Thursday, August 7, 2008

ரஜினி இல்லாத சீயான், மதராஸி ஜோக்ஸ்


எனக்கு ஒரு சந்தேகம்...

  • நடனக் கலைன்னா டான்ஸ் ஆடறது.

  • ஓவியக் கலைன்னா படம் வரையறது.

அப்ப தவக்களைன்னா?

[நடு ரோட்டில் கவுந்தடிச்சு படுத்துகிட்டு யோசிப்போர் சங்கம்]


இன்றைய தத்துவம்

1) செருப்பு இல்லாம நாம நடக்கலாம்
ஆனா,
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.

[கோவில்ல செருப்ப தொலைச்சுட்டு சைஸ் சரியா இருக்கிற செருப்புக்காக வெயிட் பண்ணும் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது) ]

2) என்னதான் காலேஜ் பஸ் டெய்லி காலேஜ் போனாலும்,

அதால,

டிகிரி வாங்க முடியாது!!!

3) பில் கேட்ஸோட பையனா இருந்தாலும், கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான் ஆகனும்.


யூனிவர்ஸிட்டில ஃபர்ஸ்டா வர வழிகள்

நாலு மணிக்கு எந்திரிச்சு, பிரஷ் பண்ணிட்டு, குளுரா இருந்தாலும் குளிக்கனும். அஞ்சு மணியாய்டும். அம்மா, அப்பா, அக்கா யாரையாவது எழுப்புனா காபியோ டீயோ போட்டுத் தருவாங்க. டிவி போடுங்க. இளையராஜாவோட சாமி பாட்டு வரும். மனச ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க. ஆறு மணிக்கு கிளம்புங்க. ஆறரைக்கு யூனிவர்ஸிட்டி போயிரலாம். நீங்கதான் யுனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்!!!


[மை பிரண்டு யூனிவர்ஸ்டி பர்ஸ்டா வந்த கதை தெரிந்த சங்கம்]


மொழி'பெயர்ப்பு
ICICI என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

தெரியலையா?!?!


நான் பார்க்க நான் பார்க்க நான்

உங்கள் பொது(மொழி) அறிவை இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிக்கோங்க!!!

[துர்கா வுடன் சேட் பண்ணி சேதுவான சீயான் சங்கம்]நாட்ட்ட்ட்டாமை....

பசுபதி : ஐயா...

நாட்டாமை : என்றா பசுபதி?

பசுபதி : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13....

நாட்டாமை : அட என்றா??

பசுபதி : அதான் என்றோம்ல!!

நாட்டாமை : ?!?!


[இப்படி பேசிப் பேசியே KRS மாதிரி அடுத்தவன் உசுர வாங்கும் சங்கம்]


டப்பிங் படங்கள்


உங்கள் டீ.வியில் இந்த வாரம் புத்தம் புதிய டப்பிங் படங்கள்.

திங்கள் : ஆத்தா திரும்பி வாராங்க (The MUMMY Returns).

செவ்வாய் : எட்டுக்கால் எழுமலை (Spider Men)

புதன் : இது ஆவறதில்லை (Mission Impossible)

வியாழன் : கருவாப் பசங்க (Men in Black)

வெள்ளி : ஓட்டையாண்டி (Hollow Man)


[ஒன்லி இங்கிலிபீசுன்னு பீலாவுடற சங்கம்]


மதராஸி ஜோக்ஸ்


1) கைடு : சார், சார். அந்த சேர்ல உட்காராதீங்க. அது திப்பு சுல்தானோட சேர்.
மதராஸி: ஒன்னும் பிரச்சனையில்லை. அவர் வந்த உடனே நான் எழுந்திருச்சிருறேன்.


2)ஆசிரியர் : 1869ல் என்ன நடந்தது?

மதராஸி: எனக்கு தெரியாது சார்.


3) ஆசிரியர் : மடையா! அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி, அடுத்த கேள்வி! 1873ல் என்ன நடந்தது?

மதராஸி: காந்திஜிக்கு நாலு வயசு சார்!

[சர்தார்ஜி சோக்கு சொன்னா மண்டைய ஆட்டி கேட்கும் சங்கம்]கடிக்கும் கொத்ஸ்க்காக (கடிக்கும் கொசுக்காகன்னு படித்தால் சங்கம் அதற்கு பொறுப்பாகாது)


மூன்று கரப்பான் பூச்சிகள், ரோட்டில் போய் கொண்டிருந்தன. அப்பொழுது, திடீரென்று ஒரு கரப்பான்,

"வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும்.." என்று பாட துவங்கியது. உடனே கூட வந்து கொண்டிருந்த இரண்டு பூச்சிகளும் செத்து போய்விட்டன.
ஏன் தெரியுமா?
..
ஏன்னா, அது "HIT" ஸாங்!!!டீச்சருக்காக:


ஒருவன் : நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.

நண்பன் : கார் ஓட்டி பாரேன்.இம்சை அரசன் 24ம் புலிகேசி (Ver 2008-Software Eng)


அமைச்சர் : மன்னா! போருக்கு தயாராக சொல்லி பக்கத்து நாட்டு அரசன் ஓலை அனுப்பியுள்ளான்.

இ.அ.24.பு : ஐயகோ! இப்பொழுது என்ன செய்வது? ஆங்! "ஓலை sending failed" என்று திருப்பியனுப்பிவிடு.

[நன்றி:: மடல் போட்டா பதிவா வரும்னு தெரியாதோர் சங்கம்]

16 comments:

மொக்கைச்சாமி said...

கலக்கிடீங்க ILA... நல்லா இருக்குங்க joke's எல்லாம்... அந்த கரப்பன் பூச்சி ஜோக் HIT கிளாஸ் போங்க... அதுவும் ஒவ்வொரு ஜோக்குக்கும் ஒரு சங்கம் போட்டீங்க பாருங்க அங்க தாங்க நிக்கிறீங்க...
[ மொக்கை பதிவிற்கும் சீரியஸ் பின்னுட்டம் இடுவோர் சங்கம் ]

ILA said...

அங்க மட்டும்தான் நான் நிக்கிறேன், மீதியெல்லாம் மெயிலு அனுபிச்சவன்ந்தான் நிக்கிறான்.
[சீரியஸாவே பின்னூட்டம் போட்டாலும் மொக்கையாவே பதிலடிக்கும் சங்கம்]

தஞ்சாவூரான் said...

:))

- மொக்க சோக்குக்கும் சிரிப்போர் சங்கம்!

மோகன் கந்தசாமி said...

சி.என்.என்-ஐ.பி.என். - "தி வீக் தட் வாஸ் நாட்". இந்த நிகழ்ச்சியில வர திராவிடியன் ஜோக்ஸ் -கும் உங்க மதராசி ஜோக்ஸ் -கும் என்ன வித்தியாசம்?

அதுல வட நாட்டான் கிண்டல் பண்றான். இதுல தென்னாட்டன் சுரணையே இல்லாம கிண்டல் பண்ணிக்கறான். இந்த வகை ஜோக்ஸ் -களை வடநாட்டான் சொல்லி இவன் கேட்டால் ஒரு வேளை புல்லரிப்பானோ?

ILA said...

//இந்த வகை ஜோக்ஸ் -களை வடநாட்டான் சொல்லி இவன் கேட்டால் ஒரு வேளை புல்லரிப்பானோ?//
எனக்கு வந்த மடல்ல இது எல்லாம் சர்தார்ஜி என்றுதான் இருந்துச்சுங்க. நாந்தான் எத்தனை நாளைக்கு சர்தார்ஜியவே வெச்சு சொல்றது, கொஞ்சம் மாத்தி சொல்லுவோமே சொல்லி வெச்சேன். ஒன்னு தெரியுங்களா இங்கே வர்ற ஒவ்வொரு சர்தார் நகைச்சுவைகளும் மதராஸிங்கிற பேர்ல அங்கே இருக்கும். அதைச் சொல்ல ஒரு வாய்ப்பு குடுத்துட்டீங்க :)

ILA said...

நம்மளை நானே கிண்டலடிச்சுக்கலாங்க. அடுத்தவங்க அடிச்சாத்தான் தப்பு. நீங்க சர்தார்ஜி ஜோக்கை ரசிக்க மாட்டிங்கன்னு நமக்கு தெரியாம போச்சுதுங்களே

ILA said...

//சி.என்.என்-ஐ.பி.என். - "தி வீக் தட் வாஸ் நாட்". இந்த நிகழ்ச்சியில வர திராவிடியன் ஜோக்ஸ் -கும் உங்க மதராசி ஜோக்ஸ் -கும் என்ன வித்தியாசம்? //
இதைப் பத்தி நமக்குத் தெரியாதுங்க. அப்படி மதராஸிய கிண்டலடிக்கிறாங்கன்னு பதிவோ, petitionஓ இருக்குங்களா?

மோகன் கந்தசாமி said...

///மதராஸிங்கிற பேர்ல அங்கே இருக்கும். ////

எங்கே? வட இந்தியா எங்குமா? அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட மீடியாக்களில் மட்டுமா? ஒரு வேளை பஞ்சாபிகள் தான் இதை தோற்றுவித்தவர்களோ!

///நம்மளை நானே கிண்டலடிச்சுக்கலாங்க.////

சர்தார்ஜிகள் சர்தார்ஜி ஜோக்குகளை ரசிக்கிறார்களா? அப்படியென்றால் எனது சீக்கிய நண்பர்களுக்குத்தான் நகைச்சுவை உணர்வு இல்லை போலிருக்கு. பாவம் அறிவிலிகள்.

///அடுத்தவங்க அடிச்சாத்தான் தப்பு////

ஓ! அப்படின்னா இப்ப யாரும் அடிக்கலையா? எப்ப இந்த தப்ப தொடர்ந்து பண்ணுவாங்கன்னு நினைக்கிறீங்க நீங்க? எதிர் வினையாற்றாத போதும் நாமும் அதை விரும்பி ஏற்றுக்கொள்ளும் போதும் தானே! மதராசி ஜோக்குகள் பரவிவிட்டால் மற்றவன் இதை எதிர் மறை பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவான் என்பதை நீங்கள் அறியவில்லையா? பஞ்சாபிகள் தனி நாடு கேட்ட பொது வட நாட்டில் கிளம்பிய சர்தார்ஜி ஜோக்குகள் எல்லாம் இன்றும் இருப்பது எதனால்? சகஜமாக பரவி விட்டதால் தான்.

///நீங்க சர்தார்ஜி ஜோக்கை ரசிக்க மாட்டிங்கன்னு நமக்கு தெரியாம போச்சுதுங்களே////
இதைத்தவிர மற்ற எல்லா விஷயங்களும் என்னை பற்றி உங்களுக்கு தெரியும் என்றால் மிக்க நன்றி. இதையும் தெரிந்து கொள்ளுங்கள், "எனக்கு சர்தார் ஜோக்குகள் கிஞ்சித்தும் பிடிப்பதில்லை."

////அப்படி மதராஸிய கிண்டலடிக்கிறாங்கன்னு பதிவோ, petitionஓ இருக்குங்களா?////

எனது முதல் பதிவே அதைப்பற்றித்தான் போட்டிருக்கேன்! மேலும் அந்த செய்தி நிறுவனத்தின் குசும்பு நிறைந்த, சென்னை மற்றும் தமிழகத்திற்கு எதிரான உள்குத்து இருக்கும்படியான தலைப்புகளை விமர்சித்து ஜாலியான பின்னூட்டம் இட்டுள்ளேன். ஆனால் எதுவுமே, வெளியானதில்லை. அடுத்தவனை கிண்டல் செய்து செய்தி தலைப்பு வைக்கும் இந்த கருத்து சுதந்திர வாதிகள் எதிர்வினைகளை இருட்டடிப்பு செய்கின்றனர். ஒரு குறிப்பிட்ட செய்தி தலைப்பை விமர்சித்து நான் இட்ட பின்னூடத்தை இங்கு தருகிறேன் சாம்பிளுக்காக!
********
Some other good topics similar to this one:
- Is sambar-idli the reason for Chennai people being the dumb?
- Is Chennai the home of ‘Auto-rickshaw terrorists’?
- Should Army be deployed to contain ‘Auto-rickshaw terrorists’ in Chennai?
- Is Chennai, the Tier-III city able to compete with metros like, Mumbai, Delhi, Calcutta and Bangalore?
- Is Tamil Nadu running the risk of disintegration without Hindi, like Russia without good economic policy?
- Release of water in Kaveri: A possible threat to Bangalore IT industry.
- Humanitarian effort: Bangalore techies help Chennai tribes develop.
- A foreign lady as a Prime Ministerial candidate, too many Tamils in the cabinet. Is India facing security threats?
- Will Hindi help poor Chennai prosper?
- “No Hindi, no Kannada”: Chennai learnt to live with its ordeals.

************


மற்றபடி பெட்டிசன் வந்தால் தான் நடவடிக்கை எடுப்பேன் என்று நீங்கள் சொன்னால், இந்த பின்னூட்டத்தின் வாயிலாக பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். "தயவு செய்து, யாருக்காவது மதராசி ஜோக் தொடர்பாக மனத்தாங்கல் ஏற்பட்டால் உங்கள் பெட்டிசனின் கார்பன் காப்பியை சங்கத்திற்கு அனுப்பவும் - நன்றி"

Natty said...

:) LOL ... LOLLU :))

முரளிகண்ணன் said...

kalakkal

ஆனந்த் குமார் said...

சமீபத்தில் எனக்கு வந்த் மெயிலில் படித்து சிரித்தது.அந்த சங்கங்களின் பெயர்கள் இன்னும் அதிகமாக சிரிக்க வைத்தது.

"மதராசி" - பத்த வச்சிட்டீயே பரட்டை.:)) பாவம் மோகன் எப்படி பீல் பண்றார்.:(

@மோகன் கந்தசாமி
விடுங்க பாஸ். இவனுங்க எப்பவுமே இப்படித்தான். இதெல்லாம் பாத்தா ஆணி புடுங்க முடியுமா?

Robin said...

தமிழனே தன்னை மதராசி என்று அழைத்துக்கொள்வது தனக்குத்தானே சேறு பூசிக்கொள்வது போல் இருக்கிறது. மற்றபடி சென்னையில் ஆட்டோ டிரைவர்கள் மோசம் என்பது உலகறிந்த விஷயம்.

ILA said...

மொதல்ல மதராஸின்னு யாரு சொல்லுவாங்க?

தென்னகத்தைப் பத்தி வடகத்திக்காரங்க தெரிஞ்சு வெச்சுகிட்ட லட்சணங்க இது. அதாவது த.நா, கர்நாடகா,ஆ. பிரதசேம, கேரளா ஆகிய நாலு மாநிலத்து மக்களையும் சேர்த்து சொல்றதுக்காக வந்த வழக்கு இது. அதே மாதிரி யாரும் மதராஸி ஜோக்ஸ்னு சொல்றது கிடையாது. வடக்கிலேயும் சரி, தெற்கு, கிழக்கு மேற்கிலேயும் சரி, எல்லா இடத்திலேயும் சர்தார் ஜோக்ஸ்தான் .
மதராஸிக்காரங்க ஒன்னும் சர்தார் ஜோக்ஸ்ன்னு ஆரம்பிக்கலை. அடுத்தவங்களை (சர்தார்) நாம கிண்டல் அடிக்கிறது சரிங்கிறீங்களா?

(ஏதோ ஒரு தொ.காட்சிக்காக பண்ணினதுக்காக எல்லாம் நாங்க அடுத்த இனத்தை கிண்டலடிக்கிறது இல்லீங்க)). அந்த நிகழ்ச்சி வர்றதுக்கு முன்னாடியே கைப்புள்ளை என்கிற மதராஸிய நாங்க கலாய்க்க ஆரம்பிச்சுட்டோம். இது சிரிப்புக்கான இடம், உங்க ஆதங்கத்தை தனிப்பதிவா போடுங்க அங்கே வந்து வெச்சுக்கலாம் கச்சேரிய.

தமிழ் பொறுக்கி said...

காமெடி படிச்சு பின்னூட்டம் போடலாம்னா..மோகன் கந்தசாமி சொன்ன விசயம் சீரியஸ் ஆக்கிடுச்சு..
என்ன தான் நெருப்புகோழியா இருந்தாலும் அதோட முட்டைய அதால அவிச்சு திங்கமுடியாது...
விடுங்க..

மோகன் கந்தசாமி said...

///தென்னகத்தைப் பத்தி வடகத்திக்காரங்க தெரிஞ்சு வெச்சுகிட்ட லட்சணங்க இது. அதாவது த.நா, கர்நாடகா,ஆ. பிரதசேம, கேரளா ஆகிய நாலு மாநிலத்து மக்களையும் சேர்த்து சொல்றதுக்காக வந்த வழக்கு இது. அதே மாதிரி யாரும் மதராஸி ஜோக்ஸ்னு சொல்றது கிடையாது. வடக்கிலேயும் சரி, தெற்கு, கிழக்கு மேற்கிலேயும் சரி, எல்லா இடத்திலேயும் சர்தார் ஜோக்ஸ்தான் .
மதராஸிக்காரங்க ஒன்னும் சர்தார் ஜோக்ஸ்ன்னு ஆரம்பிக்கலை. அடுத்தவங்களை (சர்தார்) நாம கிண்டல் அடிக்கிறது சரிங்கிறீங்களா?////

எனது பின்னூட்டத்திற்கும் உங்க இந்த பதில் பின்னூட்டத்திற்கும் ஏதாவது தொடர்பிருக்கா? தான் செய்வது தவறென்றே தெரியாமல் செய்கிறீர்கள் என நினைக்கிறேன்.

///ஏதோ ஒரு தொ.காட்சிக்காக பண்ணினதுக்காக எல்லாம் நாங்க அடுத்த இனத்தை கிண்டலடிக்கிறது இல்லீங்க////

நான் சொன்ன எதையுமே நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என கருதுகிறேன். குறைந்த பட்சம் உங்கள் மீது என்ன குறை சொன்னேன் என்றாவது புரிந்து கொண்டீர்களா?

///அந்த நிகழ்ச்சி வர்றதுக்கு முன்னாடியே கைப்புள்ளை என்கிற மதராஸிய நாங்க கலாய்க்க ஆரம்பிச்சுட்டோம்////
மதராசிய கிண்டல் பண்ணுவதற்கும் ஒரு இனத்திற்கு மதராசி பெயர்சூட்டி, பொதுமை படுத்தி கிண்டல் செய்வதற்கும் வித்தியாசம் தெரியவில்லையா?

////இது சிரிப்புக்கான இடம், உங்க ஆதங்கத்தை தனிப்பதிவா போடுங்க அங்கே வந்து வெச்சுக்கலாம் கச்சேரிய.////
அடேங்கப்பா! கோபப்படாதிங்க! இந்த பதிவில் உங்க ஜோக் பத்தி எதிர்வினையை நான் வேறு பதிவில் செய்யனுமா? சரிதான்.

நன்றி.

மோகன் கந்தசாமி said...

தமிழ் பொறுக்கி,

/////என்ன தான் நெருப்புகோழியா இருந்தாலும் அதோட முட்டைய அதால அவிச்சு திங்கமுடியாது.../////

என் பின்னூட்டம் தான் அடாவடியோ -ன்னு நெனச்சா, உங்க பின்னூட்டம் அதிரடியா இருக்கு... தூள்!