Saturday, August 30, 2008

இது ஒரு மனிதனின் கதை!


உலகின் முதல் நாள்;

கடவுள் மாடு அவதரிக்க செய்து அதனிடம் மாடாகிய நீ விவசாயிகளிடம் சென்று அவர்களோடு இருந்து,எல்லா நாட்களிலும் அவர்களுக்கு உதவி செய்து வரவேண்டும் உனக்கு வாழ்க்கை 50 வருடங்கள் என்று கூறினாராம்

அதற்கு அந்த மாடு 50 ஆண்டுகளும் நான் என் காலமெல்லாம் கஷ்டப்பட்டு வாழ விரும்பலை அதனால எனக்கு 20 வருஷம் போதும் மீதி 30 வருஷத்த நீங்களே எடுத்துக்கோங்கன்னு சொல்லி கொடுத்துட்டு போயிடுச்சாம்!

ரெண்டாவது நாள்;

இன்னிக்கு கடவுள் ஒரு நாயை அவதரிக்க செய்கிறார் அதனிடம் உனக்கு வேலைன்னு சொன்னா,நீ நாள் பூராவும் வீட்டுல இருந்து காவல் காத்திக்கிட்டிரு,யாராவது புது ஆளுங்க வந்தாங்கன்னா அவங்கள வெளிகதவுக்கிட்ட யே பார்க் பண்ணி நிப்பாட்டிடணும்! உன்னோட வாழ்க்கை 20 வருடங்கன்னு சொல்ல

அதற்கு நாய் என்னது? நாள் பூராவும் ஒரே இடத்தில் குந்திகினு இருக்கணுமா? சான்ஸே இல்ல எனக்கு பத்து வருஷம் போதும் இந்தா மீதி பத்து வருஷம் நீயே வச்சிக்கோன்னு சொல்லிட்டு போயிடுச்சாம்

மூணாவது நாள்;

இந்த மூணாமத்த நாள் கடவுள் குரங்கை அவதரிக்க செய்கிறார்! யேய்..! குரங்கு உனக்கு வேலை மக்களை சந்தோஷப்படுத்தணும் அப்புறம் எல்லாரையும் சிரிக்கவைக்கனும் முக்கியமா குரங்கு புத்தின்னா என்னானு எல்லாருக்கும் காமிக்கணும் உனக்கு நான் 20 வருஷம் லைப் தர்றேனு சொல்ல,

இல்ல சாமி! எல்லாரையும் குஷிப்படுத்துறதுக்கு எனக்கு 10 வருஷம் மட்டும் போதும் அதுல எல்லாரையும் குஷிப்படுத்தி வைச்சா அதுவே ரொம்ப திருப்தியாக இருக்கும் அவங்களுக்க்கு போதுமானதாகவும் இருக்கும்னு சொல்லி மீதி 10 வருஷத்தை ரிடர்ன் பண்ணிட்டு போயிடுச்சாம்!

நான்காவது நாள்;

இன்னிக்குத்தான் மனிதனை கடவுள் படைக்கிறார்

இந்தாப்பா உனக்கு திங்கிறது தூங்குறது விளையாடுறது அவ்ளோதான்! வாழ்க்கையை என் ஜாய் பண்ணு! ஒண்ணும் செய்யவேணாம்! சந்தோஷமா இருந்தா போதும்! உனக்கு 20 வருஷ வாழ்க்கை இது ஒ.கேவான்னு கேட்க ?

என்னது? திங்கிறது தூங்குறது,விளையாடறது சந்தோஷமா இருக்கறது இப்படிப்பட்ட வாழ்க்கைக்கு 20 வருஷம் தான் டைமா?

நோ சான்ஸ்..!

ஒ.கே நான் இப்ப உங்ககிட்ட ஒரு டீலுக்கு வர்றேன் நீங்க ஒண்ணும் புதுசா கொடுக்கவேணாம் அந்த மாடு கொடுத்த 30 வருஷம், நாய் கொடுத்த 10 வருஷம் அப்புறமா அந்த குரங்கு கொடுத்த 10 வருஷம் இதெல்லாம் என்னோட 20 வருஷத்தோட சேர்த்துக்கொடுன்னு, சொல்ல சரி ஒ.கேன்னுட்டாராம் கடவுள்!

அதோட கஷ்ட காலங்கள்தான்...

முதல் 20 வருஷம் மனுசனாட்டம் சாப்பிட்டு,தூங்கி,விளையாடி சந்தோஷமா இருந்துட்டு, அடுத்த 30 வருஷத்துக்கு மாடு மாதிரி மழை வெய்யில்னு பார்க்காம உழைச்சுக்கொட்டி, அடுத்த 10 வருஷத்துக்கு நம்ம பேரப்புள்ளைங்களுக்கு நம்ம குரங்கு தனங்களை காட்டி சிரிக்கவைத்து, கடைசியா பத்து வருஷத்து வீட்ல் உக்காந்து காவல் காத்து,யாராவது வந்தா தேவையில்லா கேள்வியெல்லாம் கேட்டு அடிக்காத குறையா தூரத்திவிட்டுக்கிட்டு இருக்கோம்!

டிஸ்கி:-
ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கலைன்னா கிடைச்ச வாழ்க்கையை ஆசைப்பட்டு ஏத்துக்கணும்
- நாய் சேகர்


(என்னது ஏற்கனவே கேட்டு புளிச்சுப்போன கதையா!!! சொல்லவே இல்லை?????)

15 comments:

விஜய் ஆனந்த் said...

:-)))...

மதுவதனன் மௌ. said...

ஏற்கனவே கேட்டாலும் புளித்துப்போகாத கதை :)))))

r.selvakkumar said...

கதையை விட கடைசி லைன் பஞ்ச் சூப்பர்
//(என்னது ஏற்கனவே கேட்டு புளிச்சுப்போன கதையா!!! சொல்லவே இல்லை?????)//
இந்த பஞ்ச் லைன்தான் பழைய வாசனை புளிச்ச ஏப்பம் எல்லாத்தையும் மறக்க வைச்சிடுச்சு

வாழ்த்துகள்

தமிழ் பிரியன் said...

நல்லா எழுதுறீங்க கதை! நீங்க ஏன் ஒரு காதல் கதை எழுதக் கூடாது?... அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

கானா பிரபா said...

//தமிழ் பிரியன் said...
நல்லா எழுதுறீங்க கதை! நீங்க ஏன் ஒரு காதல் கதை எழுதக் கூடாது?... அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!//

அது!!!!

நிஜமா நல்லவன் said...

//கானா பிரபா said...

//தமிழ் பிரியன் said...
நல்லா எழுதுறீங்க கதை! நீங்க ஏன் ஒரு காதல் கதை எழுதக் கூடாது?... அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!//

அது!!!!//


:)

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

நல்லா எழுதுறீங்க கதை! நீங்க ஏன் ஒரு காதல் கதை எழுதக் கூடாது?... அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

1000 times RReeppiteee....

சந்தனமுல்லை said...

:-))

ஆயில்யன் said...

//விஜய் ஆனந்த் said...
:-)))...
//

அண்ணாச்சி தாங்க்ஸ் :)

ஆயில்யன் said...

//மதுவதனன் மௌ. said...
ஏற்கனவே கேட்டாலும் புளித்துப்போகாத கதை :)))))
/

நன்றி :))

ஆயில்யன் said...

r.selvakkumar said...
கதையை விட கடைசி லைன் பஞ்ச் சூப்பர்
//(என்னது ஏற்கனவே கேட்டு புளிச்சுப்போன கதையா!!! சொல்லவே இல்லை?????)//
இந்த பஞ்ச் லைன்தான் பழைய வாசனை புளிச்ச ஏப்பம் எல்லாத்தையும் மறக்க வைச்சிடுச்சு
//


ஆஹா :)))

ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...
நல்லா எழுதுறீங்க கதை! நீங்க ஏன் ஒரு காதல் கதை எழுதக் கூடாது?... அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
//

முயற்சிக்கிறேன் அண்ணா!

முதலில் காதல் செய்து பின் அதை கதையாக்கி வெளியிடும் திட்டம் ஒன்று நெடுங்காலமாகவே இருக்கிறது!

பட்!

அதான் அதேதான் பிகருதான் சிக்கல!

ஆயில்யன் said...

//கானா பிரபா said...
//தமிழ் பிரியன் said...
நல்லா எழுதுறீங்க கதை! நீங்க ஏன் ஒரு காதல் கதை எழுதக் கூடாது?... அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!//

அது!!!!
//

சொல்லிட்டேண்ணா சொல்லிட்டேன்!

அவுருக்கு பதில் சொல்லிட்டேன்!

ஆயில்யன் said...

// நிஜமா நல்லவன் said...
//கானா பிரபா said...

//தமிழ் பிரியன் said...
நல்லா எழுதுறீங்க கதை! நீங்க ஏன் ஒரு காதல் கதை எழுதக் கூடாது?... அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!//

அது!!!!//


:)
//

ரைட்டு ஒ.கே!

ஆயில்யன் said...

// சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
நல்லா எழுதுறீங்க கதை! நீங்க ஏன் ஒரு காதல் கதை எழுதக் கூடாது?... அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

1000 times RReeppiteee....
///

அவ்வ் நீங்களும் நல்லவனா???

சரி நம்பித்தான் ஆகணும் போல!