Monday, January 8, 2007

கலைமகள் மாமியாருக்கு கண் கொடுத்த கதை!!!

"கலைமகள் மாமியாருக்கு கண் கொடுத்த கதை! !
[மயிலை மன்னார் சொன்னது!]

திருமகளுக்கு காலையிலிருந்து ஒரு புது பிரச்சினை!

என்ன செய்வதுன்னு தெரியாம கையால தடவிகிட்டே நடக்கறாங்க!

எப்பவும் இல்லாத இப்படி ஒரு சோதனை வந்திடுச்சேன்னு ஒரே குழப்பம்!

சாதாரணமா, படுக்கையை விட்டே எழுந்திருக்காத நாராயணன், இந்த மார்கழி மாசத்துல மட்டும், 'டாண்'னு 4 மணிக்கே எழுந்து வெந்நீர் ரெடியான்னு கேக்கறாரு!
எப்படியோ, அவருக்கு முன்னாலியே எழுந்திரிச்சு, வெந்நீர் அடுப்பை மூட்டி, தண்ணியை ரொப்பி, கொதிக்கவெச்சு, ஒரு மாதிரியா ஒப்பேத்திகிட்டு இருந்தாங்க நம்ம லக்ஷ்மி!

ஆமாங்க! மஹாலக்ஷ்மிக்கு இப்பல்லாம் கொஞ்சம் கண்பார்வை மங்கலா தெரிய வருது!

இது ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லை, சரியாயிடும்னு இவங்க காலத்தைத் தள்ளிகிட்டே வந்திட்டாங்க இதுவரைக்கும்.

என்ன; இந்த ஒரு மாசம்தானே இவர் இந்த ஆட்டம் ஆடுவாரு! அதுக்கப்புறம் பாம்பு படுக்கைல படுத்தார்னா, ஆழ்துயில்தானேன்னு இவங்களும் சமாளிச்சுகிட்டு வராங்க!

ஆனா, நெலமை கொஞ்சம் அதிகமாவே ஆயிட்டுது, இப்ப!

பாத்திரத்தை தள்ளி விடறதும், கட்டில்ல இடிச்சுகிட்டு பாலைக் கீழே கொட்டறதுமா அடிக்கடி ஆக ஆரம்பிச்சிடுச்சு!

நாராயணனே இதைப் பார்த்துட்டு, கொஞ்சம் கோவப்படவும், திட்டவும் ஆரம்பிச்சிட்டாரு!
"இப்பிடியே நிலைமை நீடிச்சிதுன்னா, ஒனக்கு இனிமே இங்க இடமில்லை! வூட்டுக்குப் போவ வேண்டியதுதான்"னு கண்டிஷனா சொல்லிட்டரு.
இதைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத லக்ஷ்மிக்கு கண்ணுல இருந்து "பொல பொல"ன்னு கண்ணீர் வுட ஆரம்பிச்சுட்டாங்க!

ஆர்கிட்ட போயி இதைச் சொல்லி அழறதுன்னும் தெரியலை!
என்ன வழின்னும் புரியலை!

வழக்கம் போல எல்லாருக்கும் முன்னால எழுந்திரிச்சு, ஊருக்கே வெளிச்சம் காட்டற சூரியன், அன்னிக்கும் அப்பிடியே லக்ஷ்மியம்மா வூட்டை எட்டிப் பார்த்தான்!
லக்ஷ்மியோ கண்ணைக் கசக்கிகிட்டு ஒக்காந்திருக்காங்க!

சரி, வெந்நீர் அடுப்புலதான் எதோ பிரச்சினை போல; பொகையினாலத்தான் அம்மா கண்ணீர் வுடறாங்கன்னு நினைச்சுகிட்டு, ரெண்டு வார்த்தை ஆறுதலா சொல்லலாம்னு உள்ளே நுழைஞ்சான் ரவி!

அவ்வளவுதான்! அப்பிடியே எல்லா விஷயத்தையும் போட்டுக் கொட்டிட்டாங்க ஸ்ரீதேவி!

அருணனுக்கா ஒரே வருத்தமா போயிரிச்சு!

நாம இதுக்கு எதனாச்சும் பண்ணனும்னு முடிவு பண்ணிகிட்டு, நேரா சுடுகாட்டு பக்கம் போறான்!

அங்கே நடு ராத்திரி ஆட்டத்தை எல்லாம் முடிச்சிட்டு, நம்ம வெட்டியான், அதாங்க சிவன், டயர்டா ஒக்காந்திருக்காரு.
அவர்கிட்ட போய் பலானது பலானது இதான்னு சூரியன் அல்லாத்தையும் சொல்றாரு!

சரி, நா இப்பவே போய் வெரிஃபை பண்றேன்ன்னு அவரும் சூலத்தைத் தூக்கிகிட்டு கிளம்பிட்டாரு.
போய் எல்லாத்தையும் வெசாரிச்சாரு!
மேட்டர் கரெக்டுதான்னு கன்ஃபர்ம் பண்ணிட்டு, ஒடனே சூரியனைப் பார்த்து, "நீ போயி அல்லார்கிட்டயும் சமாச்சாரத்தை சொல்லி, இன்னா ஹெல்பு கிடைக்குமோ அத்த வாங்கியா? ஒடனே நாம லக்ஷ்மிக்கி கண்ணு கொடுத்தாவணும்"னு சொல்றாரு.

சரி, கண்ணுக்கு எங்க போவறது"ன்னு ரவி கேக்கறாரு.

"அத்தப் பத்தி ஒனக்கு இன்னா கவலை? அதுக்கெல்லாம் ஆளு ரெடியா இருக்கு! நீ போயி கொஞ்சம் துட்டு சேத்துகினு வா"ன்னு வெட்டியான் சொல்லிடறாரு!

அவ்ளோதான்! கதிரவன் தன் கிரணங்களை எல்லத் திசைக்குமா விரிக்கிறாரு! அவன் அவன், நா, நீன்னு போட்டி போட்டுகினு துட்டு அனுப்பறான்!
இவரு அல்லாத்தையும் கலெக்ட் பண்ணி, வெட்டியான் கையாண்டை கொடுக்கறாரு!

விஷயத்தைக் கேள்விப்பட்ட பாலாஜி, வெட்டித்தனமா இப்பிடி இருந்துட்டேனே! நான்ல மொதல்ல இத்த செஞ்சிருக்கணும்னு அவரு ஒரு ஏரியாவை எடுத்துக்கறாரு!

இன்னொரு பக்கம், "தங்கமா" கொட்டுது!

இப்பிடியே ரொம்ப சீக்கிரமா துட்டு சேர்ந்து போச்சு!

கடைசி நிமிஷத்துல நம்ம ராமர் ஓடியாராரு! "ராமாயணத்துல நான் பாலம் கட்டுபோது அணில் ஒண்ணு கடைசில வந்து ஹெல்ப் பண்ணின மாரி, இப்ப இதுக்கு நானும் கொஞ்சம் துட்டு தரேன்! அத்தையும் சேர்த்துக்கோங்க"ன்னு கெஞ்சறாரு! சரின்னு அத்தயும் வாங்கிப் போட்டுகினாரு ரவி!

மத்தியானம் ஆயிப் போச்சு! ரவி இப்ப செந்தழலா வீசறாரு!
"கண்ணு இருக்குனீங்களே; எங்கே இருக்கு?"ன்னு கோவமா கேக்கறாரு சிவனைப் பார்த்து!
"அவசரப்படாதே தம்பி! இந்த வேகம்தான வேணான்றேன்! வா என்னோட!"ன்னு நேரா அவரையும் இட்டுக்கினு கலைமகளாண்டை போறாரு!

"உன்கிட்ட படிப்பு இருக்கு! நீ வெவரம் தெரிஞ்சவ! இந்தா துட்டு! இத்த வெச்சுகிட்டு ஒன்னோட ஒரு கண்ணை நீ மஹாலக்ஷ்மிக்கு இப்பவே கொடுக்கணும்! மாமியாருக்கா என் கண்ணைக் கொடுக்கறதுன்னுல்லாம் யோசிக்கக்கூடாது!"னு ஸ்ட்ராங்கா சொல்றாரு!

"என் மாமியாருக்கு கொடுக்க எனக்கென்ன கசக்குமா? அதுலியும் துட்டு வேற தர்றீங்க! தாராளமா தர்றேன்!" சொல்லிடறாங்க!

அப்பால என்ன?

மகாலக்ஷ்மிக்கு கல்விக்கண்ணு கிடைச்சிடுது!
அல்லாரும் ரவியைப் பாராட்டறாங்க!

தை பொறந்தா வழி பொறக்கும்னு சொல்லுவாங்க!
ஆனா, தை பொறக்கறதுக்கு முன்னாடியே, இப்படி ஒரு நல்ல காரியத்தை செஞ்ச அல்லாருக்கும் நான் நெறைய செல்வத்தைக் கொடுப்பேன்னு மகாலக்ஷ்மியும் வாக்கு கொடுக்கறாங்க!

கதையும் சுபமா முடிஞ்சிது!

இந்த பதிவினை அனுப்பிய SK அவர்களுக்கும், கல்விக்காக முயற்சி எடுத்த செந்தழல் ரவிக்கும் அவருக்கு உறுதுணையாக இருந்த அனைத்துப் பெருமக்களுக்கும் சங்கத்தின் ராயல் சல்யூட் !!!!!

21 comments:

Anonymous said...

தனிப்பட்ட முறையில் இன்னுமொரு நன்றி ஞானவெட்டியான் & செந்தழல் ரவி.

அருமையான பதிவுக்கு ஐயா SK'வுக்கு நன்றிகள் பல...

Anonymous said...

நன்கொடையில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டு விதமாக அருமையான நடையில் எழுதி இருக்கிறார் எஸ்கே.

அனைவருக்கும் பாராட்டுக்கள்.

Anonymous said...

அட, இப்படி கூட எழுதமுடியுமா ? தூள் !!!! நன்றி நன்றி நன்றி !!! ( விஜய் டிவி கலக்கப்போவது சாம்பியன்ஸ் நிகழ்ச்சி மாதிரி மூனு நன்றி )

Anonymous said...

அட!!!!!!!!

கலக்கலா இருக்கே!

Anonymous said...

எப்படியெல்லாம் யோசிக்கிறீங்கப்பா! :-D

Anonymous said...

எப்படியெல்லாம் யோசிக்கிறீங்கப்பா!

ரிப்பீட்டு.

பகலவன் உள்ளே வர்ற வரைக்கும் என்னடா மன்னாரு ஒரு மாதிரியாத் தான் போறாருன்னு படிச்சிக்கிட்டே வந்தேன். ரவி பேரைப் பாத்தவுடனே மகாலக்ஷ்மி - ரவி - ஆகான்னு புரியத் தொடங்கியாச்சு. அருமை எஸ்.கே.

Anonymous said...

ஏம்பா என்னமோ வாலிபர் சங்கமுன்னு சொன்னீங்க. அப்பாலிகா இவரை எல்லாம் சேத்துக்கறீங்க.

என்னாது, என்னைக் கூடத்தான் சேத்துக்கிட்டீங்களா? எனக்கும் அவருக்கும் ஒரே வயசுன்னு நினைக்கிறீங்களா? சரி சரி. இந்த டாபிக் வேண்டாம். விட்டுருவோம். :D

ஆனா ஒண்ணு. அந்த மன்னாரை நல்ல பிடிச்சி வெச்சுக்கிட்டாரு. நல்லா சோக்கா அவன் சொல்லறதை எல்லாம் எழுதி இவரு பேரு வாங்கிக்கறாரு. இல்லைன்னா கவுஜ எழுத ஆரம்பிச்சுடறாரு. இவரோட சேர்ந்து மன்னாரும் கவுஜ எழுதாம இருந்தா சரி.

நல்ல மனசோட குடுத்தவங்களுக்கு இது ஒரு அருமையான பாராட்டுதான். நல்லா இருக்கு தலைவா. இதுக்காகவே இவரையும் அட்லாஸ் வாலிபரா (?!) போட ரெகமண்டு பண்ணறேன்! (யான் பெற்ற கொடுமை பெறுக இவரும். ஹிஹி)

என்னடா இது கதையைப் பத்தி ஒண்ணும் சொல்லலையேன்னு பாக்கறீங்களா? அதைத்தான் எல்லாரும் சொல்லறாங்களே. அது மட்டுமில்லாம சங்கத்துக்கு வரும்போது கலாய்க்காம எப்ப கலாய்க்கறது. அதான் இப்படி காற்றுள்ள போதே....

Anonymous said...

//நான்ல மொதல்ல இத்த செஞ்சிருக்கணும்னு அவரு ஒரு ஏரியாவை எடுத்துக்கறாரு!//
இன்னொரு ஏரியாவை மொத்தமா கவர் பண்ணி பெரிய அளவு உதவி செய்த டாக்டரைச் சொல்லாமயே விட்டுட்டியே மன்னாரு :)

Anonymous said...

சங்கத்தின் சார்பாக நம்ம செந்தழல் ரவியின் முயற்சிகளையும் அவருக்கு உதவியாக இருந்து செயல்பட்ட பதிவர் ஐயா ஞானவெட்டியான் அவர்களையும், இந்த நல்ல செயலில் உறுதுணையாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களையும் மனமாரப் பாராட்டி வாழ்த்துகிறோம்.

சங்கம் பாணியில் இப்படி ஒரு சக்கப் பதிவிட்டு இந்த நற்செயலைக் கொண்டாடிய அன்பிற்குரிய எஸ்.கே சாருக்கு ஸ்பெஷ்ல் தேங்க்ஸ்

Anonymous said...

//இவரையும் அட்லாஸ் வாலிபரா (?!) போட ரெகமண்டு பண்ணறேன்! (யான் பெற்ற கொடுமை பெறுக இவரும். ஹிஹி)//


கொத்ஸ் கிடைச்ச கேப்ல்ல டாக்டருக்கே ஊசிப் போட்டுட்டீங்க...

உங்க ரெகமண்டேஷன் நிச்சயமா நிறைவேறும் கொத்ஸ் சோ இப்போவே ஊசிக்கெல்லாம் ஆர்டர் கொடுத்து ரெடியாயிடுங்க.... :)

Anonymous said...

//கொத்ஸ் சோ இப்போவே ஊசிக்கெல்லாம் ஆர்டர் கொடுத்து ரெடியாயிடுங்க.... :)//

ஏம்பா, உங்க சங்கத்துல அரசியல் பேசக்கூடாதுன்னு ரூல் இல்ல?!!! :)))

Anonymous said...

நான் சொல்ல வேண்டிய நன்றியை நீங்கள் சொன்னால் எப்படி ராம்!

என் அலுவலகத்தில் இருந்து குறித்த நேரத்தில் இப்பதிவை இட முடியாது போன போது, எனக்காக நீங்கள் தாங்கிய இச்சிலுவையை நான் எந்நாளும் மறவேன்!

மிக்க நன்றி,, ராம்!

Anonymous said...

சரியாக்கச் சொல்லியிருக்கிறீர்கள், கோவியாரே!

நன்கொடைஇயில் "ஈடுபட்ட" அனைவரையும் பாராட்டுவதே இப்பதிவின் நோக்கம்!

நன்றி!

Anonymous said...

இப்படிக்கூட ச்ச்ய்ய முடியுமா என அனைவரும் வியக்கும் வண்ணம் செய்து விட்டு, இப்படி என்னைப் பாராட்டுவது,
உங்கள் பெரிய மனமே ரவி!

Anonymous said...

கலக்கலே ருசி, 'தம்பி'!
நன்றி!

Anonymous said...

அப்படி எல்லாம் யோசிக்க வைக்கிறாங்களே, சேதுக்கரசி!

என்ன பண்றது??

அவங்களைச் சொல்லுங்க!

:)

Anonymous said...

குமரனே வந்து பாராட்டின்னாஅ, இதுல பெருசா இருக்கூன்னு அர்த்தம்!....மன்னிக்கவும்...பொருள்!

காலரைத் தூக்கி வீட்டுக்கோங்க, வ.வா.ச.!!

Anonymous said...

நம்ம வயசைப் பத்தி பேச வேணாம்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன், கொத்ஸ்!

உங்களை வ..வா. ச. வாலிபராக் கூப்பிட்டாங்க!
என்னை ஒரே ஒரு பட்திவுக்கு மட்டும்!

இதுலியே புரியலையா நம்ம வயசு?

இதுல என்னை ரெக்கமண்ட் வேற பண்ணி!

வர வர, உங்க விஷமத்தனத்துக்கு ஒரு அளவே இல்லாம போயிட்டிருக்கு!

வூட்ல சொல்லி வைக்கட்டுமா?

:)

Anonymous said...

இந்தப் பதிவு சுத்தமா தேர் ஓட பண்ணினவங்களைப் பத்தி மட்டுமே பொன்ஸ்!
தேர் இழுக்க வந்தவங்களைப் பத்தீ இல்லை!

உங்களுக்கு மட்டும் ஒண்ணு சொல்லிக்க்கறேன்!!

இதுல எழுதிட்டு, அப்புறம் நீக்கின ஒரு வரி, உங்களுக்கு மட்டும்!

"லக்ஷ்மிக்கு கண் கொடுக்கணும்னு வெட்டியான் போய் வெரிஃபை பண்ணிட்டு வந்து சொன்னதும்,தலைக்கு மேல உக்காந்திருந்த சந்திரன், " கண்ணு சரியில்லைன்னா கண்ணாடி போட வேண்டியதுதானே! எதுக்கு கண்ணே கொடுக்கணும் "னு ஒரு ஆலோசனை சொல்லுது!



'தோ! நான் போய் நேருல பார்த்துட்டு வந்து சொல்றேன். கண்ணாடி வேணுமா ; கண்ணு வேணுமான்றது எனக்குத் தெரியும். நீ சும்மா இரு' என அன்பா சொல்லிட்டு வெட்டியான் சூரியனை 'நீ போய் துட்டு சேர்த்துகிட்டு வா 'ன்னு அனுப்பறாரு!"

:)

Anonymous said...

தேவே வந்து நன்றி சொல்லிட்டாரு!

சங்கமே வந்து சொன்ன மாதிரி இருக்கு!

அதுக்காஅக, மத்தவங்கள்லாம் வராம இருந்துராதீங்கப்பா!

Anonymous said...

அதானே! ஏன் அரசியல் பேசறாங்க!

நான் வரலைப்பா இந்த விளையாட்டுக்கு!!

:)