Sunday, August 3, 2008

சார்லி சாப்ளின் !


சென்னைக்கு போவதென்றால் ஒரு பக்கம் பயம், ஒரு பக்கம் சந்தோஷம், என்றிருந்தாலும் கூட, கிளம்பும் நாள் அன்று பீதியிலேயே உறைந்திருக்கத்தான் தோன்றும்.

மனதிக்குள் மெரீனா பீச்சில் காணாமல் போவது போலவும்,ஏதேனும் ஒரு கபாலியோ அல்லது ரங்காவோ கறுப்பாய் கொழுக்மொழுக்கென இருக்கும் என்னை கடத்திப்போய் ரோட்டி பிச்சை எடுக்க வைத்துவிடுவார்களோ என்ற பயம்தான்! - அப்படித்தான் பிச்சை எடுக்கும் சூழலில் சிக்கியவர் இவர் கடினமான தினவாழ்க்கை பிளாட்பாரத்தில் படுத்துறங்கி விடியும் நாளில் கிடைதத வேலை எதையாவது செய்து வயிற்றுக்கு உணவிட்டுக்கொண்டவர் இவர் - ஆனாலும் கூட சந்தோஷமாய் ரயில் ஜன்னலில் நின்றுக்கொண்டே வேடிக்கை பார்த்து சென்னை சென்றாலும் உடனேயே ரொம்ப பத்திரமாக ஊர் திரும்பவேண்டும் என்று வேண்டாத தெய்வங்கள் கிடையாது! - பஸ்ஸில் பிரயாணித்து ( போகும் போது ரயிலு வரும் போது பஸ்ஸு! - இது டீலு) திரும்பு வேளை மிக்க சந்தோஷமான ஒன்றாகவே இருக்கும் அதை விட ரொம்ப சந்தோஷமான விசயம் கிட்டதட்ட 3 மணி நேரத்துக்கு திருவள்ளுவர் பஸ்ஸ்டாண்ட்ல டிவிப்பொட்டியில் படம் பார்க்கலாம் அதுவும் சார்லி சாப்ளின் படம்ல! சந்தோஷத்துக்கு கொறைச்சலா என்ன?

1987-1989 காலகட்டங்களில் என்னை போல வயதினருக்கு அனேகமாக சார்லி சாப்ளின், டி.வி, சென்னை பஸ்நிலைய அனுபவங்கள் இப்படித்தான் இருந்திருக்ககூடும்!எத்தனை பஸ்கள் வந்து போய்க்கொண்டிருந்தாலும், எவ்வளவோ மக்கள் குறுக்கிட்டு சென்று கொண்டிருந்தாலும், கொஞ்சம் கூட அக்கம்பக்க பார்வையின்றி அண்ணாந்து பார்த்து சிரித்த காட்சிகள் இன்றும் மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது!

நகைச்சுவை பாத்திரங்களில் வசனத்தால் அல்லாமல் தம் ஆக்‌ஷனில் மட்டும் வெளிப்படுத்தி மக்களை சிரிக்கவைத்த மகான் இன்றும் கூட இவரைப்போலவோ அலல்து இவரோடு ஓப்பீடுமளவுக்கு நடிக்கவோ காமெடி நடிகர்களே இல்லை என்று சத்தியம் செய்து கூறலாம்!

எவ்வளவோ காசு பணம் இருந்தாலும்,எத்தனையோ கஷ்டங்களில் இருந்த மக்களை சினிமா மூலம் சிரிக்க வைக்கும் அளவுக்கு நடித்திருந்தாலும் கூட, தம் சொந்த வாழ்க்கையில் அவரால் மகிழ்ச்சியாக இருக்கும் வாய்ப்பு கிட்டவில்லை என்பதனையே அவரது வரலாறுகள் கூறுகின்றன!

சார்லி சாப்ளின் தனது படங்களால் தன் நடிப்புக்களால் மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியவர்! ஒவ்வொரு நகைச்சுவை நடிகருக்கும், தன் நடிப்புக்களால் குறிப்புக்களை கொடுத்து சென்றவர்! யாருமே தம் வளர்ச்சியினை அல்லது வளரும் விதத்தினை மற்றொரு வளர்ந்த ஒருவருடன் ஒப்பீடு செய்யும் போது தங்களால் தவறுகளை திருத்திக்கொள்ளவும் முடியும்,தம் திறமையினை மெருகேற்றி வளர்ர்ச்சி பெறவும் முடியும்! நகைச்சுவை என்ற சப்ஜெக்டில் அப்படி ஒரு ஒப்பீடு எப்பொழுதுமே சார்லி சாப்ளினை தவிர வேறு யாரும் இருக்க முடியாது!

ஒவ்வொரு பதிவுகளாலும் ஒரு புன்னகை பூக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சங்கத்தில்,நகைச்சுவை நடிப்பால் மக்கள் மனங்களில் எளிதில் நுழைந்து இன்றும் திரைப்படங்களால் வாழ்ந்துக்கொண்டிருக்கும் சார்லி சாப்ளினினை நினைவு கொள்வது பொருத்தமானதாகவே இருக்கும்!

9 comments:

Anonymous said...

im your favorite reader here!

கானா பிரபா said...

சார்லி சாப்ளின் தன் மெளன நடிப்பால் உலகையே பேச வைத்தவர்.

அருமையான கட்டுரை.

(வ வா சங்கத்தில் அநியாயத்துக்கும் அப்பாவி போஸ்ட் போட்டு இன்னாமா ஆக்டிங்க் கொடுக்கிறீங்கப்பா)

நிஜமா நல்லவன் said...

//கானா பிரபா said...
சார்லி சாப்ளின் தன் மெளன நடிப்பால் உலகையே பேச வைத்தவர்.

அருமையான கட்டுரை.

(வ வா சங்கத்தில் அநியாயத்துக்கும் அப்பாவி போஸ்ட் போட்டு இன்னாமா ஆக்டிங்க் கொடுக்கிறீங்கப்பா)
//

ரிப்பீட்டேய்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா சுத்த ஆரம்பிச்சிட்டாருய்யா கொசுவத்தி... ஓகே ஒகே, சார்லி சாப்ளின் பொருத்தமானவர் தான்..இங்கே.. வடிவேலுவை மாதிரி அந்த காலத்திலேயே அடி வாங்கியே சிரிக்கவச்சவராச்சே ரொம்ப நல்லவர்...

cheena (சீனா) said...

ஆம் முத்துலெட்சுமி - கொசுவத்திதான் - அப்பப்ப சுத்தனூம் தன - சார்லி சாப்ளின் இன்னிக்கும் பாக்கலாம்

நல்வாழ்த்துகள் ஆயில்ஸ்

cheena (சீனா) said...

ஆமா ஆயில்ஸ் - என்ன அது தேதி 3 ஆச்சி - 3 பதிவுதான் வந்துருக்கு - விதிமுறைகள் பர்மிட் பண்ணலயா ?

கப்பி | Kappi said...

நல்ல பதிவு!! நன்றி! :)

கோவை விஜய் said...

//நகைச்சுவை பாத்திரங்களில் வசனத்தால் அல்லாமல் தம் ஆக்‌ஷனில் மட்டும் வெளிப்படுத்தி மக்களை சிரிக்கவைத்த மகான் இன்றும் கூட இவரைப்போலவோ அலல்து இவரோடு ஓப்பீடுமளவுக்கு நடிக்கவோ காமெடி நடிகர்களே இல்லை என்று சத்தியம் செய்து கூறலாம்!//


சத்யமான உண்மை

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

மங்களூர் சிவா said...

//
(வ வா சங்கத்தில் அநியாயத்துக்கும் அப்பாவி போஸ்ட் போட்டு இன்னாமா ஆக்டிங்க் கொடுக்கிறீங்கப்பா)
//

ரிப்பீட்டேய்...