Monday, January 22, 2007

சிங்கங்களுக்கு தல கைப்பு கடிதம்

கொஞ்ச நாளாச் சங்கத்தில் இருந்து எந்த அறிக்கையும் வராத காரணத்தால் கடுப்புக்களைக் கிளறிய படி அகமதா பாளையம் முக்கு சந்தில் குறுக்கும் நெடுக்கும் நடந்த கைப்பு சங்கத்தின் அலுவலகத்துக்குப் பத்து நாள் முன்னாடி அனுப்பிய பேக்ஸ்...பீட்டா பிளாக் மேட்டரைக் காரணம் காட்டி சங்கத்து பயல்கள் எல்லாரும் சொல்லாமக் கொள்ளமா அங்கிட்டும் இங்கிட்டும் புறப்பட்டு பொழ்ப்பைப் பாக்கப் போயிட்டதால இந்தா இப்போத் தான் நான், ஓங்க கில்லி பையன் பாக்குறேன்...

அதாவது வர்ற பிப்ரவரி 14 ஊருக்கே உவகைத் தரும் லவ்வர்ஸ் டே... அந்த நாள் தான் நம்ம கைப்பு வாழ்க்கையிலும் ஒரு மகத்தான் நாள்...

அந்த மகத்தான நாளை ஒவ்வொரு வருத்தப் படாத வாலிபனும் சிறப்பாக் கொண்டாடணும்ன்னு கேட்டுகிட்டு அவரே ஒரு கடிதம் எழுதியிருக்கார்...

தலச் சிங்கங்களுக்கு சவுண்டு கொடுத்து எழுதியிருக்கும் கடிதம், இந்தாக் கீழே சங்கப் பலகையிலே ஓட்டியாச்சுப் பாருங்க..

என்னைய மாதிரியே பொழப்பு அத்து, நாட்டுல்ல வீட்டுல்ல பொட்டித் தட்டுறேன்னு சொல்லிகிட்டு ஆபிஸ்ல்ல சம்பளம், கூட போனஸ், இன்னும் இதர அலவுன்ஸ் அம்புட்டையும் வாங்கிட்டு வேலை நேரத்துல்ல வெத்துத் தனமா பதிவு போட்டுகிட்டும் பதிவைப் படிச்சுகிட்டும்...பதிவுக்குப் பின்னூட்டம் போட்டுகிட்டும் திரியற அம்புட்டு மக்களுக்கும் இந்த கைப்புள்ளயின் குட் மார்னிங்...

கொஞ்ச நாளாப் சங்கம் பக்கம் வர முடியல்ல... இங்கிட்டு இருந்தே பாளையத்துல்ல பொழ்ப்பைப் பாத்துகிட்டே அங்கே நடக்குறதே பாக்கலாம்ன்னு மலேசியாவுல்ல ஒரு சந்தையிலே ஆட்டயப் போட்டு, சங்கத்து ஆபிஸ்ல்ல மாட்டி வச்சிருந்த சி.சி.டிவியை எந்த களவாணிப் பயலோ கமுக்கமாக் களவாண்டுட்டுப் போயிருக்கான்...

சரி ஒத்த போன் போட்டு விவரம் கேக்கலாம்ன்னு நினைச்சா... போன் கனெக்ஷனைப் புடுங்கி ஒரு பைய இடுப்பு அரைஞாண் கயிறாக் கட்டிட்டு ஊர் ஓரமாத் திரியறானான்... (இருடீ வந்து உனக்கு தனிக் கச்சேரி வைக்கிறேன்)..

அஞ்சு வயசு சின்னப் புள்ளல்ல இருந்து அறுபது பொக்கவா கிழ்வி வரைக்கும் பாத்துக் காறி துப்பன்னாலும் கொஞ்சம் கூடக் கலங்கமா பொறுக்கி சேர்த்த செங்கல் வச்சே கட்டுனச் சங்க கட்டடம்.. சிங்கமெல்லாம் சீறி சிலுப்பிகிட்டு திரிஞ்ச வரலாற்று வளாகத்துக்கு இப்போ கரண்ட் கனெக்ஷன் ஈவு இரக்கம் இல்லாம கட் பண்ணிட்டாங்களாம்..

ஆனாலும் நாங்க எல்லாம் யாரு?
வருத்தம்ன்னா என்னன்னுனே தெரியாத திமிங்கலக் கோஷ்ட்டி இல்ல...
கரண்ட் போனா என்ன??
சூரியனையே அட்லாஸ் வாலிபனா இறக்கி சங்கத்துக்கு லைட் போட்டுட்டோம் இல்ல....

கொஞ்சம் ஓவராப் பேசுறேனோ... சரி... வீரன் வாய்ன்னா பேசும் போது நாலு வீர வார்த்தைப் அப்படி இப்படி சிதறத் தானேச் செய்யும்....
வீரன் கையின்னா கீ போர்ட்ல்ல வீரம் விழைஞ்சு வானத்தை நோக்கி நெட்டி முறிக்கத் தானே செய்யும்....இதெல்லாம் கண்டுக்கப் பிடாது.... வீரன் வாழ்க்கையிலே ஜகஜம்...

அய்யோ அய்யோ நான் சொல்ல வந்த மேட்டர் என்னன்னு சொல்லவே இல்ல... கையிலே கரண்ட் பாஞ்ச மாதிரி அப்படியே வார்த்தையாக் கொட்டுதா கன்ட்ரோல் பண்ண முடியல்ல....

அதாவது.. ஆண்டிப்பட்டிங்கற ஊருல்ல அஞ்சாத அலங்கநல்லூர் மொரட்டுக் காளையாக் கலக்கிட்டு திரிஞ்ச இந்த கைப்புள்ளயின் வாழ்க்கையில் ஒரு மகத்தான திருப்பம் நடந்துச்சு...

ஆமாய்யா.. பிப்ரவரி 14.... அது வரைக்கும் எல்லாரையும் மாதிரி அடி உதைன்னா ஆறு மைலுக்கு அப்பால ஒடுற ஒரு சாதரண சல்லிப் பயலாத் தான் இந்த கைப்புள்ளயும் இருந்தான்...ஏன் பக்கத்து சீட் மொட்ட முருகேசன் கிள்ளுனாலே போதும் ரோசா மாதிரி அழுது அழுது முகம் சிவந்துப் போயிருவான் இந்த கைப்பு.. அப்படி இருந்த கைப்புள்ள இன்னிக்கு இடி இடிச்சாக் கூட திரும்பி பார்த்து லைட்டா ஸ்மைல் விடுற அளவுக்கு மாறியிருக்கேனா... அதுக்குக் காரணம் அந்த பிப்ரவரி 14....

அந்தப் பிப்ரவரி 14 என்ன நடந்துச்சுன்னா.......

பொங்கி வர்ற இளமையோட...வாலிப வயசு திமிர.. நெஞ்சு நிமிர ... உள்ளூர் அழகில்ல இருந்து மதுர மீனாட்சி கோயிலைச் சுத்திப் பாக்க வர்ற வெள்ளைக்கார அழகி வரைக்கும் எல்லாப் பொம்பளைப் புள்ளக மேலயும் கைப்புள்ள கண்ட படி காதல் வசப் பட்டுக் கொண்டிருந்த அது ஒரு கனாக் காலம்...

எல்லாரையும் காதலிச்சுகிட்டு இருக்கானே.. ஆனா தன்னை யாருமே திரும்பிக் கூடப் பாக்கலீயேங்கற வருத்தம் தம் பையனுக்கு கொஞ்சம் கூட இல்லையேன்னு எங்கப்பா கையப்பருக்கு ஒரே வருத்தம்..

ஓடனே ஊர் பஞ்சாயத்துக் கூடிச்சு... இன்னியும் நம்மூர்ல்ல பொண்டு புள்ளக பத்திரமா இருக்கணும்ன்னா இவனுக்குக் கட்டாயம் கலியாணம் பண்ணி வைக்கணும்ன்னு முடிவாச்சு... எனக்கு கலியாணம்ன்னு சொன்னதும் ஊரே சந்தோசமாயிருச்சு.. பொண்ணப் பெத்தவங்கப் பூராப் பேரும் கோயிலுக்கு கிடா வெட்டு...108 சிதறு தேங்கான்னு சிதற விட்டு சீட்டியடிச்சாங்க...கிழவிகக் கூட கம்பை ஊனிகிட்டு கோயிலுக்குப் போய கடவுளுக்கு டாங்க்ஸ் சொன்னாய்ங்கன்னாப் பாத்துக்கங்க...

இங்கேனத் தான் வினை தோகைய விரிச்சு ஆடுச்சு.. நம்ம யோக்கியதைக்கு உள்ளுர்ல்ல எந்த அப்பனும் தன் பொண்ணைத் தர மாட்டேன்னு சொல்லிட்டான்... அசலூர்ல்ல அந்தப் பக்கம் தேனி வரைக்கும் இந்தப் பக்கம் திருச்சி வரைக்கும் சான்சே இல்லன்னு ஆகிப் போச்சு...

கைப்புள்ள கலங்கவே இல்ல... அப்பாத் தான் பாவம் கவுந்துப் படுத்துக் கண்ணீர் விட ஆரம்பிச்சுட்டார்...இந்த சமயத்துல்ல தான் கொட்டாம்பட்டியிலே இருந்து ஒரு வரன் வந்துச்சு.. பாவம் யாரோ ஒரு ஒருத்தர் வாழ்க்கையிலே கொஞ்சம் பொழுதுபோக்கா வாழ்ந்து இருப்பார் போல எட்டும் பொண்ணாப் பொறந்துருச்சாம்.. நான் எவ்வளவு பெரிய முடிச்சவிக்கியா இருந்தாலும் பரவாயில்ல எனக்குப் பொண்ணுத் தர்றேன்னுச் சொல்லிட்டாராம்..

என்னோட இயற்கை அழகுக்கு இன்னும் அழ்குச் சேர்த்துக்கிட்டு என்னோட வாகனத்துல்ல நம்ம பயல்வ புடைச் சூழ பொண்ணுப் பாக்க கிளம்புனேன்...
அங்கே பலமாத் தான் வ்ரவேத்து காபி டிபன் எல்லாம் நல்லாவேக் கொடுத்தாயங்க... நானும் நம்ம சிங்கங்களும் நல்லாச் சாப்பிட்டோம்...

பொண்ணு பிடிச்சிருக்கான்னு எங்கப்பாக் கேட்டார்...

கைப்புள்ள மனசுல்ல காதல் பொங்கி வழிஞ்சு ஓட ஆரம்பிச்சுருச்சு...வெள்ளைக்காரன் ஸ்டைல்ல எழுந்துப் போய் பொண்ணைக் கட்டிப் பிடிச்சு ஒரு லிப் டூ லிப் கிஸ் அடிச்சு ஹே ஐ லவ் யூன்னு சொன்னேன்..

அவ்வளவு தான் ஒரு ஏழெட்டு எருமை மாடு எம் மேல குறுக்கும் நெடுக்கும்... குறுக்கும் நெடுக்குமா ஓடிக்கிட்டே இருக்க மாதிரி இருந்துச்சு... எனக்குப் பொண்ணு தர்றேன்னு சொன்னவன் என் வாயிலே மூணு குத்து....ஓடி, ஓடி வந்து குத்துனான்

ஒட்டு மொத்தமா லைட்டை எல்லாம் அணைச்ச மாதிரி ஒரே இருட்டு...முழிச்சுப் பாக்குறேன்.. ஜட்டி மட்டும் போட்டு கையைக் காலை எல்லாம் கட்டி வச்சு சின்னப் பிள்ளைய எல்லாம் விட்டு அடிக்க விட்டாயங்க,....

டேய்.. என்னடா இது.. கட்டிக்கப் போற புள்ளக்கு உம்மா கொடுத்தாத் தப்பாடா..ஏன்டா இப்படி கொலைவெறியில்ல பிச்சுப் புடுங்குறீங்கன்னு கேட்டேப்புட்டேன்...

"டேய் வெக்கங்கெட்ட வென்று.. நீ முத்தம் கொடுத்தது பொண்ணுக்கு இல்லடா என் பொண்டாட்டிக்குடான்னு " எனக்கு மாமனார் ஆகியிருக்க வேண்டியவர் கத்திகிட்டே குறி பார்த்து ஒரு கல்லை வச்சு என் வாயிலேயே அடிச்சான்...

"என்னது உங்க பொண்டாட்டியா.. உன் பொழுதுபோக்குக்கு இப்போத் தெரியுதுடா காரணம்" அப்படின்னு சொல்லும் போதே மறுபடியும் எனக்கு ப்யூஸ் போயிடுச்சு..

அதுக்குப் பொறவு கின்னஸ் அப்படின்னு ஒரு புக்ல்லருந்து என்னியப் பேட்டி எடுக்க வந்தாய்ங்க.. ஓலகத்தில்லேயே இந்த அளவுக்கு அடி,குத்து, மிதி ,உதைன்னு வாங்கி யாரும் கெத்தாத் திரும்ப நின்னது இல்லயாம்.. அடி..குத்து எல்லாம் சேத்து லட்சத்துல்ல கணக்குச் சொன்னாய்ங்க...

இது நடந்துக்குப் பிறகு எங்க ஊர் வாலிப மக்க எல்லாம் சேர்ந்து அந்த நாளை அதான் பிப்ரவரி 14ஐ பெரிய திருவிழாவாக் கொண்டாடா ஆரம்பிச்சாங்க... பட்டணத்துப் பக்கம் வேலன்ட்ன்ஸ் டேன்னு ஒரே வெளம்பரமாக் கொண்டாடுறாயங்க...

இந்த வருசம் பிப்ரவ்ரி 14 எல்லாரும் சங்கத்துக்கு வாங்க புதுசாப் பெயிண்ட் அடிச்ச பளபளன்னு அசத்தலாக் கொண்டாடிருவோம்....

இப்படிக்கு

தல கைப்புள்ள..
அகமதா பாளையம் ஜில்லா

தல கடிதம் இதோ சங்க போர்ட்ல்ல ஓட்டியாச்சு என் வேலை முடிஞ்சது.. நேரமாச்சு.. வர்றட்டானு சொல்லி எகிறுவது சல்லி பையனைச் சொல்லி அடிக்கும் கில்லி பையன்..

6 comments:

நாமக்கல் சிபி said...

தல,
இந்த ப்ளாக்கர் பையன் ரொம்ப அட்டகாசம் பண்ணறான்...

வந்து என்னனு கேளு தல...

இலவசக்கொத்தனார் said...

ஆஹா! தல நம்ம வெண்பா பதிவு எல்லாம் படிக்கறாரு போல. எப்படித் தெரியும்ன்னு கேட்கறீங்களா? விதின்னு சொல்லிக்கிட்டு இருந்தவரு நம்ம பதிவுல பெயரெச்சம், வினைத்தொகை எல்லாம் படிச்ச எபெக்ட்டுல //வினை தோகைய விரிச்சு ஆடுச்சு..// அப்படின்னு எழுதி இருக்காரு பாருங்க. இதுலையே தெரியல.

அடுத்து பாருங்க, யாராவது பல்லை உடைச்சு கையில் குடுத்தா ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சம் அப்படின்னு எதாவது சொல்லுவாரு பாருங்க. என்னான்னு கேட்டா, பல்லு உடைஞ்சதால ஈறு கெட்டுச்சு, நமக்கு எதிரா இருக்கறதால அவன் எதிர் மறை (கழண்ட கேசு). அவன் பெயரே சிலை சிலம்பரசன்னு இருக்கறதால காக்கா எச்சம் போடுதுன்னு எதுனா சொல்லுவாரு.

அப்படி ஆச்சுன்னா அவருக்கு எதோ கலங்கிப் போச்சுன்னு முடிவு கட்டி, காலில் சங்கிலி எல்லாம் மாட்டி விடாதீங்கப்பா. எல்லாம் நம்ம பதிவை படிச்சதாலதான்!

Anonymous said...

தல உன் கடிதத்தை ஜப்பான்,சீனா, ஹாங்க் காங், பிரான் ஸ், ஜெர்மனின்னு ஓலகம் பூரா இருக்க நம்ம சிங்கங்களுக்கு மொழி பெயர்த்து ஜெராக்ஸ் எடுத்து அனுப்பிடுறோம் தல.. நீ கவலைப் படாதே பிப்ரவ்ரி 14 கொண்டாட்டத்துக்கு இப்போவே வசூல் ஆரம்பிச்சுடுவோம்...

Anonymous said...

போங்க கொத்ஸ் அவர் வெண்பா எல்லாம் படிக்கிறது இல்ல.. ஏற்கனவே ஓங்ககிட்ட இசைக் கத்துகிட வந்த இடத்துல்ல அவரி முட்டி எல்லாம் போட வச்சு காய்ச்சிட்டீங்களாமே... அவர் பாடுறது வேற கழுதைக் கத்துற மாதிரி இருக்குன்னு இன்சல்ட் பண்ணிட்டிங்களாம்.. பாவம் தல மூணு நாள் துபாய் போய் ரூம் போட்டு அழுதார் தெரியுமா?

Anonymous said...

தல... அதுதான் வருசா வருசம் பிப்ரவரி 14 வருதுல்ல.. அப்புறம் என்ன.. வருசத்துக்கு ஒன்னுன்னு நாம போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்... எதுக்கு பழசெல்லாம் கெளறிக்கிட்டு...

செந்தழல் ரவி said...

ஆனாலும் தலைக்கு இவ்வளவு ஏத்தம் கூடாது...!!!

மாமியாக்காரின்னு தெரிஞ்சே ஒரு உராசு உராசியிருக்காரு பாருங்க...!!!

இன்னுமா நம்மளை எல்லாரும் நம்பிக்கிட்டிருக்காங்க ?

சுக்கு : அது அவனுங்க தல விதி..

:))))))))))))))