Friday, January 26, 2007

மகா ஆப்பு போட்டிக்கு வாங்க...வாங்க...

ஓலக வரலாற்றில் முதன் முறையாக தனி ஒரு மனிதனைக் கலாய்க்க உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு...

வாங்க மக்களே அலுவலக டென்ஷன்... லவ்ஸ் டென்சன்... வாழக்கை டென்சன் இன்னும் இதர பிற டென்சன் எல்லாத்தையும் கொஞ்சம் ஓரம் கட்டி வச்சிட்டு களத்துல்ல ரவுண்ட் கட்ட வாங்க...

டிசைன் டிசைனா ஆப்பு ரெடி பண்ணுங்க...லோட் லோடாக் கொண்டு வந்து இறக்குங்க...

இம்போர்ட் எக்ஸ்போர்ட் எது வேணுமோப் பண்ணுங்க...

குரூப்பா வாங்க!!!
தனியா வாங்க!!!
ஜோடியா வாங்க!!!

ஆனாக் கண்டிப்பா கையிலே ஆப்பு மட்டும் இருக்கணும்... அப்போத் தான் அலவுட் சொல்லிப்புட்டோம்...

'தல' ஓலகமெல்லாம் சுத்தி சும்மா ஜல்லிக் கட்டுல்ல இருந்து தெறிச்சு வந்த காளை மாதிரி இந்தா நிக்குறார் பாருங்க...உங்களுக்காகவே நம்மத் தல ஒரு மாபெரும் போட்டியை அறிவிச்சுருக்கார்...

ஆமாங்க தலக்கு ஆப்பு வைக்கிற போட்டி...

ஒருத்தர் எத்தனை ஆப்பு வேணும்ன்னாலும் வைக்கலாம்..

சிறந்த ஆப்புக்கு பரிசுக் கட்டாயம் உண்டு....

விதி.. ஆப்புக்கள் சுத்தத் தமிழில் இருப்பது அவசியம்.

ரெடி ஜுட்டா

ம்ம் இன்னும் என்ன அமைதி தாரைத் தப்பட்டைகளைக் கிழித்துத் தொங்க விடுங்கள்.. கிளப்புங்கள் பட்டய...

31 comments:

தேவ் | Dev said...

சங்கம் சார்பாக அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் [GK] said...

//மகா ஆப்பு போட்டிக்கு வாங்க...வாங்க... //

மெகா ஆப்பு வைக்க உள்ளேன் ஐயா
பெரிய ஆப்பு
இங்கே இருக்கு !

காளையை அடக்கப் போன கைப்பு வாழ்க !
:)

தேவ் | Dev said...

முதல் ஆப்பு வச்ச கோவி.கண்ணனுக்கு சங்கத்தின் ஸ்பெஷல் சல்யூட்

ILA(a)இளா said...

"போர்வாள்"
முதல் கைப்புக்கு ஆப்பு வெக்கிறது இருக்கட்டும்.
"ஆப்பெல்லாம் அடுத்தவன் வெக்கிறது இல்லே, அது மேல நாம் உக்காந்து நாமே ஆப்பு வெச்சுக்கிறோம்" அப்படிங்கிறதுதான் வ.வா.சங்கத்தோட தத்துவம்.
இந்த விதியை எப்படி மீறலாம்?

நாமக்கல் சிபி said...

தண்டோரா பரிசுத் தொகை எவ்வளவு?

நாமக்கல் சிபி said...

சங்கத்து சிங்கங்களும் களத்துல குதிக்கலாமா?

Aani Pidunganum said...

ஆப்பு அலவு பொருத்து பரிசு கிடைகுமா?

Syam said...

ஆகா அருமையான போட்டி...ஆனா தலைக்கு தோப்பு இருந்தா கூட தட்டி விட்டுட்டு போய்டுவாரே...ஆப்பு எல்லாம் எம்மாத்திரம் :-)

ஜி said...
This comment has been removed by the author.
ஜி said...

ஆப்புகள்
ஆயிரம் இறங்கினாலும்
அகத்தோடு முகமும் மகிழ்வான் இந்த
அழுகாச்சித் தெரியாத
கருவாச்சிக் காவியன்...

புறமுதுகு காடுவேன்!!
பிழைத்தோட அல்ல..
பழிதீர்க்கும்
பாசக்காரர்களுக்கு
சலவைக் கல்லாய்...

தக்கச் சமயத்தில்
பாசறைந்தப்
போர்வாளே!!!
நீ போர் வாளல்ல
பீரங்கி....

தொடங்கட்டும் உன்
திருப்பணி...

அதிரட்டும்
ஆப்புகள்...

-- 23ம் கைப்புள்ள...

Aani Pidunganum said...

பரிசு தொகை எவ்வ்ளவுனு தெரியாது, இருப்பினும்
என்னுடைய ஆப்பு, இதொ :

Aanipidunganum

ஜி said...

என்னோட பழைய ஆப்பு.. மறுபடியும் தலைக்காக....

இலவசக்கொத்தனார் said...

நான் போட்ட பின்னூட்டம் எங்கய்யா?

தேவ் | Dev said...

//"போர்வாள்"
முதல் கைப்புக்கு ஆப்பு வெக்கிறது இருக்கட்டும்.
"ஆப்பெல்லாம் அடுத்தவன் வெக்கிறது இல்லே, அது மேல நாம் உக்காந்து நாமே ஆப்பு வெச்சுக்கிறோம்" அப்படிங்கிறதுதான் வ.வா.சங்கத்தோட தத்துவம்.
இந்த விதியை எப்படி மீறலாம்? //

வேளாண் தமிழா.. தீர்ப்புக்களே திருத்தி எழுதப் படும் போது விதிகளில் சிறு சிறு மாற்றங்கள் நடக்கட்டுமே... தமாஸ் தமாஸ் எல்லாமே தமாஸ்

தேவ் | Dev said...

/தண்டோரா பரிசுத் தொகை எவ்வளவு? /

ஆகா வீரத் தளபதியே தண்டோராகாரர் இந்தப் போடிக்கு ஸ்பான்சராப் பிடிச்சிட்டீங்களா?

பரிசுத் தொகைப் பத்தி தண்டோராவில்ல எதுவும் வந்து இருக்கா... விக்கித் தான் சொல்லணும்...

தேவ் | Dev said...

/சங்கத்து சிங்கங்களும் களத்துல குதிக்கலாமா?/

என்னக் கேள்வி இது? போட்டிக்கு யாரும் வராமல் ஈ ஓட்டுனா 'தல' தன்னைத் தானே கலாச்சு தனக்குத் தானே ஆப்படிக்கத் தயங்க மாட்டேன்னு சொல்லிகிடு இருக்கார்... நீங்க என்ன இப்படிக் கேக்குறீங்க.. ஸ்டார்ட் கலாயத்தல் திணை..

தேவ் | Dev said...

/ஆப்பு அலவு பொருத்து பரிசு கிடைகுமா? /


எந்த ஆப்புக்கு தல அதிகம் சவுண்ட் விடுறாரோ அந்த ஆப்புக்கே பரிசு கிடைக்க அதிகம் வாய்ப்பு...

தேவ் | Dev said...

/ஆகா அருமையான போட்டி...ஆனா தலைக்கு தோப்பு இருந்தா கூட தட்டி விட்டுட்டு போய்டுவாரே...ஆப்பு எல்லாம் எம்மாத்திரம் :-)
/

வாங்க ஸ்யாம்.. இப்படி எல்லாம் ஒதுங்கிரக் கூடாது... உங்கப் பங்குக்கு உங்க கடமையையும் நீங்கச் செஞ்சிட்டுத் தான் போகணும்...

தேவ் | Dev said...

//ஆப்புகள்
ஆயிரம் இறங்கினாலும்
அகத்தோடு முகமும் மகிழ்வான் இந்த
அழுகாச்சித் தெரியாத
கருவாச்சிக் காவியன்...//

இப்படித் தான் ஒருத்தன் தலக்கு கவிதப் பாடுறேன்னு சங்கம் பக்கம் வந்தான்.. இப்போ ராயலா ஆப்பை எடுத்து ராக்கெட்ல்ல வச்சு தல மூக்கைப் பாத்து விடுகிடு இருக்கான்.. இப்போ நீங்களுமா வாங்க... அந்தக் கருவாச்சி காப்பியன் நல்லா பீல் பண்ணி எழுதியிருக்கீங்க... பட் வெரி லைட் ஆப்பு அது..

தேவ் | Dev said...

//புறமுதுகு காடுவேன்!!
பிழைத்தோட அல்ல..
பழிதீர்க்கும்
பாசக்காரர்களுக்கு
சலவைக் கல்லாய்...//

ஆகா இது ஆப்புத் தான் ய்யா.. சலவைக் கல்லா.. என்னமா ஆப்பு ரெடி பண்ணியிருக்கார் நம்ம ஜி.. தல முதுகுல்ல துணி துவைச்சா அப்போ அழுக்கு நல்லாப் போகும்ங்கீறீங்க...

தேவ் | Dev said...

//தக்கச் சமயத்தில்
பாசறைந்தப்
போர்வாளே!!!
நீ போர் வாளல்ல
பீரங்கி....

தொடங்கட்டும் உன்
திருப்பணி...

அதிரட்டும்
ஆப்புகள்...

-- 23ம் கைப்புள்ள... //

அப்பூ ஆப்பு போட்டியின் விதியை இந்த வரி மீறுது ஆமா.. ஆப்பு தலக்கு மட்டும் தான் வைக்கணோம்.. மத்தவங்களுக்கு இல்ல.. ஆப்புக்களை அழகா வடித்துள்ள ஜிக்கு ஒரு ஓ போடுவோமாய்யா

தேவ் | Dev said...

//பரிசு தொகை எவ்வ்ளவுனு தெரியாது, இருப்பினும்
என்னுடைய ஆப்பு, இதொ :

Aanipidunganum
//


வாங்க... ஆணியைப் புடுங்கணும்ன்னுச் சொல்லி தலக்கு காளைக் கொம்புல்ல இல்ல ஆப்பு செட் பண்ணியிருக்கீங்க... இது அம்சமான ஆப்பு.. உங்களுக்கும் சங்கம் சார்பில் ஒரு ஓ கட்டாயம் போடுவோம்..

பரிசுத் தொகைப் பற்றி அறிவிப்பு தல விரைவில் வெளியிடுவார்.. அதுக்குள்ளே அடுத்த ஆப்பு ரெடி பண்ணிடுங்க...

தேவ் | Dev said...

/என்னோட பழைய ஆப்பு.. மறுபடியும் தலைக்காக.... /

OLD IS GOLD ...இந்த ஆப்பையும் ஆட்டத்துக்குச் சேத்துக்குறோம்ய்யா

தேவ் | Dev said...

/நான் போட்ட பின்னூட்டம் எங்கய்யா?/


சங்கத்தின் முதல் அ.வா. தலக்குப் போட்ட ஆப்பு அபேஸா? கூப்பிடுங்கப்பா அந்தப் போலீஸ்காரை...

தலைவரே.. வெண்பாவுல்ல ஆப்பு வச்சிங்கன்னா நல்லாயிருக்கும்.. ஒன்ஸ் மோர் ரீப்பிட் த ஆப்பு ப்ளீஸ்

ILA(a)இளா said...

//ஆணி புடுங்கனும்//
எப்படி யெல்லாம் யோசனை பண்ணி பேரு வெக்கிறாங்க. உக்காந்து யோசிப்பாங்களோ? (ஆணிமேல இல்லீங்க)

SP.VR.சுப்பையா said...

தமிழ்மணத்தில் இன்றைய தேதிவரை 1679 பதிவர்கள்
பதிவாகியுள்ளார்கள்

அவர்களில் அதிபுத்திசாலி என்று சர்வ நிச்சயமாக
இருவரைச் சொல்லாம்

1, திரு.எஸ்.பாலபாரதி
2. திரு.மோகன் (கைப்புள்ள)

இந்த இருவரையும் கலாய்க்க தகிடு தத்தம் போட்டு
யானை, சேனை, படைகளோடு இரண்டு வெவ்வேறு
அசுர கூட்டம் பல காலமாக அலைந்து கொண்டு
இருக்கிறது. ஆனால் அவர்கள் இருவரையும் இவர்களால்
அருகில்கூட நெருங்க முடியவில்லை என்பதுதான்
நிதர்சனமான உண்மை!

அந்தக் கூட்டத்து அன்பர்கள் யாரென்று கேட்கிறீர்களா?

1.பா.க.ச
2.வ.வா.ச

மேற்கூறிய சங்கங்களின் உறுப்பினர்களும், அவர்களுடைய
நட்புப் பதிவாளர்களும்தான் அவர்கள்.

மெகா' பதிவுகளும், அழைப்புகளும் விடுத்து, ஆப்புகளையும்
கொடுத்துதவி என்னென்னமோ செய்து பார்க்கிறார்கள்.
ஆனால் ஒருமுறைகூட வெற்றி கண்டதில்லை!

அதற்குக் காரணம், அந்த இருவருடைய உண்மையான
பலம் என்ன என்பது இவர்களுக்குத் தெரியாததுதான்.

சரி, அவர்களுடைய உண்மையான பலம் என்ன?

எதையும் டேக் இட் ஈஸி என்று எடுத்துக் கொள்ளும்
சுபாவமும், அந்த சுபாவத்துடன் ஒன்றெனக் கலந்த
அந்த அதி புத்திசாலித் தனமும்தான் அவர்களுடைய
பலம்.

அதைக் கடைசிவரை இவர்கள்(ஆப்படிக்கத் திரிபவர்கள்)
உணரமாட்டார்கள். அதுதான் இவர்களுடைய பலவீனம்

பலவீனம் என்று வெற்றி பெற்றதில்லை!

Aani Pidunganum said...

தல கவிதை
தல நி ஒரு பெருங்காய தல


விளக்கம்: (தல நி பெருங்காயங்கலுடன் இருக்கும் தல)

பரிசு தொகைக்கு இதுவும் சேர்த்துக்கொல்லவும்

தேவ் | Dev said...

மதிப்பிற்குரிய சுப்பையா அவர்களுக்கு,

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்கைக்கும் நன்றி.

சங்கம் எந்த ஒரு தனிப்பட்ட மனிதரையோ.. குழுவினையோ கலாய்க்க ஆரம்பிக்கப்பட்டதல்ல.. எல்லோரையும் சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது.. இன்றளவும் அதே கருத்துக் கொண்டு இயங்கி வருகிறது.

வின்னர் என்ற தமிழ் திரைப்படத்தில் இடம் பெறும் கைப்புள்ள என்ற நகைச்சுவை பாத்திரம் மட்டுமே எங்கள் கலாய்த்தலுக்கும் காமெடிக்கும் நாங்கள் உட்ப்டுத்தும் பாத்திரம்..

இந்த சங்கம் தற்போது எட்டு பேர்கள் கொண்டு இயங்கி வருகிறது...தொடர்ந்து மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம்...

இந்த நோக்கம் நிறைவேற தங்கள் மேலான ஆலோசனைகளையும் நீங்கள் தாராளமாய் சங்கத்துச் சிங்கங்களுக்கு வழங்கலாம்...

கைப்புள்ள என்ற கதாபாத்திரத்தை நண்பன் மோகன்ராஜோடு நீங்கள் குழப்பிக் கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்

SP.VR.சுப்பையா said...

நண்பர் தேவ் அவர்களூக்கு,
விளக்கத்திற்கு நன்றி!
வாழ்க வளமுடன்!
வளர்க சிரிப்புடன்!

தேவ் | Dev said...

//நண்பர் தேவ் அவர்களூக்கு,
விளக்கத்திற்கு நன்றி!
வாழ்க வளமுடன்!
வளர்க சிரிப்புடன்!//

நன்றி சுப்பையா அய்யா. தங்கள் வாழ்த்துக்கள் எங்கள் பயணத்திற்கு மேலும் ஊக்கம் அளிக்கும் என்பதில் ஐயம் எதுவுமில்லை..

தேவ் | Dev said...

//தல கவிதை
தல நி ஒரு பெருங்காய தல


விளக்கம்: (தல நி பெருங்காயங்கலுடன் இருக்கும் தல)

பரிசு தொகைக்கு இதுவும் சேர்த்துக்கொல்லவும்
//


யப்பா கலக்குறீயே ராசா லோட் லோடா ஆப்பை இறக்குறீயே.. தல லைட்டா சவுண்ட் விட ஆரம்பிச்சுட்டார்ப்பா.. கீப் கோயிங்...