Saturday, January 27, 2007

சங்கத்த இழுத்து மூடியாச்சு

சுட்டிப்பையன்: சார்,என் தலை'ல எறும்பு ஏறுது பாருங்க..!

வாத்தியார்:அதை எடுத்து போடாம, ஏண்டா என்கிட்ட சொல்ற?

சுட்டிப்பையன்:
நீங்க தானே சார் சொன்னீங்க,! என் தலை'ல ஒன்னுமே ஏறலனு ?

Student 1: நம்ம டீச்சர்க்கு என்ன ஆச்சு?

Student 2: ஏன்டா??

Student 1: இப்ப தானே போர்ட்'ல திருக்குறள் ' அவுங்களே எழுதிட்டு, திருக்குறள எழுதினது யாருன்ன்"னு கேக்குறாரே?


டீச்சர்: படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு 6 மணிநேரம் தூங்கினாபோதும் .

சுட்டிப்பையன்: ஸ்கூல்லையா?? வீட்லையா சார்??டீச்சர்:(1) ஒரு தவளை இருக்கு,
(2) கப்பல்ஒன்னு மூழ்கிகிட்டு இருக்கு,
(3) உருளைகிழங்குவிலை ரூ 3 ஒருகில்லோ . அப்ப எனக்கு வயசு என்ன??

சுட்டிப்பையன்: 32 இருக்கும் சார்.

வாத்தியார்:உனக்கு எப்படி தெரியும் ?

சுட்டிப்பையன்: அதுவா சார்..!, என் தங்கைகு வயசு16, அவ ஒரு அரை-லூசு, அதவச்சி தான் சொன்னேன்.


நோயாளி: டாக்டர்..!எனக்கு தினமும் 16 மணி நேரம் தூக்கம் வருது..!அதுக்கு அலுப்புதானே காரணம்..?

டாக்டர் :அதுக்கு காரணம்அலுப்பு இல்ல..!" கொழுப்பு"..டாக்டர் : முதல்ல, நீங்க மீன், நண்டு, கோழி சாப்பிடுறதெல்லாம் உடனடியா நிறுத்தியாகனும்..!!

நோயாளி : டாக்டர்..!! இது என்னங்க அநியாயம்..! அதுங்க சாப்பிடுறத போய் நான் எப்படி நிறுத்தமுடியும்??!டாக்டர்: காதுல பல்லி போகுறவரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்தீங்க?

நோயாளி : மொதல்ல கரப்பான்பூச்சி தான் டாக்டர் போச்சி. அத புடிக்க தான் போகுதுனு நினைச்சேன்..!மனைவியிடமும் காதலியிடமும் மறைக்க வேண்டியவை எவை?

மனைவியிடம் காதலியையும்,
காதலியிடம் மனைவியையும் மறைக்க வேன்டும்..கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார். நம் 'குடி'மக்களை பார்த்து அவருக்கு பொறாமை வந்துருச்சு. அப்படி என்னதான் இருக்கு இந்த TASMAC கடைக்குள்ள அப்படின்னு தெரிஞ்சிக்க உள்ளே போய் 5 பீர் அடிச்சாரு. ஒரு மப்பும் ஏறல. அப்புறமா, 2 FULL.. அப்பையும் ஒன்னும் ஆவல..

மறுபடியும் 2 BEER, 3 பிராந்தி

கடைகாரர்க்கு ஆச்சர்யம்,

"யார்யா நீ??
இவ்வளவு சாப்பிட்டும் உனக்கு போதை ஏறல?

அதுக்கு நம்ம கடவுள் " நான்தான் கடவுள் எனக்கு இந்த போதை ஒன்னும் பண்ணாது'ன்னாரு

கடைக்காரருக்கு இப்போதான் திருப்தி வந்துச்சு
"தொரைக்கு இப்பதான் ஏற அரம்பிச்சி இருக்கு ..! நடக்கட்டும்..! நடக்கட்டும்..!"

21 comments:

SP.VR.சுப்பையா said...

வாத்தியார்: "என்னப்பா தலைப்பை இப்படிப்போட்டிருக்கிறீங்க?
பதறிப்போய் உள்ள வந்தேன் தெரியுமா?"

சுட்டிப்பையன்: "சார் நீங்கதான சொல்லிக்கொடுத்தீங்க' தலைப்பை
நன்றாகப் போடு - தானாக வருவார்களென்று
அதுதான் அப்படிப்போட்டேன். கைப்புள்ளயைக் கலாய்க்கத்தான்
முடியல - பதறவாவது வைப்போம்னுதான் அப்படித்தலைப்பு111

Hariharan # 26491540 said...

:-))) :-)))

தலைப்பு ஏன் இப்படி??

ILA(a)இளா said...

பதிவ மட்டும் காமெடியாப் போட்டுட்டு, தலைப்பை சீரிஸா வெச்சா நல்லாவா இருக்கும். அதுக்குதான் சிரிப்பு பதிவுக்கு சிரிப்புதலைப்பு.

கோவி.கண்ணன் [GK] said...

அனைத்து சிரிப்பு துனுக்குகளும்
சூப்பர் :))))))))

தம்பி said...

அடப்பாவி அப்ரசண்டிகளா!'

தலைப்ப இப்படியா வெக்கிறது

சிறில் அலெக்ஸ் said...

கலக்கல்ஸ்.. தொடருங்க.

:)

யோசிப்பவர் said...

நானும் தலைப்பை பார்த்துதான் பதறிப் போய் வந்தேன். என்ன இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியலையா? இதென்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு;)


கடைசி காமெடி கலக்கலா இருந்துச்சு.(ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?!);)

Hariharan # 26491540 said...

//தலைப்பை சீரிஸா வெச்சா நல்லாவா இருக்கும். அதுக்குதான் சிரிப்பு பதிவுக்கு சிரிப்புதலைப்பு. //

சிரிப்பான தலைப்பா?

எல்லையில்லா வாலிபத்தினால் வருத்தப்படாது இருப்போர் கலாய்க்கும்,
இணையத்தில் (கிளம்பும்) சூட்டைத் தணிக்க என்று வலைப்பூக்களில் இருக்கும் ஒண்ணு ரெண்டையும் மூடிட்டா நாள் பூராவும் பதிவுகளில் "வந்தேறி வெங்காய பார்ப்பனீய பெண்ணீய ஆண்பித்தளை பேரீச்சம்பழ வர்த்தக, தரகு முதலாளித்துவ, பின்நவீனத்துவ இயக்கவியல்" படிச்சே வாலிபத்தின் எல்லையில் இருப்போர், வருத்தப்படும் வாலிபர்களாக ஆகிடுவாங்களேன்னு டென்சனை ஏற்படுத்தும் தலைப்பு :-))

ILA(a)இளா said...

சங்கம் எந்த ஒரு தனிப்பட்ட மனிதரையோ.. குழுவினையோ கலாய்க்க ஆரம்பிக்கப்பட்டதல்ல.. எல்லோரையும் சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது.. இன்றளவும் அதே கருத்துக் கொண்டு இயங்கி வருகிறது.


தொடர்ந்து மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம்...

இந்த நோக்கம் நிறைவேற தங்கள் மேலான ஆலோசனைகளையும் நீங்கள் தாராளமாய் சங்கத்துச் சிங்கங்களுக்கு வழங்கலாம்...

பீட்டா பிரச்சினையால் சிலகாலம் இந்தப்பதிவில் எங்களால் பதிவிட முடியாமல் இருந்தது. இருப்பினும் வேறொரு பதிவில் வ.வா.சங்கம் ஓடிகொண்டேதான் இருந்தது.

ஓரிரு நாட்கள் முன் தான் எங்களால் பழைய பதிவுகளை மீட்க முடிந்தது. அந்த உற்சாகத்தில் இந்த அதிர்ச்சி தலைப்பு

ILA(a)இளா said...

சங்கம் என்பது வ.வா.சங்கம், தமிழ்ச்சங்கம், கதைச்சங்கம் என்று மூன்று வகையாக மூன்று வகையான மக்களால் நடத்தப்படுகிறது.

நாமக்கல் சிபி said...

//கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார். நம் 'குடி'மக்களை பார்த்து அவருக்கு பொறாமை வந்துருச்சு. அப்படி என்னதான் இருக்கு இந்த TASMAC கடைக்குள்ள அப்படின்னு தெரிஞ்சிக்க உள்ளே போய் 5 பீர் அடிச்சாரு. ஒரு மப்பும் ஏறல. அப்புறமா, 2 FULL.. அப்பையும் ஒன்னும் ஆவல..

மறுபடியும் 2 BEER, 3 பிராந்தி

கடைகாரர்க்கு ஆச்சர்யம்,

"யார்யா நீ??
இவ்வளவு சாப்பிட்டும் உனக்கு போதை ஏறல?

அதுக்கு நம்ம கடவுள் " நான்தான் கடவுள் எனக்கு இந்த போதை ஒன்னும் பண்ணாது'ன்னாரு

கடைக்காரருக்கு இப்போதான் திருப்தி வந்துச்சு "தொரைக்கு இப்பதான் ஏற அரம்பிச்சி இருக்கு ..! நடக்கட்டும்..! நடக்கட்டும்..!" //

:)))


கடை எப்ப சார் தொறப்பீங்க?

k4karthik said...

//தொரைக்கு இப்பதான் ஏற அரம்பிச்சி இருக்கு ..! நடக்கட்டும்..! நடக்கட்டும்..!"//

:-)) ஒரே சிரிப்பு தான் போங்க...

Udhayakumar said...

//கடைக்காரருக்கு இப்போதான் திருப்தி வந்துச்சு "தொரைக்கு இப்பதான் ஏற அரம்பிச்சி இருக்கு ..! நடக்கட்டும்..! நடக்கட்டும்..!" //

ROFTL....

ஜி said...

இந்த துணுக்குகளையெல்லாம் கொஞ்ச நாள் முன்னாடிதான் ஏதோ ஒரு பதிவுல படிச்சேன்... இருந்தாலும் எப்ப படிச்சாலும் சிரிக்க வைக்கும் காமெடித்தான்...

ஜி said...

சங்கத்த யார் மூடுனது? கட்டதொரையா?

கட்டதொரைக்கு கட்டஞ் சரியில்லைன்னு நெனக்கிறேன்...

தொறடா கதவ...
எடுடா வண்டிய...

-- கைப்பு...

சேதுக்கரசி said...

சும்மா சொல்லக்கூடாது.. எறும்பு படம் ரொம்ம்ம்ம்ப அழகு. (ஆங்! சொல்லமறந்துட்டேனே.. துணுக்குகள் நல்லா இருக்கு)

கட்டதுரை said...

//சங்கத்த யார் மூடுனது? கட்டதொரையா?

கட்டதொரைக்கு கட்டஞ் சரியில்லைன்னு நெனக்கிறேன்...

தொறடா கதவ...
எடுடா வண்டிய...

-- கைப்பு...
//

ஏண்டாப்பா!
நான்தான் வெறுத்துப் போயி பிளாக்கே வேண்டாம்னு சொல்லிட்டுப் போனேனே! இன்னமும் ஏன்யா என்னை பதிவுலகத்துக்கு இழுக்குறீங்க?

ILA(a)இளா said...

//ஏண்டாப்பா!
நான்தான் வெறுத்துப் போயி பிளாக்கே வேண்டாம்னு சொல்லிட்டுப் போனேனே! இன்னமும் ஏன்யா என்னை பதிவுலகத்துக்கு இழுக்குறீங்க? //
heheheheh

Syam said...

எல்லாமே சூப்பர்...

//"தொரைக்கு இப்பதான் ஏற அரம்பிச்சி இருக்கு ..! நடக்கட்டும்..! நடக்கட்டும்..!" //

இது டாப் டக்கர் :-)

Syam said...

//இன்னமும் ஏன்யா என்னை பதிவுலகத்துக்கு இழுக்குறீங்க? //

@கட்டதொரை,

சும்மா இப்படி டயலாக் விடாம..தெகிரியம் இருத்தா எங்க தல மேல கைய வெச்சு பாருங்க... :-)

ILA(a)இளா said...

//ஏண்டாப்பா!
நான்தான் வெறுத்துப் போயி பிளாக்கே வேண்டாம்னு சொல்லிட்டுப் போனேனே!//
கைப்புவுக்கு பயந்து பதிவுலகத்தை வுட்டு ஓடிப்போயிட்டேன்னு சொல்லு. அப்பதான் எங்க தலைக்கு கெளரவமா இருக்கும். ஆமா