Friday, August 8, 2008

08.08.08 - சீனா ஒலிம்பிக் - இந்தியா ”ஒளி”ம்பிக்


08 வருடம்
08ஆம் மாதம்
08ஆம் நாளில்,
08 மணிக்கு,
08 நிமிடம்
08 விநாடிக்கு துவங்கியது ஒலிம்பிக் (பயங்கரமான செண்டிமெண்ட்! - 8 அவுங்களுக்கு ரொம்ப புடிச்ச நம்பராம்!)

கடந்த 20 ஆண்டுகளில் நான் கேள்விப்பட்ட பார்த்த ஒலிம்பிக் போட்டிகள் எனக்கு (எனக்கு மட்டுமல்ல!) பெரும் ஆர்வத்தினையும் மகிழ்ச்சியினையும் எதிர்பார்ப்பினையும் கொண்டிருந்தது என்று சொன்னால் அது உண்மை! பெரும்பாலும் இரவுகளில் ஒளிபரப்பான போட்டிகளுக்காக கலர் டிவி வைத்திருந்தவர்களின் வீடுகளுக்கு சென்று நண்பர்கள் குழுமத்தோடு பார்த்தது நினைவில் நிற்கிறது!

கொஞ்சம் கொஞ்சமாக ஒலிம்பிக்கின் மீதான கவனம் குறைய. கிரிக்கெட் அல்லது அவ்வப்போது ஹாக்கி போன்ற போட்டிகளில் மட்டும் ஆர்வம் அதிகரிக்க காரணம் ஏதோ அதில் மட்டும் மிக திறமையான வீரர்களை இந்தியா பெற்றிருக்க்கிறது என்ற குருட்டு எண்ணமும் ஒரு காரணம்! நம் இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் அபரிமிதமான ஊக்கமும் ஒத்துழைப்பும் கூட நம் மக்களிடையே ஒலிம்பிக் கவனத்தினை திசை திருப்பியும் இருக்ககூடும்!

இன்றும் கூட கிராமப்புறங்களில் எத்தனையோ வாலிபர்கள் மிகுந்த ஆர்வமுடன் கால்பந்து & கைப்பந்துகள் விளையாடுவதை நாம் பார்க்க நேரிடுகிறது! அரசு இது போன்ற வீரர்களினை தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்தால் வரும் காலத்தில் குறைந்த பட்சம் பஒலிம்பிக்ஸில் இந்தியா அங்கம் வகிக்கிறது என்ற சொல்லாவது நிலைக்கலாம்! சரி இதை விட்டு தள்ளுங்க!

நிறைய முயற்சிகள் எடுத்து கடும் உழைப்பில் சீனா ஒலிம்பிக்ஸ் நடைப்பெற சீனா அரசும் அந்நாட்டுமக்களும் ஈடுப்பட்டுள்ளனர்!

புதிய புதிய முயற்சிகள்!

அசர வைக்கும் தொழில்நுட்பங்கள் அடங்கிய கட்டுமானங்கள்!

எதிர்பாராமல் இயற்கை எதுவும் சதி செய்யுமோ என்ற எதிர்பார்ப்பில் அதற்கும் தயாராகவே டெக்னிக்கல் டீம் தயாராக...! ( மேகங்களை விரட்டிப்புட்டு மழை வராம பண்ணுறாங்களாம்!)

கொள்ள பேரு கூடி இருக்காங்களாம் இதுமட்டுமில்லாமல் போட்டிகள் நடக்குமிடங்களிலெல்லாம், காலநிலை எப்படி இருக்கு? அதிகம் தூசு இருக்கா? மழை பெய்யுமா? வேற எதுனா ரிஸ்க் வருமான்னு சல்லடை போட அலசாத குறையா கண்டுபிடிக்கறதுக்கு புது புது கருவிகள் இன்ஸ்டால் பண்ணியிருக்காங்களாம்!

மொத்ததில சீனா ஐட்டமா? பக்கா லோக்கலு நல்லா இருக்காதுப்பான்னு! யாரும் சொல்லாத அளவுக்கு ஒலிம்பிக்ஸ் நடத்திகாட்டப்போறாங்களாம் !

பார்க்கத்தானே போறோம்!


இதுதான் சைனீஸ்ங்கீலிசு!

எல்லா பயபுள்ளைங்களும் இப்படித்தான் மொட்டையை போட்டுக்கிட்டு திரியறாங்களாம்!

டிஸ்கி 1 - 08.08.08 ஒலிம்பிக் ஆரம்பிக்கிற நேரத்துல சங்கத்துல டெம்ப்ரரி சிங்கமா இருந்துக்கிட்டு நம்ம பேரை பொறிக்காம போன நல்லா இருக்குமான்னு திங்கியதில் பொங்கிய எண்ணங்கள்!

டிஸ்கி 2 - மக்கள் தொகையில் மட்டும் இரண்டாம் இடத்திலிருந்தும் பெரிய நாடான இந்தியாவே! - ஓளிந்துக்கொள்!

7 comments:

கானா பிரபா said...

அநியாயத்துக்கு நல்லவரா சங்கத்துல நடிக்கிறாங்களேப்பா, ம்ம்ம்முடியல :-(

VIKNESHWARAN said...

டிஸ்கி 2: :-(

சென்ஷி said...

சங்கத்துல கூட ஒலிம்பிக் போட்டி பத்திய பதிவு போட்டாச்சா :)

அப்பாலிக்கா கானாவுக்கு ஒரு ரிப்பீட்டே :)

நிஜமா நல்லவன் said...

//கானா பிரபா said...
அநியாயத்துக்கு நல்லவரா சங்கத்துல நடிக்கிறாங்களேப்பா, ம்ம்ம்முடியல :-(//


ரிப்பீட்டேய்....

நிஜமா நல்லவன் said...

//டிஸ்கி 2 - மக்கள் தொகையில் மட்டும் இரண்டாம் இடத்திலிருந்தும் பெரிய நாடான இந்தியாவே! - ஓளிந்துக்கொள்!//

:((((((((((((((((((

தமிழ் பொறுக்கி said...

தலைப்பே அருமை..
கடைசி வரை கண் மட்டுமே சிமிட்டி பார்க்க போறோம்....

ILA said...

//மக்கள் தொகையில் மட்டும் இரண்டாம் இடத்திலிருந்தும் பெரிய நாடான இந்தியாவே! - ஓளிந்துக்கொள்!//
:(