Tuesday, January 2, 2007

சிஸ்டர் ஐ லவ் யூ!

"ஒரு பேஷண்ட் நர்ஸை லவ் பண்ணுறாரு. அவரு நர்ஸ் கிட்டே எப்படி ப்ரபோஸ் பண்ணுவாரு?"

"சிஸ்டர் ஐ லவ் யூ"

- இது எஸ்.எம்.எஸ்.களிலும், மேடை நாடகங்களிலும் பரிமாறிக் கொள்ளப்படும் ஒரு ஜோக். கிட்டத்தட்ட இதே மாதிரியான ஒரு துரதிருஷ்டவசமான நிலை நான் பத்தாம் வகுப்பு படித்தபோது எனக்கு ஏற்பட்டது.

பானு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பார்த்தாலே போதும், பசங்களின் உள்ளங்கள் பற்றிக் கொள்ளும். கயல் விழியாள். கொடி இடையாள். தாவணித் தென்றல். என் வகுப்பில் இருந்த 48 பேரில் குறைந்தபட்சம் 48 பேராவது அவளைக் காதலித்திருப்பார்கள். செம காம்பெடிஷன். வேறு பிகரை டாவடித்துக் கொண்டிருந்தவர்கள் கூட ஒரு கவுரவத்துக்கு இவளை காதலித்தார்கள்.

என் நண்பன் செந்திலும் (இவனால் தான் நான் குட்டிச்சுவரானேன்) நானும் இவளை அசுரத்தனமாக காதலித்தோம். அவன் கொஞ்சம் வைல்டாகவும், நான் கொஞ்சம் மைல்டாகவும் மூவ் செய்துக் கொண்டிருந்தோம். செந்தில் அவளை வேகமாக சைக்கிளில் பாலோ செய்வது, அவள் எதிரில் பெரிய ரவுடி மாதிரி முரட்டுத் தனமாக நடந்துகொள்வது என்று ஒரு ரூட்டில் போய்க் கொண்டிருந்தான். நானோ அவள் ட்யூஷனுக்கு சேர்ந்த இடத்திலேயே நல்ல பையன் மாதிரி சேர்ந்து பட்டை எல்லாம் அடித்துக் கொண்டு அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கவர முயற்சித்துக் கொண்டிருந்தேன்.

இருந்தும் நாங்கள் இரண்டு பேருமே அவளிடம் ஒரு வார்த்தைக் கூட பேசியதில்லை. அவளுடன் பேசினாலே போதும், மடக்கி விடலாம் என நினைத்துக் கொண்டிருந்தோம். பேசுவதற்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கிக் கொண்டிருந்தோம். எங்களை மாதிரியே வகுப்பு நண்பர்களும் (எதிரிகளும்) ஒவ்வொரு ரூட்டில் அவரவர் மூளை அளவுக்கு ஏத்தமாதிரியான வழிகளில் முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் ஆச்சாரமான அய்யங்காராத்துப் பொண்ணு என்பதால் அவளை நெருங்கவே எல்லோருக்கும் உள்ளுக்குள் கொஞ்சம் பயம் இருந்தது.

பாழாய்ப்போன ஒரு நாளில் கிளாஸ் முடிந்தது. சைக்கிள் ஸ்டேண்டில் சைக்கிள் எடுக்க நானும், செந்திலும் போனோம். செந்திலுக்கு சைக்கிள் இல்லை. என் சைக்கிளை ஓசி ரவுண்டு வாங்கி ஸ்டைலாக ஓட்டுவான். என் சைக்கிள் பானு சைக்கிளின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதுவே எனக்கு உள்ளுக்குள் கொஞ்சம் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. சைக்கிளை எடுக்கும்போது செந்திலின் குரங்குமூளை உள்ளுக்குள் ஏதோ வேகமாக செயல்படத் தொடங்கியது. என் சைக்கிள் கீயை வாங்கியவன் சைக்கிளை எடுக்காமல் பக்கத்திலிருந்த பானுவின் சைக்கிள் கேரியர் மேல் உட்கார்ந்துக் கொண்டான்.

"மச்சான் கெளம்புடா. செயிண்ட் தாமஸ் ஸ்கூல் விட்டுட்டு இருப்பாங்க. பிகர்ங்க எல்லாம் நம்பளை பாக்காம ஏங்கிப் போயிருக்கும். டைம் ஆவுது" என்றேன்.

"இருடா மாமு. பானு வந்திருவா. வந்து சைக்கிளை எடுக்க முடியாம என் கிட்டே வந்து "எஸ்க்யூஸ் மீ. இது என் சைக்கிள்னு" சொல்வா. என்கிட்டே பேசிட்டாலே போதும். அவளை எப்படியாவது பிக்கப் பண்ணிடுவேன்" என்றான் செந்தில்.

எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருந்தது. இவனுக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி ஐடியா எல்லாம் தோன்றுகிறது? நாம வேஸ்ட்டு. எப்படியோ இவன் தான் பானுவை மடக்கப் போகிறான் என்று நினைத்துக் கொண்டேன். இரண்டு நிமிடங்கள் கழிந்தது. செந்தில் மீதிருந்த கோபத்தால் எதுவும் பேசாமல் அமைதி காத்தேன். அவனும் ஏதோ திட்டத்தை யோசித்துக் கொண்டே (அல்லது யோசிப்பது மாதிரி பாவ்லா காட்டிக் கொண்டே) எதுவும் பேசாமல் இருந்தான்.

தூரத்தில் பானு. அன்ன நடை. மின்னல் இடை. மயில் மாதிரி ஒயிலாக வந்தாள். அவளை தூரத்தில் பார்க்கும்போது என் உள்ளத்தில் காதல் பொங்கும். ஏனோ தெரியவில்லை, அவள் அருகில் வந்தாலே "தட தட"வென்று சரக்கு ரயில் மாதிரி சத்தம் போட்டு கன்ப்யூஸ் ஆகிவிடும்.

பானு அருகில் வந்ததுமே சட்டென்று என் சைக்கிளில் செயினை மாட்டுவது போல நடித்து சட்டென்று குனிந்துக் கொண்டேன். செந்திலோ அவள் சைக்கிள் கேரியரில் வசதியாக அமர்ந்துக் கொண்டு கையிலிருந்த கைடை எடுத்து படிக்கிற பையன் மாதிரி ரொம்ப உன்னிப்பாக படிக்க ஆரம்பித்து விட்டான். பானு என் அருகில் வந்து நின்றாள். அவள் சைக்கிளைப் பார்த்தாள். சைக்கிளில் செந்தில் ஓரக்கண்ணால் அவளது "எக்ஸ்கியூஸ் மீ"க்காக காத்திருந்தான். மெதுவாக என்னைப் பார்த்தாள். அவள் கண்களை ஏறெடுத்துப் பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டு (பயந்துக் கொண்டு) சைக்கிள் செயினை மாட்டி விடுவதில் மும்முரமாக இருந்தேன்.

30 நொடி கடந்தது. எதுவுமே நடக்கவில்லை. திரும்பிப் பார்த்தால் பானுவைக் காணோம். "மச்சான் என்னடா ஆச்சி?" என்றேன். "ஏதாவது கிளாஸ் ரூமிலே மறந்து வெச்சிட்டிருப்பா. போயி எடுத்துக்கிட்டு வருவா, டூ மினிட்ஸ் வெயிட் பண்ணு" என்றான். சொன்னவன் என் முகத்தைப் பார்க்கும் போது பீதி அடைந்துப் போயிருந்தேன். காரணம் தூரத்தில் பானு, அவளுடன் பெரிய குண்டாந்தடியுடன் டிரில் மாஸ்டர் நடராஜன். நடராஜன் அடித்தார் என்றால் ஒருவாரத்துக்கு அடிபட்ட இடத்தில் மரணவலி இருக்கும். பார்ப்பதற்கு சாமி விக்ரம் மாதிரி இருப்பார்.

"என்னலே... பொண்ணுங்க கிட்டே வம்பு செய்யறீளா?" என்று கேட்டுக் கொண்டே வந்தவர் எங்களது எந்த விளக்கத்தையும் கேட்க விரும்பாதவர் போல குண்டாந்தடியை எங்கள் மீது அதிரடியாக பிரயோகிக்கத் தொடங்கினார். "சார் சைக்கிள் செயின் கயட்டிக்கிச்சு" என்ற என் விளக்கம் அவரிடம் எடுபடவில்லை. என்னைவிட செந்திலுக்கு தான் செம அடி. எங்களை மாட்டி விட்டத் திருப்தியுடன் "களுக்"கென்று சிரித்துக் கொண்டே பானு சைக்கிளை எடுத்துக் கொண்டு நகர்ந்தாள். நடராஜன் மாஸ்டரிடம் கடுமையான எச்சரிக்கையைப் பெற்றுக் கொண்டு அடிபட்ட இடத்தில் செம வலியுடன் (உள்ளத்தில் இருந்த வலியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது) நானும், செந்திலும் நொந்துப் போய் நடந்தோம்.

"சாரி மாமு. என்னால் நீயும் அசிங்கப் பட்டுட்டே. அவ இவ்ளோ பெரிய பஜாரியா இருப்பான்னு நான் நெனைக்கலே. சே அவளைப் போயி லவ் பண்ணோம் பாரு. இனிமே அவளை நெனைச்சிக்கூட பாக்கக் கூடாதுடா" என்றான் செந்தில்.

அடிபட்ட வலி மறைந்து உள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கத் தொடங்கியது. அப்பாடா இனிமே இவன் நம்ம ரூட்டுக்கு வரமாட்டான். காம்பெடிஷன்லே ஒண்ணு குறைஞ்சது என்று நினைத்துக் கொண்டேன். வேகவேகமாக என் மூளை கணக்குப் போட்டது. இந்த சம்பவத்தையே காரணமாக வைத்துக் கொண்டு பானுவிட மன்னிப்பு கேட்கிற சாக்கில் அவளிடம் பேசிவிடலாம் என முடிவு செய்தேன். "பரவால்லடா மச்சான். ப்ரெண்டுக்காக தானே அடிவாங்கினேன். எனக்கு அவசர வேளை இருக்கு" என்று பெருந்தன்மையுடன் சொல்லிவிட்டு செந்திலிடமிருந்து எஸ்கேப்பாகி வேகவேகமாக சைக்கிளை மிதித்தேன்.

நேராக என் சைக்கிள் சென்றது என்னுடைய இன்னொரு உயிர்த்தோழனான மா.ப.ஓ.ப சரவணன் வீட்டில். மா.ப.ஒ.ப என்பது மாட்டுப் பல்லா, ஓட்டைப் பல்லா என்பதின் சுருக்கம். ஒரு அடிதடியில் பல் ஓட்டை ஆகிவிட்டதால் சரவணனுக்கு இந்த செல்லப் பெயரைச் சூட்டியிருந்தோம். சரவணன் உஷா என்றொருப் பெண்ணை டாவடித்துக் கொண்டிருந்தான். உஷாவை போய் எப்படித்தான் காதலிக்கிறானோ என்று நான் பலமுறை அதிசயித்ததுண்டு. ம்ம்ம்... காதலுக்கு கண்ணில்லை. அவன் காதலுக்கு உதவுவதாக நான் வாக்களித்திருந்தேன். அதுமாதிரியே என் காதலுக்கு(?) உதவுவதாக அவனும் வாக்களித்திருந்தான்.

நடந்த விஷயங்களை அவனிடம் சுருக்கமாகத் தெரிவித்து என்னுடைய டெக்னிக்கைச் சொன்னேன். அதாவது ட்யூஷன் முடிந்து ஆறு மணிக்கு பானு வீட்டுக்குத் திரும்புவாள். வழியில் அவளை மடக்கி நடந்த சம்பவத்துக்காக செந்தில் சார்பில் மன்னிப்பு கேட்டு "சிம்பதி வேவ்" கிரியேட் செய்து அவளுடன் பழகும் வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்வதே என் திட்டம். துணைக்கு மா.ப.ஒ.ப வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அவனும் அவன் வேலை வெட்டியை எல்லாம் விட்டு விட்டு என்னுடன் வர பெரிய மனசுடன் சம்மதித்தான்.

சுமார் 5.50 மணியளவில் மடிப்பாக்கம் கூட்டுரோடுக்கு முன்னாலிருந்த ஒரு சின்னத் தெருவில் என் BSA SLR சைக்கிளுடன் நின்றுக் கொண்டிருந்தோம். அவள் வந்ததுமே என்ன பேச வேண்டும் என்று மா.ப.ஒ.ப.வுடன் ஒத்திகை செய்திருந்தேன். அதாவது பின்வருமாறு நடக்கும் என்று நாங்களே முடிவு செய்திருந்தோம்.

அவள் சைக்கிளில் வருவாள். வழியை மறித்து என் சைக்கிள் நிற்கும். சைக்கிளுக்கு முன்னால் சோகமாக நான் நிற்பேன். மா.ப.ஒ.ப. அவள் என் அருகில் வந்து சைக்கிளை நிறுத்தியவுடன் டீசண்டாக விலகிச் சென்று விடுவான்.

"ஹலோ ஒரு நிமிஷம் நான் உங்கிட்டே பேசணும்" - நான்

"என்ன சொல்லு?" - அவள்

"சாரி. என் நண்பன் அநாகரிகமாக நடந்துக் கொண்டதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" - நான்

"பரவாயில்லை. அவன் இன்டீசண்டா பிகேவ் பண்ணாலும் நீ இவ்வளோ டீசண்டா நடந்துக்கறியே. தேங்க்ஸ்" - அவள்

- இப்படியாக ஸ்டார்ட் செய்து டாப் கியரில் எங்கள் காதல் பறக்கும் என்பது எங்கள் ஏற்பாடு.

சுமார் 6.00 மணிக்கு தூரத்தில் சைக்கிள் தெரிகிறது. சைக்கிளில் என் பானு. பத்தாண்டுக்கு முன்னால் அந்தப் பகுதியில் ஜனநடமாட்டம் ரொம்பவும் அபூர்வம். எப்போதாவது யாராவது ஓரிருவர் சைக்கிளில் செல்வார்கள். மாலை நேரங்களில் அதுகூட இருக்காது.

என் சைக்கிளைப் பார்த்தவுடனேயே ஸ்லைட்டாக ஸ்லோ செய்தாள். தலையைக் குனிந்து கொண்டே அவளை நிறுத்துமாறு கையால் சைகை செய்தேன். ஒத்திகைப் பார்த்த மாதிரியாக இல்லாமல் "திடுக்"கென்று மா.ப.ஒ.ப. ஓட்டம் பிடித்தான். நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். அய்யோ.. என் வாய் குழற ஆரம்பித்தது.

"ஓஓஒ....ரு..... நிம்மிஷம்..."

".......??????????????"

"சாரி சிஸ்டர்....... என் ப்ரெண்டுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்"

- சொல்லி முடித்தவுடன் தான் தெரிந்தது. பதட்டத்தில் அவளை சிஸ்டர் என்று சொல்லிவிட்டேன் என்பது. சே.... யானை தன் தலையில தானே மண்ணைப் போட்டுக் கொண்டது மாதிரி ஆகிவிட்டதே? தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த மா.ப.ஒ.ப. காதில் என்னுடைய "சிஸ்டர்" விளிப்பு கேட்டு விட்டது போல. ரிஸ்க் எதுவும் இல்லை என்று நினைத்தவன் திரும்பி வந்தான்.

"பரவாயில்லை கிச்சு. செந்தில் கூட சேராதே. உன்னை மாதிரி நல்ல பையனை கூட அவன் கெடுத்துடுவான்" - சொல்லி விட்டு பறந்து விட்டாள் என் திடீர் தங்கை. வேதனையுடன் மா.ப.ஒ.ப.வை பார்த்தேன். அவன் அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தான்.

"மச்சான் தெரியாம சிஸ்டர்னு சொல்லிட்டேன். இனிமே அவளை என்னால லவ் பண்ண முடியாது. வெறும் ப்ரெண்ட்ஷிப் மட்டும் தான். இருந்தாலும் இங்கே நடந்த மேட்டரை யார் கிட்டேயும் சொல்லிடாதேடா. மானம் போயிடும். பிராமிஸ் பண்ணு" என்றேன். ப்ராமிஸ் செய்தான்.

இருப்பினும் மறுநாள் வகுப்புக்குச் சென்றபோது எல்லா வகுப்புத் தோழர்களும் என்னை "மச்சான்... மச்சான்" என்று பாசமுடன் அழைத்தபோதே தெரிந்து விட்டது. மா.ப.ஓ.ப. மேட்டரை அவிழ்த்து விட்டு விட்டான் என்பது. அதுவரை என்னை "பிரதர்" என்று அழைத்த குள்ள சேகர் கூட "மச்சான்" என்று அழைத்தது தான் மனதுக்கு ரொம்ப வேதனையாக இருந்தது.

அட்டகாசமாக "ஓபனிங்" செய்தும் கூட இந்தக் காதலைப் பொறுத்தவரை "பினிஷிங்" சொதப்பி விட்டாலும் என்னுடைய எதிர்கால காதல்களுக்கும், பிகர்களை அணுகவேண்டிய முறைக்கும் இது ஒரு நல்ல அனுபவமாக அமைந்தது.

34 comments:

Anonymous said...

அண்ணா! எப்படிண்ணா இருக்கீங்க? பாத்து பத்து வருஷம் ஆவுதே?

Anonymous said...

//அவள் அருகில் வந்தாலே "தட தட"வென்று சரக்கு ரயில் மாதிரி சத்தம் போட்டு கன்ப்யூஸ் ஆகிவிடும்.//

:-)))))))))))))

Anonymous said...

வாங்க லக்கி... ஜனவரி மாசமே... பிப்ரவரி மாசத்துக்குச் செம ட்ரெயிலர் காட்டுறீங்கப் போங்க...

சங்கம் எங்கும் ஒரே லவ்ஸ் வாசம் தூக்குது....

தொடரட்டும் உங்க மன்மத அட்லாஸ் பயணம்.....

Anonymous said...

கிச்சு,

நல்லா கிச்சு கிச்சு மூடியிருக்கீங்க :)

சுவைபட எழுதியிருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள்

Anonymous said...

very nice. :-)))

- Suresh Kannan

Anonymous said...

நன்றி வாத்தியார் சுப்பையா அவர்களே! உங்க பசங்களையும் எங்க டிரில் மாஸ்டர் மாதிரி தான் பயமுறுத்துவீங்களா?

*****

//வாங்க லக்கி... ஜனவரி மாசமே... பிப்ரவரி மாசத்துக்குச் செம ட்ரெயிலர் காட்டுறீங்கப் போங்க...//

அடுத்த மாச வாலிபருக்கு வேலையை மிச்சம் பிடிக்க வேணாமா தேவ்?

*******

//கிச்சு,

நல்லா கிச்சு கிச்சு மூடியிருக்கீங்க :)

சுவைபட எழுதியிருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள் //

நன்றி ச. சங்கர்

******

//very nice. :-)))

- Suresh Kannan //

thanks

Anonymous said...

மச்சான் ...கவுத்துட்டிங்களே மச்சான் ! ... 10 வருசதுக்கு முன்னாடியே சொல்லி இருக்க கூடாது ! நானாவது கரைக்டு பண்னிருப்பேன்

சுவைபட எழுதியிருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள்

Anonymous said...

க"லக்கி"ட்டிருக்கீங்க லக்கி :-) வாத்தியாரைய்யா மாதிரி தான், இந்த வரியைப் படிச்சதும் தான் நான் பயங்கர LOL:

//அவள் அருகில் வந்தாலே "தட தட"வென்று சரக்கு ரயில் மாதிரி சத்தம் போட்டு ***கன்ப்யூஸ் ஆகிவிடும்***//

Anonymous said...

தலை எப்படி தலை இதெல்லாம்? கலக்குறே?

Anonymous said...

வுடு மச்சான்...சரி வூட்ல தங்கச்சிட்ட தகராரா...சும்மா ஆட்டோகிராபா வண்து வுலுது...வெருப்பேத்ரியா???...

Anonymous said...

2007 - உங்களுக்கு ரொமாண்டிக்கான ஆரம்பம். பெஸ்ட் ஆப்ஃ லக்(கி லுக்)!

Anonymous said...

லக்கி, பதிவில் காதல் மன(ண)ம் வீசுகிறது. காதல் மாதிரியே ஈரமான நடை...

Anonymous said...

Superb கலக்கீட்டிங்க!

Anonymous said...

//Bharateeyamodernprince said…

2007 - உங்களுக்கு ரொமாண்டிக்கான ஆரம்பம். பெஸ்ட் ஆப்ஃ லக்(கி லுக்)!
//

தேங்க்ஸ் வாத்தியாரே. மறுபடியும் எப்போ மடிப்பாக்கம் வர்றீங்க? வர்றப்போ கொஞ்சம் தகவல் சொன்னீங்கன்னா மீட் பண்ண வசதியா இருக்கும்....

Anonymous said...

கற்பனையானாலும் மிக சுவையாக இருந்தது.
இனிய புதுவருட வாழ்த்துக்கள்.
யோகன் பாரிஸ்

Anonymous said...

:)) இது உண்மையில் கற்பனைக் கதையா இல்லை உண்மை கதையா?எப்படி இருந்தாலும் கதை நன்றாக இருந்தது.

Anonymous said...

atlast banu enna aana? atha neenga sollave illaye lucky :( ammu

Anonymous said...

//என் வகுப்பில் இருந்த 48 பேரில் குறைந்தபட்சம் 48 பேராவது அவளைக் காதலித்திருப்பார்கள். செம காம்பெடிஷன்.//
உங்களுக்கு சக்சஸ் ஆச்சா?

//உள்ளத்தில் இருந்த வலியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது//
சரி! 'உள்ளத்து வலியை' வர்ணிக்க வேண்டாம்...

சூப்பர் ஸ்டோரி 'மச்சி'.

Anonymous said...

Excellent real story!!!

Anonymous said...

It is nice real story!!

Anonymous said...

கொஞ்சம் பிஸியா இருந்ததால சங்கத்து பக்கமே வர முடியாம போச்சுப்பா!!!

லக்கி அண்ணே படம் கிளப்பறீங்க...

Anonymous said...

//என் நண்பன் செந்திலும் (இவனால் தான் நான் குட்டிச்சுவரானேன்) //

அதனால தானே நண்பன் ;)

//நானோ அவள் ட்யூஷனுக்கு சேர்ந்த இடத்திலேயே நல்ல பையன் மாதிரி சேர்ந்து பட்டை எல்லாம் அடித்துக் கொண்டு அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கவர முயற்சித்துக் கொண்டிருந்தேன்.//
எந்த பட்டைனு சொல்லவேயில்லையே ;)

Anonymous said...

//தூரத்தில் பானு. அன்ன நடை. மின்னல் இடை. மயில் மாதிரி ஒயிலாக வந்தாள். அவளை தூரத்தில் பார்க்கும்போது என் உள்ளத்தில் காதல் பொங்கும். ஏனோ தெரியவில்லை, அவள் அருகில் வந்தாலே "தட தட"வென்று சரக்கு ரயில் மாதிரி சத்தம் போட்டு கன்ப்யூஸ் ஆகிவிடும்.//

கலக்கறீங்களே!!!
நீங்க காதல் கதை எழுதனா எல்லாருக்கும் மார்க்கெட் அவுட்...

Anonymous said...

//என் சைக்கிளைப் பார்த்தவுடனேயே ஸ்லைட்டாக ஸ்லோ செய்தாள். தலையைக் குனிந்து கொண்டே அவளை நிறுத்துமாறு கையால் சைகை செய்தேன். ஒத்திகைப் பார்த்த மாதிரியாக இல்லாமல் "திடுக்"கென்று மா.ப.ஒ.ப. ஓட்டம் பிடித்தான். நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். அய்யோ.. என் வாய் குழற ஆரம்பித்தது.//

இதுதான் டாப் :-)
கூட நீங்க நம்ம தற்கொலை படைல இருந்து யாரையாவது கூப்பிட்டு போயிருக்கனும் :-)

Anonymous said...

//"பரவாயில்லை கிச்சு. செந்தில் கூட சேராதே. உன்னை மாதிரி நல்ல பையனை கூட அவன் கெடுத்துடுவான்" - சொல்லி விட்டு பறந்து விட்டாள் என் திடீர் தங்கை. வேதனையுடன் மா.ப.ஒ.ப.வை பார்த்தேன். அவன் அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தான்.//

அப்ப உங்களுக்கு நல்ல இமேஜ் தான் இருந்திருக்கு...
சிஸ்டர்னு சொன்னத வாபஸ் வாங்கிக்கிறேனு சொல்ல வேண்டியதுதானே ;)

Anonymous said...

அப்புறம் என்ன ஆச்சு? ரக்ஷாபந்தனுக்கு ராக்கி கட்டுனாளா?

"ஹலோ! மைக் டெஸ்ட்டிங்... மைக் டெஸ்ட்டிங்...

பானு எங்கு இருந்தாலும், சங்கத்து மேடைக்கு அருகில் வரவும். இங்க ஒருத்தர் உறுதிமொழி எடுக்குற மாதிரி உங்களுக்காக கைய தூக்கிக்கிட்டே நிக்கிறார்"

Anonymous said...

லக்கி... சோ அன்லக்கி...

Anonymous said...

//"என்னலே... பொண்ணுங்க கிட்டே வம்பு செய்யறீளா?" என்று கேட்டுக் கொண்டே வந்தவர் எங்களது எந்த விளக்கத்தையும் கேட்க விரும்பாதவர் போல குண்டாந்தடியை எங்கள் மீது அதிரடியாக பிரயோகிக்கத் தொடங்கினார். "சார் சைக்கிள் செயின் கயட்டிக்கிச்சு" என்ற என் விளக்கம் அவரிடம் எடுபடவில்லை. என்னைவிட செந்திலுக்கு தான் செம அடி//

ஒரு படத்துல போலிஸ் ஸ்டேஷன்ல அடி வாங்கிட்டு நிக்கிற செந்திலைப் பாத்து கவுண்டமணி சொல்றது நியாபகம் வந்துடுச்சி. "நானாச்சும் பரவால்லடா...உன்னை பார்த்தா ரொம்ப கேவலமா இருக்குடா"
:))

//இருப்பினும் மறுநாள் வகுப்புக்குச் சென்றபோது எல்லா வகுப்புத் தோழர்களும் என்னை "மச்சான்... மச்சான்" என்று பாசமுடன் அழைத்தபோதே தெரிந்து விட்டது.//

வாழ்க்கையில வழுக்கி விழுந்தவருன்னு சொல்லுங்க.

Anonymous said...

//என் வகுப்பில் இருந்த 48 பேரில் குறைந்தபட்சம் 48 பேராவது அவளைக் காதலித்திருப்பார்கள். செம காம்பெடிஷன்.//

அது எப்படி 48 பேரில் பானுவைத்தவிர 47 பேர் தானே?

அன்புடன்
சிங்கை நாதன்

Anonymous said...

சிங்கை நாதன் சொல்றதூ கரீட்டு பா!

Anonymous said...

கர்ப்பனை கதைனு சொல்லிட்டு என்னோட கதய இப்படி அனியாயமா எல்லோருக்கு சொல்லிட்டீங்களே...இருந்தாலும் நீங்க சொன்ன ஸ்டைலு சூப்பர்...asusual லக்கி டச் :-)

Anonymous said...

கலக்கறப்பூ.........

nice :))

Anonymous said...

//அது எப்படி 48 பேரில் பானுவைத்தவிர 47 பேர் தானே? //

துரதிருஷ்டவசமாக என் ஸ்கூலில் Co-ed இல்லை. ஆண்கள் எல்லாம் A குரூப். பிகர்கள் எல்லாம் B குரூப்.

சுப்பு said...

பானும் பயந்தாகொள்ளியும்....
வாய் பேச முடியாத என்னிடமும்
வழிய வந்து பேச்சுக் கொடுத்தாள்.
அவள் விழிகிறாள்,
நான் வழிகிறேன்.

ஐயோ!
அச்சம் வந்து அக்கா என்று உலர
அவமானம் அடிமனதுக்குள்.

இது எப்படி இருக்கு ??????