Monday, August 25, 2008

வீரத்தளபதி ஜே.கே.ரித்திஷின் நாயகன் தடை - அமெரிக்காவில் போராட்டம்

டல்லாசுப்பட்டி, ஆகஸ்ட் 25, 2008: வீரத்தளபதி ஒலக நாயகன் ஜே.கே.ரித்தீஷ் நடித்து வெளியாகியுள்ள 'நாயகன்' திரைக்காவியத்தை அமெரிக்காவில் வெளியிட தடைகள் ஏற்படுத்திய அந்நிய சக்திகளைக் கண்டித்து அனைத்தமெரிக்க ரித்தீஷ் நற்பணி மன்றம் சார்பில் அமெரிக்கா எங்கும் போராட்டங்களும் சாலை மறியல்களும் நடைபெற்றன. கடந்த வெள்ளியன்று பல்வேறு நாடுகளில் பெரும் ஆரவாரத்துடன் வெளியாகியுள்ள ஜே.கே.ரித்திஷ் நடித்த நாயகன் திரைப்படம் அமெரிக்காவில் வெளியாகவில்லை. வீரத்தளபதியின் வளர்ச்சி பொறுக்காத சில கோடம்பாக்கத்து முன்னணி நட்சத்திரங்கள் அமெரிக்காவிலுள்ள தங்கள் நண்பர்கள் மூலம் தடைகள் ஏற்படுத்தியதாகவும் இதனாலேயே இங்குள்ள திரையரங்க உரிமையாளர்கள் படத்தை வெளியிடத் தயங்கியதாகவும் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் சென்ற சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் அமெரிக்காவின் பல்வேறு பெருநகரங்களில் ஜே.கே.ரித்தீஷின் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இத்திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிடக் கோரியும் தடைகள் உண்டாக்கிய கருங்காலிகளைத் தண்டிக்க கோரியும் போராட்டம் நட்த்தினர். அனைத்து பெருநகரங்களிலும் மாபெரும் பேரணியும் பேரணியின் முடிவில் கண்டனப் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று இந்த போராட்டத்தின் காரணமாக பெரும்பான்மையான கடைகள் மூடப்பட்டிருந்தன. சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.பெருந்திரளான மக்கள் கலந்துகொண்ட இந்த விழாவில் பேசிய புகழ்பெற்ற ஆங்கில இயக்குனர் லீமான் "வீரத்தளபதி தமிழ் திரையுலகின் 'அசைக்க' முடியாத சக்தியாக 'வளர்ந்துகொண்டிருக்கிறார்'. அவர் வளர்ச்சியை அந்நிய சக்திகளால் தடுத்து நிறுத்த முடியாது" என்று கருத்து கூறினார். டிங்கர் கிச்சான் பேசுகையில் "இது தரித்திரம் சரித்திரம் காணாத போராட்டம்" என்றார். இந்த கூட்டத்தில் இயக்குனர்கள் பேரன், டூமிர் ஆகியோரும் கலந்துகொண்டனர். இவர்கள் மட்டுமல்லாது ஏஞ்சலினா காலி, ஸ்கார்லெட் போகன்சன் போன்ற காலிவுட் நடிகைகளும் கலந்துகொண்டனர்.


விழாவில் பேசிய கிஜய.டி.ராட்ரிகேஜர்
"இந்தூரு காப்பி கடை ஸ்டார் பக்ஸு
இருமல் வந்தா தடவிக்கோ விக்ஸு
இத்தனை நாளா அடிச்சது ஒலிம்பிக்ஸு
இனி அடிக்கும் ரித்தீஷோட கிலிம்பிக்ஸு" என்று மேடையில் தாளமிட்டு பாடி ரித்திஷுக்கு தன் ஆதரவைத் தெரிவித்தார். இதை நரி செய்தித் தொலைக்காட்சி ஸ்லோமோஷனில் போட்டுக்காட்டி டி.ஆர்.பியை எக்கச்சக்கமாக ஏற்றிக்கொண்டது.

நியூயார்க்கில் நடந்த கண்டன ஆர்பாட்டத்தில் அழகிய சிங்கர் படோனா வீரத்தளபதியின் "நிலா நிலா ஓடி வா" பாடலைப் பாடி ஆடினார். வீரத்தளபதியின் புகழ் பாடும் பாடல்களின் கேசட் விற்பனை களைகட்டியது.

கலிபோர்னிய மாகாண ஆளுனர் அரைலோடு சிவாஜிநேசர் கடிதம் மூலம் அனுப்பிய செய்தியில் "என்னைப் போன்ற நடிகர்கள் பெயரளவில் நாயகர்களாக நடித்தாலும் உண்மையான நாயகன் ரித்தீஷ்தான்" என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவரும் இந்த வேளையில் ரித்தீஷின் திரைப்படம் வெளியாவதில் உண்டாகியிருக்கும் இந்த நிலை கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஓவாமா ரகசியமாக ரித்திஷிடம் தொலைபேசியில் பேசியதாக நம்பத் தகுந்த வட்டாரம் தெரிவிக்கிறது. இது குறித்து மெக்குயின் கருத்து எதுவும் சொல்லாதது பெரும்பான்மையான மக்களிடையே அதிருப்தி ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்கா மட்டுமல்லாது உலகின் பல நாடுகளில் போராட்டம் நடந்ததாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இதுகுறித்து சென்னையில் இருக்கும் வீரத்தளபதி ரித்தீஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தான் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் சுமூகமாக படம் வெளியிட தக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அமெரிக்க ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும்னெறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


வீரத்தளபதி மேலான தங்களின் பாசத்தை மனதில் கொண்டு 'நாயகன்' திரைக்காவியத்தை அமெரிக்காவில் வெளியிட வேண்டுமென்பதே அவர் ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

22 comments:

ILA said...

Tech satish, tamilo, tubetamilஅ எல்லாம் அண்ணன் வர்றதை தடுக்க முடியாது.. அண்ணன் வாழ்க!

ஆயில்யன் said...

// ILA said...
Tech satish, tamilo, tubetamilஅ எல்லாம் அண்ணன் வர்றதை தடுக்க முடியாது.. அண்ணன் வாழ்க!

//


எஸ்ஸு

அண்ணன் வாழ்க!

வளர்க அவர் புகழ் அமெரிக்கா எஙகும் :)

தமிழ் பிரியன் said...

சூப்பர் ஸ்டார், தமிழ் திரையுலகின் மூலம் உலக சினிமாவுக்கு மறுமலர்ச்சி கொண்டு வரத்துடிக்கும், நாயகன் வள்ளல் ரித்தீஷின் படத்துக்கு தடையா? பொங்கி எழுவோம்! வாரீர்! வாரீர்!

மங்களூர் சிவா said...

/
ILA said...

Tech satish, tamilo, tubetamilஅ எல்லாம் அண்ணன் வர்றதை தடுக்க முடியாது.. அண்ணன் வாழ்க!
/

haa haa
அண்ணன் வந்துட்டாரா இவங்க மூலமா???

மதுவதனன் மௌ. said...

இலங்கையில் அண்ணனின் திரைக்காவியம் அரங்குநிறைந்து சரித்திரம் படைக்கிறது என்பதைச் சொல்லிக்கொள்வதில் ஜே.கே ரித்தீஷ் இலங்கை நற்பணிமன்றம உறுப்பினர் ஆகிய நான் அளவுகடந்த பெருமை கொள்கிறேன்.

சென்ஷி said...

ஹா..ஹா..ஹா..

சிங்கத்தை சாய்க்கப்பார்த்தா சும்மாவா விடுறது :))

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

தலைவன் படத்துக்கு தடையா? புஷ்சு பயந்துட்டான்னே...அடுத்த அமெரிக்க ஜனாதிபதியா அண்ணன் வந்துருவாரோன்னு!!!!

கயல்விழி said...

இது ரொம்ப ஓவர்ங்க கப்பி. அமரிக்க மக்கள் நிம்மதியா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலயா?

Syam said...

என்னாது நம்ம தங்க தலைவன் வருங்கால அமெரிக்க ஜனாதிபதி ஜெ.கே.ரி படத்த அமெரிக்கால ரிலீஸ் பண்ணலையா...டே சண்முகா எட்றா வண்டிய உட்ரா புஸ்சு வூட்டுக்கு...

Syam said...

அமெரிக்கா மேல் போர் தொடுக்கப்படும் என்று இதன் மூலம் அறிவித்துக்கொள்கிறேன்...

இங்ஙனம்
JKR
அதிரடிப்படை

கயல்விழி said...

//சண்முகா எட்றா வண்டிய உட்ரா புஸ்சு வூட்டுக்கு...
//

புஸ்சு வீட்ல உங்களை வரவேற்க பரிவாரங்களோடு காத்திருப்பாங்க, சீக்கிரம் போங்க :)

Syam said...

பாருங்க MGR அடுத்து அந்த மாதிரி இனிசியல் (JKR) நம்ம தலைவனுக்கு மட்டும் தான் பொருந்தி வருது...எல்லோரும் 2011 தான் முதல்வர் நம்ம தல இப்போ இருந்தே முதல்வன்

Syam said...

//புஸ்சு வீட்ல உங்களை வரவேற்க பரிவாரங்களோடு காத்திருப்பாங்க, சீக்கிரம் போங்க :)//

நீங்க வேற எங்க தல வராருனா புஸ்சு எஸ்கேப் ஆகிடுவாரு :-)

இராம்/Raam said...

// Syam said...

பாருங்க MGR அடுத்து அந்த மாதிரி இனிசியல் (JKR) நம்ம தலைவனுக்கு மட்டும் தான் பொருந்தி வருது...எல்லோரும் 2011 தான் முதல்வர் நம்ம தல இப்போ இருந்தே முதல்வன்

Syam said...

//புஸ்சு வீட்ல உங்களை வரவேற்க பரிவாரங்களோடு காத்திருப்பாங்க, சீக்கிரம் போங்க :)//

நீங்க வேற எங்க தல வராருனா புஸ்சு எஸ்கேப் ஆகிடுவாரு :-)//


12b,

பாகார்டி ரேஞ்சு இப்போதான் புரியுது... :))) Totally ROTFL....

அடிச்சி ஆடுங்க... :) நானும் வாறேன்.... :)

Anonymous said...

// தலைவன் படத்துக்கு தடையா? புஷ்சு பயந்துட்டான்னே...அடுத்த அமெரிக்க ஜனாதிபதியா அண்ணன் வந்துருவாரோன்னு!!!! //

நீங்க வேற அடுத்த அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் தான்.

letty said...

கனடா ரசிகர் மன்றம் தலைவரை வாழ்த்தி வீர சேனாதிபதி பட்டம் வழங்குகிறது

JTR ரசிகர் மன்றம் (Canada-RVS 123601)

சங்கர் said...

இந்தியாவை அணுஆயுத ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வைப்பதற்க்கான சதி!!!!

குடுகுடுப்பை said...

திருட்டு டிவிடி யாவது கெடக்குமா.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நியூயார்க்கில் நடந்த கண்டன ஆர்பாட்டத்தில் அழகிய சிங்கர் படோனா வீரத்தளபதியின் "நிலா நிலா ஓடி வா" பாடலைப் பாடி ஆடினார்//

:))
நீங்க எந்த நிலாவைச் சொல்றீங்க கப்பி? நிலா ரீ-என்ட்ரி? :))

//இந்தூரு காப்பி கடை ஸ்டார் பக்ஸு
இருமல் வந்தா தடவிக்கோ விக்ஸு
இத்தனை நாளா அடிச்சது ஒலிம்பிக்ஸு
இனி அடிக்கும் ரித்தீஷோட கிலிம்பிக்ஸு//

ஜூப்பரோ, ஜூப்பர்!

கப்பி | Kappi said...

போராட்டத்துக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி! ரித்தீஷின் ரசிகர்களாகிய நாம் ஒன்றுபட்டு இந்த கூட்டுச்சதியை முறியடிப்போம் என இந்த நேரத்தில் உறுதி கூறுவோம்!!


இவண்
கப்பி
வீரத்தளபதி ரித்தீஷ் ரசிகர் நற்பணி மன்றம்
(அகில உலக நாயகன் ரித்தீஷ் ரசிகர் மன்றத்துடன் இணைந்தது)
டல்லாசுப்பட்டி

Thenie said...

//அமெரிக்கா மட்டுமல்லாது உலகின் பல நாடுகளில் போராட்டம் நடந்ததாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.//

அந்தாட்டிக்காவில் நடந்த போராட்டத்தில் நிறையவே சல சலப்புகள் நடந்திச்சாமே உண்மையா?

ஆனாலும் இப்படி அஞ்சா நெஞ்சன் படத்துக்கு தடை விதிச்சிருக்க கூடாது

தேவ் | Dev said...

அமெரிக்காவே...ஹாலிவுட் அதிரடியாய் கைப்பற்ற படும்...அங்கிருக்கும் அர்னால்ட்களும்... ஸ்டோலன்க்ளும் அண்ணன் முன் மண்டியிட்டு நிற்க போகும் காலம் தொலைவில் இல்லை

ஹாலிவுட் கம்பெனிகள் அண்ணன் கால் சீட்.. பெட் சீட்.... எல்லாம் கேட்டு படையெடுக்கப் போகும் காலமும் வரும்... அதனால் ஒழுங்கு மரியாதையாக அண்ணன் படங்களை உடனே வெளியிட்டு நிபந்தனையற்ற மன்னிப்பு கேள்.. இல்லையேல் உலகமெங்கும் அமெரிக்காவை எதிர்த்து ஏடாக் கூட போராட்டங்கள் நடைபெறும்....