Monday, January 8, 2007

ASL PLS? - Part 2

தோழர் விஜய் ஒரு மிகச்சிறந்த கம்யூனிஸ்ட். பார்க்கும் பிகர்களை எல்லாம் தன்னுடைய பிகராக நினைக்கும் மிகச்சிறந்த பொதுவுடைமைவாதி. நண்பர்களின் பிகர்களை மட்டும் சிஸ்டராக நினைக்கும் நற்குணமும் அவருக்குண்டு. முந்தையப் பதிவொன்றில் நான் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் என்னுடன் பணியாற்றிய சகப்பணியாளர். வாயைத் திறந்தாலே பச்சை நிறத்தில் Aய்த்தனமாக பேசக்கூடிய அசுரப் பேச்சாளர். அவருக்கு அப்போது 35 வயதிருக்கலாம். காதல் திருமணம் செய்து அதன் விளைவாக அழகான ஒரு மகளை ஈன்றெடுத்திருந்தார்.

என்னைப் போன்ற இளைஞர்கள் எப்போதும் "சாட், சாட்" என்று உயிரை விட்டுக் கொண்டிருந்ததை கண்ட நண்பருக்கும் இயல்பாகவே சாட்டிங் மீது பிடிப்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் அவருக்கு சாட்டிங்கில் மாட்டியவர்கள் நிறையப் பேர் அமெரிக்க பிகர்கள். வெள்ளைத் தோல் மீது பிறப்பிலேயே அவருக்கு ஈர்ப்பு அதிகமாக இருந்தது. இருப்பினும் கொஞ்ச நாள் சாட் செய்ததுமே நண்பர் கேட்கும் ஒரு கோரிக்கையை (அது ஒரு மோசமான ஆங்கில நாலெழுத்து கோரிக்கை) கண்டு காரித்துப்பி அனுப்பி விடுவார்கள் வெள்ளைக்கார பிகர்கள்.

இதனால் நண்பரின் பார்வை இந்தியப் பிகர்கள் மீது திரும்பியது. ஆனாலும் மாட்டணுமே?

ஒரு நாள் தோழர் விஜய் மிகுந்த மகிழ்ச்சியோடு காணப்பட்டார். என்ன மேட்டர்? என்று வினவினேன். நண்பரை நாங்கள் மாமி என்று விளிப்பது வழக்கம். காரணம் பச்சைத் தெலுங்குக்காரரான அவர் எங்களையெல்லாம் "மாமே" என்று விளிப்பதற்குப் பதிலாக "மாமி" என்று விளிப்பார். அவருடைய தமிழ் Accent அவ்வளவு அருமையாக இருக்கும். கூர்க்கா மாதிரியான தோற்றம் கொண்ட அவர் பேசுவது சேட்டுக்கடை சேட்டு பேசுவது மாதிரியாக இருக்கும்.

"கிச்சா ஒரு பிகர் மாட்டிக்கிச்சி"

"இன்னா சொல்றே மாமீ. இந்த ஏஜுக்கு இதெல்லாம் ஓவரா தெரியலை"

"இன்னாடா ஒனக்கு மட்டும் மாட்டிக்கிட்டா ......................... இருப்பியா?" (.......... ஒரு மோசமான தமிழ் வார்த்தை. நாகரிகம் கருதி சென்ஸார் செய்திருக்கிறேன்)

"ஒன் இஷ்டம் மாமீ. ஆனாலும் ஒனக்கு கொழந்தை, குட்டின்னு இருக்கு. பாத்துக்கோ"

நம் ஆலோசனையை எல்லாம் கேட்கும் நிலையில் இல்லை மாமி. ரொம்பவும் முத்திவிட்டிருந்தது. அவள் பெயர் நந்தினியாம். வயது பத்தொன்பதாம். சாட்டிங்கில் பசங்களை மடக்கும் பிகர்கள் எல்லோருக்குமே பத்தொன்பது வயதாக இருப்பது ஒரு ஆச்சரியகரமான Coincidence. சென்னையின் நுழைவாயிலில் இருக்கும் ஒரு பெண்கள் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாளாம்.

"ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை" எனும் பழமொழிக்கேற்ப மாமி தினமும் 4 மணிநேரமாவது நந்தினியுடன் சாட்டிங்கில் ஈடுபட்டார். அவருக்கு கொஞ்சம் நஞ்சம் மீதியிருந்த வெள்ளைக்காரிகளை "அம்போ"வென விட்டார். என் மீது பரிதாபம் கொண்டு சில வெள்ளைக்காரிகளின் மின்னஞ்சல் முகவரிகளை கொடுத்து "நீ சாட்டிங் பண்ணிக்கோ" என்று பெருந்தன்மை காட்டினார்.

ஒரு நாள் அவள் நாங்கள் வேலை செய்த அலுவலகத்துக்கு கீழிருந்த நகைக்கடைக்கு வருவதாகச் சொன்னாள். நேரில் சந்திக்க விருப்பமா என்றும் கேட்டிருந்தாள். மாமி ரொம்பவும் பரபரப்பாகி விட்டார். அன்று அவருக்கு முக்கியமான வேலை இருந்தது. அவரது மனைவி கருவுற்றிருந்தார். கன்சல்டேஷனுக்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்தது. எனவே நந்தினியைச் சந்திக்க இயலாத சூழ்நிலை. எனவே என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தார். "பச்சைத் தாவணியில் அவள் அக்காவுடன் வருவாள். எப்படி இருக்கிறாள் என்று மட்டும் பார்த்து வைத்துக் கொள். அவள் என்னவெல்லாம் செய்கிறாள் என்று நோட் செய்து வைத்துக் கொள். மறுநாள் சாட்டிங்கில் அவளை நானே மறைந்திருந்து பார்த்தது மாதிரி காட்டிக் கொள்கிறேன்" என்றார். நானும் பெரிய மனது வைத்து நண்பருக்காகச் சம்மதித்தேன்.

அன்றிரவு மாமியைக் கைப்பேசியில் அழைத்து நந்தினியின் உடல்வாகு, அவள் பேசும் ஸ்டைல், அவளது அக்கா குண்டாக இருந்தது. அவர்கள் வாங்கிய நகை போன்ற விவரங்களை கொடுத்தேன். நான் செய்த உதவிக்கு ரொம்பவும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக தழுதழுத்துச் சொன்னார் மாமி.

சில நாட்கள் சென்றது. மாமியின் போக்கில் நிறைய மாற்றம் ஏற்பட்டது. லேசாக முன்மண்டையில் விழுந்த வழுக்கையை மறைக்கும் விதத்தில் தலைவாரினார். சைடில் இருந்த நரைமுடியை மறைக்க "டை" அடிக்க ஆரம்பித்தார். டைட்டாக "டக்-இன்" செய்ய ஆரம்பித்தார். தொப்பை தெரியாதாம்.

ஒரு நாள் சாட்டிங் செய்துக் கொண்டிருந்தபோது "நாகேஸ்வரராவ் பார்க்கில் சந்திக்க விருப்பமா?" என்று நந்தினியிடம் கேட்டிருக்கிறார். "நந்தினியோ பார்க்குக்கு எல்லாம் வரமுடியாது. கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெள்ளி மாலை 6 மணிக்கு வருகிறேன். சந்திக்கலாம்" என்று கூறியிருக்கிறாள். அந்தவார வெள்ளிக்காக மாமி தவம் இருக்க ஆரம்பித்தார்.

மாமி எதிர்பார்த்த அந்த வெள்ளியும் வந்தது. மாலை 5 மணிக்கே பரபரப்பாகி விட்டார் மாமி. "கிச்சா கொஞ்சம் பேர் அண்டு லவ்லியும், பவுடரும் கொடு" என்று என்னிடம் கேட்டார். என் பையில் இம்மீடியேட் பர்சனாலிட்டி அப்டேட்டுக்காக பர்மணெண்டாக பேர் அண்டு லவ்லியும், முகப்பவுடரும் வேறு சில இத்யாதிகளும் இருக்கும். அவருக்கு அவற்றைக் கொடுத்தேன். புல் மேக்கப்பில் மாமி கபாலீஸ்வரர் கோயிலுக்கு சென்றார்.

சுமார் 2 மணிநேரம் கழித்து வந்தவர் கொஞ்சம் சோர்வாக காணப்பட்டார். "என்ன மாமி ஆச்சி?" என்றேன்.

"அவளைப் பார்த்தேன். ஆனாப் பேசலை"

"ஏன்?"

"என்னைப் பாத்ததுமே அவ வயசைத் தெரிஞ்சிக்கிட்டான்னா, அதுக்கப்புறம் என் கூட சாட் பண்ண மாட்டாளே? என்னாலே அதைத் தாங்கிக்க முடியாது"

"அவ எப்படியிருந்தா?"

"ரோஸ் கலர் சுடிதார் போட்டிருந்தா. அடிக்கடி என்னை சந்தேகமா ஓரக்கண்ணுல பாத்துக்கிட்டிருந்தா. ஆனா அவளுக்கு நான் தான் விஜய்னு தெரியாதில்லே. அதனாலே என் கூட அவப் பேசலை?"

இவ்வாறாக மாமியின் வாழ்க்கையில் தொடர்ந்து வசந்தம் வீசிக் கொண்டிருந்தது.

ஒருநாள் இரவு 8 மணிக்கு மாமி சாட்டிங் செய்துக் கொண்டிருக்கிறார்.

"ஹாய் நந்தினி. சினிமாவுக்கு போகலாமா?" - மாமி.

"போலாமே. சத்யம்ல டிக்கெட் புக் பண்ணிடுங்க டியர்." - என்று விடையளித்தேன் நந்தினி கிருஷ்ணாவாக மாமியுடன் ஒரு மாதக் காலமாக சாட்டிங் செய்துக் கொண்டிருந்த நான்.

10 comments:

Anonymous said...

இது சொந்த அனுபவமா. நகைச்சுவைக் கதையா லக்கி?

Anonymous said...

கொடுமை....கொடுமைன்னு கோயிலுக்கு போனா, அங்கே ரெண்டு கொடுமை #$%#$% ஆடுச்சாம்...

Anonymous said...

அடபாவமே... ஆம்பிள்ளைக்கு அம்பிள்ளைதான் எதிரி போலே..... :)

Anonymous said...

இந்த மகத்தான வேலையை நீங்களும் செஞ்சு இருக்கீங்களா? :))))

Anonymous said...

//இது சொந்த அனுபவமா. நகைச்சுவைக் கதையா லக்கி?//

சொல்ல வெக்கமா தானிருக்கு. இம்மாத அட்லஸ் வாலிபர் அவரது அனுபவங்களை மட்டுமே எழுதுவதாக தீர்மானித்திருக்கிறார் :-))))

Anonymous said...

இவ்ளோ பட்டாசா நான் குமுதத்தில்/ஆ.வியில்/குங்குமத்தில் கூட படிக்கலை !

Anonymous said...

:-))))

Anonymous said...

கொல கொடும!

Anonymous said...

உங்க நண்பரை இப்படிக் கவுத்த உங்களைக் கவுக்க இன்னொரு ஆண்மகன் வராமலா போயிடுவார் ;-)

Anonymous said...

அதெல்லாம் சரி...அதென்ன ASL PLS? அதையும் சொல்லுங்க.