்டும் மற்ற இருவருமேப் பதுங்கிக் கொண்டிருந்தார்கள் ஆனால் எப்போது பாய்வது என இருவருக்குமேத் தெரியவில்லை. மாமா அமைதியாக இருப்பது வேறு அவர்களுக்கு கலக்கத்தை உண்டு பண்ணியது. அவள் +2 முடிப்பது வரை பொறுமையாக இருப்பது என்ற முடிவில் இருந்தான் மாமா.

இடையில் வந்து போன சனிக்கிழமை இரவுகள் எல்லாம் “அவ என்னப் பாத்தாடா”, “அவ சிரிக்கும்போது ரொம்ப அழகா இருக்காத் தெரியுமா”, “அவங்க அம்மாவே நான் நல்லப் பையன்னு ஓனரம்மாகிட்ட சொல்லியிருக்காங்க”, “அவளும் என்ன மாதிரியே சனிக்கிழமதான் தலைக்குக் குளிக்கிறாத் தெரியுமா” என்ற விஜய் + சுரேஷுடைய புலம்பல்களிலேயேப் போய்க் கொண்டிருந்தது. எவனும் முழுதாய் அவளிடம் ஒரு வார்த்தைக் கூட பேசியதில்லை. பேசாமலேயே அந்த ஆண்டும் கழிந்தது.

அடுத்த ஆண்டு தான் அதிர்ஷ்டம்/துரதிர்ஷ்டம் இரண்டுமே அவர்களுக்கு காங்கிரீட்டைப் பிளந்து கொண்டு கொட்டியது.பின்னே அவளும் அவர்கள் கல்லூரியிலேயே அதுவும் அவர்கள் துறையிலேயே முதலாமாண்டு சேரப்போகிறாள் என்பது அவர்களுக்கு சாதாரண செய்தியா?இனி எப்போதும் அவளைப் பார்த்துக்கொண்டே இருக்கப்போகிறோம் என்று சந்தோசப்படுவதா? இல்லை கல்லூரியில் தங்களுக்கு இருக்கும் நல்ல(?) பெயர் அவளுக்கும் தெரியப்போகிறதே என்று துக்கப்படுவதா என்று அவர்களுக்கு தெரியவில்லை. இருந்தாலும் சரி நடப்பது நடக்கட்டும் முயற்சியைத் தொடருவோமென்று விஜயும் சுரேஷும் களத்தில் இறங்கி விட்டார்கள்.முதலாமாண்டு மாணவர்களுக்குக் கொடுத்த வெல்கம் பார்ட்டியில் பக்கத்து வீடு என்கிற உரிமை(?)யோடு அவளிடம் வலி(ழி)யப் போய்ப் பேசிக்கொண்டிருந்தார்கள் இருவரும். அவர்களின் வேகத்தைப் பார்த்தால் மாமாவுக்கே ஆச்சர்யமாயிருந்தது. அன்றும் கூட அவனால் அவளிடம் எதுவும் பேசமுடியவில்லை.

அப்போது அவர்கள் மூன்றாமாண்டிலும் அவள் முதலாமாண்டிலும் இருந்தார்கள். வகுப்பும் பக்கம் பக்கம் தான். வீட்டில் இருந்து கல்லூரி வரை அவளையே ஃபோலோ பண்ணுவதும், மறுபடி மாலையில் அவளைக் கல்லூரியில் இருந்து வீடு வரை பின்தொடர்வதென விஜயும் சுரேஷும் அதிகளம் பண்ணிக்கொண்டிருக்க மாமா அடிக்கடி லுக் விடுவதோடு சரி. அதுவும் அவள் ஒரு முறை நிமிர்ந்துபார்த்துவிட்டால் போதும் நான்குநாட்களுக்கு அவளைப் பார்க்கமாட்டான். மாமா அவனுடைய அம்மாவுக்குத் திதி என்பதால் ஊருக்குப் போயிருந்த ஒரு திங்கட்கிழமை மதியம் இண்டெர்வெலில் தம்மடிக்கும்போது சுரேஷிடம், விஜய் சொன்னான், “டேய் நான் ஒரு விஷயம் சொன்னா ஷாக்காக மாட்டியே? ஆக்ச்சுவலா மாமா வந்ததும்தான் சொல்லனும்னு இருந்தேன். ஆனா கண்ட்ரோல் பண்ண முடியலடா… லஞ்ச் ப்ரேக்ல இளா என் கிட்ட வந்து ‘ஐ லவ் யூ’ சொன்னா.”

( அடுத்தப் பகுதி )

அழியாத அன்புடன்
அருட்பெருங்கோ.

14 comments:

Unknown said...

காதல் முரசே கதை நல்லா சீரான வேகத்தோடப் போகுதுப்பா.. நடத்துங்க,...

ஜி said...

நான் என்னமோ "இன்று போய் நாளை வா" படம் மாதிரி போகுமோன்னு நெனச்சேன். அசத்தலா போகுது..

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட்....

Anonymous said...

Mame, all sontha sarakka..

Nadathhu un kadhal rajjiyam

- Sekar, SG

Unknown said...

வாங்க தேவ்,

/காதல் முரசே கதை நல்லா சீரான வேகத்தோடப் போகுதுப்பா.. நடத்துங்க,... /

சரிங்க தல... இனிமே வேகமாப் போகும் :-))

Unknown said...

வாங்க ஜி,

/நான் என்னமோ "இன்று போய் நாளை வா" படம் மாதிரி போகுமோன்னு நெனச்சேன். அசத்தலா போகுது..

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட்.... /

அந்தப் படமும் நல்ல காமெடியாப் போகும்ப்பா...

அடுத்த பகுதியும் சீக்கிரம் போட்டுட்றேன்...

இராம்/Raam said...

அருட்பெருங்கோ,

இந்த பாகம் நல்லா இருக்கு... அப்பிடியே கண்டினியூ பண்ணுங்க... :))

Unknown said...

வாங்க சேகர்,

/Mame, all sontha sarakka..

Nadathhu un kadhal rajjiyam

- Sekar, SG /

சரக்கா? அதெல்லாம் விட்டு ரெம்ப நாளாச்சுப்பா...

இது காதல் அல்ல கதை :-))

Unknown said...

வாங்க ராம்,

/அருட்பெருங்கோ,

இந்த பாகம் நல்லா இருக்கு... அப்பிடியே கண்டினியூ பண்ணுங்க... :)) /

நன்றி...

ஏன் கொஞ்சம் மாத்தினா ஏத்துக்க மாட்டீங்களா? ;-)

ஜொள்ளுப்பாண்டி said...

அருள் படம் பார்க்கற மாதிரி இருக்கு கதையப்படிக்குறப்போ !! நல்லா போகுது அப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்கப்பூ !! :))

Unknown said...

வாங்க ஜொள்ளுப்பாண்டி,

/அருள் படம் பார்க்கற மாதிரி இருக்கு கதையப்படிக்குறப்போ !! நல்லா போகுது அப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்கப்பூ !! :)) /

நூல் பிடிச்சாப்ல கொண்டுபோய் நல்லபடியா முடிச்சிட்றேன்... இன்னும் ரெண்டு பகுதி பொறுங்க!!!! ;)

Mani said...

Arul
Ilavarasi
same char names in your all stories? I guess you are Arul, who is Ilavarasi? ;-)

Unknown said...

வாங்க மணி,

/Arul
Ilavarasi
same char names in your all stories? I guess you are Arul, who is Ilavarasi? ;-) /

என்னைய்யா இப்படி கோக்கு மாக்காலாம் கேள்வி கேட்கறீங்க? ;-)

இம்சை அரசி said...

கதை நல்லா போகுது. இது உங்க உண்மை கதைதான???

இப்பவும் பொய் சொல்லாதீங்க அருள். யார் அந்த இளவரசி???

மக்களே! நான் இப்படி சிஐடி வேல செஞ்சு கண்டுபிடிச்சு சொல்றேன். யாருமே கேள்வி கேக்க மாட்டேன்றீங்க.... கேளுங்கப்பு....

Unknown said...

வாங்க இம்சையரசி,

/கதை நல்லா போகுது. இது உங்க உண்மை கதைதான???/

எந்தக் கதையெழுதினாலும் உண்மைக் கதைதானன்னே கேட்கறீங்களே, எனக்குலாம் கற்பனையே வராதா? ;-)

/இப்பவும் பொய் சொல்லாதீங்க அருள். யார் அந்த இளவரசி???/

ரெண்டு பாகம் படிச்சதுக்கு அப்புறமும் இப்படி ஒரு கேள்வி கேட்கறீங்களே?

/மக்களே! நான் இப்படி சிஐடி வேல செஞ்சு கண்டுபிடிச்சு சொல்றேன். யாருமே கேள்வி கேக்க மாட்டேன்றீங்க.... கேளுங்கப்பு.... /

அம்மா, தாயே ஆளவிடுங்க...