Tuesday, February 6, 2007

மாமாவின் காதல் - 1

[ தலைப்பைப் பார்த்ததும் இது ஏடாகூடமானக் கதை என்று நினைத்துவிட வேண்டாம். இதுவும் ஒரு மாதிரியான காதல் கதைதான்! ]


“பாஸ்… ஒரு டூ பை த்ரீ” - டீ மாஸ்டரிடம் ஆர்டர் சொல்லி விட்டு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான் விஜய்.
“டேய் விஜய்… இவன் என்னமோ சொல்றான். என்னன்னு கேளு” ,அருள் என்ன சொன்னான் என்பதைச் சொல்லாமல் பொதுவாக மட்டும் சொன்னான் சுரேஷ்.
“ என்ன மாமா… என்ன மேட்டரு” – விஜய். ( அருள் என்று அவனுக்குப் பெயர் இருந்தாலும் நண்பர்கள், சீனியர்கள், டீக்கடை மாஸ்டர், டாஸ்மாக் சர்வர் வரை அனைவருக்குமே அவன் பெயர் “மாமா” தான் )

“மொதல்ல தம்மக் கொடுத்துட்டுப் பேசுடா… வென்று” விஜயிடம் சிகரெட்டை வாங்கியவன்… “ஆங்… இப்படி ‘பட்’ ட சப்பியெடுத்துட்டா அடுத்தவன் எப்பட்றா அடிக்கிறது நாயே… உனக்கு இனிமே ப்ளாஸ்டிக்ல தான் பட் செய்யனும்”

“நீ மொதல்ல மேட்டர சொல்லு மாமே” – வாங்கிய டீயை உறிஞ்சிக் கொண்டே கேட்டான் விஜய்.

“அடுத்த வருஷம் ஹாஸ்டல காலி பண்ணிட்டு வெளிய ரூம் எடுக்கலாம்னு பாக்கறேன் என்ன சொல்றீங்க”

“மாமா… எனக்கென்னமோ இந்த வருசமே வெளங்குமோ என்னமோத் தெரியல… ஹாஸ்டல விட்டு வெளிய வந்து தங்கினா உருப்படுவமா?”

“ஆமா…மாம்ஸ் நானும் அதத்தான் சொல்றேன்… வெளியப் போனா சுத்தமா வெளங்காமப் போயிடுவோம்”

“என்னடா என்னமோ நீங்க ரெண்டு பேரும் உள்ள இருந்து மட்டும் க்ளாஸ்ல ஃபர்ஸ்ட் மார்க்கும் செகண்ட் மார்க்கும் வாங்குற மாதிரி பேசறீங்க? இதுக்கு மேல என்னத்த உருப்படாமப் போயிடுவோம்? உள்ள இருந்தா ஒரு செகண்ட் ஷோ படத்துக்குப் போக முடியுதா? மெஸ்ல சோறாடாப் போட்றானுங்க? இதெல்லாத்துக்கும் மேல முக்கியமா இன்னொருக் காரணம் இருக்கு”

“என்ன?” ரெண்டு பேரும் ஒரே சமயத்தில் கேட்டார்கள்!

“காலேஜ்ல தான் ஒரு புள்ளைகளும் நம்மக்கூடப் பேச மாட்டேங்குது. நம்மளப் பாத்தாலே தெறிச்சு ஓடுதுங்க...வெளிய வீடெடுத்து எதாவது பிக்கப் ஆகுதான்னுப் பார்ப்போம்”

சுரேஷ் சிரித்ததில் அவனுக்கு டீ புரையேறியது.

“என்ன மாமா நீ தான் பேசறியா? கடலப் போட்றவன்லாம் நீ ஓட்றதுக்கு பயந்தே ஓடறான்… நீதானா கடலப் போட முடியலன்னு ஃபீல் பண்ற… என்னால நம்ப முடியல… அதுக்கெல்லாம் மூஞ்சியில கொஞ்சம் நல்லப்பயன் கலை வேணும் மாம்ஸ், அடிக்கடி காலேஜ் பக்கம் போகனும்.. நம்மள மாதிரி மாப்புள பெஞ்சுக் காரங்களுக்கெல்லாம் அது வராது மாம்ஸ்… இண்டர்னலுக்கு ஒரு தடவ க்ளாஸ்க்குப் போனா புதுசா ஒரு பையன் ஜாய்ன் பண்ணியிருக்கான்னு தான் நெனச்சுப்பாளுங்க… சும்மா காமெடி பண்ணாத ஆமா”

“டேய்… நாம என்ன கடலப் போடப் புடிக்காமயாக் கடலப் போடாம இருக்கோம்? கடலப் போடத் தெரியாமதான இப்படி அடுத்தவன ஓட்டிக்கிட்டுத் திரியறோம்…நம்ம மூஞ்சியில மட்டும் எப்பட்றா ஒரு பொறுக்கி கலை இருக்கு?”

“என்ன மாமா எங்களையும் கூட சேத்துட்ட?”

“நக்கலு? நாயே இந்தவாரம் டாஸ்மாக்கு நீயில்லடி”

“என்ன மாமா நீ வேற நான் வேறயா நீ பொறுக்கின்னா நான் பொறுக்கிக்கி”

“சரி போதும் நிறுத்து… எப்ப வீடு பாக்கப் போலாம்?”

“மாமா, நமக்கு இந்த மாசம் செம் ஆரம்பிக்குது… செம் முடிஞ்சு பாத்துக்கலாம்”

“டேய் செம் முடிஞ்சிட்டா அப்புறம் நெறையப் பேர் வெளியில வீடு தேடுவானுங்கடா… அப்புறம் வீடு கிடைக்காது, அதுவும் நான் பாக்குற மாதிரி வீடு கிடைக்காது”

“நீ பாக்குற மாதிரியா?” அதுவரை இருவரும் பேசுவதை ஒரு நக்கல் சிரிப்போடு பார்த்துக்கொண்டிருந்த விஜய் கேட்டான்.

“ஆமா ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல நமக்கு வீடோ இல்ல ரூமோ இருக்கனும்… கிரவுண்ட் ஃப்ளோர்ல ஓனர் வீடு… ஓனருக்கு ஒரு பொண்ணு” – மாமா.

“மாமா நீ தமிழ் சினிமா பாத்து நெறைய கெட்டுப் போயிட்ட போல இருக்கு… காலேஜ்ல தனியா இருக்கிற பொண்ணுங்ககிட்டயே நம்மால பேச முடியல… அப்பா, அம்மா வோட வீட்ல இருக்கிறப் பொண்ணப் பிக்கப் பண்றதெல்லாம் நடக்கிற காரியமா?”

“டேய் காலேஜ் பொண்ணுங்கள விட்டுத் தள்ளு, அது ரிஸ்க்கு… ஒரே வயசுல காதலிச்சாப் பொண்ணுக்கு ஒரு 23, 24 வயசுலையே கல்யாணம் பண்ணப் பாப்பாங்க…நமக்கு 27, 28 லதான் யோசிப்பாங்க… அதனால நம்மள விட சின்னப் பொண்ணா ஒரு பத்தாவது படிக்கிறப் பொண்ணா பாத்து இப்ப இருந்தே டெவலப் பண்ணினா கல்யாணத்துக்குக் கரெக்டா இருக்கும்ல? என்ன நான் சொல்றது?”

“மாமா.. கொழந்தப் புள்ளைங்க மனசக் கெடுக்கப் பாக்கற, உள்ளத் தள்ளிடப் போறாங்க”

“ஆமாடா இப்பவே ஒரு பொண்ணு அவனுக்கு செட் ஆயிட்ட மாதிரி நீயும் ஏத்தி விடு… இதெல்லாம் இந்த வாரம் டாஸ்மாக்குல டிஸ்கஸ் பண்ணிக்கலாம்… அடுத்தது அந்த எச்சோடி (HOD) வாட்டர்ஸ்ப்ரே வாயன் க்ளாசு… க்ளாசுக்குக் கெளம்புவோம்டா” – இது சுரேஷ்.

அந்த வாரம் சனிக்கிழமை இரவு மூன்று பேரும் டாஸ்மாக் கிளம்பினார்கள். வழியிலேப் பார்த்த சீனியர் ஒருவன் “என்ன மாமா சனிக்கிழமை ராத்திரி எங்க கிளம்பிட்ட… சரக்கா?”

“ஆமா பாஸ்… சனி நீராடுன்னு அவ்வையாரே சொல்லியிருக்காங்கல்ல” சிரித்துக் கொண்டே சொன்னான் மாமா.

“ஃபர்ஸ்ட் இயர்லையே இப்படியா? வெளங்க மாட்டீங்கடா” - சீனியர்.

“நாதாறி… இதென்னமோ வெளங்கிட்ட மாதிரி… மேத்ஸ்-1 ல விழுந்த அரியருக்கு நம்மகிட்ட நோட்ஸ் கேட்டான்… நம்மள சொல்ல வந்துட்டான்” சீனியர் போய்விட்டான் என்று தெரிந்ததும் அவனைப் பற்றி சிலாகித்தான் மாமா.

“விடு விடு கோபத்த இப்பவே எறக்கிட்டு அப்புறம் சரக்குக்கு வேலையில்லாமப் பண்ணிடாத”

டாஸ்மாக் உள்ளே நுழைந்ததும் தெரிந்த முகத்துக்கெல்லாம் ஒரு ஹாய் சொல்லிவிட்டு ஒரு மூலை டேபிளில் போய் அமர்ந்தார்கள்.
ஆர்டர் செய்ததெல்லாம் வர வர வந்த வேகத்தில் காலியாகிக் கொண்டே இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மூன்று பேரும் அரை போதைக்குப் போக ஆரம்பித்தார்கள்.

“மாமா இப்ப சொல்லு ஒன்னோட பிளான… எங்க வீடு பாக்கறோம்? எப்ப பாக்கறோம்” ஆரம்பித்தான் சுரேஷ்.

“நான் என்ன வீடா கட்டப் போறேன் பிளானக் கேட்டுட்டு இருக்க? நாளைக்கே வீட்டப் பாக்கறோம் அட்வான்ஸ் கொடுக்கறோம்… இந்த செம் முடிஞ்சதும் திங்ஸ் எல்லாம் கொண்டு போய் வச்சிட்டுதான் ஊருக்குப் போறோம்”

“சரி மாமா… பாக்கறதுதான் பாக்கறோம் 3 பொண்ணுங்க இருக்கிற வீடாப் பார்ப்போம்” - தன்னுடைய கவலை விஜய்க்கு.

“ஏண்டா அலையற… மொதல்ல ஒரு பொண்ணு இருக்கிற வீடே கிடைக்குதான்னுப் பார்ப்போம்… எத்தனப் பொண்ணு இருந்தாலும் எல்லாருமே ட்ரை பண்றோம்… ஒருத்தனுக்கு செட் ஆயிடுச்சுன்னா மத்தவங்க கழண்டுக்குவோம் ஓக்கே வா? மகனே இதுல எவனாவது பாலிடிக்ஸ் பண்ணீங்க அவ்ளோதான்”

“அதுக்குதான் மூனு பொண்ணு இருக்கிற மாதிரி பாக்கலாம்னேன்”

“அப்புறம் மூனுல எனக்கு அதுதான் வேணும் இதுதான் வேணும்னு அடம்பிடிச்சீங்கன்னா”

சத்தம்போட்டு சிரித்தான் சுரேஷ் “ஏண்டா இன்னும் வீடேப் பாக்கல… அதுக்குள்ள இல்லாதப் பொண்ணுக்கு சண்ட போட ஆரம்பிச்சாச்சா?”

“டேய் இதுக்காகவே நாளைக்கே வீட்ட பாக்கறோம்… அடுத்து ரூட்ட பாக்கறோம்”

அவர்கள் வாழப் போகிற வீட்டைப் பற்றியும், வரப்போகிற ஓனர் பெண்ணைப் பற்றியும் டிஸ்கசன் முடிக்கும்போது போதை குறைந்த மாதிரி இருந்தார்கள்.அடுத்து ஒரு குவார்ட்டர் சொல்லி இன்னொரு ரவுண்ட் போதையை ஏற்றிக்கொண்டு ஹாஸ்டல் வந்து தூங்கியபோது மூன்று பேர் கனவிலும் மொட்டை மாடி வீடும், பத்தாம் கிளாஸ் பெண்ணும் தப்பு தப்பு தேவதையும் தான்!

அடுத்த நாளே வீடு தேடும் படலம் தொடங்கியது. புரோக்கரைப் பிடித்து வீதி வீதியாக சுற்றினாலும் ஒரு வீடும் இவர்கள் எதிர்பார்த்த மாதிரியில்லை.
ஒன்று சுற்றிலும் பேச்சிலர்கள் மட்டும் வாழும் ரூம்களாயிருந்தன. அல்லது மகன், மகள் எல்லாம் US இல் செட்டில் ஆகிவிட தனியாக இருக்கும் ரிட்டையர்டு தம்பதிகள் வீடாக இருந்தது. ஒரு நாள் முழுக்கத் தேடியும் ஒரு வீடும் கிடைத்தபாடில்லை.

“விஜய் டீ சொல்லு” , விஜயை அனுப்பிவிட்டு ஒரு தம்மை எடுத்துப் பற்ற வைத்தான் மாமா.ஒரு பெரிய இழுப்பு இழுத்து விட்டு கொஞ்சம் கொஞ்சமாகப் புகையை வெளியே விட்டுக் கொண்டிருந்தான்.

டீயைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு கேட்டான் விஜய், “என்ன மாமா ரொம்ப திங்க் பண்ற மாதிரி ஆக்ட் கொடுக்கற, என்னா மேட்டரு”

“நாமப் போற ரூட் சரியில்லயோன்னு நெனைக்கிறேன்… ”

“என்னா சொல்ற”

“ஆமாடா, வீட்டப் பாத்துட்டுப் பொண்ணப் பிக்கப் பண்றத விட, மொதல்ல பொண்ணப் பார்ப்போம் அப்புறம் அவ வீட்டப் பார்ப்போம்”

“இது மேட்ரு”

( அடுத்தப் பகுதி )

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

18 comments:

ஜி said...

அட்ரா.. அட்ரா... அட்ரா.... அட்ரா....

காலேஜ் லைஃபுக்கே போன மாதிரி ஒரு ஃபீலிங்....

ஏன்னா எங்க செட்லையும் ஒருத்தன் பேரு மாமா... அவன் பண்ற அட்டூழியம் தாங்க முடியாதூ..

சும்மா சரவெடி கொளுத்திருக்கீங்க அருட்...

கார்த்திக் பிரபு said...

copy panni vachrukane padichitu solrane

Unknown said...

காதல் முரசு.. கலக்கலான ஆரம்பம்.. மாமாவின் காதல் பயணம் என்ன ஆகுமோ?

ரவி said...

////ஏன்னா எங்க செட்லையும் ஒருத்தன் பேரு மாமா...///

எனக்கு தெரிஞ்சு ஒரு க்ளாஸ்ல ஒரு மாமா இருப்பான் :))) - எங்க செட்லெயும் தான்.

புள்ளையாண்டான் கலக்குது....ஐ...ஐ...சாமி கதையெல்லாம் எழுதுது....வெரி நாட்டி பாய்...

ஜொள்ளுப்பாண்டி said...

அருளு!!! ஐஸ் க்யூப்ஸ் போட்டு ராவா கலக்கி எடுத்து இருக்கீயளே !! நல்ல ஆரம்பம் ! :))))))))))))

Unknown said...

வாங்க ஜி,

/அட்ரா.. அட்ரா... அட்ரா.... அட்ரா..../

அடிச்சுட்டேன் அடிச்சுட்டேன் அடிச்சுட்டேன் அடிச்சுட்டேன்...

/காலேஜ் லைஃபுக்கே போன மாதிரி ஒரு ஃபீலிங்....

ஏன்னா எங்க செட்லையும் ஒருத்தன் பேரு மாமா... அவன் பண்ற அட்டூழியம் தாங்க முடியாதூ../

எல்லா செட்லையும் ஒரு மாமா கண்டிப்பா இருப்பான்ல? ஆனா இவன் கொஞ்சம் வித்தியாசமானவன் ;)
ச்சும்மா சசுபென்சு கண்டுக்கப்படாது ;))

/சும்மா சரவெடி கொளுத்திருக்கீங்க அருட்... /

எல்லா வெடியும் வெடிச்சு முடிக்கட்டும்!!! :)

Unknown said...

வாங்க கா.பி,

/copy panni vachrukane padichitu solrane /

கார்த்திக் பிரபு, உங்கள சுருக்கமா கா.பி னு சொன்னதுக்காக இப்படியா?

Unknown said...

வாங்க தேவ்,

/காதல் முரசு.. கலக்கலான ஆரம்பம்.. மாமாவின் காதல் பயணம் என்ன ஆகுமோ? /

ஆரம்பம் எல்லாமே எப்பவும் கலக்கலாதான் இருக்கும்...

முடிவும் கலக்கலா இருக்கும இல்ல கலங்க வைக்குமான்னு பொறுத்திருந்து பார்ப்போம்!!! :)))

Unknown said...

வாங்க கொலவெறியாரே,

/////ஏன்னா எங்க செட்லையும் ஒருத்தன் பேரு மாமா...///

எனக்கு தெரிஞ்சு ஒரு க்ளாஸ்ல ஒரு மாமா இருப்பான் :))) - எங்க செட்லெயும் தான்.///

மாமா இல்லாம காலேஜ் லைஃபா?

/புள்ளையாண்டான் கலக்குது..../

இன்னும் வலைப்பதிவு சந்திப்புல இருந்து மனசு மீளலையா? ;-)

/ஐ...ஐ...சாமி கதையெல்லாம் எழுதுது....வெரி நாட்டி பாய்... /

இந்த உள்குத்து எதுக்கு? ;)

Unknown said...

வாங்க ஜொள்ளுப்பாண்டி,

/அருளு!!! ஐஸ் க்யூப்ஸ் போட்டு ராவா கலக்கி எடுத்து இருக்கீயளே !!/

அப்படின்னா? :))))))

/ நல்ல ஆரம்பம் ! :)))))))))))) /

முடிவு வரைக்கும் பொறுங்க சாமி...

இம்சை அரசி said...

எனக்கு ஒரு சந்தேகம்...

அதென்ன உங்க கதைல எப்பவும் அருள்ன்ற கேரக்டர் வருது.

உண்மைய சொல்லிடுங்க. நீங்கதான அது???

ஜி said...

// இம்சை அரசி said...
எனக்கு ஒரு சந்தேகம்...

அதென்ன உங்க கதைல எப்பவும் அருள்ன்ற கேரக்டர் வருது.

உண்மைய சொல்லிடுங்க. நீங்கதான அது??? //

நோட் பண்ணுங்கப்பா.. நோட் பண்ணுங்கப்பா....

அருளு.... ம்ம்ம்.... நடக்கட்டும்.. நடக்கட்டும்...

Anonymous said...

super arambam. kalkkunga.

ippdiku,

golisoda

இராம்/Raam said...

அருட்பெருங்கோ,

நல்ல ஆரம்பம்..... அடிச்சு பட்டைய கிளப்புங்க :)

Unknown said...

/ எனக்கு ஒரு சந்தேகம்...

அதென்ன உங்க கதைல எப்பவும் அருள்ன்ற கேரக்டர் வருது.

உண்மைய சொல்லிடுங்க. நீங்கதான அது???/
ஏற்கனவே சொன்னதுதான் வேற பேர் போட்டு அதே பேர்ல யாராவ்து பதிவர் இருந்து சண்டைக்கு வந்துட்டாங்கன்னா?

Unknown said...

வாங்க ஜி,

/நோட் பண்ணுங்கப்பா.. நோட் பண்ணுங்கப்பா....

அருளு.... ம்ம்ம்.... நடக்கட்டும்.. நடக்கட்டும்.../

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் மனசு ரணகளமா இருக்கு...

( சங்கத்துல எழுதும்போது இந்த வசனமெல்லாம் தானா வந்துடுமோ?)

Unknown said...

வாங்க கோலிசோடா (நல்ல பேரு ;-) )

/ super arambam. kalkkunga.

ippdiku,

golisoda/

முடிவு வரைக்கும் படிச்சுட்டு சொல்லுங்க...

Unknown said...

வாங்க ராயல்,

/ அருட்பெருங்கோ,

நல்ல ஆரம்பம்..... அடிச்சு பட்டைய கிளப்புங்க :) /

அதெல்லாம் மாமா கைலதான் இருக்கு :-)))